செப்டம்பர் 02 ம் தேதி ஒரு குடும்ப பூசல் அதனை பற்றி பேச அழைத்திருந்தார்கள்.
நல்ல கல்வி நல்ல வசதி வாய்ப்பு உள்ள ஒரு பெண் அதே வேலையில் உள்ள ஒரு ஆணைகாதலித்து திருமணம் செய்துக் கொள்கின்றனர்.
கொரோனா தாண்டவம் இவர்களின் வாழ்கையையும் புரட்டி போட்டு விட்டது. இன்று குடும்ப சிறையில் அந்த பெண்மீது ஏவப்படும் ஒடுக்குமுறை புரிந்துக் கொள்வதற்கு முயற்ச்சி.
பெண் வாழ விரும்புகிறார் ஆனால் அந்த பெண்ணை குற்றம் சுமத்தியே அவர்கள் கொடுத்த கார் மற்றும் பணத்தில் வாழும் மாப்பிள்ளை வீட்டார் என்னென்ன குறைகூறுகின்றனர்.
பெண் கேட்ட கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை. இவனோ இவன் குடும்பமோ பேசும் பேச்சுக்கு இந்த குழந்தை பலிகடாவா? என்னையும் என் குழந்தைக்கும் வாழ வழி சொல்லுங்கள் என்று மன்றாடினார்.... ஆண் ஆதிக்க சமூகத்தில் ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதியே..... இதை மாற்ற நாம் புரிந்துக் கொள்ள மார்க்சியம் மட்டுமே வழிகாட்டி....
"மார்க்சியம்தான் பெண்ஒடுக்குமுறையின் சமூக அடித்தளத்தைத் தெளிவாக அடையாளப்படுத்திய உலகப் பார்வையை வழங்கியது.வெறுமனே சுட்டிக் காட்டியது மட்டுமன்றி நடைமுறைப் போராட்டங்கள் புரட்சிகள் வாயிலாக பெண் ஒடுக்கு முறைகளை உடைத்தெறிந்து ஆண் பெண் சமத்துவத்தை நாட்டிலும் வீட்டிலும் நடைமுறைப்படுத்த வழிகாட்டியது. சோஷலிசத்தின் கீழ் தான் முன்பு எப்பொழுதும் அனுபவித்திராத சுதந்திரத்தைப் பெண்கள் அனுபவிக்க ஆரம்பித்தனர்.அதில் முழுமையோ திருப்தியோ அல்லது முடிவான அம்சங்கள் யாவும் நிறைவுடையனவாக இருந்தன என்று கூறிவிட முடியாது.ஆனால் மனிதகுல வரலாற்றில் வர்க்கங்கள் தோற்றம் பெற்ற பின்னான சமூக அமைப்புகளில் சோஷலிச சமூக அமைப்பில் மட்டுமே பெண்கள் தமக்குரிய சமூக சமத்துவத்தை நிலைநாட்டக் கூடியதாக இருந்ததை மறுத்துவிட முடியாது".-லெனின் கிளாரா ஜெட்கினிடம், என் நினைவுகளில் (லெனின் நூலிலிருந்து.)
இன்று உலகமயமாதல் என்பதன் ஊடாக ஏகாதிபத்தியம் மூன்றாம் உலக நாடுகளை மேன்மேலும் சுரண்டிக் கொள்ளையிட்டு வருகின்றது. இதில் பெண்கள் பன்முகப்பட்ட வழிகளில் ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். பொருளாதார அரசியல் சமூக பண்பாட்டுத் தளங்கள் அனைத்திலும் பெண் ஒடுக்குமுறைகளை அடையாளம் காணமுடிகிறது. ஆனால் அவற்றுக்கு எதிரான அமைப்பு ரீதியாகப் பெண்களை அணி திரட்டுவது கடினமான ஒரு பணியாகவே இருந்து வருகின்றது. பழமைவாதக் கருத்தியல் அமுக்கத்திலிருந்து பெண்களை விடுவிப்பது மிகப் பிரதானமான கடமையாகின்றது. அடுத்து இன்றுள்ள சமூகச் சூழலின் பன்முகத் தாக்கங்களிலிருந்தும் பெண்கள் அறிவு ரீதியாகவும் நடைமுறை வாயிலாகவும் விடுபட வேண்டிய தேவையும் அவசியமும் காணப்படுகின்றது.
குடும்ப அமைப்பில் வேலை பிரிவினையுடன் பெண் அடிமைப்படுத்தப்பட்டால். உலகில் வர்க்க சமுதாயத்தில் பெண்ணே முதல் முதலில் அடிமையாக்கப்பட்டால் என ஏங்கெல்ஸ் கூறுயுள்ளார். தனி சொத்துடமை தொடர்ந்து கொண்டு செல்வதற்காக மனைவியையும் தனிச் சொத்தாக்கி அவளுக்கு பிறக்கும் குழந்தைக்கே தன் சொத்துரிமை என குடும்பத் தலைவன் வகுத்தான். பெண்ணுக்கு மட்டுமே கற்பொழுக்கம் திணிக்கப்பட்டது.அரசும் குடும்ப தலைவனுக்கே சட்ட உரிமை வழங்குகிறது.
தனி சொத்துரிமை உடன் ஏற்பட்ட குடும்ப அமைப்பால் தன் குடும்ப பாதுகாப்பு குடும்ப நலன் மேலும் சொத்து பணம் சேர்த்தல் ஆகிய சுயநலன்கள் குடும்பங்களை ஆக்கிரமித்துக் கொண்டன. இவை சமூக நீதியாகவும் கொள்ளப்படுகின்றன.
குடும்ப அமைப்பு ஏற்படுவதற்கு முன் பிரதான கணக் குழு வாழ்வில் இருந்த பொதுநலன் நோக்கு குடும்பம் தோன்றிய பின்னர் குறுக நேர்ந்தது. குடும்ப நலனுக்காகவே உழைப்பு வாழ்வு என்பது நீதியானது
உற்பத்தி உறவை ஒட்டியே குடும்ப அமைப்பும் ஏற்படுகிறது. ஒரு காலகட்டத்தில் கூட்டுக் குடும்ப அமைப்பு உற்பத்தியை உயர்த்த பல வகையில் பயன்பட்டதாக கொள்ளப்பட்டது.
கூட்டு உழைப்பு கூட்டு நுகர்வு கூட்டாக ஒரே சமையல் துவையல் வீட்டு பேணுதல்உறவினர் விருந்தினர் கவனித்தல் ஆகியவற்றிலும் சிக்கனமும் வேலைபளு குறைந்தும் இருக்கும்.குழந்தை வளர்த்தல் நோயாளர்களை கவனித்தல் முதியோரைப் பேணுதல் கூட்டு குடும்பத்தில் அனைவரும் உதவுவர்.
ஆயினும் முதலாளித்து உற்பத்தி முறை தோன்றியதும் கிராமங்களில் இருந்து நகரத்தை நோக்கியா பயணம் அவர்களுடைய வேலைவாய்ப்பு கல்வி கற்க கூட்டுக் குடும்பத்தை விட்டு வெளியேற நேரிடுகிறது. இதுவும் தவிர்க்க முடியாத சமூக வளர்ச்சி போக்காகும்.
குடும்ப அமைப்பு முறை பற்றி புரிந்து கொள்வோம்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது மட்டுமின்றி தந்தையின் காலில் விழுந்து வணங்குவது ஆசிர்வாதம் பெறுவது குடும்பத் தலைவன் இறந்த போதும் ஆண்டுக்கு ஒருமுறை உருவப்படத்தை வழிபடுவது குடும்ப அமைப்பின் புனித தலைமையை காப்பதாகும்.
மார்க்சின் ஆய்வு முறையானது சமூக அமைப்பை இறுதியாக தீர்மானிப்பது அதன் அடித்தளமாகிய பொருளாதாரம் ;அதாவது சமுதாயத்தின் உற்பத்தி சக்திகளும் உற்பத்தி உறவுகளுமே ஆகும். இவையையே சமுதாயத்தின் அடித்தளம் என்போம்.
இந்த அடித்தளம் மேல் கட்டுமானமான அரசியல் சட்டம் கலை இலக்கிய மதம் ஆகியவை ஒன்றின் மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மதம் என்ற கருத்தியல் குடும்பத்தோடு ஒட்டி தொடர்கிறது. குடும்பத் தலைவன் மதமே குழந்தைகளின் மதமாகிறது. சிறுவயதில் இருந்தே மத கருத்துகள் கட்டுப்பாட்டுடன் திணிக்கப்படுகிறது மதக் கல்வியும் போதிக்கப்படுகிறது.
தனி சொத்து உடனே உற்பத்தியுடனே குடும்பங்கள் அமைய தொடங்கின. தனி சொத்துடமை பாதுகாத்து குடும்பத்துக்குள்ளே கொண்டு செல்லல் அவருக்கேற்றபடி திருமண வழக்கங்கள்.
அரசு என்பது ஒரு வன்முறை வடிவமாக அமையும் பொழுது அதன் அலகு அல்லது கூறான குடும்பமும் அதேபோன்று அமைவது இயல்பே. குடும்பத் தலைவனுக்கு கீழ் பட்டு மனைவி பிள்ளைகள் அடங்கி நடப்பர். அங்கு ஜனநாயக உரிமை கிடையாது. குடும்பத் தலைவன் அங்குள்ள அனைவரையும் தண்டிக்கு உரிமை பெற்றவனே இவையே சமூக நீதியாக உள்ளது. குடும்பத்தில் நடப்பதை மூடி மறைக்கப்படுகின்றன குடும்பம் ஒரு பரிசுத்தமான அமைப்பாக மதத்தாலும் சமூகத்தாலும் கொள்ளப்படுகின்றன.
இன்று வன்முறை வடிவமான குடும்ப அமைப்பில் மிகவும் பாதிக்கப்படுபவர் பெண்ணே. ஜனநாயக உரிமையோ மனித உரிமை அற்றவளாக குடும்ப சிறையில் அவள் அடைக்கப்படுகிறாள்.
குடும்பம் என்பது புனிதமான அமைப்பு என்ற பொய்மையில் பெண்கள் குடும்பம்பத்துள் அடைக்கப்படுவதை தடுத்துவிட முடியவில்லை.
சமூக வளர்ச்சியில் பெண்கள் கல்வி கற்று ஆங்காங்கே கூலிக்காக உழைக்கச் செல்லும் வாய்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது,இத்தகைய மாற்றங்கள் பெண்களை கிராம சிறையில் இருந்து ஓரளவு இடமாறு செய்து நகரங்கள் தொழிற்சாலைகள் ஒட்டி வாழ செய்ததே யன்றி விடுதலை தேடி தரவில்லை.
இங்கு மட்டுமல்ல முன்னேறிய நாடுகளான ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் இதே நிலைதான். பெண்கள் மீதான வீட்டு சுமையும் அதேபோல் தான் பணிபுரியும் இடத்தில் ஆன வேலை புரியும் சுமையும் இருக்கவே செய்கிறது.
ஒரு பெண் தானாக முன்வந்து ஏன் இச்சிறையை ஏற்றுக் கொள்கிறாள்;குடும்பம் என்பது பரிசுத்தம் நிறுவனமாக இன்றைய சமூகம் ஏற்றுக் கொள்கிறது, அங்கு பெண், மனைவி என்ற சமூக அந்தஸ்து பெற முனைகிறாள். தனித்து வாழ முடியாத நிலையில் அதன் மூலம் பாதுகாப்புத் தேட எண்ணுகிறாள். மூன்றாவதாக எதிர்பாலாரின் பாலுறவு இன்பம் பெற திருமண மூலமே சமூக அனுமதி பெறுகிறாள். பிள்ளையைப் பெற்று சமூக அந்தஸ்தை உயர்த்திப் பிள்ளைகள் மூலம் பாதுகாப்புத் தேட முயல்கிறாள்.
இன்று ஏற்பட்டுள்ள பல்வேறு விதமான நிலையில் பெண் நிலை வாதம் குறித்து அச்சத்தில் உள்ள ஆணாதிக்க சமூகம் பெண்ணினும் ஆணாதிக்கத்திற்கு எதிராக எதிராக நின்று விடுமோ குடும்ப அமைப்பை உடைத்து விடுமோ என்று அங்கலாய்க்கும் அவர்கள் இந்த அமைப்புக்கு முறையின் அடித்தளத்தை புரிந்து கொள்ளாமலே உள்ளார்கள் என்பது தான் அவர்களின் சிந்தனை முறையாக உள்ளது.
முன்னேறிய முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகளில் பல்வேறு விதமான வெளிப்படையான பெண்ணியம் சார்ந்த இயக்கங்கள் செயல்பட்டு பல்வேறு விதமான சீர்திருத்தக் கோரிக்கைகளை நிறைவேற்றியது இருந்தும் விஞ்ஞான பூர்வமாக சமூக மாற்றங்களை ஆராயும் பொழுது இவை விடுதலைக்கு பதில் குடும்ப சிறையிலேயே சில செயல் திட்டங்களை கொண்டு வந்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.
புராதான எனக்கு குழு சமுதாய அமைப்புல தொடர்ந்து ஆரம்பகால அடிமை சமூகத்தில் தனி குடும்ப அமைப்பு நிலவு வில்லை தனி சொத்துடமையின் உற்பத்தி முறைக்கு ஏற்ப குடும்ப அமைப்பு ஏற்பட்டது.
குடும்பம் என்பது இரத்த உறவு முறையாக ஒரே கூரையின் கீழ் வாழ்பவரை நாம் குறிக்கிறோம். இங்கு கணவன் மனைவி குழந்தைகள் முதன்மையாவர். பெண்ணுக்கு பாலுறவு அனுமதியும் பாதுகாக்கும் கல்யாணத்துடன் கிட்டுவதாக கொள்ளப்படும். இங்கே பெண்கள் சமத்துவமாற்று சுதந்திரமற்று மனித உரிமைகள் அற்றவர்களாக வாழ்வதை நாம் எல்லோரும் அறிவோம்.
ஆக குடும்பம் ஒரு விஞ்ஞான பூர்வமான அமைப்பல்ல. ஆணுக்குப் பெண் என்ற சமத்துவம் அங்கு இல்லை. இருவருக்கிடையிலே வேலை பிரிவினையும் வெவ்வேறாக உள்ளது. இந்த குடும்ப அமைப்பில் அடிமைப்பட்டு இருக்கும் பெண்களுக்கு இந்த சமூக அமைப்பில் சம உரிமை மனித உரிமை சமத்துவம் கிடைப்பது அரிதாக உள்ளது ஆக அதற்கான சரியான அனுப்பு முறைக்காக போராடுவது அவசியமானதாகும்.
சோவியத்திலும் சென்சீனத்திலும் பெண்களுக்கான சமத்துவம் குடும்ப வீட்டு பணிகளை சமூக மயமாக்கி பெண்களை மதிப்பான உற்பத்தியில் ஈடுபடுத்த வேண்டும் என லெனின் கூறினார். பாட்டாளி வர்க்க குடும்ப அமைப்பு முறையானது எதார்த்த முறையில் கூலி அடிமைகளாக சுரண்டப்படுவதில் இருந்து விடுபட்டு சமத்துவ முறையில் வாழ்வதற்கான ஒரு வாழ்க்கை நெறியை கொணர்ந்தது.
உற்பத்தி உறவின் மாற்றங்களே சமூக உறவிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை மார்க்சிய கோட்பாடாகும்....
தொடரும்