கம்யூனிஸ்ட்கள் முன் உள்ள பணி

 கம்யூனிஸ்ட் கட்சியும் அமைப்பு கோட்பாடுகளும்

முன்னுரை:- கடந்த ஒரு நூற்றாண்டில் கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தியாவில் பல ஆயிரங்கள், இலட்சம் போராட்டங்கள் நடத்தியும், பங்கு கொண்டு இருக்கிறது. மக்கள் திரள்களின், சமூக இயக்கங்கள், அரசியல்இயக்கங்களுடன் கம்யுனிஸ்டுகள், கம்யூனிஸ்ட் கட்சிகள்  குழுக்கள் இணைந்து இவைகள் நடைபெற்றன. இன்றும் நடைபெற்று வருகின்றன.

இன்று உள்ள பல பொருளாதார சமத்துவ, சமூக நீதி, மனித உரிமைகள், அதற்கான பல சட்டங்களும் இந்த போராட்டங்களால் தான் ஆளும் வர்க்கங்கள், அதிகார வர்க்கங்கள் மக்களுக்கு அளித்துள்ளன.

தலைவர்களின் தனிப்பட்ட கருணையால், தாராள குணத்தினால் அவைகள் கிடைக்கவில்லை. இந்த போராட்டங்கள் கம்யுனிஸ்டுகள் இன்னுயிர்களை ஈந்தும், வாழ்க்கையை இழந்து, உறவுகளை இழந்து, செல்வத்தை இழந்து, பெரும் உழைப்பு செல்வத்தை ஈடாக கொடுத்தும், கொடூர சித்ரவதைகள் அனுபவத்தும், பெருந்துயர் பட்டும் நடத்தப்பட்டவைகள். அவர்களின் இலட்சியங்களும், விழுமியங்களும் தான் இவைகளை முன்கொண்டு நடத்தின.

இவைகள்கம்யூனிஸ்டுகளின்ஒளிபொருந்திய, புகழ் மிக்க, பெரு மதிப்பு மிக்க வரலாற்று பங்களிப்புகளாகும். இந்த அடிப்படையானபுரிதல்கண்ணோட்டத்தின் மீதுதான் இந்த கம்யூனிச இயக்கத்தின் பிளவுகள் பின்னணியும் அவைகளின் ஒர்மையும் இருக்கும் என்பதை அனைவருக்கும் நினைவு படுத்திக் கொள்ள்ள வேண்டும்.

கோட்பாடுகள், அரசியல், தனிமனித காரணங்களால் கம்யுனிஸ்ட் கட்சிகள், குழுக்கள், இயக்கங்கள் பிளவு படுகின்றன. இந்த பிளவுகள் சமூகத்திலும், மக்கள் மத்தியிலும், தோழர்களிடம் குறிப்பாக கம்யுனிஸ்ட் தோழர்களிடம் ஏற்படுத்தும் விளைவுகள் மிகவும் பாரதூரமானவை. ஆழ்ந்த துயரத்தை தருபவை. தனிப்பட்ட முறையிலும், பல்வேறு கட்சிகளின் பிளவுகளின் சந்தர்ப்பங்களில் அத்தோழர்களின் மனநிலையை பாதித்தவை என்னவென்று சொல்ல?

சரி, கம்யூனிசம் என்பது என்ன என்பதற்கு தோழர் மாவோவின் எளிய ஆனால் காத்திரமான பதில் தனி மனிதனை சமூக மனிதனாக மாற்றுவதுஅதாவது இதற்கு முந்தைய வளர்ச்சியின் அனைத்து வளங்களையும் தன்மயமாக்கிக் கொண்ட மனிதன் ஒரு சமூக உயிரியாக, உண்மையான மனித உயிரியாக ஒரு முழுமையான, உணர்வுபூர்வமான உயிரியாக திரும்ப வருவதுதான் என்பதாகும். இதைதான் மாமேதை கார்ல் மார்க்ஸ் விரிவாக விளக்க முயன்றார். அதுதான் மார்க்சிய தத்துவம். இயக்கவியல் வரலாற்று பொருளியல் கோட்பாடு.

மக்கள் திரள்தான் புரட்சி செய்யும்! கம்யூனிஸ்ட்கட்சியும், அதன் தலைமையும் அதற்கு வழிகாட்டும்! அதாவது கோட்பாட்டு - அரசியல் - போர் தந்திரம் செயல் தந்திரம் - திட்ட வரையறைகள் கம்யூனிஸ்ட்கட்சியும், அதன் தலைமையும் பருண்மையான தரவுகளுடன் ஆய்வு செய்து வரையறை செய்து மாநாடுகளில் இறுதி செய்யும். இந்த திட்டத்தை பரப்புரைசெய்துநடைமுறையில்கம்யூனிஸ்ட்கட்சியும், அதன் தலைமையும் வழிகாட்டும்.

தோழர் மாவோ, “புரட்சிக்கு முதல் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியே யார் நமது எதிரிகள் ? யார் நமது நண்பர்கள்? என்பதாகும். முந்தைய அனைத்து புரட்சிகரப் போராட்டங்களிலும் மிகச் சிறிய அளவேசாதிக்கப்பட்டதற்கான அடிப்படை காரணம்.

உண்மையானஎதிரிகளைத்தாக்குவதற்கேற்ற உண்மையான நண்பர்களுடன் தம்மை ஒன்றிணைத்து கொள்ளத் தவறியது ஆகும். புரட்சிகர கட்சி ஒன்றே மக்கள் திரளுக்கு வழிகாட்டி. அந்த புரட்சிகர கட்சி அவர்களுக்குத் தவறானதாக வழிகாட்டும் போது எந்தப் புரட்சியும் எப்போதும் வெற்றி பெறுவதில்லை வெற்றி அடைய, மக்கள் திரளைத் தவறாக வழி நடத்தாமல், நமது உண்மையான எதிரிகளைத் தாக்குவதற்கு, நமது உண்மையான நண்பர்களுடன் ஒன்றிணைவதற்கு நாம் அவசியம் கவனம் செலுத்துவது என்பதன் மூலம் நமது புரட்சியில் வெற்றியைத் திட்டவட்டமாகச் சாதிப்போம்.

ஒரு பாட்டாளி வர்க்க கட்சி தனது திட்டத்தையும் செயல் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டுமானால் அது ஒரு சரியான அமைப்பு கோட்பாட்டை பெற்றிருக்கவேண்டும் கட்சியின் வேலை திட்டம் செயல்தந்திரம் அமைப்பு கோட்பாடுகளை ஏற்று கட்சியின் ஒரு அமைப்பில் உறுப்பினராக செயல்படுத்தி கட்சி உறுப்பினர் தகுதியும் ஆகும். ஆக பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாகவும் முன்னேறிய முதல் படைப்பிரிவாகவும் கட்சியானது நிலவுகின்ற சூழ்நிலைகளுக்கும் கட்சியுனுடைய நடவடிக்கைக்களின் குறிக்கோளாகும்.ஒருநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவது என்பது அந்தந்த நாட்டின் சமூக பொருளாதார நிலைமைகளுடன் புரட்சியின்யுத்ததந்திரத்துடன்இணைக்கப்பட்ட விஷயமாகும் . நாடுமுழுவதும் அதற்கான அரசியல் தயாரிப்பு கட்டம் ஒன்று தேவைப்படுகிறது.

யுத்த தந்திரம் செயல் தந்திரம்

பாட்டாளிவர்க்க இயக்கமானது இரு பக்கங்களை பெற்றுள்ளது ஒன்று அகவயமானது மற்றொன்று புறவயமானது. இயக்கத்தின் புறவய நிகழ்ச்சிப் போக்கானது மார்க்சியத் தத்துவத்தினாலும் மார்க்சிய திட்டத்தினாலும் முதலாவதாக ஆராயப்படுகின்றது. யுத்த தந்திரம் செயல்தந்திரம் ஆகியவற்றின் செயல் களமானது இயக்கத்தின் அகவயத்தோடு நின்று விடுகிறது. எனவே யுத்த தந்திரமானது மார்க்சிய தத்துவத்தினாலும் மார்க்சிய வேலை திட்டத்தினாலும் அளிக்கப்படுகின்றவிவரங்களைஅடிப்படையாக கொள்ள வேண்டும்.

போர்தந்திரமானது பாட்டளி வர்க்கம் தனக்கானஇறுதிலட்சியமானபொதுவுடைமை சமூகத்தை அடையவகுக்கும்நீண்டகாலயுத்தியாகும்,செயல்தந்திரமானதுகுறைந்தகாலநடவடிக்கையின்அடிப்படையில்அமைந்தவையாகும்.

ஊழியர்களுக்கும் அமைப்பிற்கும் இடையே உள்ள உறவு அமைப்பிற்கு அப்பாற்பட்டு ஒரு ஊழியர் இருப்பதாக நம்மால் சிந்திக்க முடியாது. ஏனெனில் ஊழியர் அமைப்பின் ஓர் அங்கமாகவே இருக்கின்றார். ஒரு ஊழியர் ஒரு திட்டவட்டமான அமைப்பிற்குள்தான் ஒரு அமைப்பாக இயங்குகின்றஒருநிறுவனத்தில்தான்வாழ்கின்றார்,இயங்குகின்றார். ஆகையால் ஊழியரை பற்றிய பரிசீலனை அமைப்பை பற்றிய பரிசீலனையை யிலிருந்தே துவங்க வேண்டும்.அமைப்பு மக்களால் தான் உருவாக்கப்படுகின்றது மக்கள் தான் ஒரு அமைப்பின் பிரதான அம்சமாக இருக்கின்றனர். ஒர் அமைப்பு மக்கள் இன்றி இயங்க முடியாது. மக்களின் ஒரு படைப்பாக இருக்கின்ற அமைப்பு, அவ்வமைப்புற்குட்பட்ட மக்களையும் அவர்களுடைய குணாதிசயங்களையும் மற்றும் அவர்களின் திறமைகளையும் சார்ந்து இயங்குகின்றது . மறுபுறம் ஒரு அமைப்பு அது நிலைத்திருப்பதற்கான உரிமை பெற்ற ஒரு தனிப் பொருளாக ஆகிவிட்ட பிறகு அதுவே மக்களின் மீது ஒரு தீர்மானகரமான பாதிப்பை ஏற்படுகின்றது. அமைப்பைச் சேர்ந்தவர் கள் எவரெவர் என்னென்ன செய்ய வேண்டும். அதன் செயல் பாட்டிற்கான நிறுவனத்தில் ஒருவர் எந்த இடத்தில் வைக்கப்பட வேண்டும் இப் பணியை ஆற்ற வேண்டும் என்பதை தீர்மானிக் கின்றது. அவ்வமைப்பைச் சேர்ந்தவர் களின் செயல்பாட்டின் திசையையும் இலக்கையும் முன்கூட்டியே அது வரையறை செய்கின்றது. அவர்களை இயக்குவிக்கின்றது. ஒருவர் என்ன செய்ய வேண்டும் அல்லது எதை செய்யக் கூடாது என அவருக்கு பணிக்கிறது.

ஒரு அமைப்பு அதனுடைய செயல்பாட்டின் மூலமாக அவ்வமைப்பு சேர்ந்தவர்களிடம் ஒரு திட்டவட்டமான குணாம்சத்தை தரத்தை ஏற்படுகின்றது. அது அவர்களைப் பயிற்றுவிக்கின்றது. 

மக்களின் செயலாற்றும் திறனும் பண்பும் அவர்களின் அமைப்பு திறனைப் பொறுத்தே இருக்கின்றது. அமைப்பு ஒரு புதிய பண்பை(தரத்தை) உண்டாக்குகிறது என்றார் மார்க்ஸ்.

அமைப்பு பற்றிய மேற்கூறப்பட்டவை அனைத்தும் ஊழியர் பிரச்சினைப் பற்றியப் பரிசீலனை செய்தல் மற்றும் அதற்கு தீர்வு காணுதல் ஆகியவற்றோடு நேரடியான தொடர்புடையதாகும். உதாரணமாக கட்சி ஊழியர்களின் பலமான அம்சங்களைப் பற்றியும் அல்லது பலவீனமான அம்சங்களைப் பற்றியும் நாம் பரிசீலனை செய்யும்போது அமைப்பு பற்றி பிரச்சினைகளிலிருந்து பிரித்து தனியாக ஊழியர்களின் தத்துவ அரசியல் தரத்தைப் பற்றி பரிசீலனை செய்வோமானால் ஊழியர் மீது அமைப்பு செலுத்தும் செல்வாக்கையும் பாதிப்பையும் நாம் பார்க்கத் தவறினால் ஊழியர் பிரச்சினை பற்றிய சரியான பரிசீலனை செய்வதற்கு தீர்வு காண்பதற்கும் தேவைப்படுகின்ற ஒரு முக்கியமான ஆதாரத்தை நாம் புறக்கணிப்போர் ஆவோம்.

ஒரு பலமான கட்சிக்கிளையும் ஒரு பலமானகட்சி நிர்வாகக் குழுவும் வலுவான கட்சி உறுப்பினர்களும் ஊழியர்கள் தோன்று வதற்கு வாய்ப்பு அளிக்கின்றது. எங்கெல்லாம் கட்சிக்கிளையும் நிர்வாகக் குழுவும் சீராக செயல்படவில்லையோ அங்கெல்லாம் உறுப்பினர்களும் ஊழியர் களும் போராட்ட வலிமை குன்றி தரங்கெட்டு பின்னடைந்து போவதற்கு ஏதுவாகின்றது. இதற்கு நேர் எதிராக கட்சி உறுப்பினர்கள் ஊழியர்களின் செயலற்ற தன்மையில் கட்சியமைப்புகளும் சீரழிந்து போவதும் நடக்கக்கூடிய ஒன்றுதான் . ஏனெனில் கட்சி ஊழியர்களுக்கும் அமைப்பிற்கும் இடையிலான உறவில் ஊழியர்கள் (ஒரே நேரத்தில் விளைவாகவும் காரணமாக இருக்கின்றார்கள்) காரணியாக இருக்கும் போது விளைவாகவும் இருக்கின்றார். எப்படி இருப்பினும், அமைப்பின் ஸ்திரத்தன்மை யற்ற நிலைக்கு ஒரு தனிநபரே காரணம் இருந்தாலும் கூட சாராம்சத்தில் அது ஒரு அமைப்பு பிரச்சினையேயாகும். ஏனெனில் அன்நிலைக்குக் காரணமாக இருக்கும் அந்த நபர்கள் அமைப்பின் உறுப்பினர் களாக இருந்தும் அமைப்பின் தேவை களுக்கு எதிராக சிந்தித்து செயல் படுகின்றார்கள் என்றால் அவ்வமைப்பு. தனது செயல்பாட்டிற்கு தேவையான அளவுகோல்களை (தகுதிகளை) அல்லது விதிமுறைகளை உத்தரவாதம் செய்து கொள்ளவில்லை அல்லது அமைப்பின் முடிவுகளையும் தீர்மானங்களையும் செயல்படுத்தும் படி அந்த நபர்களை நிர்ப்பந்திக்கும் வலிமை அமைப்பதற்கு இல்லை என்பதே காரணமாகும். எனவேதான் ஊழியர் பிரச்சினை பற்றிய பரிசீலனை தீர்வும் அமைப்பிலிருந்து துவங்க வேண்டும் தனிநபர் பிரச்சினையும் சாரம்சத்தில் ஒரு அமைப்பை பிரச்சினை ஆகும் என நாம் உணர வேண்டும் தனிநபர்களின் பொறுப்பை தீர்மானிக்கும் போது நாம் அவ்வமைப்பின் தேவைகளையும் அவ்வமைப்பின் அளவு கொள்கை களையும் கோட்பாடுகளையும் அவ்வமைப்பின் கொள்கைகளை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் இதுவே கோட்பாட்டு ரீதியில் அமைந்த வேலை முறையாகும் . 

அதற்கு முற்றிலும் விசுவாசமாக இருப்பவர்களை அதை ஆழமாக புரிந்து கொண்டு வெற்றிகரமாக நடைமுறைப் படுத்துவதற்கு போரிட உறுதிபூண்ட வர்களை கட்சியின் முன்வைக்கப்பட வேண்டும். அனைத்து கடமைகளை நிறைவேற்றுவதற்கு உறுதிபூண்டவர் களை கட்சியின் வழி அல்லது கோட்பாட்டுஅடிப்படையில்திடசித்தத்துடன் மதிநுட்பத்துடன் ஆக்கபூர்வமான முறையில் கையாளும் திறமை உள்ளவர்களை ஊழியர்கள் பெரும் தொகையில்பெற்றிருப்பதுஅவசியமானதாகும். ஒரு நபரின் வலிமை அமைப்பில்தான் தங்கியிருக்கின்றது தனிநபர்களின் வலிமையில் கூட்டுத் தொகையை விட தரத்தில் முற்றிலும் வேறுபட்ட ஒரு புதிய வலிமையை அமைப்பு உருவாக்குகின்றது இப்பிரச்சினையில் உள்ள இயக்கவியல்.

பின்வரும்கற்றலில் அடங்கி இருக்கின்றது. ஒரு வலுவான அமைப்பு தனிநபர்களின்வலிமையைஉத்தரவாதம் செய்கின்றது. தனிநபர்களின் வலிமை அமைப்பைவலுவானதாக ஆக்குகின்றது. ஒவ்வொரு மனிதனுக்கும் தனி குணாதி சயமும் திறமையும் உண்டு. ஆகவே தான்ஒருஅமைப்புக்குள்தனிநபர்களுக்கு பாத்திரம் இல்லை என நாம் கூற முடியாது ஒரு அமைப்பில் உள்ள உறுப்பினர்அனைவரும்எத்திறனுமற்றவர்களாக இருப்பார்கள் என்றால் அந்த அமைப்பு நிலைத்திருக்க முடியாது. ஏனெனில் ஒரு அமைப்பு உண்மையில் பலநபர்களின் சேர்க்கையாகவே இருக்கின்றது. உண்மையில் உறுப்பினர்கள் ஆற்றல் அற்றவர்களாக இருப்பார்களானால் அவ்வமைப்பின் கூட்டுத்திறன் எங்கிருந்து கிடைக்கும்.

ஒரு சரியான அரசியல் வழியினால் உருவாக்கப்பட்ட இயக்கமானது வலிமையான வெகுஜன இயக்கமாக கட்சியால் உருவாக்கப்பட்டு இருந்தால் பெரும்பான்மையான கட்சி ஊழியர்கள் கட்சியின் சரியான அரசியல் வழியில் நின்று உறுதியாக போராடினால் கட்சி ஊழியர்களை தீய போக்குகள் எடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் குறைக்கப் படுவதுடன் அத்தீயபோக்குகள் கட்சி ஊழியர்களால் தனிமைப்படுத்தப்பட்டு அவை இயக்கத்திலிருந்து தூக்கி எறியப்படும். இதற்கு மாறாக அரசியல் வழியிலேயே பிழைகள் செய்யப் படுமானால் நிலைமைகள் வேரொன்றாகி விடும். தவறான வழி ஊழியர்களை ஒரு சரியானதிசையில் இருந்து விலக்கி அவர்களை "பொருளாதாரவாதம், வர்க்க சமரசம், அராஜகவாதம், தன்னெழுச்சி போக்கு, சந்தர்ப்பவாதம் சகாசவாதம்" போன்ற தவறான பாதைக்குகொண்டுசெல்லும். அணிகளுக் கிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். ஏராளமான ஊழியர்களை தவறுகளை செய்வதற்கு தள்ளிவிடும். இத்தகைய சூழ்நிலை யில் சரியானது தவறான பிரித்துப்பார்க்க சரியானதை எடுத்துக்காட்டி எச்சரிக்கை செய்து உண்மையாகபோராடுவோர் நிச்சயமாக இருப்பார்கள் ஆயினும் புரட்சி இயக்கத்தை மீண்டும் ஒரு சரியான பாதைக்கு கொண்டு வருவது இயக்கம் ஒரு உயர்ந்த விலையை செய்து செலுத்த வேண்டியிருக்கும். அமைப்பு பணியின் உள்ளடக்கம் மற்றும் குணாம்சம் அதன் வாய்ப்பெல்லை ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் அமைப்பு பிரச்சினை முழுவதையும் வெறும் ஊழியர்பிரச்சினையாக எளிமைப்படுத்தி பார்த்து விட முடியாது. அமைப்பு அதற்கே உரித்தான சுயேட்சையான பாத்திரத்தை வகுக்கின்றது -சிபி

இன்று முதலாளித்துவ நிலைப்புக்கான கருத்தியல்களும் கலாசாரச் சீரழிவுகளும் வேகமாகப் புகுத்தப்பட்டு சமூகநலன் சார்ந்த சிந்தனைகளும் கருத்துக்களும்  குறிவைத்து தாக்கப்படுகின்றன. போராட்டங்கள், எழுச்சிகள், சமூகமாற்றம் என்பன மறுக்கப்படுகின்றன. பழைமைவாதம், ஆதிக்கம், அடக்குதல் என்பன மீட்டுநிலைநிறுத்தப்படும் போக்கு வலுவடைகின்றது. இவை நமது நாடு உட்பட மூன்றாம் உலக நாடுகளில் முனைப்படைந்திருக்கும் நிகழ்வுப் போக்குகளாகும்.

++++++++++++++++++++++++++++++++++++++++




இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்