நவம்பர் 7, 1917 ரசியாவில் பாட்டாளி வர்க்க ஆட்சி மலர்ந்த நாள். பூமிப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கில் உழைக்கும் மக்கள் ஆட்சி நிறுவப்பட்ட நாள். ரசியாவில் முதல் சோசலிச அரசு உதித்த அந்த நவம்பர் புரட்சிக்கு தற்போது 107-வது பிறந்தநாள்.
அதற்கு நமது ஆசான் லெனின் தன் நாட்டில் புரட்சிக்கு முன் செய்ய வேண்டியதை மிக துள்ளியமாக நுண் அறிவோடு அணுகி அதற்கான பணியினை செய்தார்.
சோசலிச ரசியா மண்ணுலக சொர்க்கமாக மலர்ந்தது. கொள்ளைச் சுரண்டலும், கொடூர அடக்குமுறையும் முதலாளித்துவ நாடுகளில் தலைவிரித்தாடிய போது அச்சுரண்டல் அமைப்பை ஒழித்து பாட்டாளிகளையே நாட்டின் எஜமானர்களாக்கி ஜனநாயகத்தை நிலைநாட்டி வளர்த்தது சோசலிசம்.
மனிதகுலத்தின் வரலாற்றுவளர்ச்சியில் தனிச்சொத்துடமையின் தோற்றம் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வினையும் வர்க்கங்களையும் உருவாக்கியது. இத்தகைய வர்க்கங்களிடையிலான முரண்பாடுகளும் போராட்டங்களும் பொதுவாகி போனது.மனிதகுலத்தின் வரலாறு வர்க்கபோராட்டங்களின் வரலாறாகிக் கொண்டது. வர்க்க முரண்பாடுகளின் வளர்ச்சிப் போக்கின் விளைவுகளால் அரசு தோன்றியது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம் மார்க்ஸ் விளக்கியது போன்று அரசென்றால் ஒரு வர்க்கம் வேறு ஒரு வர்க்கத்தை அடக்குவதற்கான ஒரு கருவியாகும். அது வர்க்கங்களுக்கு மேலே, சமுதாயத்திற்கு மேலே உள்ள ஒரு நடுநிலைஅமைப்பல்ல. சுரண்டும் வர்க்கங்கள், சுரண்டப்படும் வர்க்கங்களை அடிமைத்தனமாக வைத்திருப்பதற்கான ஓர் அடக்குமுறைச் சாதனமே அரசு ஆகும். சுரண்டும் வர்க்கங்கள், சுரண்டப்படும் வர்க்கங்களை கீழே வைத்திருப்பதற்காகப் படிப்படியாகக் கட்டப்பட்டசாதனமே அரசு. வர்க்கசமுதாயத்தில் ஆட்சி செலுத்துவது உண்மையில் அதுவே. கட்சிகள் வரலாம் போகலாம். ஆனால் சுரண்டும் அமைப்புமுறை இருக்கும்வரை அரசு இயந்திரம் அவ்வாறே இருக்கும்.அவர்கள் முதலாளியின் உயிரையும், உடமையையும் பாதுகாக்க வந்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் ஆயுதந்தாங்கியவர்களாக வந்திருக்கின்றார்கள். அவர்களின் கரங்களில் உள்ள துப்பாக்கிகளே முதலாளியையும், அவனது வர்க்கத்தையும் பாதுகாக்கின்றது.
1917 நவம்பர் 7 உலக வரலாற்றில் மிகவும் முக்கியத்துவமுடைய நாள். அன்று தான் ரசியாவில் ஜாரின் கொடுங்கோல் ஆட்சி தூக்கி எறியப்பட்டு உலகிலேயே முதல் முறையாக தோழர் லெனின் தலைமையில் உழைக்கும் மக்களின் முதல் அரசு ரசியாவில் அமைக்கப்பட்டது. ஆண்டைகளின் வரலாற்றை புரட்டி போட்டு அடிமைகள் என்று கருதப்பட்ட உழைக்கும் மக்களும் ஆட்சி அமைக்க முடியும் என்று உலகுக்கு காட்டிய நாள். கூலிகளாகவும், பஞ்சப் பராரிகளாகவும் ஆளும் வர்க்கத்தால் ஏய்க்கப்படிருந்த கூட்டம் சொந்த நாட்டை ஆட்சி செய்வதை உலகுக்கு அறிவித்த நாள்.
தோழர் லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்கம் ஆட்சி அமைத்தவுடன், அதுவரை உழைக்கும் மக்களின் உதிரத்தை குடித்து கொள்ளையடித்து சேர்க்கப்பட்ட சொத்துக்கள்அனைத்தும்பொதுவுடைமை ஆக்கப்பட்டன. லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நிலமற்ற கூலி ஏழை விவசாயிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டன. தொழிற்சாலைகள் அனைத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பு தொழிலாளிகளிடமே விடப்பட்டது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. முதல் உலகப்போரால் பாதிக்கப்பட்டு அச்சத்திலிருந்த மக்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் நிம்மதியை தந்தது. ஜாரினால் பிடித்து வைக்கப்பட்டிருந்த சிறு சிறு அண்டை நாடுகள் அனைத்திற்கும் அன்று முதல் விடுதலை வழங்கப்பட்டது. ரசியா முழு சுதந்திர நாடாக, சோசலிச நாடாக அறிவிக்கப்பட்டது.
சோவியத்தின் சாதனைகள் என்று நிறைய சொல்லலாம். எனினும் கல்வி தொடர்பான சோவியத் யூனியனின் இரண்டு உதாரணங்களை மட்டும் இங்கு பார்ப்போம். ஜார் ஆட்சி காலத்தில் ரசியாவில் கல்வி கற்றவர்களின் சதவிகிதம் காலனியாட்சி கால இந்தியாவை விட பின் தங்கியிருந்தது. புரட்சிக்கு பின்னர் இருபதே ஆண்டுகளில், குறிப்பாக ஸ்டாலின் ஆட்சி காலத்தில் ரசியாவில் கல்வி கற்றிருந்தோரின் சதவிகிதம், இந்தியாவை காலனியாக்கி வைத்திருந்த, உலகிலேயே கல்வியில் முதல் இடத்தில் இருந்த பிரிட்டனை விட பத்து மடங்கு உயர்ந்திருந்தது.
ரசியப் புரட்சியின் சாதனைகள்:
- உலகில் முதல்முறையாக பெண்களுக்கு வாக்குரிமை
- பெண்களுக்கான உண்மையான சமத்துவம்
- 8 மணி நேர வேலைக்கு முதன்முறையாக சட்ட அங்கீகாரம்
- அனைவருக்கும் கல்வி, வேலை, வீடு
- முதலாளிகளின் சொத்துக்குவிப்புக்கான அடிப்படை ஒழித்துக் கட்டப்பட்டதன் மூலம் உபரி முழுவதும் கல்வி, சுகாதாரம், மருத்துவம், முதியோர் நலன், என உழைக்கும் மக்களின் நலன்களுக்கே பயன்படுத்தப்பட்டு, வறுமை ஒழித்துக் கட்டப்பட்டது.
- சோவியத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய இனங்களுக்கு பிரிந்து போகும் உரிமையுடன் சுயநிர்ணய உரிமை
- பல்வேறு நாடுகளில் நடைபெற்ற தேசிய விடுதலைப்போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவு, இதன் மூலம் விடுதலை சாத்தியமானது.
- ரசியப் புரட்சியைப் பார்த்து அஞ்சி, முதலாளித்துவ நாடுகளே வேறுவழியின்றி மக்களுக்கு சலுகைகளை அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டன.
- சோசலிச அரசு சோவியத் மக்களின் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள், வளர்ச்சிகள் அம்மக்களின் நாட்டுப்பற்றை வளர்த்தெடுத்தது. இதன் உச்சமாக இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர், முசோலினி பாசிசக் கும்பலை ஒழித்துக் கட்டியது செம்படை. 2 கோடி சோவியத் மக்கள் தன்னுயிர் ஈந்து, உலகையே காத்தனர்.
- இந்த சாதனை அடைய லெனினின் அயராத உழைப்பே
ரஷ்யாவில் 1883ம் ஆண்டில், முதல் மார்க்சிய குழு தோற்றுவிக்கப்பட்டது. 1895ல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 20 மார்க்சிய குழுக்கள் செயல்பட்டன. அரசியல் ரீதியாக வளர்ச்சியடைந்திருந்த தொழிலாளர்களுக்கு லெனின் இங்கு மார்க்சியத்தை போதித்தார். 1895ல் 20 மார்க்சிய குழுக்களையும் ஒன்றுபடுத்தி "தொழிலாளிவர்க்கத்தின்விடுதலைக்கான போராட்டசங்கம்" என்பதனைத் தோற்றுவித்தார் லெனின்.
இச்சங்கம் லெனின் காட்டிய வழியில் பொருளாதார கோரிக்கைகளுக்காக தொழிலாளர்கள்நடத்துகிறபோராட்டத்தை, ஜார் ஆட்சியை எதிர்த்து நடைபெறும் அரசியல் போராட்டமாக வளர்த்தது.
ஒவ்வொருநிகழ்ச்சியையும்,சம்பவத்தையும், விஷயத்தையும் விளக்கிக் கூறி தொழிலாளர்களுக்கு அரசியல் பாடங்களைப் போதித்தது. தொழிலாளி வர்க்க இயக்கத்துடன் சோசலிசத்தை ஒருங்கிணைத்த முதல் அமைப்பு இந்தச் சங்கமே. புரட்சிகரமான தொழிலாளர் கட்சியை ஸ்தாபிப்பதற்குரிய அடிப்படைப்பணிகளைச்செய்தது "தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான போராட்ட சங்கம்.” தொழிலாளி வர்க்கத்தால் பூரணமாக ஆதரிக்கப்பட்டு இயங்கும் ஒரு புரட்சிகரமான கட்சிக்கு உண்மையான முதல் மூலாதாரமாக மார்க்சிய குழுக்களும், தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கானப் போராட்ட சங்கமும் விளங்கின என்றார் லெனின்.
இன்று ஏற்பட்டுள்ள போக்கானது -லெனினியத்தை ஏற்கமறுத்து புறக்கணிக்கிறார்கள் என்றால் அவர்கள் நிச்சயமாக மார்க்சியத்தையே புறக்கணிக்கிறார்கள் என்றே பொருளாகும். மார்க்சை சிலர் ஐரோப்பிய தத்துவவாதி என்கின்றனர். ஆனால் மார்க்ஸ் உழைப்பின் விடுதலையைப் பற்றி தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார். உழைப்பு என்பது ஐரோப்பாவிற்கு மட்டும் உரித்தானது அல்ல. உலகம் முழுவதற்கும் உரித்தானதுதான் உழைப்பு ஆகும். இந்த உழைப்புதான் மனிதகுலம் வாழ்வதற்கும் வளர்வதற்கும் அடிப்படையாகும். இத்தகைய உழைப்பு அடிமைப்பட்டிருக்கிறது என்றும் இது முதலாளிகளால் அடிமைப்படுத்தப் பட்டுள்ளது என்றும் இந்த உழைப்பை முதலாளிகளிடமிருந்து விடுதலை செய்வதன் மூலமே உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்ற தத்துவத்தைப் போதித்தவர் மார்க்ஸ். ஆகவே அவரது தத்துவம் உலக மக்களுக்கானதாகும். இதேபோலவே லெனினும் உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவே மார்க்சின் தத்துவத்தை வளர்த்தார். குறிப்பாக உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செய்யும் நிதிமூலதன ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டுவதற்கான தத்துவ அரசியல் வழிகாட்டியவர்தான் லெனின்.
லெனினை ரஷ்யாவோடு குறுக்கிக் கொண்டு இந்தியப் புரட்சிக்கு லெனின் தேவையில்லை என்ற கருத்தைப் பிரச்சாரம் செய்பவர்கள் சந்தேகமில்லாமல் முதலாளித்து சீர்திருத்தவாத சந்தர்ப்பவாதிகளே ஆவார்கள்.
ஏகாதிபத்தியங்களை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தை மறுப்பவர்கள் லெனினை மறுக்கிறார்கள். ஆகவேதான் இவர்களை ஏகாதிபத்திய சார்பு சந்தர்ப்பவாதிகள் என்கிறோம்”.
லெனின் அவர்கள் தமது முதல் கடமையாக, மார்க்சும், ஏங்கெல்சும் மறைந்த பின்னர், அவர்களுடைய வாரிசுகள் தாம் என்று தம்மைத்தாமே கூறிக்கொண்ட காட்ஸ்கி, பெர்ன்ஸ்டீன் போன்ற இரண்டாவது சர்வதேசியத்தின் தலைவர்களுடன் ஒரு மிகப்பெரும் சித்தாந்தப் போரை நடத்தினர். ஆனால், யதார்த்தத்தில் அவர்களுக்கும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவருக்கும் சம்பந்தா சம்பந்தமே கிடையாது. அவர்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரின் புரட்சிப் போதனைகளைத் திரித்துப் புரட்டி எழுதினார்கள்.விஞ்ஞானசோசலிசத்தின் இம்மாபெரும் பிதாமகன்களின் புரட்சிகர உள்ளடக்கத்துக்கு முழுக்குப் போட்டு,அவற்றுக்குப் பதில் காட்ஸ்கி,பெர்ன்ஸ்டீன் என்ற இந்த அற்பர்கள் பாராளுமன்றப் பாதை மூலம் சோஷலிஸத்துக்குச் செல்லும் சமாதான மாற்றத் தத்துவங்களைவிளம்பரம்செய்தார்கள்.அவர்கள் புரட்சிகரக் கட்சிகளாக இருந்தஇரண்டாவதுசர்வதேசியத்தின் கட்சிகளை பாராளுமன்றக் கட்சிகளாக மாற்றி விட்டார்கள்.
வேறு வார்த்தைகளில் கூறினால்,அவர்கள் மார்க்ஸ்,ஏங்கெல்ஸ் இருவரின் புரட்சித் தத்துவங்களைத் திரித்து விட்டனர்.எனவேதான் லெனின் அவர்களை திரிபுவாதிகள் என்று அழைத்தார். ஆக, மார்க்சியத்தின் அடிப்படை புரட்சிகர உண்மைகளைக் கண்டுபிடித்து, அவற்றைஉறுதியாகவும்,ஒளியுடனும் புதிபித்ததும் லெனினின் முதல் கடமையாக இருந்தது. இந்தக் கடமையை,இன்றும் பிரசித்தி பெற்று புகழுடன் விளங்கும் மார்க்சியத் தொன்னுால்களான 'அரசும் புரட்சியும்', 'பாட்டாளி வர்க்கப் புரட்சியும், துரோகி காவுட்ஸ்கியும்' போன்ற பிரகாசமான பல வாதப்பிரதிவாதப் படைப்புகள் மூலம் நிறைவேற்றினர்.
ஆனால், லெனின் ஒரு தத்துவ நிபுணர் மாத்திரமல்ல. அவர் ஒரு செயல் வீரனும் கூட, மார்க்சியக் களஞ்சியத்துக்கு அவர் வழங்கிய மிகப் பெரும் சாதனைகளில் ஒன்று யாதெனில் புதிய ரகக் கட்சி யொன்றை அமைப்பது பற்றிய அவருடைய தத்துவமாகும்.இதன் பிரகாரம் அவர் உருவாக்கிய போல்ஷ்விக் கட்சி,அக்டோபர் புரட்சியை நடத்தும் ஆயுதமாகச் சேவை செய்தது,இது உருக்குப் போன்ற கட்டுப்பாடுடைய,புரட்சிகர மார்க்சியஉண்மைகளால் ஆயுத பாணியாகிய, சந்தர்ப்பவாதத்தி லிருந்து விடுதலைபெற்ற, ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடுகளால் வழிநடத்தப்படுகின்ற,சுயவிமர்சனத்தை ஆயுதமாகக் கொண்ட பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்புகளை உடைய ஒரு புரட்சிகரக் கட்சியாகும்.
இத்தகைய ஒரு கட்சியின் உதவியுடன்,லெனின் அவர்கள் உலகின் முதலாவது தொழிலாளர் வர்க்கப் புரட்சியை வெற்றிகரமாக வழிநடத்தி,உலகின் முதலாவது சோசலிச அரசை நிறுவினார்.
அது அடக்கி ஒடுக்கப்பட்ட உலக மக்கள் அனைவருக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது. இப்படிச் செய்ததன் மூலம் லெனின் தத்துவத்தை நடைமுறையாக்கினர்; கனவை நனவாக்கினர்.இத்துடன்,முதலாளித்துவ சமுத்திரத்தால் சூழப்பட்ட ஒரு நாட்டில்பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவி,பாதுகாப்பது சம்பந்தயான பல பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டார்.
ஆனாலும்,படித்தறிய முன்நிகழ்ச்சி ஒன்றும் இல்லாத முதல் முயற்சியின் போக்கில் எழுந்த பல பிரச்சினைக்குத் தீர்வுகாண அவர் போதிய காலம் வாழவில்லை. இருந்தும், அவர் மார்ச்சியத்தை ஒரு புதிய மட்டத்திற்கு உயர்த்தி விட்டார். அதுமுதல், மார்க்சியம் என்பது மார்க்சியம்-லெனினியம் என அழைக்கப்பட்டுகிறது.
புரட்சிக்கு முன் லெனின்எழுதியவை
1895 பிரெடெரிக் எங்கெல்ஸ்
1897 நாம் கைவிடும் மரபு[ரிமை]
1897 பொருளாதாரத் தன்னுணர்ச்சி வாதம் பற்றிய ஒரு பண்புரை [தமிழில் ஆர்.கே.கண்ணன்]
1899 நமது வேலைத் திட்டம் (தொ-1)
1901 / 05 எங்கிருந்து தொடங்குவது? (தொ-1)
1901 / 12 பொருளாதாரவாதத்தின் ஆதரவாளர்களுடன் ஒரு உரையாடல்
1901 – 1907 விவசாயப் பிரச்சினையும் மார்க்சின் திறனாய்வாளர்களும்
1902 என்ன செய்ய வேண்டும் ? : நம் இயக்கத்தின் சூடேறியப் பிரச்சினைகள்
1903 / 03 நாட்டுப்புற ஏழை மக்களுக்கு
இந்த நூல் தேர்வுநூல்கள் தொகுதியிலோ, நூல் திரட்டுத் தொகுதியிலோ சேர்க்கப்படவில்லை
1904 ஓரடி முன்னால் ஈரடி பின்னால் : நம் கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி
1905 / 01 ருஷ்யாவில் புரட்சியின் துவக்கம்
1905 / 07 ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜநாயகவாதத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள்(தொ-1)
1905 / 11 கட்சி நிறுவனமும் கட்சி இலக்கியமும்
1905 / 11 குட்டி முதலாளித்துவ சோஷலிசமும் பாட்டாளி வர்க்க சோஷலிசமும்
1906 / 08 மாஸ்கோ புரட்சி எழுச்சியின் படிப்பினைகள்
1908 / 03-04 மார்க்சியமும் திருத்தல்வாதமும் (தோ-1)
1909 / 01 கட்சிப் பாதை
1910 / 12 மார்க்சியத்தினுடைய வரலாற்று வளர்ச்சியின் சில இயல்புகள்
1912 / 05 ஹெர்ட்ஸன் நினைவாக
1913 / 03 மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்(தொ-1)
1913 / 03 வரலாற்றில் கார்ல் மார்க்ஸ் தத்துவத்துக்கு விதிக்கப்பட்ட வருங்காலம்(தொ-1)
1913 / 10-12 தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்
1913 / 12 ரு ஷ்ய சோஷல் டெமாக்ரடிக் தொழிலாளர் கட்சியின் தேசீயச் செயல்திட்டம்
1914 / 02-05 தேச [இன]ங்களின் சுயநிர்ணய உரிமை
1914 / 05 ஒற்றுமைக்கான கூக்குரல்களின் போர்வையில் ஒற்றுமையை உடைத்தல்
1914 / 07-11 கார்ல் மார்க்ஸ் (மார்க்சியத்தைப் பற்றிய விரிவுரையுடன் அமைந்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்)
1914 / 09 போரும் ருஷ்யன் சமூக-ஜனநாயகமும்
1914 / 12 மாருஷ்யர்களது தேசிய பெருமித உணர்ச்சிக் குறித்து
1915 / 05-06 இரண்டாவது அகிலத்தின் தகர்வு
1915 / 07-08 சோஷலிஸமும் போரும்
1915 / 08 ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் வேண்டும் எனும் முழக்கத்தைப் பற்றி
1915 / 8 ரு.ச.ஜ.தொ. கட்சியின் மத்தியக் கமிட்டி வெளியிட்ட போர் மீதான அறிக்கை குறித்து “சொத்ஸியால் டெமக்ராட்” ஆசிரியப் பகுதி விமர்சனக் குறிப்பு
1916 / 01-02 சோஷலிஸப் புரட்சியும் தேச[இன]ங்களின் சுயநிர்ணய உரிமையும் (ஆய்வுரைகள்)
1916 / 01-06 ஏகாதிபத்தியம்:முதலாளித்து வத்தின் உச்ச கட்டம்(தொ-2)
1916 / 07 சுயநிர்ணயம் பற்றிய விவாதத்தின் தொகுப்பு
1916 / 08-10 ஏகாதிபத்தியக் கால பொருளாதாரவாதமும் மார்க்சியத்தை இழிவுப்படுத்தும் ஒரு கேலிச் சித்திரமும்
1917 / 03 தொலைவில் இருந்து எழுதிய கடிதங்கள். முதல் கடிதம். முதல் புரட்சியின் முதல் கட்டம்
1917 / 04 இரட்டை ஆட்சி
1917 / 04 இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள். ஆராய்ச்சியுரைகள்
1917 / 04 நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் (பாட்டாளி வர்க்கக் கட்சிக்கான நகல் கொள்கை அறிக்கை)
1917 / 05 ரு.ச.ஜ.தொ.க. (போல்ஷிவிக்) இன் ஏழாவது(ஏப்ரல்) அகில ருஷ்ய மாநாடு [ஏப்ரல் 24-29(மே 7-12) 1917]
1917 / 05 ரு.ச.ஜ.தொ.க. (போல்ஷிவிக்) இன் ஏழாவது(ஏப்ரல்) அகில ருஷ்ய மாநாட்டுத் தீர்மானங்களுக்கான முகவுரை
1917 / 06 தொழிலாளர், படையாளிகள் பிரதிநிதிகளின் சோவியத்களது முதல் அகில ருஷ்ய மாநாடு [ஜுன்3-24 1917] : இடைக்கால அரசாங்கத்தோடான உறவுநிலை பற்றிய உரை ஜுன்4
1917 / 07 “புரொலிட்டார்ஸ்கொயே தியேலொ” ஆசிரியர்களுக்குக் கடிதம்
1917 / 07 அமைச்சரவையிலிருந்து அவர்கள் விலகிய போது காடேட்டுகள் என்ன கருதியிருப்பார்கள்
1917 / 07 அரசியல் நிலைமை (நான்கு ஆய்வுரைகள்)
1917 / 07 ஆட்சி அதிகாரம் எங்கே இருக்கிறது, எதிர்ப்புரட்சி எங்கே இருக்கிறது ?
1917 / 07 கோஷங்கள் பற்றி
1917 / 07 போல்ஷிவிக் தலைவர்கள் நீதிமன்றத்தின் ஆஜராவது பற்றிய பிரச்சினை
1917 / 07 மூன்று நெருக்கடிகள்
1917 / 07 ஜுன் பதினெட்டாம் நாள்
1917 / 08 ரு.ச.ஜ.தொ.கட்சியின் மத்திய கமிட்டிக்கு
1917 / 08-11 அரசும் புரட்சியும் : அரசைப் பற்றிய மார்க்சியத் தத்துவங்களும் புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளும்(தொ-2)
1917 / 09 இன்றைய அரசியல் நிலைமை பற்றிய நகல் தீர்மானம்
1917 / 09 சமரசங்கள் குறித்து
1917 / 09 நெருங்கி வரும் பெரும் விபத்து, அதை எதிர்த்துப் போராடுவது எப்படி
1917 / 09 புரட்சியின் அடிப்படையான பிரச்சினைகளில் ஒன்று
1917 / 09 புரட்சியின் படிப்பினைகள்
1917 / 09 மார்க்சியமும் புரட்சி எழுச்சியும்
1917 / 09 ருஷ்யப் புரட்சியும் உள்நாட்டுப் போரும் (உள்நாட்டுப் போரைக் கொண்டு கிலியூட்ட முயல்கிறார்கள்)
1917 / 09-10 போல்ஷிவிக்குகள் நீடித்து அரசாள முடியுமா ?
1917 / 10 ஒரு பார்வையாளனின் அறிவுரைகள்
1917/10 தொழிலாளர்கள், படையாளர் கள் பிரதிநிதிகளது சோவியத்துகளின் இரண்டாவது அகில ருஷ்ய காங்கிரஸ், அக்டோபர் 25-6 1917.
1917 / 10 நெருக்கடி முதிர்ந்து விட்டது
1917 / 10 போல்ஷிவிக் கட்சி உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம்
1917 / 10 மத்திய கமிட்டி உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம்
1917 / 10 மத்திய கமிட்டி, மாஸ்கோ பெத்ரோகிராத் கமிட்டிகள் மற்றும் பெத்ரோகிராத் மாஸ்கோ சோவியத்துகளின் உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம்
1917 / 10 யா.மி. ஸ்வெர்ட்லோவுக்கு எழுதிய கடிதம்
1917 / 10 ரு.ச.ஜ.தொ.கட்சி (போ.) மத்திய கமிட்டியின் கூட்டம். அக்டோபர் 10, 1917
1917 / 10 ரு.ச.ஜ.தொ.கட்சி (போ.) மத்திய கமிட்டியின் கூட்டம். அக்டோபர் 16, 1917
1917 / 10 ரு.ச.ஜ.தொ.கட்சி (போ.)யின் மத்திய கமிட்டிக்கு எழுதிய கடிதம்
1917 / 10 ருஷ்யாவின் குடிமக்களுக்கு!
1917 / 10 வடக்குப் பிராந்திய சோவியத்துகளின் காங்கிரசில் கலந்துகொள்ளும் போல்ஷிவிக் தோழர்களுக்கு எழுதிய கடிதம்
1917 / 11 தேச மக்களுக்கு
1917 / 11 தொழிலாளருக்கும் உழைக்கும் சுரண்டப்படும் விவசாயிகளுக்கும் இடையிலான கூட்டணி. பிராவ்தாவுக்கு ஒரு கடிதம்
1917 / 11 பொதுவிவகார எழுத்தாளரின் நாள் குறிப்பிலிருந்து: நமது கட்சியின் பிழைகள்
1917 / 11 போல்ஷிவிக்குகள் கட்டாயம் ஆட்சி அதிகாரம் மேற்கொள்ள வேண்டும்
1917 / 11 மத்தியக் கமிட்டிக்கு அகத்தே இருக்கும் எதிர்ப்பணி பற்றிய ரு.ச.ஜ.தொ.க.(போ.)இன் மத்தியக் கமிட்டித் தீர்மானம் நவம்பர் 2, 1917
1917 / 11 ரு.ச.ஜ.தொ.க.(போ.)இன் ம.க.இன் பெரும்பான்மை இடமிருந்து சிறுபான்மைக்குத் தரப்பட்டதான இறுதி எச்சரிக்கை
1917 / 11 ரு.ச.ஜ.தொ.க.(போ.)இன் மத்தியக் கமிட்டிக் கூட்டத்தில் ஆற்றிய உரைகள், நவம்பர் 1, 1917 குறிப்பேடுகள்
1917 / 11 ரு.ச.ஜ.தொ.க.(போ.)இன் மத்தியக் கமிட்டியிலிருந்து. எல்லாக் கட்சி உறுப்பினர்களுக்கும் ருஷ்யாவின் அனைத்து உழைக்கும் வர்க்கங்களுக்கும்
1917 / 11 விவசாயிகள் கேள்விகளுக்குப் பதில்
1917 / 11 விவசாயிகள் பிரதிநிதிகளின் சோவியத்துகளின் விசேஷ அகில ருஷ்யக் காங்கிரஸ், 1917 நவம்பர் 10-15