இன்று நமது சமூகத்தில் நாம் பர்த்துக் கொண்டிருக்கும் ஜாதி முறையானது காலங்காலமாக இப்படியே இருந்தவை இல்லை.... இவை மனித குல வளர்ச்சியை போலவே ஒரு குறிப்பிட்ட சமுக வளர்ச்சி போக்கில் உதித்தவையே அப்படியிருந்தும் அவை தோன்றிய போதிருந்த அதன் தேவையும் அவசியமும் சமூக வளர்ச்சி போக்கில் அவை ஒருபக்கம் உழைப்பவனும் இன்னொரு பக்கம் உழைக்காமல் அந்த உழைக்கும் கூட்டதின் உழைப்பால் வாழும் கூட்டமும் இரண்டாக பிரிந்த பின்னர் உழைப்பவர்களின் உழைப்பை உழைக்காமல் இருக்கும் கூட்டம் சுரண்ட கோட்பாடுகளை உருவாக்கியது அவை இந்த சமூகத்தின் மீது சுமத்தியது அவை ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தமாக மாறியது. அவை சுரண்டலை முதன்மைப்படுத்தி மக்களை ஜாதி என்னும் சட்டகத்தால் அடைத்தது.
இந்த வேலையானது சோழர் காலம் தொடங்கி ஆங்கிலேயர் தனது பிரித்தாளும் சூழ்ச்சியால் அதனை வளப்படுத்தி வளர்த்ததென்றால் மிகையல்ல.... அவைதான் இன்றும் தொடரவே செய்கின்றன.
ஆங்கிலேயன் போனான் ஆனால் அவன் தொடங்கி வைத்த ஆட்சி முறை இன்றும் தொடரவே செய்கிறது இன்றுள்ள கொடுமைகளுக்கு காரணம் தேடுபவர்கள் பல வகையினங்கள் இருந்தாலும், புள்ளி விவரங்கள் பேசினாலும் உண்மையில் இந்த கொடுமைகளுக்கு முற்று புள்ளி வைக்க பொதுவுடமை சமூகம் படைக்க நினைக்கும் பொதுவுடமைவாதிகளால் மட்டுமே முடியும்.
இதோ தமிழக செய்திகளில் முக்கியமானவை. இந்த படங்களில். உண்மையில் இதன் பின்னனியை ஆராய்ந்தால் பல உண்மைகள் புலப்படும் அதனோடு பலரின் இருப்புக்கும் அவை வேட்டு வைக்கும் என்பேன்.ஜாதியானது இன்றும் இந்திய சமூகத்தில் ஏதோ ஒரு வடிவத்தில் வாழ்ந்துக் கொண்டுள்ளது.இந்தியாவில் நவீனமயமாதல், வளர்ச்சி, ஜனநாயக, நிர்வாகம் என்று என்னதான் பேசிக் கொண்டிருந்தாலும் இன்றும் நம் சமூகத்தில் சமத்துவமின்மையும் சமூக விலக்களும் பெருமளவு தொடரத்தான் செய்கிறது.
சிலர் குறிபிடுவதுபோல் ஜாதியானது மனித சமூகம் தொன்றிய போதே தோன்றிய ஒன்றல்ல. அதேபோல் ஜாதியின் ஆதிக்கம் நிலவுடமை சமுகத்தில் கோலோச்சினாலும் அதன் தன்மைகள் இன்றும் அன்று போல் இல்லை. இன்று நாம் வாழும் சமூகத்தில் ஜாதி ஏன் உயிர் வாழ்கிறது என்பதனையும். அம்பேத்கார் பெரியார் ஜாதி ஒழிப்பிற்கு போராடினார்கள் என்பதோடு அவர்கள் எந்தளவிற்கு அதில் வெற்றி கண்டனர் என்பதனையும், உண்மையில் சமூகத்தில் இந்த ஏற்றதாழ்வான நிலைக்கு முடிவுகட்ட ஜாதியை கட்டி காக்கும் அமைப்புமுறையை தகர்த்து ஒடுக்குமுறை அடக்குமுறை சுரண்டல்முறை அற்ற சமத்துவ சமூகத்தில் இந்த ஜாதிய தீண்டாமை கொடுமைக்கு தீர்வு காணப்படும்என்பதனையும் அதற்கான தீர்வு இந்த பிற்போக்கு அம்சங்களை தூக்கியெறிந்து சமத்துவ சமூகத்தில் சாத்தியம் என்பதனையும் விளக்கியுள்ளேன்.
மதங்கள் எப்போதும் அறிவியல் கண்டு பிடிப்புகள் மற்றும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க பட்ட அனைத்து உண்மைகளையும் எதிர்த்தே வந்துள்ளது.அது சாக்ரடீஸ் பிலட்டோ முதற்கொண்டு தற்கால விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் வரை அனைவரின் ஆதார பூர்வ நிரூபனங்களை மறுத்து இந்த உலகம்,பால்வெளி அண்டம் உட்பட பிரபஞ்சம் முழுவதும் கடவுள் என்ற ஒரு தனிப்பட்ட நபரால் உருவாக்கப்பட்டது என்று இவ்வுலகில் மனிதனால்உருவாக்கப்பட்டஅனைத்து மதங்களும் அவற்றின் தலைவர்களும் மக்களை நம்ப வைத்து பலநூறு ஆண்டுகளாக மனித சமுதாயத்தை மூடநம்பிக்கையில் ஆழ்த்தியுள்ளது …...
மெத்த படித்த அறிவியல் புலமை உள்ள நபர்களே மதத் தலைவர்கள் சொல்லும் புனைவு கதைகள்,சடங்கு சம்பிரதாயம்,மந்திரம் தந்திரம் ஆகியஅனைத்தும் நம்பும் போது படிப்பறிவில்லாத எளிய மக்கள் நிலை இன்னும் கவலைக்குரிய விடயமாகும். ஆக ஆழமாக நமது சமூகம் பற்றி கற்றறிய வேண்டும்
புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், மனிதனின் எண்ணங்களில் எழும் பெரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உதவுவதாயிருக்கிறது; சமூக, மத, கல்வி சம்பந்தமான விடயங்களில் நமக்குள்ள நிலைபாடுகளை அது மாற்றுகிறது. ஆக நமது தேடுதலான ஜாதியம் பற்றிய அன்றிலிருந்து இன்றுவரை தோன்றியதிலிருந்து அதன் போக்குகள் இன்று ஏன் பேசுபொருளாக உள்ளது, சமூக வளர்ச்சி போக்கை புரிந்துக் கொள்வதோடு அதனின் தீமையான பங்களிப்பானது இச்சமூகத்தில் வளர்ச்சிக்கும் எல்லா முன்னேற்றதிற்கும் தடையா உள்ளது. ஆக அதனை களைந்தெறிய வழிவகைபற்றியும் தேட முயலுவோம்..
வர்க்க சமூகத்தில் பல்வேறு உடமை வர்க்கப்பிரிவுகள் இருந்தாலும் எந்த வர்க்கங்களின் கைகளில் அரசியல் அதிகாரம் இருக்கிறதோ அந்த வர்க்கங்கள்தான் அந்த சமூகத்தின் ஆளும் வர்க்கமாகும். இந்த அதிகாரத்தை பயன்படுத்தியே சமூகத்திலுள்ள பிற அனைத்து வர்க்கங்களையும் கட்டுப்படுத்தி சுரண்டி உற்பத்தியை நடத்துகிறது. இந்த வகையில் தனது சுரண்டலை நியாயப்படுத்தவும் தொடர்ந்து சுரண்டலை நடத்துவதற்கான கருத்துக்களை உருவாக்கி அதனை மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கான அரசியல் கட்சிகள் மற்றும் ஜாதி மத நிறுவனங்களையும் கலை இலக்கியங்களையும் மற்றும் வன்முறை கருவியான அரசையும் உருவாக்குகிறார்கள்.
ஆட்சியாளர்களும், பெரும்முதலாளிகளும், மடாதிபதிகளும், ஆதீனங்களும், மதவாதிகளும், சாதிமத அரசியல்வாதிகளும் ஓரணியில் திரளுகின்றனர். இவர்களுக்கு பின்புலமாக நவீன காலனிய ஏகாதிபத்தியவாதிகள் இருக்கிறார்கள். இந்த சுரண்டலாளர்களுக்கு ஜாதி மத கலவரங்கள் அவசியமாகிறது. மக்கள் ஜாதியாகவும் மதமாகவும் பிரிந்து கிடப்பது அவர்களின் சுரண்டலுக்கு ஏதுவாக உள்ளது. வர்க்கமாக மக்களை அணி திராளாமல் இருக்க இதுவும் ஒருவகை சூழ்ச்சியே.
மனிதனுக்கு மனிதன் அடிமை. ஆணுக்கு பெண் அடிமை. பிறப்பில் உயர் ஜாதிக்காரன், பிறப்பில் கீழ் ஜாதிக்காரன் இத்தகைய அடிமை முறையை பழங்குடி மக்களிடம் வேத சாஸ்திரங்கள் மூலம்புகுத்திய தத்துவம் தான் பிராமணியம். இந்திய சமுதாயத்தில் இந்து சமுதாய எனும் பிறப்பில் சாதிய உயர்வு தாழ்வு எனும் ஒரு ஜாதி முறையை (Caste System) ,ஜாதிய தத்துவத்தை புகுத்தி வளர்த்தது இன்றும் உயிர்பித்து வருவது சானதன தர்மமுறையான பிராமணியமே. அதனை கட்டிக்காப்பது இன்றைய ஆட்சியாளர்களே. ஆம் அவர்களின் சுரண்டலை மறைக்க....
இந்தியாவை ஒரே நாடாக கட்டமைக்கப்பட முயற்சிக்கும் இன்று வருண முறை மற்றும் ஜாதி முறையை நோக்கினால் ஜாதி முறையானது எல்லா மாநிலங்களுக்கும் ஒன்றாக இல்லை.ஏன் திராவிடர்கள் நாடு என்று அழைக்கப்படும் தென்னிந்தியாவிலே ஒன்றாகஇல்லை. தெலுங்கு பேசும் பகுதியில் காணப்படும் கம்மா, ரெட்டி கேரளாவில் நாயர், ஈழவர் கர்நாடகாவில் லிங்காயத்துகள் தமிழ்நாட்டுப் பகுதியில் காணப்படும் பள்ளர் கள்ளர் வன்னியர் மற்ற மாநிலங்களில் காணப்படுவதில்லையே ஏன்? தமிழ்நாட்டிலேயே வடபகுதியில்காணப்படும் வன்னியர் தென் தமிழகத்தில் இல்லை.தென் தமிழகத்தில் உள்ள தேவர் மறவர் வட தமிழகத்தில் இல்லையே.
பகுதி ரீதியாக நாம் இப்படி தேடும்பொழுது வருணங்களாக பிரிக்கப்பட்ட மக்கள் இந்தியஅளவில்ஒன்றாகதெரிந்தாலும் ஜாதிகளாக உள்ள பொழுது வேறுபட்டு காணுவது எப்படி?
சுருள் ஏணி சுற்றில் மனித சமூக வளர்ச்சி புரிதலுக்காக கீழே உள்ள படம். 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு குரங்குகள் முதன் முதலாக இரண்டு கால்களில் நடக்கின்றன (ஆஸ்ட்ரலோபிதிகஸ்).
13000ஆண்டுகளுக்கு முன்பு சில 100பேர் உள்ள குழுக்களாக மனிதர்கள் கிராமங்களில் வசிக்க பருவநிலை அனுமதிக்கிறதுமத்திய கற்காலம் (மிஸோ லித்திக்). 10000 ஆண்டுகளுக்கு முன்பு முதல் விவசாயிப்புரட்சி தாவரங்களை விலங்கு களை பழக்கி வசப்படுத்துதல்.புதிய கற்காலம் (நியோலித்திக்).கிராம வாழ்க்கை பரவுதல் குழுக்களிடையே முதன்முறையாக போர் இப்போதும் அரசு வர்க்கம் என்ற பிரிவினை தோன்றவில்லை.
6000முதல் 5000ஆண்டுகளுக்கு முன்பு மத்திய கிழக்கு நைல் நதிக்கரை சமவெளிகளில் "நகரப் புரட்சி" சிலர் செம்பை பயன்படுத்துகின்றார்கள்.
4500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்பு (கிமு 2500 முதல் 2000 வரை )சிந்து சமவெளி நகர அரசுகள் வளர்தல் மத்திய கிழக்கு ஒன்று படுத்த சர்கோன் முதல் பேரரசை உருவாக்குதல்.மேற்கு ஐரோப்பாவில் எகிப்திற்கு தெற்கே நூபிய நாகரிகம் தோன்றியிருக்கலாம். அதே போல் இந்திய துணைக் கண்டத்தை பற்றியும் புரிந்துக் கொள்ள கீழ் உள்ள படம் பயனளிக்கும்.
கிமு2500/1700 ஆரம்ப நகரமாதல் முதிர்ச்சி அடைந்த நிலை. கிமு 1600 -1500 பிற்கால ஹரப்பா.
கிமு1500-500ஆரிய மேச்சல் குடிகள் வரவு மற்றும் புதிய கற்கால மற்றும் செம்பு கால நாகரிகங்கள் (வேத கால மரபும்). இவ்வாறாக சுழல் ஏணி முறையில் வளர்ந்த சமூகமானது ஒவ்வொரு காலகட்டமும் முந்தைய சமுதாயத்தை மேலானதாகவும் பழைய சமூகத்தை புறந்தள்ளியும் வளர்ந்துள்ளது. அதற்கான உந்து சக்தி இதே மனித உழைப்பே என்றால் இந்த உழைப்பாலே மனித சமூகம் இத்தனை முன்னேற்றத்தையும் கண்டுள்ளது. ஆக இந்த சமூக அமைப்பு மாறாநிலையில் தொன்று தொட்டு இருந்தவை அல்ல அதே போல் இன்றுள்ளது போல் என்றும் நிலைத்து நிற்கவும் போவதில்லை.
நிலப்பிரபுத்துவத்திற்கு முந்தைய உற்பத்தி முறையிலேயே சாதி கருக்கொண்டிருந்தாலும் அவை திடமாக நிலபிரபுத்துவத்தில்தான் உருக் கொண்டது.
நிலப்பிரபுத்துவ அமைப்பில் நிலத்தின் மேல் பரம்பரையாக உரிமை கொண்டவர் தம்மை உயர்ந்த ஜாதியாக்கிக் கொண்டனர்.நிலவுடமைசமூகத்தில்நிலத்தில் உழைப்பவர்கள் நிலம் சார்ந்தஉழைபிற்கான பிற சேவைகளை கவனித்தவர் யாவரும் சேவையின் அத்தியாவசியத்தை ஒட்டி பல்வேறு சமூக அமைப்பினராக பல படிகளில் பிரிக்கப்பட்டனர். நிலமுடையவர்க்கு உயர்ந்த மதிப்பும் உழைக்க வேண்டியதில்லை, உடல் உழைப்பாளர்கள் மதிபற்றவர்களாக கருதுகின்ற இந்த ஜாதி அமைப்பின் அடிப்படை நோக்கம் உழைப்புச் சுரண்டலே. கிராமங்களில் தொழில்பிரிவில்உள்ளஎல்லோரும் உற்பத்தி சாதனங்களை கொண்ட நிலப்பிரபுக்களின் தயவில் வாழ நேரிட்டது.
இன்றைசமூகத்தில்நிலப்பிரபுத்துவம் அதிகாரத்தில்இல்லாமல்இருந்தும்; தனியுடமை சமூக அமைப்பு ஜாதிகளை கட்டிக் காத்து அதன் முரண்பாடுகளை மக்கள் மத்தியில் விதைத்து பிரித்தாளும் சூழ்ச்சியால் ஆளும் வர்க்கம் தொடர்ந்து பாதுகாக்கிறது. சாதியின் பெயரால் அடக்கி ஒடுக்கப் படுகின்றனர்.
ஜாதியின் இருப்பு
ஜாதி தோன்றியிலிருந்து இன்றுவரை பல்வேறு விதமான மாற்றங்களின் ஊடாக ஜாதியே வர்க்கமாக இருந்த காலம் மாறி இன்று ஒவ்வொரு ஜாதியிலும் ஒன்றுக்கு மேற்பட்ட வர்க்கங்கள் உள்ளதை காணலாம்.ஜாதிகளில் ஏற்பட்டு கொண்டிருக்கும் வர்க்க மாற்றங்கள் நாம் வாழும் சமூகத்தில் சிறிது அசைவை கொடுத்துள்ளது. ஒரு ஜாதிக்குள் ஏற்பட்டால் வர்க்க மாறுதல்களை இயங்கியல் அளவில் காணும் பொழுது ஏகாதிபத்திய பொருளாதார நலன்களாலும் நில உடமை சமூகத்தாலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள புறநிலை வர்க்கங்களாலும் உருவாகும் வர்க்க உணர்வை விட ஜாதி உணர்வு மேலோங்கி உள்ளது.வர்க்கமாக ஒன்றிணைவதில் பல சமூக தடைகள் இருப்பதை காண்கிறோம்.