தோழமைகளுடன் ஓர் விமர்சன பூர்வமான விவாதம்-1

முந்தைய மாத முகநூல் விவாதமே.

ஒரு இடதுசாரி புரட்சிகர அமைப்பின் தலைமை தோழர் தனது முகநூல் பகுதியில் "மாமன்னன்" படத்தை பார்த்து விட்டு அடித்தால் திருப்பி அடி என்று குறிப்பிட்டிருந்தார். நான் உடனடியாக செயலாற்றி இவை தவறானவை என்று குறிப்பிட்டேன். அதற்குள் அவர் தன்நிலையிழந்து தேவையற்ற வார்த்தைகளை பிரயோகித்து இறுதியில் அவரின் முகநூல் பகுதியிலிருந்து என்னை விலக்கி மூடி (பிளாக்) விட்டார்.

அவரின் செயல் ஏன் கட்டனத்துகுறியதென்றால் அவர் சாதரண உறுப்பினர் அல்ல அவர் அமைப்பை வழி நடத்துபவர் அவரின் இது போன்ற செயல் மோசமானது அவருக்கானதே இந்த பகுதி.

ஸ்டாலின் மாவோ என்ன கூறியுள்ளனர் சற்று வாசித்து தங்களை சரிபடுத்திக் கொள்ளுங்கள் தோழரே.

போராட்டமும் சூழலும்:

பொதுவாக ஒரு போராட்டம் என்றால் அதில் அதன் நோக்கம் எவ்வளவு முக்கியமானதோ, அதே போல அது நடத்தப்படும் காலமும், நேரமும் முக்கியமான ஒன்று "ஒரு சினிமா கருத்தை அரசியல் முழக்கமாக வைக்கும் அளவிற்க்கு கட்சி உள்ளதா" அப்படியெனும் பொழுது அவர் வைத்த முழக்கமும்  "காலத்தே பயிர் செய் " என்பது போல் இல்லாமல் ஏதோ ஓர் உள்நோக்கங் கொண்டதாக உள்ளது என்று குற்றம்சாட்டுகிறேன்.

ஸ்டாலின் படைப்புகள் தொகுதி  5 பக்கம் 168-187 கொஞ்சம் திருப்பி பாருங்கள் தோழர்களே மிகத் தெளிவாக கட்சி விதி மூலயுத்தி செயல் யுத்தி என்று தொடர்ந்து, போராட்ட வடிவங்கள் அமைப்பு வடிவங்கள் பின் முழக்கங்கள் உத்தரவு இப்படி அடுக்கியிருப்பார் சற்று ஆசான்களை வாசியுங்கள் தங்களை வளர்த்து கொள்வதற்கு மார்க்சியத்தை கைகொள்ளுங்கள் தோழமைகளே.

தினம் நடக்கும் விவாதங்கள் உண்மையில் மார்க்சியத்தை விட மார்க்சியம் அல்லாத போக்கீற்கு போவதற்கு காரணம் என்னே? மார்க்சியத்தை பயிலுவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் உள்ள சிக்கலே.

போராட்ட வடிவங்களும் முழக்கங்களும்:

ஒரு இயக்கத்தின் போராட்ட வழிமுறைகளில் முழக்கங்களின் வடிவங்கள் என்பவை அதி முக்கியமானவை. அந்தப் போராட்டத்தின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதற்கு பெரும் பங்காற்றக் கூடியவை. ஒரு முழக்கத்தின் வடிவங்களைத் தீர்மானிக்க நான்கு வகையான கட்டங்களை மார்ஸிய ஆசான்கள் குறிப்பிடுகிறார்கள். அதற்கு முன் இங்கு ஒரு கட்சி வேண்டும் இதனை செயல்படுத்த.

1 . propaganda slogan (பிரச்சார முழக்கம்(
2 . agitation slogan(கிளர்ச்சி முழக்கம்(
3.action slogan (நடவடிக்கை முழக்கம(
4.directive (ஆணை(

மேலேகண்ட முழக்கத்தின் நான்கு வடிவங்களில் , சூழல் அறிந்து , மக்களின் மனநிலை அறிந்து, கட்சியின் பலம் அறிந்து குறிப்பிட்ட முழக்கத்தின் வடிவத்தைத் தீர்மானிக்க வேண்டும்.

தோழர் ஸ்டாலின் அவர்கள் சொல்வார்.;......

"........ 19 ம் நூற்றாண்டின் 80 களில் 'உழைப்பாளர் விடுதலைக் குழு ' வினரால் முதன் முதலில் முன்வைக்கப்பட்ட முழக்கமான " எதேச்சதிகாரம் ஒழிக" என்பது ஒரு பிரச்சார முழக்கமாகும். அதன் நோக்கம் மிகவும் உறுதியான மற்றும் திடமான போராட்டக் குழுக்களையும், தனிமனிதர்களையும் கட்சியின் பால் வென்றெடுப்பதாகும். ரஷ்ய- ஜப்பானிய போர்காலத்தில் எதேச்சதிகாரத்தின் உறுதியற்ற தன்மை தொழிலாளி வர்க்கத்தின் பரந்த பிரிவுகளுக்கு கிட்டதட்ட தெளிவாகத் தெரிந்த காலத்தில் இந்த முழக்கமானது ஒரு கிளர்ச்சி முழக்கமாயிற்று. ஏனெனில் அது இப்போது பரந்துபட்ட உழைப்பாளி மக்கள் திரளினரை வென்றெடுக்க உருவாக்கப் பட்டது. 1917 பிப்ரவரி புரட்சிக்கு சற்றே முந்தைய காலகட்டத்தில் , மக்கள் திரளினரின் கண்களில் ஜாரிஸம் ஏற்கனவே முற்றிலுமாக மதிப்பிழந்து இருந்தபோது எதேச்சதிகாரம் ஒழிக எனும் முழக்கமானது ஒரு கிளர்ச்சி முழக்கம் என்ற நிலையில் இருந்து ஒரு நடவடிக்கை முழக்கமாக மாற்றப்பட்டது. காரணம் அம்முழக்கமானது அப்போது ஜாரிசத்தின்மீது தாக்குதல் தொடுப்பதற்கு பரந்துபட்ட மக்கள் திரளினரை தூண்டுவதற்காக உருவாக்கப்பட்டது. பிப்ரவரி புரட்சியின்போது இம்முழக்கமானது ஒரு கட்சியின் ஆணையாகியது."

"முழக்கங்களை ஆணைகளுடன் சேர்த்து குழப்புவது அல்லது ஒரு கிளர்ச்சி முழக்கத்தை ஒரு நடவடிக்கை முழக்கத்துடன் இணைத்துக் குழப்புவது என்பது காலம் கனிவதற்கு முன்பு அல்லது காலம் கடந்தபிறகு மேற்கொள்ளப்படுகிற நடவடிக்கைபோல அபாயகரமானது அது சில சம‌யங்களில் அழிவு ஏற்படுத்தும் "

(பக்கம் 178 அதே நூல்)...

விவாதம் தொடரும்...



இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்