ஜாதியம் இன்று சமூகத்தில் ஏன் கோலோச்சுகிறது?-1

இன்று நமது சமூகத்தில் ஜாதி  என்ற நோய் நீடித்திருபதற்கு காரணம் நிலரபுத்துவ சமுக அமைப்பின் மிச்ச சொச்சங்களே என்றாலும் உண்மையில் இன்னும் சில காரணிகள் உள்ளன அதில் ஒன்றை இதில் பார்ப்போம்.

இ இன்று நாம் வாழும் சமூகத்தில் ஜாதி என்ற கோட்பாட்டு அடிப்படையில் யார் மிகவும் கொடூரமாக அடக்கி ஒடுக்கப்படுகிறாரோ அவர்களும் இந்த ஜாதியை விட்டொழிய  முன் வராமையே சாபக்கேடு அவை ஏன் என்ன என்று ஆராய்ந்தோமானால் சாதி ஒழிப்பு முன்வைத்த அம்பேத்கர் ஆகட்டும் பெரியார் ஆகட்டும் அவர்கள் முன்வைத்த கோரிக்கையானது  ஜனநாயகத்தின் பெயரில் பாராளுமன்ற வாதம் மேலோங்கி இதற்குள்ளே சீர்திருத்த முறையில் மாற்றத்தை வேண்டி நின்றது தான் சமூகத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்த மக்களின் நிலையை உயர்த்த கொண்டுவரப்பட்ட பல்வேறு சட்டதிட்டங்கள் என்ன என்பதை ஆராய்வது அல்ல இங்கு சமூகத்தால் மிகவும் அடக்கி ஒடுக்கப்பட்ட தாழ்ந்த நிலையில் இருந்த மக்களை எந்த வகையில் பயன்பட்டது என்பதை விட இதன் மூலம் சாதியின் உச்சாணிக்கொம்பில் உள்ளவரும் இட ஒதுக்கீடு வழங்கும் முறை வந்துவிட்டது. ஆனால் அந்த இட ஒதுக்கீடு எந்த அளவிற்கு மக்களுக்கு பயன்படுகிறது என்பதல்ல பிரச்சனை ... இந்த இட ஒதுக்கீடு என்ற பெயரில் வாழும் ஜாதி கட்சிகள் தங்கள் ஜாதி மக்களுக்காக போராடுவதாக கூறிக்கொண்டு என்ன செய்து கொண்டுள்ளன புரிந்து கொள்ளுங்கள்.

இ ஒதுக்கீடு கொள்கையால் ஜாதி நிலைத்து நிற்கிறது அதன் பெயரால் ஜாதி கட்சிகள் தழைத்தோங்குகிறது. படித்தால் வேலை: படிக்கவும் இட ஒதுக்கீடு; ஜாதி ரீதியாக இட ஒதுக்கீடு , இப்படிப் பேசப்படும் இட ஒதுக்கீடானது. உண்மையில் அதன் தேவையை நிராகறித்து விட்ட பின் 

     இங்கு எல்லாமே தனியார்மயமாகிவிட்டது அரசின் நிர்வாகத் துறையை தவிர்த்து. அப்படி இருக்கும் பொழுது ஒரு சில சதவீத மக்களுக்கு கூட வேலை வாய்ப்பை தர முடியாத நிலையில் உள்ளது அரசாங்கம் . நாட்டில் 78% அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிரந்தரப் பணியில் உள்ளதாக கணக்கெடுப்பு கூறுகிறது.  அப்படி எனும் பொழுது இட ஒதுக்கீடு கொள்கைப்படி எல்லோருக்கும் வேலை வாய்ப்பு என்பது கானல் நீராக அல்லவா உள்ளது?. அந்தந்த குறிப்பிட்ட ஜாதியில் இதற்கு முன்னரே மேல் நிலையில் உள்ளவர்களுக்கானதாக தான் அந்த இட ஒதுக்கீடு இன்று பயன்படுகிறது. அப்படி எனும் பொழுது அந்த ஜாதியில் உள்ள மற்ற மக்களுக்கு வேலை வாய்ப்பு என்பது எட்டாக்கனியாக உள்ளது. அதனை செய்ய வேண்டிய அரசு தனியாரிடம் கை காட்டுகிறது இங்கு வேலை இன்றி திரியும் இளைஞர்களை ஜாதி கட்சிகள் தனக்கான ஒதுக்கீடை அடுத்த ஜாதிகாரன் அபகரித்து விட்டான் அதனால்தான் நமது இளைஞர்களுக்கு வேலை இல்லை என்று ஒருத்தர் மீது இன்னொருத்தர் அபாண்டமாக பொய்யாக பழி சுமத்துகின்றனர். உண்மையில் வேலையை கொடுக்க வேண்டிய அரசு நிர்வாகம் அதற்கான எந்த விதமான பணியும் செய்யாமல் உள்ள பொழுது எப்படி மற்றவர்கள் இதற்கு காரணம் ஆவார்கள்?

ஆ இந்த மக்களின் வேலை வாய்ப்பையும் இந்த மக்களின் வாழ்வாதாரத்தையும் பறிக்கும் இந்த அரசு தான் இவர்களின் முக்கியமான எதிரி ஆனால் உண்மையில் நடைமுறையில் என்ன உள்ளது?

      இங்கு இருக்கும் அமைப்பு முறையை தாங்கிப்பிடித்து அதனுடன் இயந்து நிலையான ஜாதியின் கணிசமான அடையாளத்தை காட்டுகோப்போடு இருப்பது சிலருக்கு வாய்ப்புகளையும் பலருக்கு இழப்புகளையும் ஏற்படுத்துகிறது. சாதியானது தேய்வதற்கு பதிலாக அதன் இருப்பு பொதுவெளியில் வளர்ந்து வருகிறதோ என்ற கண்ணோட்டம் எழுகிறது.ஜாதி ஒழிபிற்கு பெரியார் வழி

 ஜாதி ஒழிப்பு பற்றி பெரியாரின் இரண்டு போக்குகள் ஒன்று ஜாதிகளுக்கு இடையில் சமத்துவம் வேண்டுமென்றதே ஜாதி ஒழிப்பு. ஜாதிகளுக்கு இடையில் உயர்வு தாழ்வு காணாமல் இருந்தால் சரிநிகர் சமமாகிவிடும். ஆக ஜாதி இல்லாமல் போகிவிடும் இதுவே சாதி ஒழிப்பாகும்.

பெரியாரின் பல்வேறு கட்ட போராட்டங்கள் மதிக்கத்தக்கவையாக இருந்தாலும் அவை ஜாதி ஒழிப்பிற்கு பயன்படவில்லை என்றே கூறுவேன். ஏனெனில் அவர் ஜாதியை வெறும் கருத்தியல் அம்சமாக மட்டுமே கண்டார் அதாவது வெளிப்புற அம்சங்களாக உள்ளதை மட்டும் புறக்கணிக்க முற்பட்டார். 

ஜாதி ஒழிபிற்கு அம்பேத்கார்வழி

சாதியத்திற்கு, நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளே அடித்தளமாக விளங்குகிறது. அடித்தளத்தை அசைக்காமலே, அதன் மேற்கட்டுமானத்தை - சாதி முறையை ஒழிக்கமுடியும் என்பது அம்பேத்கரின் நிலைபாடாக இருந்தது. சாதிய ஒழிப்புக்கு இந்துமதச் சீர்திருத்தமே வழி என்று கருதினார்.

விரிவாக ஜாதி ஒழிப்பு பற்றி அம்பேத்கார் பெரியார் கருத்துகளை இங்கே அழுத்தி வாசிக்க முடியும்

ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேசி, வர்ணாஸ்ரம தர்மத்தை ஆதரித்த காந்தியாரும்; வர்ணாஸ்ரம தர்மத்தை எதிர்த்தும், சாதி ஒழிப்புக்கு, மதம் கடவுள், பார்ப்பனன் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்று சொன்ன பெரியாரும்; வர்ணாஸ்ரம தர்மத்தை எதிர்த்து, சாதி ஒழிப்புக்கு இந்துமதச் சீர்திருத்தமே வழி என்று கருதிய அம்பேத்காரும், ஆக இம்மூவரும் வெவ்வேறு நிலைபாடுகளைக் கொண்டவர்களாக இருந்தாலும், சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில், சாதியத்திற்கு அடித்தளமான நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த போராட்டத்தை நடத்தாமலே மேற்கட்டுமானத்திற்கு எதிரான போராட்டம் நடத்தியதில் ஒரே கருத்தைக் கொண்டிருந்தனர்.

ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக அம்பேத்கர் உரிமைக் கொண்டாடினாலும் அவர், தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், மற்றும் தொழிலாளி வர்க்கம் ஆகியோர் மீதான சுரண்டலுக்கு அடிப்படையாக இருந்த காரணிகளுக்குத் தீர்வு காண்பதை நோக்கிய இயக்கத்தை வழி நடத்தவில்லை. தாழ்த்தப்பட்டோரில் 90 சதவீதத்திற்கும் அதிகமாகவுள்ள விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளின் அடிப்படைக் கோரிக்கையான "உழுபவருக்கு நிலம் சொந்தம்" என்கிற கோரிக்கையை எழுப்பவில்லை. தாழ்த்தப்பட்டோரில் புதிதாகத் தோன்றி உருவாகி கொண்டிருந்த குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களைப் பிரதிபலிக்க கூடிய, தனித்தொகுதி ஒதுக்கீடு, அரசாங்க வேலைகளில் ஒதுக்கீடு, உதவித் தொகை கோருதல் போன்ற கோரிக்கைகள் (இக்கோரிக்கைகள் ஒட்டுமொத்தமான தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பயன்படும் என்று சொன்னாலும் கூட) மட்டுமே எழுப்பப்பட்டன. அவை தாழ்த்தப்பட்ட சாதியிலுள்ள நடுத்தர வர்க்கத்தின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளை திடப்படுத்தக் கூடியவைதான். அம்பேத்கரின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் நடைமுறையை வைத்துப்பார்க்கும்பொது, அவர் தாழ்த்தப்பட்ட சாதியில் உருவாகிவந்த நடுத்தர வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதியாகத்தான் இருந்தார் என்பது தெளிவாகிறது.

அம்பேத்கரின் வழிவந்தவர்களில் முக்கியமானவரான கெய்க்வாட், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, நிலப்பகிர்வுக் கோரிக்கையே முக்கியமானது என்று எடுத்துக்கொண்டு போராடினார். பெருந்திரளான தாழ்த்தப்பட்ட மக்களை இந்தப் போராட்டம் கவ்விப்பிடித்துக் கவர்ந்தாலும், மற்ற 'தலித்' தலைவர்களின் பார்வை வேறுவிதமாக இருந்தது. இந்தப் போராட்டம் கம்யூனிஸ்ட் வழிப்பட்டது என்று கூறி, கெய்க்வாட்டின் போராட்டத்தினை ஏற்கவில்லை. அம்பேத்கரின் செயல்திட்டத்தில் இத்தகைய போராட்டங்களுக்கு இடமில்லை என்றும், அறிவித்தார்கள். அரசியல் சட்டப்படியான ஆட்சியில், பொதுமக்களின் போராட்டம் என்பது அராஜகவழி. எனவே நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இதற்கு இடமளிக்க கூடாது என்ற அம்பேத்கரின் கருத்தை அவர்கள் உயர்த்திப்பிடித்தார்கள். நிலப்பிரச்சனை முக்கியமானது என்றால், சட்டபூர்வமாக உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். என்று அவர்கள் வாதிட்டனர். இவ்வாறு, அம்பேத்கர், வழிவந்தவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிலப்பகிர்வுக்கான போராட்டங்களை ஏற்க மறுத்துவிட்டார்கள். தலித் இயக்கத்தினர் தற்போது நிலவும் பாராளுமன்ற முறையின் மூலம், முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசதிகார அமைப்புகளில் இடம் பிடிக்கும் நோக்கத்துடன், ஏதாவது ஒரு ஆளும் வர்க்க அரசியல் கட்சிக் கூட்டணியில் சேர்வது நடைமுறைப் போக்காக ஆகிவிட்டது. இத்தகைய நிலைமைகளில் தலித் அமைப்புகள் - சாதிச் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, சாதி ஒழிப்பு என்பனவற்றை முன்னணிப்படுத்தாமல், இடஒதுக்கீடு, அதிகாரப்பகிர்வு, சலுகைகள் பெறுவது ஆகியவற்றைக் கோருவது என்பதை முழுமுதல் நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன..…

அண்மையில் மாமன்னன் என்றோரு சினிமா வந்திருந்தது அதில் இயக்குனர் இன்று தலித்திய சிந்தனையாளர்களுக்கு நன்றாக தீனிபோட்டார் ஆனால் உண்மையில் அந்த கொடூரமான ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் தீர்வாக பாராளுமன்றத்தில் பங்கெடுப்பதை காட்டியிருப்பார். இதனை புரிந்துக் கொள்ளாத NGO களும் தலித்தியவாதிகளும் அந்த சினிமாவின் வியாபார நோக்கத்தையும் உழைக்கும் மக்களை பற்றி துளியும் அறிவில்லை என்று கூறியவுடன், என்னுடன் நட்பிலிருந்த ஒரு புரட்சிகரா இயக்கத்தை சார்ந்தவரின் எழுத்தை பாருங்கள் "அடித்தால் திருப்பி அடி" என்றார். உண்மையில் அகநிலைவாதியாக அவர் எழுதியதை நான் ஏற்க முடியவில்லை. அந்த முழக்கம் தோழர் சீனிவாசராவ் கீழதஞ்சையில் உழைக்கும் கூலி விவசாயிகளை ஒன்றினைத்து பண்ணையார்களுக்கு எதிராக ஆணையிட்டார். அதே போல் 1960 களில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக அனைத்து ஜாதியிலும் இருந்த உழைக்கும் (பாட்டளிகளை) மக்களை ஒன்றினைத்து போராட்டகளில் ஜாதி தீண்டாமைக்கு முடிவுகட்டினர் தனிகுவலை கோயில் நூழைவு மற்றும் இன்னும் சில... தமிழகத்தில் வடஆற்காடு தருமபுரி பகுதிகளில் புரட்சிகர அமைப்புகள் செய்தன பல்வேறு ஜாதியில் இருந்த உழைக்கும் மக்களை ஒன்றினைத்து. இவர்கள் ஜாதிக்கு எதிராக ஜாதியை நிறுத்துவது மக்கள் வர்க்கமாக அணி திரளக்கூடாது அவ்வளுவே.    .

ஆக தலித்துகளை காப்பாளர்களாக வலம் வரும் கட்சிகள் தினம் தினம் தலித்துகள் படும் அவலங்களை பற்றி துளியும் அக்கரை இன்றி தனது ஓட்டரசியலை மையமாக கொண்டே செயல்படுகின்றனர். வேங்கைவயல் தொடங்கி இதுவரை பல பிரச்சினைகளை இவர்கள் கையாண்ட விதமும் அன்று கீழ்வெண்மணியிலாகட்டும், தருமபுரி வடஆற்காடு பகுதியிலாக்கட்டும் அன்று ஜாதி தீண்டாமை ஒடுக்குமுறைக்கு எதிராக உழைக்கும் ஏழை எளிய மக்களை ஒன்றிணைத்து அன்றைய கம்யூனிஸ்ட்டுகள் போராடினர் அவர்கள் அன்று சாதித்தும் காட்டினர். இன்றுள்ள தலித்தியவாதிகள் பேசுவது போலவோ அல்லது NGOகள் பேசுவது போலவோ திட்டம் தேடிக் கொண்டிருக்கவில்லை செயல்பாட்டில் காட்டினர்கள். இன்று புரட்சிகர கட்சி இல்லாத நிலையில் ஏகாதிபத்திய எதிர்புரட்சிகர சக்திகள் மேலோங்கி உள்ள நிலையில் வர்க்க அரசியலை பேச வக்கற்ற இவர்கள் அடையாள அரசியலில் சிக்குண்டுகிடகின்றனர்

பல்லவர்கள் காலம் தொட்டு சோழர்கள் காலம் வரை உருவாக்கி திடப்படுத்தப்பட்ட ஜாதிய முறையும் அதனுடன் நுழைந்த தீண்டாமையும் நிலஉடமை கிராம சமுதாயத்தில் ஓர் இருக்கமடைந்த வேலை பிரிவினையை உணர்த்துகிறது. இவை ஆரியர்களால் உருவாக்கப்பட்டதோ அன்றி திராவிடர்களால் உருவாக்கப்பட்டதோ என காண்பதை விட கிராமிய நிலவுடமை முறையின் சமூகத்தின் வடிவம் என காண்பதே பொருந்தும். இவற்றை செழுமைப்படுத்துவதில் சனாதன இந்து மதத்தின் கருத்து உருவாக்கும் பணி முதன்மையாக இருக்கிறது.

அரசு அதிகாரம் கோயில் அதிகாரம் மையமாக கொண்ட நிலவுடமை கிராமிய சமூகத்தில் இரண்டும் அதிகாரத்திலிருந்தும் தீண்டதாகாதவர் விலக்கி வைக்கப்பட்டு ஊருக்கு வெளியே தனித்து இருத்தப்பட்டனர்.

சமூக உற்பத்தியின் அடிநிலை மக்களான இவர்களை குறிப்பிட்டு அந்தணரில் இருந்து புல்லு பறிக்கிற பரமன் வரை என கூறும் கல்வெட்டாகட்டும்.புலைச்சேரி கூறும் கூரைக் குடிவாழ் மனிதர்களான இவர்கள் எந்தவித பொது உரிமையைகளும் இன்றி இருந்தனர். விளை நிலங்கள் விற்பனையாகும் பொழுது இவர்களும் சேர்ந்து விற்கப்பட்டனர். (கி.பி 1184- தலித்தியம் கோ.கேசவன் நூல் பக்கம் 57).

மேலும் தமிழகத்தில் ஏற்பட்ட சீர்திருத்த வழியிலான மாற்றம் பற்றி கோ.கேசவன் கூறியிருப்பார்.

1950பின் கொண்டுவரப்பட்ட நிலசீர்திருத்தம், கல்வியில் வேலை வாய்ப்பு, இடஒதுக்கீடு, வரியவர்களுக்கான கடன்உதவி, ஐந்து ஆண்டு திட்டங்களில் தலித்துகளுக்கான நிதி உதவிஆகியவைசமூகத்தில் சலனப்படுத்தியது.அதுவரை சமூகத் கட்டமைப்புக்குள் கவுரவமான இடத்தை வகிக்காத தலித்துகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் ஆகியோர்அத்தகைய இடத்துக்கு வர வாய்ப்புகள் ஏற்படுத்தியது.கல்வி கற்று ஏதேனும் நிரந்தர பணியில் அமர முடிகிறது. ஒரு பாதுகாப்பாக நடுத்தர வாழ்க்கை வாழமுடிகிறது.நிலவுடமை முறையைஅழித்துவிட்டு முதலாளியம் உருவாவதாலும் சுய மூலதனம் இட்டு முதலாளிம் உருவாகாததாலும் இங்கு ஏற்பட்ட தொழில்மயமாதல் நகர மயமாதல் ஆகியவற்றின் தன்மைகள் மாறியே உருவெடுத்தன.அமைப்பு ரீதியான தொழிலாளர்கள் உருவாவதற்கு பதிலாக அவர்களை சிறுபான்மையினராக கொண்டு உதிரிப்பாட்டாளிகளை பெரும்பான்மையான கொண்ட நகர்மயமாதல் உருவாயிற்று.1950இல் தொடங்கிய ஏற்பட்ட இத்தகைய மாற்றங்கள் தல அளவில் அதன் தன்மைக்கு ஏற்ப வேறுபாடுகளையும் கொண்டிருந்தது.தென் தமிழகத்தில் இத்தகைய மாற்றங்கள் தலித் ஜாதியில் குறிப்பாக தேவேந்திர குலவேளாளர் ஜாதியில் ஒரு குறிப்பிட்ட நிலையில் ஏற்பட்டன.அரசியல் பொருளாதார சீர்திருத்தங்களை பெற்றுக் கொள்வதில் அரசாங்கத்தோடு அதைநடத்தும் ஆளுங்கட்சியோடு இயைந்தே இருந்தனர். ஜாதிய சமூகத்தில் ஏற்பட்ட இத்தகைய வர்க்க மாறுதலுக்கு ஒரு வரம்பு இருந்தது. இது ஒரு ஜாதியை குறுக்கும் நெடுக்கமாக பிளந்து விடவில்லை.

தி இந்து (30/05/1997)பத்திரிக்கை ஆதாரத்தின்அடிப்படையில்தேவேந்திரர் ஆதிதிராவிடர் அருந்ததியர் ஆகிய தலித் மக்கள் தத்தம் பகுதியில் தனித்தனியே கிளர்ந்து எழுந்தனர். முக்குலத்தோர் நாயுடு நாடார் ஆகிய சாதிகளை சேர்ந்தோர் இத்தகைய எழுச்சிகளை தாங்கிக் கொள்ள இயலாமல் செயல்பட்டனர்.கோயில் விழாக்களில் சமஉரிமை மறுக்கப் பட்டது. பிற ஜாதியினர் தலித்துகள் சமூக அளவில் தனிமைப் படுத்தப்பட்டனர். தேர்தலில் வெற்றி பெற்ற தலித்துகளை செயல்பட விடாமல் தடுத்தனர். செயல்பட்டோரை கொல்லவும் துணிந்தனர்.தலித்துகள் விரோதமாக எல்லாவிதமான சமூக கட்டுப்பாடுகளையும் விதித்தனர்.எங்கெல்லாம்எதிர்ப்பாற்றும்அதை பயன்படுத்தற்குரிய களமும் இருந்தனவோ அங்கெல்லாம் மோதல்கள் நிகழ்ந்துள்ளன.எழுச்சிக் கொண்ட தலித் சாதியினரும் எழுச்சியை அடக்க முயன்ற  முக்குலத்தோரும் வசிக்கும் கிராமங்கள் அடுத்தடுத்து தொடர்ந்து இருந்தும் அவை அனைத்திலும் கொந்தளிப்பு இருப்பினும் தலித் எழுச்சிகள் சிறிது சிறிதாகவே நடந்தேறின.

அரசாங்கம் இதை ஓர் அடிப்படையான சமூக சிக்கலாக காண்பதை விட சட்டம் ஒழுங்கு சிக்கலாக காண்பதில் பிரதான கவனம் செலுத்தியது.காவல்துறை நிர்வாக துறையின் கடுமையான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டன. 1989ல் பதிவு செய்யப்பட்ட பல குற்றங்களின் அடிப்படையில் தென் தமிழகத்தின் காவல்துறையில் முக்குலத்தோர் கனிசமாக இருக்கின்றது என்பதும் தலித் அல்லாத சாதிகளில் இருக்கும் எவராயினும் அவர்கள் ஒரு சார்பாகவே நடந்து கொள்கின்றனர் என்பதும் உண்மை அறியும் குழுக்களின் தகவல்களாகும்.

இவ்வாறாக

அரசியல் கட்சியில் இத்தகைய நிகழ்வுகளை தத்தம் அரசியல் லாபக் கண்ணோட்டத்தில் அணுகின சமூக சீர்திருவாத இயக்கமாக தொடங்கிய திராவிடர் இயக்கம் பார்ப்பனர்அல்லாதவர்களிடம் ஏற்படும் இத்தகைய  மோதல்களை கையாளக் கூட எவ்வித கருத்துருவாற்றலும் இன்றி இருந்தது. எனினும் நடைமுறையில் தலித் அல்லாத சாதிகளிடம் தமக்குள் ஆதரவு இழந்து விடாமல்,தலித்துகளிடம் அனுதாபமும் தோய்ந்த உபகாரங்களை காட்டின.மனித சங்கிலி, சமபந்தி என்ற பழைய நடைமுறைகளே கையாளப்பட்டன. ஊரையும் சேரியையும் வேறுபடுத்தும் அடிப்படைகளை கண்டுகளையாமல் சமத்துவபுரம் எனும் தனி ஊரையே நிர்மாணிக்க அறிவித்தது.பல அரசியல் கட்சிகள் தங்களின் நடைமுறை சார்ந்த வாக்கு வங்கிகளை விரிவுபடுத்தும் நோக்கம் கொண்டதாகவே அமைந்தன

இது மட்டுமல்லாமல் தீண்டாமை ஒழிப்பதற்கான காந்திய தத்துவ கட்டமைப்புக்குள்ளேயே இது இயங்கியது. தீண்டாமை எதிர்த்து தலித்துகளின் போராட்ட நியாயத்தை பற்றியோ எவ்வித அரசியல்நிலைப்பாடும் எடுக்காமல் ஆதிக்க சாதிகள் தம் சாதி ஆதிக்க மனநிலை கைவிட  வேண்டும் என்ற  உயர் ஜாதி தாராள மனநிலையோடு இவை இயங்கின.திராவிட இயக்கம் அரசு நிர்வாக அமைப்பின் மூலம் மேலிருந்து வழங்கிய சீர்திருத்தங்கள் தல அளவிலான சுயமரியாதை தலித்துகளுக்கு வழங்க இயலவில்லை என்கிற பொழுது அந்த இயக்கங்கள் தலித்துகளுக்கு பயனடையாது போய்விட்டது. புதிய இளைய தலைமுறையின் பிழைப்புவாதிகளை மட்டுமே இந்த கட்டமைப்புகள் ஏற்றுக் கொள்ள முடிந்தன.

ஒரே ஜாதிக்குள் தோன்றிய புதிய வர்க்கங்கள் தனது ஜாதி அடையாளத்தை இழந்து விட முயற்சிக்கவில்லை. தனது ஜாதி மக்களின் பலத்துடன் தனது வர்க்கத்திற்கு என்று புதிய கோரிக்கை முன்வைக்கபயன்படுத்திக்கொண்டுள்ளனர்.அதாவது அந்தந்த ஜாதிகளில் தோன்றிய புதிய வர்க்கத்தினர் அதிகாரியாகவும் முதலாளியாகவும் வணிகர்களாகவும் ஏன் ஆளும்வர்க்கத்தின் பிரதிநிதிகளாகவும் வளர்ந்துள்ளனர்.பல்வேறு ஜாதிகளில் தோன்றிய புதியவர்க்கங்கள்தேவைப்படும்நேரத்தில்ஒருங்கிணைந்துசெயல்பாட்டையும்மேற்கொள்கின்றனர்.புதிய மேல்நிலை வர்க்கங்கள் ஜாதிகளை கடந்து தமக்குள் ஒருங்கிணைவு ஏற்படுத்திக்கொள்கின்றனர்.இதுவே பிராமணர் அல்லாதவர் என்ற  பெயரிலும் ஒளிந்துக்கொள்கின்றனர்.தேவைப்படும்போது பிராமணர் இடத்தில் மட்டுமல்லாது  எல்லா மேல்நிலை  வர்க்கத்தோடும் உறவு கொள்ள தவறுவதும் இல்லை.

இந்த நிலையில் உழைக்கும் ஏழை எளிய பல்வேறு ஜாதிகள் உள்ள மக்கள் ஒன்றுபடுவதற்கு தடையாக இதே மேல் நிலையில் உள்ள  ஜாதியில் உள்ள ஒடுக்கும் வர்க்க பிரதிநிதிகளே என்றால் மிகையில்லை.

ஒரே ஜாதிக்குள் இருக்கும் முதலாளியைஅதிகாரியை ஆளும் வர்க்கபிரதிநிதியை…….முதலாளியாகவும் அதிகாரியாகவும் ஆளும் வர்க்க பிரதிநிதியாகவும் பார்க்காமல் தன் ஜாதிகாரனாக மட்டுமே பார்க்கும்படி பாமர மக்கள் பழக்கப்படும் வரையில் ஜாதியையும் வர்க்கத்தையும் புரிந்து கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் உடைபடாமல் இதிலிருந்து பாமர மக்கள் விடுபட முடியாது.

புதியக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ இந்திய சமுதாயத்தில் சாதியும், தீண்டாமையும் நிலவுவதற்குக் காரணம் நிலப்பிரபுத்துவத்திற்கு முதலாளித்துவத்திற்கு முந்தைய (எல்லா உற்பத்தி உறவுகள் நீடித்திருப்பதற்கு) ஏகாதிபத்தியமும் பெருமுதலாளித்துவமும் ஆதரவு தருவதே ஆகும். புரட்சிகரமான முறையில்  பெருமுதலாளிகள் மற்றும் பன்நாட்டு கம்பெனியின் அரசை ஒழித்து ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசு நிறுவுவதன் மூலமே ஏகாதிபத்திய ஆதிக்கத்தை ஒழிக்க முடியும். ஏகாதிபத்தியமும், பெரு்முதலாளித்துவமும், தரும் ஆதரவுக்கு முடிவு கட்ட முடியும். நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை மற்றும் எல்லா முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்திமுறை மற்றும் எல்லா முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்திஉறவுகளை ஒழிப்பதால், சாதிமுறைக்கும், தீண்டாமைக்கும் ஆதாரமாக இருக்கும் பரம்பரை தொழில் பிரிவினையை ஒழிக்க முடியும். மக்கள் ஜனநாயகக் குடியரசும் புரட்சிகர மக்களும் தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக கலச்சாரப் புரட்சிகளை நடத்தி சாதியும், தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு உத்திரவாதம் செய்கின்ற பிற அம்சங்களான அகமணமுறை, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரைச் சடங்குகள் ஆகியவற்றின் அடித்தளத்தைத் தகர்த்துவிட்டு ஒரு புதிய ஜனநாயகப் பண்பாட்டை உருவாக்க முடியும்

இன்னும் அறிய சில தேடுதலோடு அடுத்த பகுதியில்

 தொடரும்....

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்