புரட்சியாளர்கள்பிற்போக்குத்தொழிற்சங்கங்களில் வேலை செய்யலாமா?
ஜெர்மன் “இடதுசாரிகள்”தம்மைப் பொறுத்தவரை நிபந்தனையற்ற தீர்மானகரமான எதிர்மறையே இக்கேள்விக்குரிய பதிலாகுமெனக் கருதுகிறார்கள். கீழ்த்தரமான, சமூக -தேசியவெறி கொண்ட, சமரசவாத,லேகின் ரகத்தைச் சேர்ந்த,புரட்சி எதிர்ப்புத் தொழிற்சங்கங்களில் புரட்சியாளர்களும் கம்யூனிஸ்டுகளும் வேலை செய்யத் தேவையில்லை என்பதுடன்,அவ்வாறு வேலை செய்வது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும் என்றும் ”பிற்போக்கு”“புரட்சி எதிர்ப்பு”தொழிற்சங்கங்களுக்கு எதிரான கண்டன முழக்கங்களும் ஆத்திரக் கூப்பாடுகளுமே (இவற்றுள் குறிப்பிடத்தக்க ”ஆதாரத்தோடும்”குறிப்பிடத்தக்க அசட்டு முறையிலும் அமைந்தவை கா.ஹோர்னெர் எழுப்பியவை)போதுமான ”நிருபணமாகும்” என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
இத்தகைய போர்த்தந்திரத்தின் புரட்சித் தன்மைகுறித்துஜெர்மன் “இடதுசாரிகள்”எவ்வளவுதான் திடநம்பிக்கை கொண்டிருந்தபோதிலும், உண்மையில் இதுஅடிப்படையிலேயே தவறானது, வெற்றுச் சொல்லடுக்குகளைத் தவிர வேறு எதுவும் இல்லாதது.இதனைத் தெளிவுபடுத்தும் பொருட்டு, எங்களுடைய சொந்த அனுபவத்தை முதலில் எடுத்துரைக்கிறேன். போல்ஷ்விசத்தின் வரலாற்றிலும் அதன் இன்றைய போர்த்தந்திரத்திலும்
அனைத்துலகுக்கும் எதெல்லாம் பொருத்தமுடையதோ,எதெல்லாம் முக்கியத்துவ முடையதோ,எதெல்லாம் இன்றியமையாததோ அதனை மேற்கு ஐரோப்பாவுக்குப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தப் பிரசுரத்தின் பொது திட்டத்துக்கேற்ப,முதலில் எங்கள் அனுபவத்தை எடுத்துரைக்கிறேன்.
இன்று ரஷ்யாவில் தலைவர்களுக்கும் கட்சிக்கும்வர்க்கத்துக்கும்வெகுஜனங்களுக்கும் இடையிலுள்ள சம்பந்தமும்,மற்றும் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமும் அதன் கட்சியும் தொழிற்சங்கங்களின்பால்கொண்டுள்ள போக்கும் ஸ்தூலமாய்ப் பின்வருமாறு உள்ளன: சோவியத்துகளின் மூலம் ஒழுங்கமைத்து பாட்டாளி வர்க்கம் சர்வாதிகாரத்தைச் செலுத்துகிறது; இந்தப் பாட்டாளி வர்க்கம் போல்ஷ்விக்குகளது கம்யூனிஸ்டுக் கட்சியால் வழிகாட்டப்படுகிறது. கடந்த கட்சிக் காங்கிரசில் (1920,ஏப்ரல்)புள்ளிவிவரங்களின்படி,இக்கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை 6,11,000.உறுப்பினர்களின் எண்ணிக்கை அக்டோபர் புரட்சிக்கு முன்பும் அதற்குப் பிற்பாடும் பெரிதும் மாறுபட்டு வந்தது. 1918 லும் 1919 லும் இதைவிடவும் மிகக் குறைவாகவே இருந்தது. (குறிப்பு - 1917 பிப்ரவரியிலிருந்து முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்குப் பிறகு 1919 வரை அந்த ஆண்டு உட்பட கட்சியின் உறுப்பினர் தொகை பின்வருமாறு மாற்றமடைந்தது: ர.ச.ஜ.தொ.க. (போ) இன் ஏழாவது (ஏப்ரல்) அகில ரஷ்ய மாநாட்டுக்குள் 1917 ல் கட்சியில் 80,000 உறுப்பினர்கள் இருந்தனர்;ர.ச.ஜ.தொ.க. (போ) இன் ஆறாவது காங்கிரசுக்குள் (1917 ல் ஜூலை - ஆகஸ்டு) சுமார் 2,40,000; ர.க.க.(போ) இன் ஏழாவது காங்கிரசுக்குள் (1918 ல் மார்ச்) -- 3,00,000 க்குக் குறையாமலும்; ர.க.க.(போ) இன் எட்டாவது காங்கிரசுக்குள் (1919 ல் மார்ச்) -- 3,13,766 உறுப்பினர்களும்)கட்சி அளவுமீறி பெருகி விடுவதை நாங்கள் அச்சத்துக்குரியதாகவே கருதுகிறோம். ஏனெனில் சுட்டுத் தள்ளப்பட வேண்டிய பதவி வேட்டையாளர்களும், எத்தர்களும் ஆளும் கட்சியின் அணிகளுக்குள் நுழைந்து கொள்வதற்காக, தவிர்க்க முடியாத வகையில் எல்லா வழிகளிலும் முயலுகிறார்கள். கடைசித் தரம் கட்சியின் கதவுகளை நாங்கள் விரியத் திறந்தது -- தொழிலாளர்கள் விவசாயிகளுக்கு மட்டுமேதான் -- 1919 ஆம் ஆண்டு குளிர்காலத்தில்,யுதேனிச்பெத்ரோகிராதுக்கு ஒரு சில கிலோமீட்டர் தொலைவிலும், தெனீக்கின் ஒரியோலுக்கும் (மாஸ்கோவிலிருந்து சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில்) வந்துவிட்ட ஒரு நேரத்தில்:அதாவது,சோவியத் குடியரசு கொடிய அழிவு அபாயத்துக்கு உள்ளாகியிருந்த போது,துணிகர சுயநலக்காரர்களும் பதவி வேட்டையாளர்களும் எத்தர்களும் நம்பத்தகாத ஆட்க்களும் கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து கொள்வதன் மூலம் லாபகரமான பதவிபெறலாமென சிறிதும் எதிர்பார்க்க முடியாத போது (தூக்கு மேடையும் சித்திரவதையுமேஅதிகம் எதிர்பார்க்கவேண்டியிருந்த போது) இது நடைபெற்றது. (குறிப்பு- இங்கு குறிப்பிடப்படுவது கட்சி அங்கத்தினர் தொகையை அதிகரிக்கும் நோக்ககமுடன் நிறைவேற்றப்பட்ட ர.க.க.(போ) இன் எட்டாவது காங்கிரசின் தீர்மானப்படி நடைபெற்ற“கட்சி வாரம்” ஆகும். செப்டம்பர் இறுதியில் மத்தியக் கமிட்டி எல்லா கட்சி நிறுவனங்களுக்கும் ஒரு சுற்றுக் கடிதம் அனுப்பி வைத்தது. கட்சி வாரத்தின் போது தொழிலாளர், உழைக்கும் பெண்கள் செஞ்சேனை வீரர், கடற்படையினர்,விவசாயிகள் விவசாயப் பெண்கள் மட்டுமே கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அந்தக் கடிதம் கோரியிருந்தது.கட்சி வாரத்தில் செய்த பணியின் விளைவாக ர.சோ.சோ.கூ. குடியரசின் ரஷ்யன் பகுதியிலான குபேர்னியாக்களில் மட்டுமே 2 லட்சம் பேர் கட்சியில் சேர்ந்தனர். இதில் பாதிக்கு மேல் தொழிலாளர்கள்; சேனை, கடற்படையினைச் சேர்ந்தவர்கள் 25சதவீதம் ஆவர்.)கட்சியானது வருடாந்தரக் காங்கிரசுகளைக் கூட்டுகிறது (கடந்த காங்கிரஸ்,1,000உறுப்பினர்களுக்கு ஒரு பிரதிநிதி என்ற அடிப்படையில் நடைபெற்றது);காங்கிரசால் தேர்ந்தெடுக்கப்படும் பத்தொன்பது உறுப்பினர்கள் அடங்கிய மத்தியக் கமிட்டியால் கட்சி நடத்திச் செல்லப்படுகிறது. மாஸ்கோவிலிருந்து நடப்பு வேலைகளைக் கவனித்துக் கொள்பவை இன்னும் சிறிய குழுக்களாகும், ஒழுங்கமைப்புக் குழு, அரசியல் குழு எனப்படும் இவை, மத்தியக் கமிட்டியின் முழுக் கூட்டங்களில் ஒவ்வொரு குழுவுக்கும் ஐந்து மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள் என்னும் விகிதத்தில் தேர்ந்தெடுக்கப் படுகின்றன. இது முழுக்க முழுக்க “சிலர் ஆட்சியாகத்” தோன்றக் கூடும். கட்சி மத்தியக் கமிட்டியின் வழிகாட்டுதல் இல்லாமல் எங்களது குடியரசில் எந்த முக்கிய அரசியல் அல்லது நிறுவனப் பிரச்சனை குறித்தும் எந்த அரசு நிறுவனத்தாலும் முடிவு எடுக்கப்படுவதில்லை.
கட்சி அதன் வேலைகளில் நேரடியாகத் தொழிற்சங்கங்களையே ஆதாரமாகக் கொண்டு இயங்குகிறது. தொழிற் சங்கங்கள், கடந்த காங்கிரசின் (1920, ஏப்ரல்) புள்ளிகளின் படி நாற்பது லட்சத்துக்கும் கூடுதலான உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றன. இவை உருவில் கட்சிசார்பற்ற நிறுவனங்கள்.ஆனால் நடைமுறையில் மிகப் பெரும்பாலான தொழிற்சங்கங்களின் தலைமைஅமைப்புகள் யாவும்,முதன்மையாக அனைத்து ரஷ்யத் தொழிற்சங்கப் பொது மையம் அல்லது பியூரோ (தொழிற்சங்கங்களின் அனைத்து ரஷ்ய மத்திய கவுன்சில்) கம்யூனிஸ்டுகளால் ஆனவைதான்;கட்சியின் எல்லாத் தாக்கீதுகளையும் இவை நிறைவேற்றுகின்றன. இவ்வாறாக, மொத்தத்தில் நாங்கள் உருவில் கம்யூனிஸ்டல்லாத, நெகிழ்வுள்ள, ஒப்பளவில் மிகவும் விரிவான,சக்தி மிக்கப் பாட்டாளி வர்க்க நிறுவன ஏற்பாட்டைப் பெற்றிருக்கிறோம். இதன் மூலம் கட்சியானது வர்க்கத்துடனும் வெகுஜனங்களுடனும் நெருங்கிய முறையில் பிணைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம்தான் கட்சியினுடைய தலைமையில், வர்க்கச் சர்வாதிகாரம் செலுத்தப்படுகிறது.
தொழிற்சங்கங்களுடன் நெருங்கிய தொடர்புகளின்றி,பொருளாதார நிர்மாண விவகாரங்களில் மட்டுமின்றி இராணுவ நிர்மாண விவகாரங்களிங்கூட அவற்றின் சக்தி வாய்ந்த ஆதரவும் பற்றுறுதி கொண்ட முயற்சிகளுமின்றி இரண்டரை ஆண்டுகள் இருக்கட்டும், இரண்டரை மாதங்களுக்குக்கூட நாட்டை அரசாள்வதும் சர்வாதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதும் முடியாமற் போயிருந்திருக்கும். நடைமுறையில் இந்த மிக நெருங்கிய தொடர்புகளுக்கு
இயல்பாகவே,பிரச்சாரத்தின் வடிவிலும் கிளர்ச்சியின் வடிவிலும் தலைமையான தொழிற்சங்க ஊழியர்களுடன் மட்டுமின்றி,பொதுவாகச் செல்வாக்கு படைத்த தொழிற்சங்க ஊழியர்களுடனும் தக்க காலத்திலும் அடிக்கடியும் நடைபெறும் மாநாடுகளின் வடிவிலும் மிகவும் சிக்கலான, பல்வகைப்பட்ட பணிகளும் இன்றியமையாதனவாகி விடுகின்றன.
மென்ஷ்விக்குகளை எதிர்த்து வைராக்கியமாய்ப் போராடுவதும் இவற்றுக்கு அவசியமாகும். மென்ஷ்விக்குகளைப் பின்பற்றுவோர் சொற்பமேயாயினும்,குறிப்பிட்ட சில பகுதியோர் இன்னமும்அவர்கள் பின்னால் செல்லத்தான் செய்கிறார்கள்.இவர்களுக்கு மென்ஷ்விக்குகள் (முதலாளித்துவ) ஜனநாயகத்தைச் சித்தாந்த வழியில் ஆதரிப்பது முதலாய், தொழிற்சங்கங்கள் “சுயேச்சையாய்” இருக்க வேண்டும் (பாட்டாளி வர்க்க அரசு அதிகாரத்திலிருந்து) என்று போதிப்பது முதலாய், பாட்டாளி வர்க்கக் கட்டுப்பாட்டுக்குக் குழிபறிப்பது வரையிலான எல்லா வகைப்பட்ட எதிர்ப்புரட்சிச் சூழ்ச்சிகளையும் கற்றுத் தருகின்றனர்.
“வெகுஜனங்களுடன்”தொழிற்சங்கங்கள் மூலமாக மட்டும் தொடர்புகள் கொண்டால்போதாதென நாங்கள் கருதுகிறோம்.எங்களது புரட்சியின் போது நடைமுறையானது கட்சிசார்பற்ற தொழிலாளர்கள், விவசாயிகளது மாநாடுகள் போன்ற ஏற்பாடுகளைத் தோற்றுவித்தது. வெகுஜனங்களுடைய மனநிலையைக் கண்டறிந்து கொள்வது, அவர்களை மேலும் நெருங்கிச் செல்வது, அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வது, அவர்களில் மிகச் சிறந்தோரை அரசாங்கப் பதவிகளுக்கு உயர்த்துவது முதலான பலவும் செய்யும்பொருட்டு,இந்த ஏற்பாடுகளை ஆதரிக்கவும் வளர்த்துச் செல்லவும் விரிவுபடுத்தவும் நாங்கள் எல்லா வழிகளிலும் முயற்சிக்கிறோம்.அரசாங்க கண்காணிப்பு மக்கள் கமிசாரகத்தைத் ”தொழிலாளர்,விவசாயிகளது மேற்பார்வைப் போர்டாக”மாற்றுவது குறித்து அண்மையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி,இம்மாதிரியான கட்சிசார்பற்ற மாநாடுகளுக்கு,பல்வேறு வகையான தணிக்கைகளையும் பிறவற்றையும் நடத்தும் அரசாங்கக் கண்காணிப்பின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் அளிக்கப்பட்டது.தவிரவும்,கட்சியின் பணிகள் எல்லாம் உழைப்பாளி வெகுஜனங்களை அவர்களது வேலைத் துறை எதுவாயினும் தம்முட்கொண்ட சோவியத்துகளின் மூலமாகவே நடந்தேறுகின்றன என்பதைக் கூறத் தேவையில்லை. சோவியத்துகளின் உயெஸ்து காங்கிரசுகள் ஜனநாயக நிறுவனஏற்பாடுகளாகும். முதலாளித்துவ உலகின் மிகச் சிறந்த ஜனநாயகக் குடியரசுகளுங்கூட இவையொத்த ஜனநாயக நிறுவன ஏற்பாடுகளை முன்பின் கண்டதில்லை.
இந்தக் காங்கிரசுகளின் மூலமும் (இவற்றின் நடவடிக்கைகளைக் கட்சி உன்னிப்பாகக் கவனித்துச்செயல்பட முனைகிறது),மற்றும் கிராமங்களில் வர்க்க உணர்வு படைத்த தொழிலாளர் களைத் தொடர்ச்சியாகவும் பல்வேறு பதவிகளில் அமர்த்துவதன் மூலமும் பாட்டாளி வர்க்கம் விவசாயிகளது தலைவனாகத் தான் ஆற்ற வேண்டிய பாத்திரத்தை நிறைவேற்றுகிறது: நகரப் பாட்டாளிவர்க்கத்தின்சர்வாதிகாரத்தைச் செயல்படச் செய்தல்,விவசாயிகளில் சுரண்டலிலும் கொள்ளை லாபமடிப்ப திலும் ஈடுபடும் பணக்கார,முதலாளித்துவப் பகுதியோருக்கு எதிராய் இடையறாது போராடுதல் முதலான பணிகளை நிறைவேற்று கிறது.
இதுவே பாட்டாளி வர்க்க அரசு அதிகாரத்தை ”மேலிருந்து” நோக்குகையில், சர்வாதிகாரத்தை நடைமுறையில் செயல்படுத்துவதன் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கையில், தெரியவரும் பொது அமைப்பு முறையாகும்.இந்த அமைப்புமுறை இருபத்தைந்து ஆண்டுகளாய் எப்படிச்சிறிய,சட்டவிரோத,தலைமறைவுக் குழுக்களிலிருந்து வளர்ந்து உருவாயிற்று என்பதைக் கண்டுள்ள ரஷ்ய போல்ஷ்விக்குகள், ”மேலிருந்தா” அல்லது “கீழிருந்தா” என்பதாகவும், தலைவர்களின் சர்வாதிகாரமா அல்லது வெகுஜனங்களின் சர்வாதிகாரமா என்பதாகவும், இன்னும் பலவாறாகவும் பேசப்படுகிற இந்தப் பேச்சை எல்லாம் நகைக்கத்தக்க, சிறுபிள்ளைத்தனமான அபத்தமாகவும்,ஒருவருக்கு அதிகமாய்ப் பயன்படுவது அவரது இடது காலா அல்லது வலது காலா கரமா என்று விவாதிக்க முற்படுவதை ஒத்ததாகுமே என்று கருத வேண்டியிருக்கிறதென்பதை வாசகர் புரிந்து கொள்வாரென நினைக்கிறோம்.
இதேபோல, கம்யூனிஸ்டுகள் பிற்போக்குத் தொழிற்சங்கங்களில் வேலை செய்ய முடியாது, வேலை செய்யக் கூடாதென்றும், இது போன்ற வேலைகளைக் கைவிட்டு விடலா மென்றும், தொழிற்சங்கங்களை விட்டு வெளியேறி மிக அருமையான (பெருமளவுக்கு மிக இளம் பருவத்தினராகவே இருக்கக்கூடிய)கம்யூனிஸ்டுகளால்கண்டுபிடிக்கப்பட்ட புத்தம் புதியவகைப்பட்ட அப்பழுக்கற்ற “தொழிலாளர் சங்கத்தை” உருவாக்குவது அவசியமென்றும், மற்றும் பலவாறாகவும் கூறும் ஜெர்மன்இடதுசாரிகளின் ஆடம்பரமான,மெத்தப்படித்த மேதாவித்தனமான, பயங்கரப் புரட்சிகரமான பல பேச்சுக்களையும் நாங்கள் நகைக்கத்தக்க, சிறுபிள்ளைத்தனமான அபத்தமாகவேகருதவேண்டியிருக்கிறது.
முதலாளித்துவமானது,சோசலிசத்துக்குரிய மரபுரிமை சம்பந்தமாக, ஒரு புறத்தில்தொழிலாளர்களிடையே பல நூற்றாண்டுகளாய் வளர்ந்து உருவான பழைய பணித்துறை, கைவினைத் துறைப் பாகுபாடுகளையும், மறுபுறத்தில் தொழிற்சங்கங்களையும் தவிர்க்க முடியாதபடி விட்டுச் செல்கிறது. இந்த தொழிற்சங்கங்கள் மிக மெதுவாகவே, பல்லாண்டுக் காலப் போக்கில், தேர்ச்சித் துறைச் சங்கங்களுக்குரிய தன்மை குறைந்து செல்ல, மென்மேலும் விரிவான தொழில் துறைச் சங்கங்களாய் (தேர்ச்சித் துறைகளையும் கைவினைத்
துறைகளையும் பணித் துறைகளையும் மட்டுமின்றி,முழுமுழுத் தொழில்கள் பூராவையுமே தம்முட்கொண்டனவாய்)வளர முடிகிறது,வளரவும் செய்யும்.இதன் பிறகு இந்தத் தொழில் துறைச் சங்கங்கள் மூலமாய் இவை,மக்களிடையேஉழைப்புப்பிரிவினையை அகற்றவும்,மக்களுக்குப் போதமளித்து,கல்வியறிவூட்டி வளர்த்திடவும்,யாவற்றையும் செய்யும் திறன் பெறும்படிஅவர்களுக்குமுழுநிறைவான வளர்ச்சியும் முழுநிறைவான பயிற்சியும் அளித்திடவும் முற்படும். கம்யூனிசம் இந்தக் குறிக்கோளை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது, முன்னேறவும் வேண்டும், கட்டாயம் அதனை வந்தடையவும் செய்யும்.
ஆனால் இதற்கு மிகப் பல ஆண்டுகள் வேண்டியிருக்கும். முழு வளர்ச்சி பெற்று, முழு வலுவுடயதாய் நிறுவப்பெற்று,முழு வீச்சடைய முதிர்ச்சி பெற்ற கம்யூனிசமான இந்த வருங்கால விளைவை முன்கூட்டி இன்றே நடைமுறையில் காண முயலுவதானது, நான்கு வயதேயான குழந்தைக்கு உயர் கணிதம் கற்றுத் தரும் முயற்சிக்கு ஒப்பானதே ஆகும்.
சோசலிசத்தை நாம் கட்டியமைக்க முற்பட முடியும், முற்படவும் வேண்டும் -- கற்பனையான மானுடத்தைக் கொண்டோ, தனியே இதற்கென நாம் தயார் செய்யும் மானுடத்தைக் கொண்டோ அல்ல, முதலாளித்துவம் நமக்கு விட்டுச் சென்றுள்ள மானுடத்தைக் கொண்டு நாம் இதனைச் செய்ய வேண்டியிருக்கிறது. இது மிகவும் “கடினமானதே” என்பதைக் கூறத்தேவையில்லை. ஆனால் இப்பணிக்கு இதனன்றி வேறு எந்தவிதமான அணுகு முறையும் விவாதிப்பதற்குக் கூட தகுதி வாய்ந்ததாய் இருக்காது.
தொழிற்சங்கங்கள் முதலாளித்துவ வளர்ச்சியின் ஆரம்ப நாட்களில் தொழிலாளி வர்க்கத்துக்கு மகத்தானதொரு முன்னேற்றப் படியைக் குறித்தன.எப்படியெனில் தொழிலாளர்கள் சிதறிய நிலையில் திக்கற்றவர்களாக இருந்ததிலிருந்து மாறி வர்க்க ஒற்றுமையின் குருத்துக்களைப் பெற்றதை அவை குறித்தன,பாட்டாளி வர்க்க ஒற்றுமையின் மிக உயர்ந்த வடிவமான பாட்டாளி வர்க்கப் புரட்சிக் கட்சி உருவாகத் தொடங்கியதும் (கட்சியானது தலைவர்களை வர்க்கத்தோடும் வெகுஜனங்களோடும் பிரிக்க முடியாதவாறு ஒன்றுபடச் செய்யத் தெரிந்து கொள்ளாத வரை அது கட்சி என்னும் பெயருக்கே ஏற்றதாகாது)தொழிற்சங்கங்கள் தவிர்க்க முடியாதபடி சிற்சில பிற்போக்கு இயல்புகளையும், தேர்ச்சித் துறைக்குரிய ஒரு குறுகிய கண்ணோட்டத்தையும், அரசியல் அக்கறையின்மைக்கான ஒருவிதப் போக்கையும், ஒருவகை மந்த நிலையையும், இன்ன பிறவற்றையும் வெளிப்படுத்தலாயின.ஆயினும் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி உலகில் எங்கேனுமே தொழிற்சங்கள கல்லாத பிற வழிகளில்,தொழிற்சங்கங்களுக்கும் தொழிலாளி வர்க்க கட்சிக்கும் இடையிலான பரஸ்பரச்செயற்பாட்டின் மூலமல்லாத பிற வழிகளில் நடைபெற்றதில்லை, நடைபெறவும் முடியாது.
பாட்டாளி வர்க்கம் அரசியல் ஆட்சியதிகாரம் வென்றதானது பாட்டாளி வர்க்கத்துக்கு ஒரு வர்க்கம் என்ற முறையில் பிரமாண்ட மானதொரு முன்னேற்றப் படியாகும்.கட்சியானது இப்பொழுது பழைய வழியில் மட்டுமின்றி ஒரு மேலும் மேலும் புதிய வழியிலுங்கூட தொழிற்சங்கங்களுக்குப்போதமளித்து வழிகாட்டியாக வேண்டும்.அதேபோதில் தொழிற்சங்கங்கள் அத்தியாவசியமான“கம்யூனிசப்பயிற்சிப் பள்ளியாகவும்”பாட்டாளி வர்க்கத்தினர் சர்வாதிகாரத்தைச் செலுத்துவதற்கு அவர்களுக்குப் பயிற்சி தரும் தயாரிப்புப் பள்ளியாகவும்,நாட்டின் பொருளாதாரம் முழுவதுக்குமான நிர்வாகம் படிப்படியாகத் தொழிலாளி வர்க்கத்துக்கும் (தனித்தனிப் பணிப் பிரிவுகளுக்கல்ல),பிற்பாடு உழைப்பாளிமக்கள் அனைவருக்கும் மாற்றப்படுவதற்கு அத்தியாவசியமான தொழிலாளர் ஒற்றுமைக்கான வடிவமாகவும் இருக்கின்றன,நெடுங்காலத்துக்கு அவ்வாறு இருக்கவும் செய்யும் என்பதையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.
மேலே குறிப்பிட்ட பொருளில்,பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தில் தொழிற்சங்கங்கள் ஒருவகை “பிற்போக்குத்தன்மை”கொண்டவையாய் இருப்பது தவிர்க்க முடியாததாகும்.
இதைப் புரிந்து கொள்ளத் தவறுவது,முதலாளித்துவத்திலிருந்துசோசலிசத்துக்கு மாறிச்செல்வதற்கான இடைக்காலத்துக்குரிய அடிப்படை நிலைமைகளைப் புரிந்துகொள்ள முற்றாகத் தவறுவதே ஆகும். இந்தப் “பிற்போக்குத் தன்மையைக்”கண்டு அஞ்சுவதோ,அதனைத் தட்டிக் கழிக்க அல்லது தாவிச் செல்ல முயலுவதோ படு மோசமான மடமையேஆகும். ஏனெனில் தொழிலாளி வர்க்கத்தின், விவசாயிகளின் மிகவும் பிற்பட்ட பிரிவினரையும் பெருந்திரளினரையும் பயிற்றுவித்து,போதமளித்து,அறிவொளிபெறச் செய்து,புது வாழ்வினுள் ஈர்த்திடுவதென்ற பாட்டாளி வர்க்க முன்னணிப் படைக்குரிய அந்தப் பணியைக் கண்டு அஞ்சுவதாகவே இதற்கு அர்த்தம். ஆனால் குறுகிய பணித் துறைக்குரிய கண்ணோட்டமோ,தேர்ச்சித் துறைக்கும்தொழிற்சங்கவாதத்துக்குமான தப்பெண்ணங்களோ கொண்ட எந்தவொரு தொழிலாளியும் இல்லாத ஒரு காலம் வரும் வரை பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைச் சாதிக்காமல் ஒத்திப் போடுவதானது இன்னும் கடுமையான தவறாகிவிடும்.
பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை வெற்றிகரமாய் ஆட்சியதிகாரம் ஏற்பதற்கும், ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் போதும் பிற்பாடும் தொழிலாளி வர்க்கத்தையும் பாட்டாளிவர்க்கமல்லாத பிற உழைப்பாளி வெகுஜனங்களையும் சேர்ந்த போதிய அளவுக்கு விரிவான பகுதியோரின் ஆதரவைப் போதிய அளவு பெறுவதற்கும்,அதன் பின் மேலும் மேலும் விரிவான உழைப்பாளி மக்கள் திரளினருக்கும் போதமளித்தும் பயிற்றுவித்தும் அவர்களை ஈர்த்துக் கொண்டும் தனது மேலாதிக்கத்தைப் பாதுகாத்து,உறுதியாக்கி,விரிவுபடுத்திக் கொள்வதற்கும் முடியும்படியான நிலைமைகளையும் தருணத்தையும் பிழையின்றிக் கணக்கிட்டு நிர்ணயிப்பதில்தான் அரசியலின் கலையும் (கம்யூனிஸ்டு தனக்குள்ள கடமைகளைச் சரிவர புரிந்து கொள்வதும்) அடங்கியுள்ளன.
அது மட்டுமல்ல, ரஷ்யாவைக் காட்டிலும் அதிக அளவு முன்னேறிய நாடுகளில், தொழிற்சங்கங்களின் ஒருவகைப் பிற்போக்குத் தனம் எங்களுடைய நாட்டை விட மிகவும் கூடுதலானஅளவில்வெளிப்பட்டிருக்கிறது. வெளிப்பட்டே ஆக வேண்டியிருந்தது.
தொழிற்சங்கங்களின் குறுகிய தேர்ச்சித் துறை மனப்பான்மை,பணித்துறைத்தன்னலம்,சந்தர்ப்பவாதம் ஆகியவை காரணமாய்,எங்களது மென்ஷ்விக்குகள்தொழிற்சங்கங்களில்ஆதரவு பெற்றனர்(ஒரு சிலவற்றில் இன்னுங்கூட ஓரளவு ஆதரவு பெற்று வருகிறார்கள்)மேலைய நாடுகளின் மென்ஷ்விக்குகள்தொழிற்சங்கங்களில் மேலும் உறுதியானஅடிப்படையைப் பெற்றிருக்கிறார்கள். எங்கள் நாட்டில் இருந்ததை விட அங்குப் பணித்துறைக் கண்ணோட்டமும் குறுகிய மனப்பான்மையும் தன்னலம்மிக்க,தடிப்பேறிய,பேராசைபிடித்த,ஏகாதிபத்திய மனப்போக்கு கொண்டதும் ஏகாதிபத்தியத்தால் லஞ்சங் கொடுத்துக் கெடுக்கப் பட்டதுமானகுட்டிமுதலாளித்துவ ”தொழிலாளர் பிரபுக்குலமானது” மிகவும் வலுவுள்ள பிரிவாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. இது மறுக்க முடியாததாகும். மேற்கு ஐரோப்பாவில் கோம்பர்ஸ்களுக்கும், ழுவோக்கள், ஹெண்டர்சன்கள், மெர்ஹெயிம்கள், லேகின்கள் முதலானோருக்கும் எதிரான போராட்டம், முற்றிலும் ஒருபடித்தான சமூக,அரசியல் ரகத்தவரான எங்களது மென்ஷ்விக்கு களுக்கு எதிரானபோராட்டத்தை விட மிகக் கடுமையானதாகும்.இந்தப் போராட்டம் தயவு தாட்சண்யமின்றி நடத்தப்பட்டாக வேண்டும்.
நாங்கள் செய்தது போலவே, சந்தர்ப்பவாதத்தின், சமூக - தேசியவெறியின் கடைந்தெடுத்த தலைவர்கள் பூரணமாக முகமுடி கிழிக்கப்பட்டுத்தொழிற்சங்கங்களிலிருந்து விரட்டப்படும் நிலைக்கு இந்தப் போராட்டம் நடத்திச் செல்லப்பட்டாக வேண்டும். போராட்டம் குறிப்பிட்ட கட்டத்தை வந்தடைவதற்கு முன்னால் அரசியல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது (கைப்பற்று வதற்கானமுயற்சியும்செய்யப்படலாகாது) இந்தக் “குறிப்பிட்ட கட்டம்”வெவ்வேறு நாடுகளிலும்,வெவ்வேறு நிலைமைகளிலும் வெவ்வேறானதாய் இருக்கும்.
அந்தந்த நாட்டிலுள்ள சிந்தனை மிகுந்த,அனுபவம் வாய்ந்த,அறிவு சார்ந்த பாட்டாளி வர்க்க அரசியல் தலைவர்களால் மட்டுமே இதனைச் சரியாகக் கணக்கிட்டு நிர்ணயிக்க முடியும்.
(ரஷ்யாவில் 1917 அக்டோபர் 25 பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குச் சில நாட்களுக்குப் பிற்பாடு 1917 நவம்பரில் அரசியல் நிர்ணய சபைக்கு நடைபெற்ற தேர்தல்கள் இந்தப் போராட்டம் கண்ட வெற்றிக்கு ஓர் உரைகல்லாக அமைந்தன.இத்தேர்தல்களில் மென்ஷ்விக்குகள் அடியோடு தோற்கடிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கிடைத்தது 7,00,000 வாக்குகள்தான் -- டிரான்ஸ்காக் கஸசின் வாக்குகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டால்14,00,000வாக்குகள்தான்; ஆனால் போல்ஷ்விக்குகளுக்குக் கிடைத்ததோ 90,00,000 வாக்குகள். கம்யூனிஸ்டு அகிலம், (குறிப்பு-கம்யூனிஸ்டுஅகிலம்-இது கம்யூனிஸ்டு அகிலத்தின் நிர்வாகக் கமிட்டியால் வெளியிடப்பட்டு வந்த சஞ்சிகை. இது ரஷ்யன்,ஜெர்மன்,பிரெஞ்சு,ஆங்கிலம்,ஸ்பானிஷ் மற்றும் சீன மொழி ஆகியவற்றில் பிரசுரமாகியது.முதல் இதழ் 1919மே 1ந் தேதி வெளிவந்தது.இந்த சஞ்சிகையில் தத்துவார்த்தக் கட்டுரைகளும்கம்யூனிஸ்டுஅகிலத்தின்ஆவணங்களும் வெளியிடப்பட்டன.லெனினது பல கட்டுரைகள் இதில் இடம்பெற்றன.)இதழ்கள்7மற்றும்8ல் “அரசியல் நிர்ணயச் சபைத் தேர்தல்களும் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமும்” என்னும் எனது கட்டுரையைப் பார்க்கவும்.)
தொழிலாளர் வெகுஜனத் திரளினரது பெயரில்தான்,அவர்களை நம் பக்கத்துக்கு ஈர்த்துக் கொள்ளும் பொருட்டுதான்,நாம் ”தொழிலாளர் பிரபுகுலத்தை”எதிர்த்துப்போராடுகிறோம். தொழிலாளி வர்க்கத்தை நம் பக்கத்துக்கு ஈர்த்துக் கொள்ளும் பொருட்டுத்தான் நாம் சந்தர்ப்பவாத, சமூக - தேசியவெறித் தலைவர்களை எதிர்த்துப் போராடுகிறோம். மிகவும் சர்வசாதாரணமான, கண்கூடான இந்த உண்மையை மறப்பது மடமையே ஆகும்.ஆயினும் தொழிற்சங்க உச்சத் தலைவர்கள் பிற்போக்கு, எதிர்ப்புரட்சித் தன்மை கொண்டோராய்இருப்பதைக் காரணமாகக் காட்டி, தொழிற்சங்கங்களைத் துறந்துவிட்டு நாம் வெளியே வந்துவிட வேண்டும், அவற்றில் வேலை செய்ய மறுக்க வேண்டும்,தொழிலாளர்களுடைய நிறுவன ஒழுங்கமைப்புக்கான செயற்கையான புதிய வடிவங்களைத் தோற்றுவிக்க வேண்டும் என்னும் முடிவுக்கு வருகையில் ஜெர்மன் “இடதுசாரி” கம்யூனிஸ்டுகள் இதே மடமையைத்தான்வெளிப்படுத்துகிறார்கள்.!! கம்யூனிஸ்டுகள் முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஆற்றக்கூடிய மிகப் பெருஞ் சேவையாகிவிடும் அளவுக்கு இது மன்னிக்க முடியாதமடமையாகும். ஏனெனில் சந்தர்ப்பவாத, சமூக - தேசியவெறிகொண்டகாவுத்ஸ்கிவாதத்தொழிற்சங்கத்தலைவர்கள்எல்லோரையும் போலவே, எங்களது மென்ஷ்விக்குகளும் ”தொழிலாளி வர்க்கஇயக்கத்திலுள்ளமுதலாளித்துவ வர்க்கக் கைக்கூலிகளே”யன்றி வேறல்லர் (மென்ஷ்விக்குகளைப் பற்றி எப்பொழுதுமே நாங்கள் இவ்வாறுதான் கூறி வந்திருக்கிறோம்),அல்லது அமெரிக்காவில் டேனியல் தெ.லியோனைப் பின்பற்றுவோரின் அற்புதமான,நூற்றுக்கு நூறு உண்மையானதொடரில்சொல்வதெனில் “முதலாளித்துவ வர்க்கத்தின் தொழிலாளர் துறை சேவகர்களே” {Labour Lieutenants of the capitalist class} அன்றிவேறல்லர். பிற்போக்குத் தொழிற்சங்கங்களில் வேலை செய்ய மறுப்பதானது, தொழிலாளர்களில் போதிய அளவுக்கு வளர்ச்சி பெறாத அல்லது பிற்பட்ட பகுதியோரைப் பிற்போக்கு தலைவர்கள் அல்லது முதலாளித்துவ வர்க்கக் கைக்கூலிகள் அல்லது தொழிலாளர்பிரபுக்குலத்தோர் அல்லது “முற்றிலும் முதலாளித்துவ மயமாகிவிட்ட தொழிலாளர்கள்” (பிரிட்டீஷ் தொழிலாளர்கள் குறித்து 1858-ல் மார்க்சுக்கு எங்கெல்ஸ் எழுதிய கடிதத்தைப் பார்க்கவும். {அக்டோபர் 7 ல் எங்கெல்ஸ் மார்க்சுக்கு எழுதிய கடிதம் காண்க (மார்க்ஸ்,எங்கெல்ஸ். “தேர்வுக் கடிதங்கள்” மாஸ்கோ, 1956, பக்கம் 110}) செல்வாக்கிலே விட்டு வைப்பதையே குறிக்கிறது.
கம்யூனிஸ்டுகள் பிற்போக்குத் தொழிற்சங்கங்களில் வேலை செய்யக் கூடாதென்னும் இந்த நகைக்கத்தக்கத் “தத்துவம்” “வெகுஜனங்களை” வயப்படுத்தும்பிரச்சனையை“;இடதுசாரிக்” கம்யூனிஸ்டுகள் எவ்வளவு துச்சமாய் மதிக்கிறார்கள் என்பதையும், “வெகுஜனங்களைப்” பற்றிய கூப்பாட்டை எப்படி துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்பதையும் மிகத் தெளிவாகப்புலப்படுத்துகிறது. “வெகுஜனங்களுக்கு”உதவிசெய்வதற்கும், “வெகுஜனங்களின்” நம்பிக்கை யையும்ஆதரவையும்அனுதாபத்தையும் பெறுவதற்கு தெரிந்துகொள்ள விரும்பினால்,நீங்கள்இன்னல்களையும் இந்தத் ”தலைவர்களால்”ஏற்படும் தொல்லைகளையும் புரட்டுகளையும் அடக்குமுறைகளையும் கண்டு அஞ்சாமல் சந்தர்ப்பவாதிகளும் சமூக - தேசியவெறியர்களுமான இவர்கள் மிகப் பெருவாரியான சந்தர்ப்பங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ முதலாளித்துவ வர்க்கத்துடனும் போலீசுடனும்இணைப்புக்கொண்டவர்களாவர், நிச்சயம் வெகுஜனங்கள் காணப்படும் இடங்களில் எல்லாம் வேலை செய்தாக வேண்டும். பாட்டாளி வர்க்க அல்லது அரைவாசிப்பாட்டாளி வர்க்க வெகுஜனங்கள் காணப்படும் நிலையங்களிலும் கழகங்களிலும் சங்கங்களிலும் -- மிகவும் பிற்போக்கானவற்றிலுங்கூட -- கிளர்ச்சியும்பிரச்சாரமும்முறையாகவும் விடாமுயற்சியோடும் இடையறாமலும் பொறுமையோடும் செய்யும் பொருட்டு,நீங்கள் எந்தத் தியாகம் புரியவும், மிகப் பெரிய இடையூறுகளைச் சமாளிக்கவும்கூடியவர்களாக இருத்தல் வேண்டும். தொழிற்சங்கங்களும் தொழிலாளர் கூட்டுறவுகளும்தான் (பின்னவை சிற்சில சந்தர்ப்பங்களிலேனும்) வெகுஜனங்கள் இருக்கக் கூடிய நிறுவனங்கள்.
ஸ்வீடிஷ் பத்திரிக்கை Folkets Dagblad Politiken26-ல் (1920 மார்ச் 10 இதழில்) எடுத்துரைக்கப்பட்டிருக்கும்புள்ளிகளின்படி பிரிட்டனில் தொழிற்சங்க உறுப்பினர் தொகை 1917 இறுதிக்கும் 1918 இறுதிக்கும் இடையில் 55,00,000 லிருந்து 66,00,000 ஆக அதிகரித்தது; அதாவது, 19 சதவீதமான பெருக்கமாகும் இது. 1919 முடிவின் வாக்கில் உறுப்பினர் தொகை 75,00,000 ஆக மதிப்பிடப்பட்டது.பிரான்சுக்கும் ஜெர்மனிக்குமான இந்தப் புள்ளிகள் என்னிடம் இல்லை என்றாலும், சிறிதும் மறுக்க முடியாத பொதுவாகத்தெரிந்த உண்மைகள், இந்நாடுகளிலும் தொழிற்சங்க உறுப்பினர் தொகை மிக வேகமாய் உயர்ந்திருப்பதை நிருபிக்கின்றன. இவ்வுண்மைகள்,ஆயிரக்கணக்கான வேறு பல அறிகுறிகளால் ஊர்ஜிதம் செய்யப்படும் ஒன்றை -- அதாவது பாட்டாளிவர்க்கவெகுஜனங்களிடையே, ”அடித்தட்டுப்” பகுதியோரிடையே, பிற்பட்ட பிரிவினரிடையே வர்க்க உணர்வும் நிறுவன ஒழுங்கமைப்பு வேண்டுமென்ற அளவும் பெருகி வருகின்றன என்பதை -- தெட்டத்தெளிவாக்குகின்றன.
பிரிட்டனிலும்,பிரான்சிலும்ஜெர்மனியிலும் லட்சோபலட்சத் தொழிலாளர்கள், நிறுவனஒழுங்கமைப்பு அறவே இல்லாத நிலையிலிருந்து ஆரம்பப்படியான, அடிநிலையான, மிகஎளிய, (இன்னமும் முதலாளித்துவ - ஜனநாயகத் தப்பெண்ணங்களில் மூழ்கியுள்ளோர்) மிகச் சுலபமாய் புரிந்துகொள்ளக் கூடிய நிறுவன வடிவத்துக்கு,அதாவதுதொழிற்சங்கங்களுக்குமுதன்முதலாய் மாறி வந்து கொண்டிருக்கிறார்கள் இந்நிலையிலும் புரட்சிகரமான, ஆனால்யோசனை இல்லாத இடதுசாரிக் கம்யூனிஸ்டுகள் தொழிற்சங்கங்களில் வேலை செய்ய மறுத்துவிட்டு விலகி நின்று “வெகுஜனங்கள்” “வெகுஜனங்கள்” என்றுஇதைவிட முட்டாள்தனமான ஒன்றை, “இடதுசாரிப்” புரட்சியாளர்களால் புரட்சிக்கு ஏற்படும்கேட்டை விட பெரிய ஒன்றைக் கற்பனை செய்வது கூட கடினம்! ஏன்,ரஷ்யாவின்,அன்டான்டின்முதலாளித்துவ வர்க்கத்தின் மீது முன்பின் கண்டிராத வெற்றிகளை இரண்டரை ஆண்டுகளாய்ப் பெற்ற பின்னரும் இன்று,ரஷ்யாவில் நாங்கள் “சர்வாதிகாரத்தை ஏற்பதை” தொழிற்சங்க உறுப்பினராவதற்குரிய ஒரு நிபந்தனையாக்குவோமாயின், முழு முட்டாளுக்குரிய செயல் புரிவோரேஆவோம்;வெகுஜனங்களிடையே எங்களுக்குள்ளசெல்வாக்குக்குத் தீங்கிழைத்து மென்ஷ்விக்குகளுக்கு உதவி புரிவோரே ஆவோம். ஏனெனில்கம்யூனிஸ்டுகள் முன்னுள்ள பணி பிற்பட்டபகுதியோரின் நம்பிக்கையைப் பெறுவதும், அவர்களுக்கிடையே வேலைசெய்வதுமேயன்றி,செயற்கைத் தன்மை வாய்ந்தசிறுபிள்ளைத்தனமான “இடதுசாரிக்”கோஷங்களைக் கொண்டு அவர்களிடமிருந்து தம்மைப்பிரித்துவிலகிவேலிகட்டிக்கொள்வதல்ல.”கோட்பாடு வழிப்பட்ட”ஜெர்மன் எதிர்தரப்பினரைப் போல (இத்தகைய “கோட்பாடு வழிபாட்டிலிருந்து” கடவுள் நம்மைக் காப்பாற்றுவாராக!), அல்லது அமெரிக்க “உலக ஆலைத் தொழிலாளர்” நிறுவனத்தின் (குறிப்பு - உலக ஆலைத் தொழிலாளர் நிறுவனம் (Industrial Workers of the World)அமெரிக்கத் தொழிலாளர்களின் தொழிற்சங்க நிறுவனம் 1905ல் நிறுவப்பட்டது.பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தபிரதானமாயும்தேர்ச்சியற்றிருந்த குறைந்த ஊதியம் பெற்றுவந்த தொழிலாளார்களை இது ஒன்று சேர்த்திருந்தது.இதை நிறுவுவதில் அமெரிக்க தொழிலாளர் இயக்கத்தின் முக்கியதலைவர்களானடே.டே.லியோன்,யூ.டேப்ஸ் மற்றும் வி.ஹேவுட் தீவிரப் பங்காற்றினர். உலக தொழிற்துறை தொழிலாளர் சங்கங்கள் கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, லத்தீன் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் நிறுவப்பட்டன. முதல் உலகப் போரின் போது இந்த சம்மேளத்தின் பங்கேற்புடன் பல யுத்த - எதிர்ப்பு வெகுஜனப் போராட்டங்கள் நடைபெற்றன.இந்த அமைப்பின் செயல்பாடுகளில் அராஜகவாத,சிண்டிகல்வாதப் போக்குகள் காணப்பட்டன:இது பாட்டாளி வர்க்கத்தின்அரசியல்போராட்டங்களை மறுத்தது, கட்சியின் தலைமைப் பாத்திரத்தை மறுத்தது, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் அவசியத்தை மறைத்தது.
அமெரிக்க தொழிற்சங்க சம்மேளன உறுப்பினர்களிடையே வேலை செய்ய மறுத்தது. தலைமையின் இத்தகைய சந்தர்ப்பவாத அரசியல் காரணமாக உலக தொழிற்துறைத் தொழிலாளர் சங்கம் ஒரு செக்டேரியன் அமைப்பாகச் சீரழிந்து தொழிலாளி வர்க்க இயக்கத்தில் இருந்த செல்வாக்கு அனைத்தையும் இழந்துவிட்டது.) புரட்சியாளர்கள் சிலரைப் போல, பிற்போக்குத் தொழிற்சங்கங்களைவிட்டு வெளியேற வேண்டுமென்று வாதாடி இவற்றில் வேலை செய்ய மறுக்கும் அந்த “இடதுசாரிப்”புரட்சியாளர்களுக்கு கோம்பர்ஸ்களும்ஹெண்டர்சன்களும் ழுவோக்களும் லேகின்களும் மிகுந்த நன்றி செலுத்துகிறார்கள் என்பதில் ஐயப்பாட்டுக்கு இடமில்லை.சந்தர்ப்பவாதத்தின் ”தலைவர்களான”இந்த ஆட்கள்,கம்யூனிஸ்டுகளைத் தொழிற்சங்கங்களில் நுழையவிடாமல் தடுப்பதற்கும்,எல்லா வழிகளிலும் இவற்றிலிருந்து அவர்களை விலக்கி வெளியே தள்ளுவதற்கும்,தொழிற்சங்கங்களில் அவர்களுடைய பணியை எவ்வளவு சங்கடமாக்க முடியுமோ அவ்வளவும் செய்வதற்கும்,
அவர்களை அவமானப்படுத்துவதற்கும்,வேட்டையாடுவதற்கும்,அடக்குமுறைக்கு உள்ளாக்குவதற்கும் முதலாளித்துவ சூழ்ச்சிகளின் ஒவ்வொரு உபாயத்தையும் (தந்திரத்தையும்) கையாளுவார்கள், முதலாளித்துவ அரசாங்கங்கள், பாதிரிமார்கள், போலீசார், நீதிமன்றத்தார் ஆகிய அனைவரதுஉதவியையும்பயன்படுத்திக் கொள்வார்கள்என்பதில்சந்தேகமில்லை.இவற்றுக்கு எல்லாம் சளைக்காமல் நாம் எதிர்த்து நிற்கும் திறனுடையோராய் இருக்க வேண்டும்; எந்தத் தியாகமும் புரிய சித்தமாயிருக்க வேண்டும்; தேவை ஏற்பட்டால், பல்வேறுதந்திரங்களையும் உபாயங்களையும் சட்டவிரோத முறைகளையும்கையாளுவதற்குங்கூட,உண்மையைச் சொல்லாமலும், மறைத்தும் சமாளிப்பதற்குங்கூட தயாராகயிருக்க வேண்டும்--எப்பாடு பட்டாகிலும் தொழிற்சங்கங்களில் புகுந்து,தொடர்ந்து அவற்றில் இருந்து,கம்யூனிஸ்டுப்பணியைஅவற்றினுள்ளிருந்து நடத்திச் சென்றாக வேண்டும். ஜாரிசத்தில்1905வரையில், எங்களுக்குச் “சட்டப்பூர்வமான வாய்ப்புகள்” எவையும் இருக்கவில்லை. ஆயினும் இரகசியப் போலீசின் அதிகாரியான ஸூபாத்தவ் புரட்சியாளர்களைக் கண்ணிவைத்து பிடிக்கும் பொருட்டும்,அவர்களை எதிர்த்துச் செயல்படும் பொருட்டும் கறுப்பு நூற்றுவர் தொழிலாளர் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்த போதும்,தொழிலாளர்களின் கழகங்களை நிறுவிய போதும் நமது கட்சி உறுப்பினர்களை நாங்கள் இந்தக் கூட்டங்களுக்கு,இந்தக் கழகங்களினுள்ளும் அனுப்பினோம் (இவர்களில்ஒருவரானசெயின்ட்பீட்டர்ஸ்பர்க்கின் சிறந்த தொழிலாளர் தோழர் பாபுஷ்கின் என் நினைவில் இருக்கிறார்;ஜாரின் ஜெனரல்களது உத்தரவின் பேரில் இவர் 1906ல் சுட்டுக் கொல்லப்பட்டார்)இவர்கள்வெகுஜனங்களுடன் தொடர்புகள் நிறுவிக் கொண்டனர்; இவர்களால் தமது கிளர்ச்சியை நடத்திச் செல்ல முடிந்தது;
ஸூபாத்தவ்வாதத்தின்*செல்வாக்கிலிருந்து தொழிலாளர்களை விடுவிப்பதில் இவர்கள் வெற்றி பெற்றனர். ஆனால் ஆழமாக வேர்விட்டிருக்கும் சட்டவாத, அரசியலமைப்புச் சட்டப்பூர்வ, முதலாளித்துவ ஜனநாயகத் தப்பெண்ணங்களில் மூழ்கிக் கிடக்கும் மேற்கு ஐரோப்பாவில் இதனைச் சாதிப்பது மிகவும் கடினமென்பது உண்மையே. ஆயினும் இதனைச் செய்ய முடியும், செய்தே ஆக வேண்டும் --அதுவும் முறையாகவும் தொடர்ச்சியாகவும்செய்தாக வேண்டும்.
என்னுடைய கருத்துப்படி,மூன்றாவது அகிலத்தின் செயற்குழு,பிற்போக்குத்தொழிற்சங்கங்களில் வேலை செய்ய மறுப்பதானது,எப்படி விவேகமற்றது என்பதையும்,பாட்டாளி வர்க்கப் புரட்சியின் இலட்சியத்துக்கு இதனால் ஏற்படும் பெருங்கேட்டையும் விவரமாக விளக்கிக் கூறிப் பொதுவாக இக்கொள்கையையும், குறிப்பாக இந்தத் தவறான கொள்கையை ஆதரித்துள்ள -- நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, பகிரங்கமாகவோஅல்லது இரகசியமாகவோ, முழுமையாகவாஅல்லது பகுதியாகவா என்பது குறித்து கருதத்தேவையில்லை -- ஹாலந்துக் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்கள் சிலரது செயல்முறைகளையும் திட்டவட்டமாக கண்டனம்செய்வதுடன், கம்யூனிஸ்டு
____________________________________________
*கோம்பர்ஸ்களும்ஹெண்டர்சன்களும் ழுவோக்களும் லேகின்களும் ஸூபாத்தவ்களேயன்றி வேறல்லர்;அவர்களதுஐரோப்பியஜோடனையிலும்,மெருகிலும்,கேடுகெட்ட கொள்கையைச் செயல்படுத்துவதில் அவர்கள் அனுசரிக்கும் நாகரிகமான,பண்பட்ட,ஜனநாயகப் பாணியில் அமைந்தசாமர்த்திய முறையிலும்தான் எங்களது ஸூபாத்தவிடமிருந்து வித்தியாசப்படுகிறார்கள்.
_____________________________________________ அகிலத்தின் அடுத்த காங்கிரசையும் இவற்றைக் கண்டனம் செய்யுமாறு அறைகூவல் விடுக்க வேண்டும்.மூன்றாவது அகிலம் இரண்டாம் அகிலத்தின்போர்த்தந்திரத்திலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டுவிட வேண்டும்.சங்கடமானவிவகாரங்களை அது தட்டிக்கழிக்கவோ, குறைத்துக் கூறி மெழுகவோ கூடாது;அதற்குப் பதில் அவற்றை நேர்முகமான முறையில் எடுத்துரைத்தாக வேண்டும், “சுயேச்சையாளர்களை” (ஜெர்மன் சுயேச்சை சமூக - ஜனநாயகக் கட்சி) பொறுத்தவரை சுற்றி வளைக்காமல் முழுஉண்மையையும் நேருக்குநேர் எடுத்துரைக்கப்பட்டாக வேண்டும்.
நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை
1.ஜெர்மன் இடதுசாரி கம்யூனிஸ்டுகள் பிற்போக்கு தொழிற்சங்கங்களில் கம்யூனிஸ்டுகள்வேலைசெய்யக்கூடாது என்று கருதினார்கள்.அது தவறான கருத்து என்று லெனின் இந்தநூலில் வாதிட்டார்.
2.ரஷ்யாவில் புரட்சிக்குப் பிறகு அமைந்த சோவியத்து அரசானது, உழைக்கும் வர்க்கங்கள் அடங்கிய சோவியத்துகளின் மூலமே அதன் அரசியல்அதிகாரத்தைசெயல்படுத்தியது.இந்தசோவியத்துஅமைப்புகளிலுள்ள உழைக்கும் வர்க்கங்களுக்கு ரஷ்ய கம்யூனிஸ்டுக் கட்சி வழிகாட்டியது.இந்த முறையில்தான் ரஷ்ய சோசலிச சோவியத்து கூட்டுக் குடியரசு செயல்பட்டது.
3.சோவியத்து அரசுக்கு வழிகாட்டும் கட்சியாக ரஷ்ய கம்யூனிஸ்டுக் கட்சி இருந்ததால் அந்தக்கட்சிக்குள் பதவி ஆசைகொண்டவர்களும்சுயநலவாதிகளும் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் நுழைவதற்கு முயற்சி செய்தார்கள்.அத்தகைய பிற்போக்காளருக்கு கட்சியில் இடம் கொடுப்பதை தவிர்ப்பதற்காக உழைக்கும் மக்களை மட்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற கொள்கை வகுத்து ரஷ்ய கம்யூனிஸ்டுக் கட்சி செயல்பட்டது.
4.இந்தியாவில் கம்யூனிஸ்டுக் கட்சியானது சில மாநிலங்களில் ஆட்சிக்கு வந்ததன் காரணமாக இங்கேயும் சில பிற்போக்கு பேர்வழிகள் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் சேர்ந்தனர். கட்சிக்குள் அத்தகைய பிற்போக்காளர்கள் சேருவதை தடுப்பதற்கான முயற்சி இங்குள்ள கம்யூனிஸ்டு கட்சி செய்ததா என்பது கேள்விக்குறியே.
5.ரஷ்யக் கம்யூனிஸ்டுக் கட்சியானது ஜார் மன்னனை எதிர்த்துப் போராடி பலஒடுக்குமுறைகளைசந்தித்துக் கொண்டு இருந்தபோது அந்தக் கட்சிக்குள் சேர்ந்தவர்கள் இந்தக் கொடுமையைஎதிர்த்துப் போராடுவதில் உறுதியாகவும், அதன் பொருட்டு தியாகம்செய்பவர்களாகவும் இருந்தனர். அந்தக் காலங்களில் சுயநலப் பேர்வழிகள் பெரும்பாலும் ரஷ்ய கம்யூனிஸ்டுக் கட்சியில் சேரவில்லை. ஆகவே ஒரு கம்யூனிஸ்டுக் கட்சியானது ஆளும்வர்க்கங்களையும் அதன் ஆட்சியையும் எதிர்த்து உறுதியாகப் போராடுமானால் அந்தக்கட்சியானது ஆளும்வர்க்க அரசின் ஒடுக்குமுறையை சந்திக்க வேண்டும்.அத்தகைய கட்சிக்குள் மிகவும் நேர்மையானவர்களும் தியாகம் செய்வதற்கு தயாரானவர்கள் மட்டுமேசேர்ந்து செயல்பட முன்வருவார்கள்.
6. இந்தியாவில் 1970 ஆம் ஆண்டுகளில் தோன்றிய இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்)கட்சி ஆரம்பகாலங்களில் இந்திய ஆளும் வர்க்கங்களையும் அதன் அரசையும் எதிர்த்து உறுதியாகப் போராடிய போது அந்தக் கட்சியில் நேர்மையான மாணவர்கள், அறிவாளிகள், தொழிலாளர்கள்,விவசாயிகள் போன்றவர்கள் சேர்ந்தார்கள்.அவர்களில் பலர் உயிர் தியாகம் செய்தனர். ஆனால் அந்த கட்சியானது மார்க்சிய லெனினிய அடிப்படைகளை உள்வாங்கத் தவறி இடது தீவிரவாதப் பாதையைப் பின்பற்றியதும் அந்தக் கட்சியை உழைக்கும் வர்க்கம் ஆதரிக்காமல் பின்வாங்கியது. அந்தக் கட்சியும் பல குழுக்களாக சிதைந்து அந்தக்குழுக்களுக்குள் முதலாளித்துவ சுயநலவாதிகள் ஊடுருவி அந்தக் குழுக்களில் பலகுழுக்கள் மார்க்சிய லெனினியத்தை கைவிட்டு விட்டு சீர்திருத்த வழியைத் தேர்ந்தெடுத்து திருத்தல்வாதம்மற்றும் கலைப்புவாதக் குழுக்களாக மாறிவிட்டது.
7.ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பானதுஜனநாயகமத்தியத்துவத்தின் அடிப்படையில்உருவாக்கப்பட்டது.கட்சியின் உயர்ந்த அதிகார அமைப்பானது கட்சியின் காங்கிரஸ் அல்லது பொதுக்குழுவாகும். கட்சி உறுப்பினர்கள் இந்த காங்கிரசுக்கு பிரதிநிதிகளைதேர்ந்தெடுப்பார்கள். இந்த காங்கிரஸ் பிரதிநிதிகள் கட்சியின் மத்தியக் குழுவை தேர்ந்தெடுப்பார்கள். ரஷ்ய அரசும் கட்சியும் இந்த மத்திய கமிட்டியின் வழிகாட்டுதல் அடிப்படையிலே செயல்படும். இந்த முறையில் ஜனநாயக மத்தியத்துவ முறை கடைபிடிக்கப்பட்டது.
8.ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியானது அதன்வேலைகளுக்குதொழிற்சங்கங்களையே ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டது.இந்த தொழிற்சங்கங்கள் கட்சி சார்பற்ற தொழிற்சங்கங்களாக இருந்தன.இத்தகையதொழிற்சங்கங்கள் மூலமாகவே ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியானது பரந்துபட்ட உழைக்கும் மக்களோடு தொடர்பு கொண்டு உறவை ஏற்படுத்திக்கொண்டது. தொழிற்சங்கங்களின் தொடர்புகள் மூலமாகவே சோவியத் அரசானது தனது பொருளாதார இராணுவ திட்டங்களைஉருவாக்கிசெயல்படுத்தியது. அதன்காரணமாகவே சோவியத்து அரசு நீண்டகாலம் ஆட்சியில் நீடித்தது என்கிறார் லெனின்.
9. இந்தியாவில் தொழிற்சங்கங்கள் போன்றவற்றில் கம்யூனிஸ்டுகள் செயல்படும் போது, அவர்கள் தங்களுக்கான தொழிற்சங்கங்களை உருவாக்கி அந்த தொழிற்சங்கங்களை தனது குறுகிய நோக்கங்களுக்கு மட்டும்பயன்படுத்துவதைபார்க்கிறோம்.பிற்போக்கு தொழிற்சங்கங்களிலும் கம்யூனிஸ்டுகள் செயல்பட வேண்டும் என்ற லெனினிய கொள்கையை இவர்கள் செயல்படுத்தவில்லை. அதன் காரணமாகஇந்ததொழிற்சங்கங்களுக்கு மக்களின்ஆதரவு கிடைக்காமல் தொழிற்சங்கங்கள் தனிமைப்பட்டு நிற்கின்றன.இந்த பலவீனத்தைஆளும் வர்க்கங்கள் நன்கு பயன்படுத்தி உழைக்கும் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி தொழிலாளர்களின் போராட்டங்களை மிகவும் எளிதாக நசுக்கிவிடுகிறது.இதன் காரணமாக தொழிலாளர்களிடையே போராட்ட உணர்வு குன்றி வருகிறது.
10.ரஷ்யாவில் போல்ஷ்விக்குகளுக்கு எதிராகசெயல்பட்டதிருத்தல்வாதிகளான மென்ஷ்விக்குகள் ரஷ்ய தொழிலாளர்களிடையேமுதலாளித்துவ ஜனநாயக சித்தாந்தத்தைப் போதித்தார்கள், பாட்டாளி வர்க்க அரசு அதிகாரத்தை மறுத்துவிட்டு தொழிற்சங்கங்கள் சுயேச்சையாக செயல்பட வேண்டும் என்ற கருத்தை பிரச்சாரம் செய்தார்கள். இதன் மூலம் பாட்டாளி வர்க்க கட்டுப்பாட்டிற்கு குழிபறித்தார்கள் என்கிறார் லெனின். இந்தியாவிலும்பலதொழிற்சங்கங்களில் இதே மென்ஷ்விக் பாணியிலேயே தொழிற்சங்கத் தலைவர்கள் செயல்பட்டு தொழிற்சங்கங்களை புரட்சிகரமான அமைப்புகளாக வளர்ப்பதற்கு மாறாக பிற்போக்கான தொழிற்சங்க அமைப்புகளாக மாற்றி வருகின்றனர்.
11.ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியானது வெகுஜனங்களுடன்தொடர்புகொள்வதற்கு இத்தகையதொழிற்சங்கங்களை மட்டும் பயன்படுத்தவில்லை.மாறாக கட்சி சார்பற்ற தொழிலாளர்கள்மற்றும் விவசாயிகளின் மாநாடுகளையும் பயன்படுத்திக் கொண்டனர்.இதன் மூலம் உழைக்கும் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களின் தேவைகளை சோவியத்துஅரசு பூர்த்தி செய்தது என்கிறார் லெனின்.தற்போது இந்தியாவில் முதலாளிகளின்பாராளுமன்ற ஆட்சி நடந்துகொண்டிருக்கும் சூழலில் இங்குள்ள கம்யூனிஸ்டுகள் கட்சி சாராததொழிலாளர்கள்,விவசாயிகள் மத்தியில் வேலை செய்து முதலில் அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் தேவைகளை நிறைவேற்ற ஆளும் வர்க்கங்களை எதிர்த்துப் போராடுவதற்கு வழிகாட்ட வேண்டும்.ஒவ்வொரு வர்க்கங்களுக்கான சோவியத்அமைப்பு அதாவது மக்கள் கமிட்டிகளைஉருவாக்க வேண்டும்.இதன் மூலம் மட்டுமேஉழைக்கும் மக்களின் உணர்வுகளையும் அதன் தேவைகளையும் புரிந்துகொண்டு,உழைக்கும்மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தகுதியான மக்கள் கமிட்டிகளை உருவாக்க முடியும்.
இதைத் தொடர்ந்து அரசியல் அதிகாரம் அனைத்தும்இந்தமக்கள்கமிட்டிகளுக்கே என்ற போராட்டத்தை நடத்தி மக்கள் கமிட்டியின் அரசியல் அதிகாரத்தை நிறுவ முடியும். இந்தநோக்கத்திலிருந்தே கம்யூனிஸ்டுகள் தொழிற்சங்கம்,விவசாயிகளின் சங்கம் போன்ற மக்கள் திரள் வர்க்க அமைப்புகளைப்பயன்படுத்த வேண்டும்.இதற்கு மாறாக மக்கள் திரள் அமைப்புகளை குறுகிய நோக்கத்தின் அடிப்படையில் பயன்படுத்துவது ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்வதாகவே இருக்கிறதை நடைமுறையில் நாம் பார்க்கிறோம்.
12. ரஷ்யாவில் சோவியத்துகளின் காங்கிரஸ்தான் மிகச்சிறந்த ஜனநாயக நிறுவனமாகும். முதலாளித்துவ ஜனநாயக நிறுவனங்களைக் காட்டிலும் மிக உயர்ந்த ஜனநாயக நிறுவனம்ஆகும்.இந்த காங்கிரசுகளின் நடவடிக்கையை உன்னிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியானது கண்காணித்து செயல்பட முனைகிறது.கிராமங்களில் வர்க்க உணர்வு கொண்டதொழிலாளர்களை இனம் கண்டுஅவர்களை சோவியத்து அரசு பதவிகளில் கட்சியானதுஅமர்த்துகிறது. அதன் மூலம் நகர்ப்புற பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை செயல்படுத்துகிறது. கிராமங்களிலுள்ள விவசாயிகளை சுரண்டும் பணக்கார விவசாயிகளை சோவியத்துகளின் மூலம் கட்டுப்படுத்துகிறது.இத்தகைய அரசியல் அமைப்புதான் ரஷ்யாவில்செயல்பட்டசோவியத்துஅரசமைப்பாகும். இந்த அமைப்பின் மூலம்தான் ரஷ்யாவிலுள்ள தொழிலாளர்களும், விவசாயிகளும் நடுத்தர மக்களும் பயனடைந்தார்கள்.
13.பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை செயல்படுத்துவதற்கான அமைப்பு முறைதான் சோவியத்து அரசமைப்பு முறையாகும்.இத்தகைய சோவியத்து அமைப்பு முறையை ரஷ்யாவில் புரட்சி நடப்பதற்கு முன்பே தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது. இந்த சோவியத்து அமைப்புகளில் போல்ஷ்விக்குகளும்,மென்ஷ்விக்குகளும் செயல்பட்டார்கள். அதில் மென்ஷ்விக்குகளே அதிக செல்வாக்கோடுஇருந்தார்கள்.எனினும் புரட்சியின் போது அனைத்து அதிகாரமும் சோவியத்துக்களுக்கேஎன்ற முழக்கத்தை முன்வைத்து போல்ஷ்விக்குகள் செயல்பட்டு, ஆட்சி அதிகாரம்சோவியத்துகளின் கைக்கு வந்தது. சோவியத்துக்களில் இருந்த மென்ஷ்விக்குகள் மக்களுக்கான கொள்கைகளை செயல்படுத்த தயங்கியதால் சோவியத்தில் இருந்த மென்ஷ்விக் ஆதரவாளர்கள் பலர் மென்ஷ்விக்குகளுக்கு கொடுத்த ஆதரவை கைவிட்டு விட்டு பலரும் போல்ஷ்விக்குகளின் ஆதரவாளராக மாறினார்கள். அந்த சோவியத்துகளின் மூலம் போல்ஷ்விக்குகள் மக்களின் நலனுக்கான பணிகளை தொடர்ந்துசெயல்படுத்தினார்கள்.இந்த ரஷ்ய அனுபவத்திலிருந்து இந்தியாவிலும் கம்யூனிஸ்டுகள் நாடுமுழுவதும் தொழிலாளர்கள்மற்றும்விவசாயிகளின் சோவியத் (மக்கள் கமிட்டி) அமைப்புகளை உருவாக்க வேண்டும்.
இந்த அமைப்புகள் கட்சி வேறுபாடின்றி பொதுவாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்காகப் பாடுபட வேண்டும்.மேலும் உழைக்கும் மக்களின் நலன் காக்கும் அரசுமுறையைஉருவாக்குவதற்காகவும் பாடுபட வேண்டும்.இந்த வழியில் செயல்படுவதன்மூலமே இந்தியாவில்கம்யூனிஸ்டுகளால் சோசலிச அரசமைப்பையோ அல்லது மக்கள் ஜனநாயக அரசமைப்பையோ உருவாக்க முடியும்.அவ்வாறு ஒரு சோசலிச அரசமைப்பை உருவாக்க முயற்சியில் ஈடுபடும் போது முதலாளித்துவவாதிகளும் அதன் அரசும் இந்த சோவியத்துக்களுக்கு எதிராகவன்முறையைப்பயன்படுத்தினால் இந்த சோவியத்து அமைப்பை பாதுகாத்திட மக்கள் அந்த வன்முறையை வன்முறையாலேயே எதிர்கொள்வார்கள்.ஆகவேதான் உழைக்கும் மக்களின் போராட்டங்கள் எந்த முறையில் நடக்க வேண்டும் என்பதை உழைக்கும் மக்கள் தீர்மானிக்க மாட்டார்கள் என்றும் அதனை ஆட்சியிலுள்ள உழைக்கும் மக்களின்எதிரிகளேதீர்மானிக்கிறார்கள் என்று மார்க்சிய ஆசான்கள் எடுத்துரைத்தார்கள்.
14.ஜெர்மன் இடதுசாரி கம்யூனிஸ்டுகள் பிற்போக்கு தொழிற்சங்கங்களில் கம்யூனிஸ்டுகள்செயல்படக் கூடாது என்றனர்.மாறாக புதிய வகைப்பட்ட தொழிற்சங்கங்களைகம்யூனிஸ்டுகள் உருவாக்கிஅதில்தான் கம்யூனிஸ்டுகள் செயல்பட வேண்டும் என்றனர்.இந்த கருத்து நகைக்கத்தக்க கருத்து என்று லெனின் விளக்கினார்.இந்தியாவிலும் கம்யூனிஸ்டுகள்பல்வேறு குழுக்களாக பிளவுண்டு இருக்கும் சூழலில் ஒவ்வொரு குழுவும் தனக்கென்று தனித்தனியாக தொழிற்சங்களை உருவாக்கமுயற்சிப்பது,தொழிலாளர்களின் மத்தியில் பிளவு ஏற்படத்தான் பயன்பட்டு இருக்கிறது. இதற்கு மாறாக பிற்போக்கான தொழிற்சங்கங்களிலும்கம்யூனிஸ்டுகள் சேர்ந்து செயல்பட்டு தொழிலாளர்களின் சோவியத்துக்களை உருவாக்க பாடுபடுவதன் மூலம் தொழிலாளர் சோவியத்து (மக்கள் கமிட்டியை) உருவாக்க வேண்டும்.
ஏனெனில்தொழிலாளர்கள்அனைவரும் ஒரேவிதமான பிரச்சனைகளைத்தானேசந்தித்துக்கொண்டுஇருக்கிறார்கள். அவர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒருவழிதானே இருக்க முடியும். ஆகவே அவர்களுக்கு ஒரு அமைப்புதானே தேவை.எனினும் இங்குதொழிலாளர்களுக்கு பல்வேறு அமைப்புகள் இருந்தாலும்,பல்வேறு அமைப்புகளில் உள்ளவர்கள் ஒன்றிணைந்து நொழிலாளர் மக்கள் கமிட்டி ஒன்றை உருவாக்கலாமே.
ஒவ்வொரு தொழிற்சங்கத்திற்கும் பிரதிநித்துவம் கொடுத்து இந்த தொழிலாளர் மக்கள் கமிட்டியை உருவாக்கி செயல்படலாமே.எடுத்துக்காட்டாகசிலபிரச்சனைகளைன் போது இந்த தொழிற்சங்கங்கள் போராடுவதற்காக கூட்டமைப்பு ஏற்படுத்தி போராடும்போது.
அத்தகைய கூட்டமைப்பாக தொழிலாளர் மக்கள் கமிட்டியை நிரந்தரமாகஉருவாக்கிசெயல்படலாமே. இதன் மூலம் தொழிலாளி வர்க்கத்திற்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது, மாறாக தொழிலாளி வர்க்கத்திற்கு நன்மைதானே கிடைக்கும்.
15.முதலாளித்துவ உற்பத்தி முறை உருவான ஆரம்ப காலத்திலிருந்தே தொழிலாளர்கள் அமைப்பாக தொழிற்சங்கத்தில் இணைந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்தத் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வளர்ந்து பலம்பெற்று வருகிறது,அவ்வாறு காலம் செல்ல செல்ல வளர்ந்து பலம் பெறும்.எனினும் தற்போது பலமில்லாமல் இருக்கும் தொழிற்சங்கத்தை புரிந்துகொண்டு செயல்படுவதற்குமாறாகபுரட்சிகரமான தொழிற்சங்கத்தை உடனடியாக உருவாக்கிசெயல்பட வேண்டும் என்பது கற்பனையாகும்.இது பற்றி லெனின் குறிப்பிடும்போது நான்கு வயது குழந்தைக்கு உயர் கணிதத்தை கற்றுக் கொடுக்க முடியுமாஎன்ற கேள்வி எழுப்பி நமக்கு விளக்கியுள்ளார்.ஆகவே தற்போது இருக்கும் தொழிற்சங்கங்களின் சூழலிருந்துபிற்போக்குதொழிற்சங்கங்களில் கம்யூனிஸ்டுகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை தீர்மானித்து செயல்பட வேண்டும். அதே நேரத்தில் தொழிற்சங்கங்களை புரட்சிக்குபயன்படக்கூடியஅமைப்புகளாக மாற்ற வேண்டும்என்ற லட்சியத்தின்செயல் பட வேண்டும்.
தேன்மொழி