உயிரின் தோற்றம்-2-ஏ.ஐ.ஓபரின்

 உயிரின் தோற்றம்-2

அத்தியாயம்-2
ஆரம்பச் சேதனப் பொருள்களான
கரிநீரகப் பொருள்கள் ;
அவற்றினடியாகப் பிறந்த கூட்டுப்
பொருள்களின் தோற்றம்.

செடிகள், நுண்ணுயிர்கள், விலங்குகள் ஆகியவற்றின் உடல்கள் பெருமளவுக்குச் சேதனப்பொருள்களால் ஆக்கப்பட் டவை.ஆகவேஇச்சேதனப் பொருள்கள், உயிர் தோன்றுவதற்குக் காரணமாக விருந்தவையாதலால், உயிரின் தோற்றத்திற்கு இவையே முதல்படி என்று கொள்ளலாம்.

சேதனப்பொருள்களுக்கும் அசேதனப் பொருள்களுக்கும் முக்கியமான வித்தியாச மொன்றுண்டு. சேதனப் பொருள்கள் கரியோடு மற்ற மூலப்பொருள்கள்சேருவதால்உண்டாகின்றன. செடிகளின் பகுதிகளையும், விலங்குகளின்உடலின்பாகங்களையும், மிகஉயர்ந்த உஷ்ணநிலை அடையும் வரை சூடாக்கினால் அவற்றுள் கரியிருப்பதைக்காணலாம். இவையாவும் காற்றில் எரிகின்றன. காற்றில்லாமல் சூடாக்கப்பட்டால் அவை கரியாகின்றன. கல், கண்ணாடி, உலோகங்கள் போன்ற அசேதனப் பொருள்களை எவ்வளவு நேரம் சூடாக்கினாலும்அவைகரியாவதில்லை. சேதனப் பொருள் கரி, நீரகம், ஆக்ஸிஜன் (இவை இரண்டும் நீரில்உள்ளன)நைட்ரஜன்(ஹைட்ரஜன் காற்றில் ஏராளமாக இருக்கிறது), கந்தகம், பாஸ்வரம் முதலிய மூலப் பொருள்களோடு சேர்ந்த கூட்டுப் பொருள்களே. இம்மூலங்களோடு சேர்ந்து பலவகையான பொருள்கள் இயற்கையில் காணப்படினும் அவை எல்லாவற்றிலும் கரியே அடிப்படை மூலமாக உள்ளது. நீரகமும், கரியும் சேர்ந்த கரி - நீரகப் பொருள்களே இவை யாவற்றிலும் சுலபமான அமைப்புடையவை. மண்ணெண்ணெய், பென்ஸின் பெட்ரோலியம் முதலியவை கரிநீரகப் பொருள்களே இவை யாவற்றிலும் சுலபமான அமைப்புடையவை. மண்ணெண்ணெய், பென்ஸின், பெட்ரோலியம் முதலியவை கரிநீரகப் பொருள்களே. இவற்றிலிருந்து வேறு மூலப்பொருள்களின் சேர்க்கையால் எண்ணற்ற சேதனப் பொருள்களை ரசாயன ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ளனர். அவற்றுள் சில உயிருள்ளசெடி,விலங்கு களிடமிருந்து கிடைக்கும் சர்க்கரை, கொழுப்பு, எண்ணெய் முதலிய சேதனப் பொருள்களை ஒத்திருக்கின்றன. இச்சேதனப் பொருள்கள் உலகத்தில் முதன்முதலாக எவ்வாறு தோன்றின? முப்பது வருஷங்களுக்கு முன் உயிரின் தோற்றம் பற்றி நான் ஆராயத் தொடங்கும் போது மேற்கண்ட கேள்வி ஆராய்ச்சிக்கும், புரிந்துகொள்வதற்கும் அப்பாற்பட்ட புதிராகத் தோன்றிற்று. ஏனெனில் இவ்வுலகில் இயற்கையில் உண்டாகும் சேதனப் பொருள்களில் மிகப்பல, உயிருள்ளவற்றால் அவற்றின் உடல்களுக்குள்ளேயே உண்டாக்கப் படுவதை நாம் காண்கிறோம். காற்றிலுள்ள (கரியமில வாயுவிலிருந்து) கரியைப் பிரித்து சூரியனது உஷ்ண சக்தியால் தங்களுக்குத் தேவையான சேதனப் பொருள்களைபச்சைநிறமான செடிகள் தயாரித்துக் கொள்ளுகின்றன. பச்சை நிறமாகவில்லாத விலங்குகள், காளான்கள்,நுண்ணுயிர்கள் முதலியன, தங்களுக்குத் தேவையான சேதனப் பொருள்களை,செடிகொடிகளிடமிருந்தோ, வேறு விலங்குகளிடமிருந்தோ அவற்றின் பகுதிகளைப் பிரித்துப் பெறுகின்றன. இன்று உயிர் வாழும் ஜீவன்கள் இவ்வாறு கரியின் கூட்டுப் பொருள்களை உற்பத்தி செய்யும் முறை, அல்லது அதுபோன்ற ரசாயன உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டே நிலைபெற்றுள்ளன. பூமியின்மேற்பரப்புக்கடியேகாணப்படும் பழுப்பு நிலக்கரி, நிலக்கரி, பெட்ரோலியம்எண்ணெய் முதலியவை ஒருகாலத்தில்இவ்வுலகில் வாழ்ந்து வந்த எண்ணற்ற சிற்றுயிர்களின் நடவடிக்கைகள் காரணமாக உண்டானவையே. அச்சிற்றுயிர்கள் பின்னர் பூமியினுள் புதைந்து விட்டன. சென்ற நூற்றாண்டிலும், இந் நூற்றாண்டின் முற்பகுதியிலும், மேற்கண்ட கருத்துகளின் காரணமாக இவ்வுலகில் காணப்படும் சேதனப் பொருள்கள்யாவும்உயிருள்ளனவற்றின் நடவடிக்கைகளால்தான் உண்டாக முடியும் என்று விஞ்ஞானிகள் அனுமானித்தனர். இக்கருத்து விஞ்ஞானத்துறையில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தபடியால் உயிரின் தோற்றம் பற்றி ஆராய்வதற்குத் தடையாக இருந்தது. - - ஆராய்ச்சி, தொடங்கிய இடத்துக்கே செக்குமாட்டைப் போல், சுற்றிச்சுற்றி வந்து நின்றது. உயிரின் மூலத்தை அரிய, சேதனப் பொருள்கள் எவ்வாறு தோன்றின என்று அறிய வேண்டும். ஆனால்விஞ்ஞானிகளோ, சேதனப் பொருள்கள், உயிர் பிராணிகளால் மட்டுமே தோற்றுவிக்கப்படுகின்றன என்றனர். நம்முடைய உலகிலுள்ள பொருள்களை மட்டும் ஆராய்ந்தால், இத்தகைய முடிவுக்கு வரமுடிகிறது. சூரிய மண்டலத்திலுள்ள பலவான கோளங்களில் சேதனப் பொருள்கள் உண்டாகின்றன. அங்கே உயிருள்ளன வாழக்கூடிய நிலைமை இல்லை. அக்கோளங்களில்உயிருள்ளனவற்றின் தலையீடு இல்லாமலேயே சேதனப் பொருள்கள் உண்டாகின்றன. நிறப்பிரிகை- தர்சினி (Spectroscope) என்றகருவியின்மூலம்நட்சத்திரங்களின் வாயு மண்டலங்களின் ரசாயன அமைப்பை ஆராய முடியும். நட்சத்திர வாயுமண்டலத்தின் ஒரு பகுதியைச் சோதனைச்சாலையில் ஆராய்ந்தால் எவ்வளவு துல்லியமாக முடிவுகள் கிடைக்குமோ அதேபோன்ற முடிவுகளை இக்கருவி அளிக்கிறது. ஒளிமிகுந்த சூடான நட்சத்திரங்களில் கரியிருப்பதை இக்கருவி காட்டுகிறது. மிகமிகச் சூடான இந்நட்சத்திரங்களை 0- வகை என்று அழைக்கிறார்கள். அவற்றின் மேற்பரப்பே20,000 முதல் 28,000 சென்டிகிரேட் வரை உஷ்ணநிலையுள்ளது. அவற்றில் சூடான,செந்நிறமான கரி, வாயு ரூபத்தில்உள்ளது. இக்கோளங்களிலும் கரிவேறு மூலத்தோடு சேர்ந்த கூட்டுப் பொருள்களாக இல்லை, வேகமாகச் சலனம் செய்யும் தனித்தனி அணுக்களாகவே இருக்கிறது. இக் கோளங்களை B - வகைக் கோளங்கள் என்று அழைக்கிறோம். மேற்பரப்பில் 12,000 சென்டிகிரேடு உஷ்ண நிலையுள்ள வெள்ளைநிறமான நட்சத்திரங்களின் நிறப்பிரிகைப் படத்தில் தான் கரியும், நீரகமும் (ஹைட்ரஜன்) சேர்ந்த ஆரம்பக் கூட்டுப் பொருள்களான கரி நீரகப் பொருள்கள் இருப்பதன் அடையாளம் காணப்படுகிறது.அங்குதான் முதன் முதலில்இரண்டு மூலப்பொருள்களின் அணுக்கள் ரசாயனமுறையில் கூடி அணுக்கூட்டாக இருக்கிறது.

உஷ்ணநிலை குறையக் குறைய கரிநீரகப் பொருள்கள் இருப்பது நிறப்பிரிகைப் படத்தில் தெளிவாகத் தெரிகிறது. மேற்பரப்பில் 4000 உஷ்ண நிலையுள்ள கோளங்களில் இப்பொருள்கள் இருப்பது மிகமிகத் தெளிவாகத் தெரிகிறது. நட்சத்திர கோளங்களுள்சூரியன் இடை நிலையில் இருக்கிறது. மஞ்சள் நிறமான G - வகையைச்சேர்ந்த நட்சத்திரம் அது. அதன் மேற்பரப்பு 5800 முதல் 6300 வரை உஷ்ண நிலையுள்ளது.உயரேயுள்ளமேற்பரப்பில் 5000 உஷ்ணநிலைதான் உள்ளது. கீழே போகப்போக உஷ்ணநிலை அதிகம். ஆராய்ச்சி மூலம் அறிந்தவரை மேற்பரப்பின் மிக அதிகமான சூரியனது மேற்பரப்பில் கரியும் நீரகமும், மீதேன் (CH) என்ற கூட்டுப் பொருளாக இருப்பது தெரிகிறது. அதுபோலவே கரி, நைட்ரஜன் ஆகிய இரு பொருள்களின் கூட்டுப் பொருளான சயனஜன் (CN) என்ற பொருளும் இருப்பதை நிரூபித்துக் காட்டலாம். தவிர, இங்குதான் இரண்டு கரி அணுக்கள்ஒன்றுசேர்ந்தபரமானுவையும் முதன்முதல் காணமுடிந்தது. (C) சூரியனுதுபரிணாமவரலாற்றுப்போக்கில் கரி ஒரு வகையான நிலையில் இருந்து, மற்றொரு நிலைக்கு மாறியுள்ளது தெரிகிறது மிக மிக உஷ்ணமான நட்சத்திரங்களில் சிதறிக்கிடக்கும் அணுரூபமாகவுள்ள கரி, சூரிய கோளத்தில் ஒரு அளவுக்கு, கரிநீரகப் பொருள்களாகவும், சயனஜனாகவும், டைகார்பனாகவும் இருப்பதைக் காண்கிறோம். அதாவது அணுக்கள் இணைந்து அணுக்கூட்டு ரூபமடைந்திருப்பதைக் காண்கிறோம்.

சூரியமண்டலத்திலுள்ள கிரகங்களின் வாயுமண்டலத்தைப் பற்றிய ஆராய்ச்சி, உயிரின் தோற்றத்தைப் பற்றி அறிந்து விளக்கம் கூற மிகவும் முக்கியமானது. ‘ஜூபிடர்என்ற கிரகத்தின் வாயு மண்டலத்தில் (நீரகமும், நைட்ரஜனும் சேர்ந்த) அம்மோனிய வாயுவும் (கரிநீரகப் பொருளான) மீதேன்(CU4) C என்ற வாயுவும் உள்ளன என்று ஆராய்ச்சி மூலம் புலனாகிறது. மேற்பரப்பின் உஷ்ணநிலை - 135°C (பனிக்கட்டியின் உஷ்ண நிலைக்கும் மிகக் குறைவு) ஆக இருப்பதால் பொருள்களெல்லாம் திரவப் பொருளாகவோ திடப்பொருளாகவோ உள்ளன. இவைபோன்ற கூட்டுப் பொருள்கள் வேறு கிரகங்களிலும் இருப்பதை நிறப்பிரிகை தரிசன பதிவு செய்து காட்டுகிறது.

கிரகங்களுக்கிடையே உள்ள வெளியிலிருந்து சில வேளை பூமியை நோக்கி வந்து விழும் விண்வீழ் கொள்ளிகளை(Meteorites) ஆராய்வது மிக முக்கியமான ஆராய்ச்சியாகும். உலகில் தோன்றாத இப்பொருள்களை ரசாயன முறையிலும், சுரங்கப் பொருளை ஆராயும் முறையிலும் பகுத்து ஆராய முடியும். விண்வீழ் கொள்ளிகள்,அமைப்பிலும்,சேர்க்கையிலும் பூமியினடியில் பூமியின் மத்திய பாகத்திலுள்ள பொருள்களைக் கொண்டதாயிருக்கிறது. உலகம் தோன்றிய காலத்தில் அது எப்பொருள்களால் ஆக்கப்பட்டிருந்தது என்ற பிரச்சனைக்கு விடைகாண இப்பொருள்களைப் பற்றி ஆராய்ச்சி மிக முக்கியமானது என்பதை எளிதில் உணரலாம்.

விண்வீழ்கொள்ளிகளைஇருவகைகளாகப் பிரிக்கலாம். முதல்வகையில் இரும்பு அதிகம் - இரண்டாம் வகையில் கல்அதிகம், முதல்வகையில் இரும்பு (90 சதம்) நிக்கல் (8 சதம்), கோபால்ட்(0.5சதம்)என்றஉலோகங்கள் அடங்கும். இரண்டாவது வகையில் இரும்பு குறைவாகவே, அதாவது 25 சதம்மட்டுமே உள்ளது. அவற்றில் பலவகையான உலோகங்களின் ஆக்ஸைடுகள் உள்ளன. மக்னிஸியம், அலுமினியம், கால்ஸியம்,சோடியம், மாங்கனிஸ் முதலிய உலோகங்களின் ஆக்ஸைடுகள்விண்வீழ்கொள்ளிகளில் கரி குறைவாகவோ அதிகமாகவோ இருக்கலாம். முக்கியமாக மூல ரூபத்தில்,நிலக்கரியாகவோ, கிராபைட் ஆகவோ, வைரமாகவோ அது இருக்கலாம். ஆனால் விண்வீழ் கொள்ளிகளின் சிறப்பான அம்சம் அவற்றில் உலோகங்களோடு கரி சேர்ந்த கூட்டுப் பொருள்கள் இருப்பதே. அவற்றிற்கு கார்பைடுகள் என்றுபெயர்.விண்வீழ்கொள்ளிகளில்தான் முதன் முதலாக கரி, இரும்பு, நிக்கல், கோபால்ட் ஆகிய மூலங்களின் கூட்டுப் பொருளான கொகினைட்என்றபொருள்இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டதுவிண்வீழ்கொள்ளிகளில் காணப்படும் கரியின் கூட்டுப் பொருள்கள் நமது ஆராய்ச்சிக்கு மிக முக்கியமான கரி நீரகப் பொருள்களே. ஹங்கேரியில், காபா என்ற ஊரின் அருகே விழுந்த விண்வீழ் கொள்ளிக்கல்லில், ஒஸோசிரைட் என்ற சேதனப் பொருளைப்போன்ற ஒரு கூட்டுப் பொருள் இருப்பது தெளிவாயிற்று. வேறு விண்வீழ் கொள்ளிகளிலிருந்து அதிகமான கரி, நீரக அணுக்களும், சிலவேளை ஆக்ஸிஜன், கந்தக அணுக்களும்கொண்டபரமாணுக்களையுடைய கூட்டுப் பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன. கரிநீரகப் பொருள்கள் விண்வீழ் கொள்ளிகளில் உள்ளன என்று நிரூபிக்கப்பட்ட காலத்தில், உயிருள்ள பொருள்களின் செயல்களினாலேயே, இயற்கை நிலையில் சேதனப் பொருள்கள் (கரிநீரகப் பொருள்கள் உள்பட) தோன்றமுடியும் என்ற தவறான கொள்கை நிலவி வந்தது. அதை அடிப்படையாகக் கொண்டு விண்வீழ் கொள்ளிகள்தோன்றியவிண்கோளங்களில் இருந்து மடிந்துபோன உயிருள்ளனவற்றின் செயலால் கரிநீரகப்பொருள்கள்இரண்டாவதாகத் தோன்றியவையே என்று சில விஞ்ஞானிகள் வாதித்தார்கள். இவ்வாதம்சரியல்லவென்றுதுல்லியமான ஆராய்ச்சி முடிவு கட்டியது. விண்வீழ் கொள்ளிகளில் காணப்படும் கரிநீரகப் பொருள்களும் விண் கோளங்களின் வாயு மண்டலத்தில் காணப்படும் கரிநீரகப் பொருள்களும் உயிர்களின் செயலாக அல்லாமல், அசேதன முறையிலேயே தோன்றின என்ற உண்மை ஐயமற நிரூபிக்கப் பட்டுள்ளது. சேதனக் கூட்டுப் பொருள்கள்,உயிருள்ளவை தோன்றும் முன்பே தோன்ற முடியும் என்பதில் சந்தேகமேயில்லை. பொருள்களின் சிக்கலான சலனத்தின் உருவமே உயிருள்ள ஜந்துக்கள். அவை தோன்றும்முன்பே வானத்தில் உள்ள கோளங்களில்,(அவற்றைஉயிருள்ளவை இருக்க முடியாத சூழ்நிலையில்) சேதனப் பொருள்கள் தோன்றின. பல வானக் கோளங்களில் சேதனப் பொருள் இவ்வாறு தோன்றியது உண்மை என்று ஒப்புக்கொண்டால் நமது உலகத்தை மட்டும் அதற்கு விதிவிலக்கு எனக் கருதக் காரணம் என்ன? உயிருள்ளவை மூலமாக சேதனப் பொருள்கள் உண்டாக்கப் படுவது உலகம் தோன்றிய காலத்துக்கு மிகமிகப் பிற்பட்டதன் தற்காலத்தில்தான் தோன்றியது. உயிர்த்தன்மை பிராணிகள் தங்கள் உடலில் பொருள்களை ரசாயன மாற்றம் செய்யக்கூடிய சக்தி பெற்றதன்பின்னரேதோன்றினதென்றும், அதற்கு முன்னரே, கரிநீரகப் பொருள்களும், அவற்றினடியாகப் பிறந்த வேறு சேதனப் பொருள்களும், உயிர்களின் உதவியின்றியே தோன்றின.இவ்வாறுஅனுமானிப்பதில் தவறில்லையல்லவா? பூமியின் அடர்த்தி, அதன் ஈர்ப்புச் சக்தி, பூகம்பத்தினால் ஏற்படும் அதிர்ச்சி அலைகள், இவற்றையெல்லாம் ஆராய்ந்து தரையியல் நிபுணர்கள் கீழ்க்கண்ட முடிவுக்கு வந்துள்ளார்கள். எல்லா நிபுணர்களும் பூமியின் நடுவே உலோகத்தினாலான மையமிருப்பதை ஒத்துக்கொள்ளுகிறார்கள். அதன் விட்டம் 3470 கிலோமீட்டர்கள். அதன் அடர்த்தி 10. இம்மையம் பல உறைகளால் போர்த்தப்பட்டுள்ளது. முதல் உறை 1,700 கிலோ மீட்டர், திண்ணமுள்ளது. அடுத்த உறை பாறைகளாலானது. அதன் திண்ணம் 1,200 கிலோமீட்டர். அதற்குமேல் கடல்களாலான நீர் உறை, (நீர் உறையின் திட்டுகளான தரைப் பகுதியில்தான் நாம் வாழ்கிறோம்). அதற்கும் மேலே காற்றாலான உறை இத்தனை உறைகளுக்கு நடுவே பூமியின் உலோக மையம் உள்ளது. பூமியின்மையத்தில் உள்ள பொருள்களின் அமைப்பை ஏகதேசம் துல்லியமாக நிர்ணயித்திருக்கிறார்கள். இரும்பு வீழ் கொள்ளிகளைப் போலவே, அவை உள்ளன. பெரும்பாலும் இரும்பும் சிறிதளவு நிக்கல், கோபால்ட், குரோமியம் ஆகிய உலோகங்களும் பூமியின் மையத்தில் உள்ளன. கரி, இரும்போடு சேர்ந்த கூட்டுப் பொருளாக (iron Cardie) மட்டுமே காணப்கிறது. மேற்கு கிரீன்லாந்தில் மேல்தரைக்குச்சிறிது கீழே சுத்தமான இரும்புப் பாறைகள் இருக்கின்றன. டிஸ்கோ என்ற தீவிலுள்ள ஒவிபாக் என்ற நகரத்தருகிலும் இவை போன்ற இரும்புப் பாறைகள் தரைக்குச் சமீபமாகவே இருக்கின்றன. இவை விண்வீழ் கொள்ளிகளெனவே கருதப்பட்டது. ஆனால் அது பூமியிலேயே தோன்றியதென்று இப்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது. கொகினைட்என்ற தாதுப் பொருளில் இருப்பது போலவே இவ்விரும்பிலும் கரி அதிகம் சேர்ந்து காணப்படுகிறது. இவ்வுலோகப் பொருள்கள் அபூர்வமானதல்ல என்று தற்கால தரையியல்நிபுணர்கள்கண்டிருக்கிறார்கள். பலவிடங்களில் இத்தகைய இரும்புப்பாறைகள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன. நமது உலகத்தின் சரித்திரத்தில் வெகு காலத்திற்கு முன்பு மிகப் பலவிடங்களில் இவை தோன்றியிருக்க வேண்டுமென்று தெளிவாகத் தெரிகிறது. பூமியின் மையத்திலிருந்து உலோகக் குழம்பு தரையை நோக்கி கொதித்து வழியும்போதோ, அல்லது தரையின் மீது பரவும்போதோ, அதில் கலந்துள்ள பொருள்கள் தண்ணீரோடும், நீராவியோடும் சேர்ந்து புதிய பொருள்களை உண்டாக்கியிருக்க வேண்டும். அவைகள், கார்பைடும், நீரும் இரசாயன வினை நிகழ்த்தும்போது கிடைக்கும் கரி நீரகப் பொருள்கள். நீரும்,நீராவியும் புராதன உலகத்தின் மேற்பரப்பில் இருந்தனஎன்பதற்குச் சந்தேகமில்லை. நமது மாபெரும் ரசாயனி டி.. மெண்டலியேவ் இவ்வாறுதான் உலகிலுள்ள கரிநீரகப் பொருள்கள் தோன்றினவென்று விளக்கியுள்ளார். பெட்ரோலியம் கூட இவ்வாறுதான் தோன்றியிருக்கவேண்டும் என்று நிரூபிக்க மெண்டலியேவ் முயன்றார். இக்கூற்று சரியல்ல என்று தரை இயல் நிபுணர்கள் கருதிக் கைவிட்டனர். உயிருள்ளவற்றின் செயலால் மட்டுமே மண்ணெண்ணெய் உண்டாகிறது என்று அவர்கள் நிரூபித்தார்கள். ஆனால் உலோகங்களும் கரியும் சேர்ந்த கூட்டுப் பொருள்களான கார்பைடுகள் தண்ணீரோடு சேரும் பொழுதும் கரிநீரகப் பொருள்கள் உண்டாகின்றன என்பதைக் காட்சிப் பிரமாதமாக எந்த ரசாயனியாலும் காட்டமுடியாது. தற்கால இயற்கை நிலைமைகளில் கூட பூமியின் மேற்பரப்பில் கொகினைட் போன்ற பொருள்களிலுள்ள கரியின் கூட்டுப் பொருள்களான கார்பைடுகளோடு நீர் சேருவதால் சேதனப் பொருள்கள் ஏற்படுவதை தரை இயல் நேரடி ஆராய்ச்சிகள் மெய்ப்பிக்கின்றன. ஒளியின் உதவியால் தாவரங்களில் ஏராளமான அளவு சேதனப் பொருள்கள் உண்டாவதைப் போலவே, கார்பைடுகளும் நீரும் சேருவதாலும் சேதனப் பொருள்கள் உண்டாகின்றன. இவ்வாறு சேதனப்பொருள் உண்டாகும்போது, உயிருள்ளவை எவ்விதத்திலும் துணைசெய்வதில்லை. உயிருள்ளனவற்றின் தலையீடு இல்லாமலேயே கார்பைடுகளும், நீரும் செயல் புரிந்து சேதனப் பொருள்கள் தோன்றின. இது முற்காலத்தில், தற்பொழுது நிகழ்வதைவிட மிகப் பெரிய அளவில் நிகழ்ந்து வந்தது. இந்த இரசாயன வினைகளின் காரணமாக பெரிய அளவில் சேதனப் பொருள்கள் தோன்றியிருக்கக்கூடும். அவ்வாறு தோன்றிய காலத்தில் உலகில் உயிர்களே இருந்ததில்லை. மிகமிகச்சிறிய உயிருள்ள ஜந்துக்கள் கூட அப்பொழுது தோன்றவில்லை. சோவியத் வானநூலாரும், அண்டகோள் நூல் வல்லுநரும் (வி.. அம்பர்ட்சுமியான், ஜி.. ஷைன், வி.ஜி. வெஸ்ன்காவ்,.ஜே.ஷிமிட்முதலியோர்) செய்துவந்த சிறந்த ஆராய்ச்சிகளின் மூலம்நட்சத்திரங்களின்தோற்றத்தைப் பற்றியும், கிரக வரிசைகளைப் பற்றியும் புதிய உண்மைகள் வெளியாயின. உலகத்தில் சேதனப் பொருள்கள் தோன்றிய விதத்தையும் விளக்க இவ்வுண்மைகள் பெரிதும்துணை புரிகின்றன. அல்மா அடா என்ற நகரில் மிகவும் சக்தி வாய்ந்த தூரதரிசினி செய்யப்பட்டு உபயோகத்துக்குவந்தது. நட்சத்திரங் களுக்குஇடையேயுள்ளஇடைவெளியில் என்ன பொருள்கள் உள்ளன, அதன் அமைப்பு என்ன என்பதை அறிய இக்கருவி உதவிற்று. அக்கருவியை நிறுவுவதற்கு முன் இவ்விடை வெளியைப் பற்றி விஞ்ஞானிகள் அதிகமாக ஆராய்ச்சி செய்ததில்லை. நட்சத்திர மண்டலத் திலுள்ள நட்சத்திரங்களிலும், கிரகங்களிலும் மட்டுமல்லாமல், இடைவெளியிலும் பொருள்கள் இருக்கின்றன. இவ்விடைவெளி சூன்யமாகஇல்லை.வாயுவோ, தூசியோ அதனுள் இருக்கிறது என்று நவீன விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. இவ்விடைவெளியிலுள்ள பொருள்கள் சில சமயம் மிகப் பெரிய மேகங்கள் போல உருவெடுக்கின்றன. இதைத் தூரதரிசினியின் மூலமாக அல்லாமல் கண்ணாலேயே காணலாம். “பால்வழிஎன்று அழைக்கப்படும் (Milkway) நட்சத்திரக் கூட்டத்தில் கருமையான புள்ளிகள் காணப்படுகின்றன. அவை இத்தகைய மேகங்களே. பழங்கால மக்கள் இப்புள்ளிகளைக் கவனித்து, அவற்றிற்கு கரி மூடை என்று பெயரிட்டார்கள். பால்வழியிலுள்ள இக்கருமேகங்கள் அவற்றிற்குப் பின்னாலுள்ள நட்சத்திர ஒளியின் ஒரு பகுதியைப் பூமிக்கு வரவிடாமல் தடுக்கின்றன. நட்சத்திர மண்டல இடைவெளியை ஆராய்ந்ததில் சில இடங்களில் அவை நார் போன்ற அமைப்புள்ளனவாகத் தெரிகின்றன. விஞ்ஞானக் கழக அங்கத்தினர், எப்.ஜி. வெஸன்காவ், இவ்விடைவெளிகளைக் குறித்து ஆராய்ந்தார்; நூல் அல்லது நார் போன்ற இவ்வாயுப் பொருள்களும், தூசியுமே,நட்சத்திரமாகஉருவாகின்றன வென்றும், அதன்பின் குறிப்பிட்ட முறையில் வளர்ச்சி பெறுகின்றன வென்றும் முடிவு செய்தார். ஆரம்பத்தில் நட்சத்திரம் தன் இயல்பான பரிமாணத்தைவிட மிகமிகப் பெரிதாயிருக்கும். அது சரியாக உருவாகும்போது கட்டியாக உறைகிறது. உறைந்த பின்னும், அதைச் சுற்றி வாயுவும், தூசியும் ஒர் உறை போல மூடிக்கொண்டிருக்கும். (இவற்றால்தான் நட்சத்திரம் உருவாக்கப்பட்டது.) நட்சத்திரங்கள் தோன்றிய வரலாற்றைத் தெரிந்து கொள்ளுவதைவிட, கிரகங்களும் உலகமும் தோன்றிய வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது நமது ஆராய்ச்சிக்கு அவசியம். ஏனெனில் நமது உலகம் ஒரு கிரகம். . ஜே. ஷிமிட்டின் அனுமானங்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம். .ஜே. ஷிமிட்டின் முடிவுகள் யாவை? சூரிய மண்டலத்திலுள்ள பூமியும், வேறு கிரகங்களும்,சூரியனது பாகமாயிருந்த வாயுக்களிலிருந்துஉண்டானவையல்ல. (சூரியனிலிருந்து தெறித்து விழுந்தவைதாம் கிரகங்களென்று விஞ்ஞானிகள் கருதிவந்தார்கள்) பல கோடி வருஷங்களுக்கு முன், சூரிய பாட்டையில் சுற்றிவரும் சூரியன் பொடியான பொருள்களாக்கப்பட்டு குளிர்ந்த தூசிப் படலத்தோடு மோதிக் கொண்டது. அத்தூசி மண்டலத்தை தன் கவர்ச்சி வட்டத்துக்குள் இழுத்துக்கொண்டது. படிப்படியாக, பொருள் குவியும் மையங்கள் தோன்றி, தூசியும் வாயுவும் குளிர்ந்து இக்கிரகம் தோன்றியது. சூரியன், வாயுவும், தூசியும் கலந்த பிரம்மாண்டமான மேகத்துக்குள் நுழைவதும், அதனை இழுத்துக்கொள்வதும் மிகவும் சிக்கலானதாகத் தோன்றுகிறது. நவீன ஆராய்ச்சிகள் தரும் புதிய விவரங்களைக் கொண்டு கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்பது சாத்தியமாகிறது. பொருள்களின் கவர்ச்சி அவசியமானதா? தூசியும் வாயுவும் கொண்ட மேகங்களிலிருந்து நட்சத்திரங்கள் தோன்றியது போல பூமியும் தோன்றியிருக்க முடியாதா? சூரியனைப் போலவே, பூமியும் உண்டாகியிருக்க முடியாதா? சூரியன் தோன்றும்போது, நட்சத்திரங்களைச் சுற்றியிருக்கும், வாயு, தூசியைப் போல் அதைச்சுற்றியிருந்த பொருள்களி லிருந்து உலகமும் வேறு கிரகங்களும் தோன்றியிருக்க முடியாதா? தமது உலகம் தோன்றும்போது சேதனப் பொருள்கள் எந்நிலையிலிருந்தன என்ற கேள்விக்கு விடை காண மேற்குறித்தஐயங்கள்வழிகாட்டுகின்றன. அவை யாவும் சேதனங்களின் விளைவாக எழுந்தவை.

நட்சத்திரமண்டலத்தின்இடைவெளியி லுள்ள வாயுக்களும் தூசியும், எப்பொருள்களால்ஆக்கப்பட்டிருக்கின்றன என்பதை நவீன ஆராய்ச்சி தெளிவாக்குகிறது. இடைவெளியிலுள்ள மேகங்களில் நீரகம், மீதேன் (என்ற கரியும் நீரகமும் சேர்ந்த கூட்டுப் பொருள்) மேலும் சிக்கலான அமைப்புடைய கரி நீரகங்கள், அம்மோனியா, பனிக்கட்டி வடிவில் நீர் ஆகியவை உள்ளன. இவைதான் ஆரம்ப சேதனப் பொருள்கள்தோன்றத்தேவையானவை. எப்படி உலகம் தோன்றியிருப்பினும், இப்பொருள்கள் ஆரம்பத்தில் இடைவெளியில் இருந்த காரணத்தால் சேதனப் பொருள்கள் உலகத்தின் வளர்ச்சிப் போக்கில் தோன்றும் என்ற நிச்சயம் உண்டு. கரிநீரகங்கள் தண்ணீரோடு கூட்டுப் பொருளாக முடியுமென்ற ஒ. . பாவ்ராஸ்கி என்ற ரசாயனியும், வேறு ரசாயனிகளும் நிரூபித்துள்ளார்கள். ஒரு கரிநீரகக் கூட்டணுவும், ஒரு நீர்க்கூட்டணுவும் சேருவதை அவர்கள் கண்டிக் கிறார்கள். முதன் முதலில் உலகில் தோன்றிய கரிநீரகப் பொருள்கள், நீரோடுசேர்ந்த கூட்டுப்பொருள்களாக இருந்தன என்பதில் ஐயமில்லை. இதனால் அக்காலத்தில் பூமியின் மேலுள்ள வெளியில், நீரிலுள்ள ஆக்ஸிஜனோடு, கரிநீரகப்பொருள்கள் சேர்ந்து வினையாற்றுவதால் கிடைக்கும் பொருள்களும் இருந்தன. பல மதுசாரங்கள் (Alcohols) 'அல்டிஹைட் என்ற பொருள்கள், கீடோன்' என்ற பொருள்கள் இவை தோன்றின. இவற்றில் எல்லாம், கரியும், நீரிலுள்ள ஆக்ஸிஜனும், நீரகமும் இருக்கின்றன. நீர்க்கூட்டணுவிலிருந்து பிரிந்து இவை கரிநீரகப் பொருள்களோடு சேர்ந்து இவ்வகைப் பொருள்களைத் தோற்றுவித்தன. சிற்சில வேளை இவை மூன்று தவிர, (காற்றிலுள்ள) நைட்ரஜன் என்ற மூலமும் சேர்ந்தது. இது உலகம் உண்டாகும்போது அம்மோனியா வடிவில் இருந்தது. அம்மோனியா வாயுவும், கரிநீரகப் பொருள்களின் ஆக்ஸிஜன் அடிப்பொருள்களும் கூடிய காரணத்தால் பல வகையான அணுக்கூட்டுகளைக் கொண்ட கூட்டணுக்கள் தோன்றின. இவை யாவிலும் ஆக்ஸிஜன், நீரகம், நைட்ரஜன், கரி ஆகிய நான்கு மூலங்களே இருந்தன. அவ்வாறு தோன்றிய பொருள்கள் பல அம்மோனியம் உப்புகள், அமைடுகள், அமீன்கள் முதலியவையாகும். இவ்வாறு புராதனக் கடல் நீரிலேயே இப்பொருள்கள் இருந்தன. இவை கரியிலிருந்து வேறு பொருள்களின் சேர்க்கையால் உண்டானவை. இவற்றைத்தான் இன்று சேதனப் பொருள்கள் என்று சொல்லுகிறோம். இவை உயிர்கள் தோன்றுவதற்குப் பலகோடி வருஷங்களுக்கு முன்பே தோன்றிவிட்டன. மிகச் சில அணுக்களைஒவ்வொருஅணுக்கூட்டிலும் கொண்ட பொருள்கள் மேலே கூறப்பட்டதே ஆயினும் அவை பண்பில் மற்றையப் பொருள் வடிவங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. அவை புதிய பொருள் வடிவம்' என்று சொல்லலாம். இச்சேதனக் கூட்டுப்பொருள்கள், ஆரம்பத்தில் தோன்றிய சேதனப் பொருள்கள். இவற்றின் பண்புகளை அறியவும், வளர்ச்சிப் போக்கின் பரிணாமத்தை அறியவும் புதிய விதிகளை ரசாயனிகள் கையாண்டனர். அவ்விதிகள்அவற்றின்அமைப்பினின்றும், அணுக்கூட்டில் அணுக்கள் திட்டமாக அமைக்கப்பட்டுள்ள நிலையினின்றும்எழுந்தன. “உலகத்தில் உயிருள்ளவை தோன்று முன்னரே சேதனப் பொருள்கள் தோன்றின என்று முப்பது வருஷங்களுக்கு முன்தான் வெளியிட்ட கூற்றை, சோவியத் வானநூலாரின்இன்றையகொள்கைகள் உண்மையென நிரூபிக்கின்றன. உலகம் தோன்றுகிற சமயத்திலேயே, கரிநீரகங்களும், அவற்றின் ஆக்ஸிஜன்,நைட்ரஜன்அடிப்பொருள்களும், பூமியின் ஈரமான காற்று மண்டலத்திலும், கடலிலும் தோன்ற ஆரம்பித்தன. உயிரின் தோற்றத்தை நோக்கிப் பொருள்கள் அடைந்த மாறுதலில் இது முதல் கட்டம். இது பெரிய மர்மமாகவே சமீபகாலம்வரை இருந்தது. ஆனால் இன்று இயற்கை விஞ்ஞானிகளுக்கு ஆரம்ப சேதனப் பொருள்கள்இவ்வாறுதான் தோன்றின என்பதில் சந்தேகம் ஏற்படுவதில்லை. பொருளின் பரிணாமத்தில் முதலாவதும் காலத்தால் மிகவும் நீண்டதுமான முதல் கட்டத்தைப் பற்றி ஆராய்ந்தோம். உஷ்ணமான நட்சத்திர இடைவெளியில் சிதறிக் கிடந்தஅணுக்கள், உலகத்தின் புராதனக் கடலில் கரைந்திருந்த ஆரம்பச் சேதனப்பொருள்களாக எவ்வாறு மாறின என்பதைப் பார்த்தோம். இதுதான் பொருள்களின் மாறுதலில் முதல் கட்டம். அதற்கடுத்த கட்டம் என்ன?

புரதம் என்ற பொருளை ஒத்திருக்கும் கூட்டுப் பொருள்கள் தோன்று வதற்குரிய மாறுதல்களே அவ்வடுத்த கட்டமாகும். 


புரதம்இது சிக்கலான அமைப்புடைய சேதனப்பொருள், தசையிலும், முட்டையிலுள்ள மஞ்சள் கருவிலும், பருப்பிலும் புரதம் இருக்கிறது.மூலம் உயிரின் தோற்றம் நூல்- ஆசிரியர்-...ஓபரின் தமிழில் நா.வானமாமலை NCBH, முதற்பதிப்பு 2008.தொடரும் அடுத்த இதழில்

+++++++++++++++++++++++++++++++++++++++

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்