ஜாதியையும் ஜாதி தீண்டாமையும் இந்த சமூக கட்டிக் காக்கிறது எதற்கு ஏன்?.

 உண்மையில் இன்று கிராம்புறங்களில் காணும் ஜாதி பிரச்சினையை தட்டையாக அணுகும் எல்லோரும் இயங்கியல் ரீதியாக அணுகிறார்களா என்று தெரியவில்லை!

தொழில் பிரிவின் அடிப்படையில் தொடங்கிய ஜாதியின் துவக்கம்நில உடமைசமூகத்தில்கெட்டிப்பட்டுசுரண்டலும் ஒடுக்குமுறைக்கான கருவியாக ஜாதி உருவெடுத்தது.

ஜாதியம்நிலைத்திருபதற்கான காரணங்களும் தேடுதலும்.
இன்றைய சமூக அமைப்பில் நிலவுடமை சமுக அமைப்பு சம்பந்தமான பெரும்பாலன கூறுகளும் தகர்த்தெறிக்கப்பட்டுள்ளது; பண்ணை அடிமை முறையில்லை, சாதி ரீதியானஉழைப்புபிரிவினை அடிப்படையில் செயல்படதேவைஇல்லை, ஜாதியத்திற்கான தேவை முழுமையான அம்சங்கள் தகர்க்கப்பட்டு விட்டாலும் ஜாதி இச்சமூகத்தில் இருக்கதானே செய்கிறது. அப்படியென்றால் அதனைகட்டிக்காக்கும் இந்த சமூக அமைப்புமுறைதானே, இன்றைய இந்திய சமுதாயத்தில் சாதியும், தீண்டாமையும் நிலவுவதற்குக் காரணம் முந்தைய சமூக (நிலப்பிரபுத்துவத்தின் எல்லா உற்பத்தி உறவுகள் நீடித்திருப்பதற்கு) ஏகாதிபத்தியமும் பெருமுதலாளித்துவமும் ஆதரவு தரும் இந்த அரசமைப்புதானே. முந்தைய உற்பத்தி உறவுகளை ஒழிக்காமையால், சாதிமுறைக்கும், தீண்டாமைக்கும் ஆதாரமாக இருக்கும் பரம்பரை தொழில் பிரிவினை வழகொழிந்து போனாலும் ஒழிக்க முடியவில்லை ஏன்? சாதி மற்றும் தீண்டாமை பரம்பரை தொழில் பிரிவினை, அகமணமுறை (சாதிக்கு உள்ளே மட்டுமே திருமண உறவுகள் கொள்ளுதல்), உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரை சடங்குகள், தீண்டாமை ஆகியவை இந்த சமூக அமைப்பில் ஜாதியத்தை தூக்கி பிடிக்கும் இந்தப்போக்கு ஜாதியத்தை நீடிக்க வைக்கிறது என்றால் நமது மார்க்சிய அறிவில் சற்று தெளிவோம்.

 

இங்கே ஜாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை இந்த சமூகத்தில் சாத்தியமாஅல்லது அதற்கான வழி வகை என்னவென்றும் தெரியாமல் இதற்குள்ளே தீர்வும் தேடுகின்றனர்.

நாம் வாழும் இச்சமூக அமைப்பின் அவலங்களை பேசும் இவர்கள்இந்த முரண்பாடுகள்  அனைத்தும் இந்த சமுதாய அமைப்பிலுள்ள முரண்பாடுகளின் பிரதிபலிப்பேயாகும் என்பதனை சொல்ல மறந்து விடுகின்றனர்.இதனை மார்க்சிய மொழியில் சொல்வதென்றால் வர்க்கப்பகைமைகள் இணக்கம் காண முடியாதவையானதன் விளைவாய்த்தொன்றியதேஅரசு”  என்கிறார் தோழர் லெனின்.

மேலும் அரசு என்பது ஒரு ஒழுங்கு செய்யப்பட்ட வன்முறைக் கருவி என்கிறார் அதாவது ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்க்கான உறுப்பே அரசு என்று விளக்குகிறார் தோழர் லெனின்.

 

இந்த சமூகத்தை கட்டிக் காக்க அமைதி பாதுகாப்பு என்ற பெயரில் இந்த குற்றச்  செயல்களை முன்னிறுத்தி பயமுறுத்துகின்றனர்,   ஆளும் வர்க்கம்சுரண்டலுக்கு  ஏதுவாக    இந்த முறை உள்ளதால் இதில் ஒரு சிறு மாற்றத்தை கூட இந்த அமைப்பு முறை அங்கீகரப்பதில்லை.உண்மையில் இக்குற்றச் செயல்களுக்கு காரணம் இந்த சமூக அமைப்பு முறைதான் சமூகம் வர்க்கமாக பிரிந்துள்ளதில் ஒடுக்கும் வர்க்கத்தின் பிரதிநிதியும் ஒடுக்கப்பட்ட வர்க்கதின் பிரதிநிதியும் ஒன்றே என்று ஜாதியால் பிறப்பால் என்று பேசுபவர் எவ்வகையில் மார்க்சிய புரிதல் உள்ளவர்.என்பதனை தெரியாமலே பேசுகின்றார்கள்   நம்மில் பலர்?

ஆகவே இக்குற்றங்களை எல்லாம் ஒழிப்ப தற்காகவா இச் சமூக அமைப்பில்   போலிஸ்,சட்டங்கள்வக்கீல்கள்நீதிபதிகள்சிறைச்சாலைகள்சிறை அதிகாரிகள்சட்டக்கல்லூரி கள்அதற்க்கான பேராசிரியர்கள்எல்லாம்  உள்ளனஇவர்களின் கட்டுகோப்பை காப்பதுதான் இந்த அமைப்பு முறையின் நாகரிகமாகும்.

ஆனால் இவையாவும் இந்த குற்றங்களை   நிறுத்த எங்கேயும் பயன்படுவதில்லை ஆக ஒடுக்குமுறை அற்ற சமூகத்தில் மட்டுமே   அவை சாத்தியம்.ஆகையால் இது போன்ற  குற்ற செயல்களுக்கு பின்னணி ஆளும் வர்க்கம் ஊட்டி வளர்க்கும் சித்தாந்தமே.

இதற்க்கு முடிவு கட்ட விளையும் ஒவ்வொருவரும் இந்த சமூக அமைப்பை அசைத்து பார்க்க நினைத்தால் நன்றாக இருக்கும்.

ஆணவப்படு கொலையை ஊட்டி வளப்பது  ஆளும் வர்க்கமே.அந்த தனிநபர்களுக்கு     தண்டனை வழங்குவதால் இவை மாறிவிடாது  ஆக இதனைகட்டிக் காக்கும் அமைப்பு   முறையை மாற்றினால் மட்டுமே தீர்வு.

இதனை புரிந்திருந்தால் மேலே செல்வோம்.

பெருவாரியான உழைக்கும் மக்களுக்கு அடிப்படையான கல்வியோ மருத்துவமோ ஏன் வேலை வாய்ப்போ வழங்க வக்கற்ற ஆளும் வர்க்கம் அந்த மக்களை பிற்போக்கு குப்பைகளான மதம் சாதி என்ற மயக்கத்தில் ஆழ்த்தி தங்களின் சுரண்டலை தொடரவே மக்களுக்கு இடையே முரண்பாடுகளை தூண்டி விடசெய்கின்றனர்.

தங்கள் அரசு மக்கள் மீது திணிக்கும் ஒடுக்குமுறையோடு அவர்கள் இந்த சுரண்டல் அமைப்புமுறையை புரிந்து ஒன்றுபட்டு விடகூடாது என்பதுதானே ஆளும் வர்க்கம் மக்களுகிடையில் மதவாத ஜாதிவாத பிற்போக்கு தனங்களை ஊட்டி வளர்பதும் தேவைபடும் பொழுது தூண்டி விடுவதும். நிலவுடமை உற்பத்தியில் வாழமுடியாத பெரும்பாலன மக்கள் உழைத்து வாழ என்ன வழிவகை இந்த அரசு செய்துள்ளதா???

பெருவாரியான உற்பத்தி சக்திகள் கட்டுண்டு கிடக்கின்றனஅவர்கள் பதிலளிக்க முடியாத ஆளும் வர்க்கம்மக்களை பல்வேறு பிரிவாக பிரித்து வைத்து உள் முரண்பாடுகளை தூண்டி அவர்களுக்குள்ளேயே மோத சொல்கிறது.உள்ள சமூகத்தை கட்டி காக்க ஆளும் வர்க்கத்தின் தந்திரங்கள் தானே இவை.

மாற்றி அமைக்க வேண்டியவர்கள் இந்த குறைகளை மட்டும் சொல்லிக் கொண்டிருந்தால் போதுமா அதற்கான தீர்வு இந்த மக்கள் மத்தியில் பேசி செயலாற்ற வேண்டாமா?

மேலும்மூவாயிரமாண்டு காலச் சமூக வரலாற்றை ஒரு பருந்துப் பார்வையில் பார்க்கும் போது சாதியத்தின் செயற்பாடுகள் எல்லா அம்சங்களிலும் மேற்குறித்தவாறே எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருந்தது எனச் சொல்லமுடியாதுசிந்துவெளி காலத்திய சமூகத்தில் சாதியின் தொன்மை வடிவத்திற்கான கூறுகள் இருந்த போதிலும் அதன் இயக்கம் குறித்த விரிவான செய்திகள் இல்லை.

ரிக் வேத சமூகத்தில் நான்கு வருண பாகுபாடு என்பதுகூட முழுமையாகச் செயல்படவில்லைபிறபபின் அடிப்படையில் தொழில் என்பது ரிக் வேத கால நடைமுறையாக இல்லைபின் வேதகாலத்தில் கூட வருணங்களிடை யிலான இயக்கம் முற்றிலுமாய் தடைசெய்யப்பட வில்லை.

தமிழகத்திலோ சங்க இலக்கியங்களுக்கு முந்திய காலகட்டத்தில் (கி.மு. 2 நூற்றாண்டுக்கு முன்சமூக உருவாக்கம் குறித்த விரிவான செய்திகள் இல்லைஇன்றைய வடிவிலான சாதிய உருவாக்கத்தின் தோற்றத்திற்கு ஆதாரமில்லை.

அதே போல சம காலச் சூழலைக் கருத்திற் கொண்டு பார்த்தோமானாலும் கூட சாதிப் பஞ்சாயத்துசாதி விலக்கம்சமபந்தி உணவு முதலியவை இன்று பெருமளவில் நடைமுறையில் இல்லைகிராம அடிப்படையிலான சிறுவீத உற்பத்தியில் மட்டுமே பிறப்பின் அடிப்படையில் தொழில் என்பது உறுதியாகச் செயற்படுகிறதுபரந்த அளவிலும் (macro level)), பெருவீத உற்பத்தியிலும் கோட்பாட்டளவிலேனும் இந்நிலைமை இல்லை

 ஆகசாதியத்தின்மையமானகூறுகளெனநாம்வரையறுத்தலைமுழுமையாகச்செயற்பட்டகாலமென்பது இந்திய வடிவிலான நிலப் பிரபுத்துவக் காலக்கட்டத்தில்மட்டுமேஎனலாம்தமிழகத்தில் பல்லவர் காலந்தொட்டு வெள்ளையர் காலம் வரை இந்தக் கூறுகளை இறுக்க மாகக் காணலாம்.

எனினும் எல்லாக் காலக்கட்டங்களிலும் ஆதிக்க சக்திகள் சமூகத்தை வகைப்படுத்திபெயரிட்டு அதிகாரம் செலுத்தும் நடைமுறைக்குசாதி பயன்பட்டு வந்துள்ளது.

முதலாளியக் காலக்கட்டத்தில் மட்டுமே உபரியை உறிஞ்சுதல் என்பது முற்றிலும் பொருளாதார அடிப்படையில் செயல்படும் எனவும் முதலாளியத்திற்கு முற்பட்ட சமூக உருவாக்கங்களில்,மதம்முதலிய ‘பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்ட’ வற்புறுத்தல்கள் உபரி உறிஞ்சலில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் மார்க்சியம் பகரும்.

இந்திய நிலப்பிரபுத்துவத்தில் சாதியமும் அதற்கு தத்துவார்த்த சடங்குப் பாத்திரப் பின்புலத்தை வகுத்தளித்த (இந்தோ ‡ ஆரியப் பார்ப்பனியஇந்து மதமும் (தமிழகத்தில் இதனை சைவ‡ பார்ப்பனிய இந்துமதம் எனலாம்உபரி உறிஞ்சுதலைச் சாத்தியப்படுத்தியுள்ளன.

ஐரோப்பிய சமூகத்திற்கும் இந்திய சமூகத்திற்கும் உள்ள வேறு சில முக்கிய ஒற்றுமைவேற்றுமைகளும் இங்கு சிந்திக்கத்தக்கன.ஐரோப்பிய நிலப்பிரபுத்துவ சமூகத்திலுங்கூடநிலப்பிரபுகள் தங்களுக் குள்ளேயும்பண்ணையடிமைகள்தங்களுக்குள்ளளேயுந்தான் சமூக உறவுகளைக் கொண்டிருந்தனர். (டு:திருமணம்,விருந்துமுதலியன). ஓரளவு தொழில்களுங்கூடபிறப்பின் அடிப்படையில் இருந்தன எனலாம்ஆனால் இந்த வேறுபாடுகள்நிலப்பிரபுக்கள் (சுரண்டுபவர்கள்), பண்ணையடிமைகள் (சுரண்டப்படுபவர்கள்என்கிற மட்டத்திலேயே பெரும்பாலும் செயல்பட்டது.

இந்தியச் சமூகம் போலசுரண்டப்பட்ட மக்களுக்குள்ளேயேஏராளமான உட்பிரிவு களும் அவர்களுக்குள் இறுக்கமான அகமண உறவும்சடங்கு ரீதியான பாத்திர வேறுபாடுகளும்அங்கெல்லாம்கிடையாதுஅய்ரோப்பிய சமூகத்தில்வர்க்க ரீதியாய் ஒருவகை அகமணமுறைகடைபிடிக்கப் பட்டபோதும்கூடஅவைகோட்பாட்டு உருவாக்கம்செய்யப்படவில்லை.மதசடங்குரீதியானஏற்பவட்டத்திற்குள்அதுகொண்டுவரப்படவில்லைபிறப்புரீதியானசமூகத்தகுதியும் இவ்வாறு மதசடங்குவழியில் கோட்பாட்டு உருவாக்கம் செய்யப்படவில்லை. இங்கிருந்த இந்தோ‡ ஆரியசைவப் ‡ பார்ப்பனிய இந்து மதம்அத்தகையகோட்டுபாட்டுருவாக்கத்தின் செயல் வடிவமாக இருந்தது.

இதன் அடிப்படையில் சமூகஉற்பத்தியும்உபரிஉறிஞ்சலும்நடைமுறைப்படுத்தப் பட்டனஇத்தகைய நடைமுறையின் விளைவான ‘பொதுக் கருத்தியலின் அடியாக அதன் விளிப்பில் சமூக மனிதனின் சுயம் கட்டமைக்கப்பட்டது.

சுரண்டல் வடிவெடுக்கும் போது, ‘அடிமை முறை’ -என்பது கிரேக்க – லத்தின் மாதிரியாக (அதாவது ‘இன்னாரின் அடிமை இன்னார் என  அமையாமல்) ‘பொது அடிமை முறை’ இங்கு ஏற்பட்டதுஇதன் விளைவாகஅடிமைகள் அனைவரும் சமம் என்கிற நிலை போய்அடிமைப்பட்ட சமூகத்திற்குள்ளிருந்த ஏற்றத்தாழ்வுகள் அடிமைகளுக்குள்ளேயான ஏற்றத்தாழ்வு களாக வடிவெடுத்தனஎனவே அய்ரோப்பாவைப் போலன்றிஇங்கு உழைக்கும் வர்க்கத்திற்குள்ளேயே ஏற்றத் தாழ்வுகள் உருவாகின.

பின்னாளில் இந்திய நிலப்பிரபுத்துவ வடிவத்தில் இவை சாதிமுறையாக இறுகினஇப்படி நிகழ்ந்ததற்கான பிரத்தியேக காரணிகளை இங்கேயுள்ள புவியியற்தன்மைகள்தட்பவெப்பச் சூழல்கள்இனக்கலப்புஇரும்பைப் பயன்படுத்துவதில் தேக்கம்இந்திய அரசுருவாக்கத்தின் தனிப்பண்புகள் ஆகியவற்றில் தேட வேண்டும்”  என்கிறது.இங்கே இந்தப் பிரத்தியேகக் காரணிகளைச் சற்று விளக்க முற்படுவோம்.அடிமை முறை வளர்ச்சியுற்ற கிரேக்க சமுதாயத்திற்கும் வருண – சாதி முறை வளர்ச்சியுற்ற இந்தியச் சமூகத்திற்கு மிடையேயான வேறுபாடுகளைக் கீழ்க்கண்டவாறு தொகுக்கலாம்:

().கிரேக்கசமுதாயத்தில்கற்காலம்உலோககாலம்இரும்புக்காலம்விவசாயமயமாக்கல்அரசுருவாக்கம்நகர நாகரிகச் சமுதாய அமைப்பு என்பன அடுத்தடுத்து ஒரே சமுதாயத்தில் ஒரே புவிப்பரப்பில் ஒரே இன மக்கள் நடுவில் தோற்றம் கொண்டனசெம்புகற்காலமான சிந்து வெளிப் பண்பாட்டிற்கும் வருண சாதியமைப்பின் தொட்டிலாகிய கங்கைச் சமவெளிப் பண்பாட்டிற்கும் தொடர்ச்சி கிடையாதுசிந்துவெளிப் பண்பாட்டைத் திராவிட இனத்துடன் பேசப்படுகிற கருத்து வலுவாக வேரூன்றியுள்ள போதும் சிந்து வெளி மக்கள்யார் எனஇதுவரை அய்யத்திற்கிடமின்றி நிறுவப்படவில்லை. சிந்துவெளி எழுத்துக்கள் இன்னும் தெளிவாகபடிக்கப்படவுமில்லைசிந்துவெளிப் பண்பாடு குறித்து வரலாற்றாசிரியர்கள் பொதுவில் கருத்து மாறுபாடினின்றி ஏற்றுக் கொள்ளும் உண்மைகளை இப்படிப் சொல்லலாம்:சிந்துவெளிச் சமூகம் இரும்பின் பயன்பாட்டை அறிந்திராத உலோக காலச் சமூகம்ஏற்றத்தாழ்வும் வர்க்க வேறுபாடும் மிகுந்திருந்த ஒரு வகை நகர நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகம் இதுவிவசாயத்தை இம்மக்கள் அறிந்திருந்தனரெனினும் பிந்திய கங்கை வெளிச் சமூகத்திற்கும் இவர்களுக்கு மிடையே வேறுபாடுகள் நிறையவிரிவான அரசுருவாக்கம் நடைபெறாத இச்சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை நிலைநாட்டுவதில் மதக் கருத்தியலாதிக்கத்தின்பங்குமுக்கியமானதுஇவ்வகையில்பின்னாளையசாதியமைப்பின் தொன்ம மாதிரியை இங்கு அடையாளங் காணமுடியும்சிந்துவெளிப் பண்பாடு எவ்வாறு முடிவுக்கு வந்தது என்பது குறித்தும் ஐயத்துக்கிடமற்ற முறையில் நிறுவப்பட்ட கருத்துகள் ஏதுமில்லை.

ஆரியப்படையயடுப்பு என்கிற கருத்தைக் கூட இன்றுரொமிலாதப்பார் போன்ற வரலாற்றாசிரியர்கள்ஏற்றுக்கொள்வதில்லை.எப்படியோசிந்துவெளிக்குப் பிந்திய வேத காலப் பண்பாடு என்றழைக்கப்படும் கங்கைவெளிப் பண்பாடு முற்றிலும் இதிலிருந்து வேறுபட்ட இரும்பைப் பயன்படுத்தியஉழவு மயமாக்கலின அடிப்படையிலான பண்பாடாக அமைந்தது. செழிப்பானஉழவுகிராமங்களும்அவற்றினடியான நகர மற்றும் பல்வேறு வடிவிலான அரசுருவாக்கங்களும் நிகழ்ந்தன.

தமிழகத்தில் சாதியக் கட்டுமானத்துக்கும்   இறுக்கத்துக்கும் நிலவுடைமையே அடிப்படையாக இருக்கிறது.ஆனால்,நிலவுடைமையின் தோற்றமும் பரிணமிப்பும் உருமாற்றங்களும் வெறும் நம்பிக்கைகளைச் சார்ந்தே விவாதிக்கப்பட்டுவருகின்றனஅவை வரலாற்றுச் சான்றுகளின் வழியாக நிரூபிக்கப்படவில்லைமுதன்முறையாக,கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில் நொபொரு கராஷிமா நடத்திய ஆய்வுகளிலிருந்து,சோழர் காலத்தில் காவிரிப் படுகையில் சமூகவுடைமையாக இருந்த நிலவுடைமை படிப்படியாகத்   தனிநபர் நிலவுடைமையாக மாறியிருக்கிறதுஎன்பது தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறதுமேலும்இந்த மாற்றம் நிகழ்ந்துகொண்டிருந்த  வேளையில்,உழவர்கள் நிலவுடைமையாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துப் போராடிய வரலாறும் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய சிலபத்தாண்டுகளுக்கு முன்னால், தஞ்சாவூர் தமிழகத் தொல்லியல் கழகம், நொபொரு கராஷிமாவின் 11 கட்டுரைகள் அடங்கியதொகுப்பை,‘வரலாற்றுபபோக்கில்தமிழ்ச்சமூகம்’(சோழர்காலம்850&1300), என்ற தலைப்பில் வெளியிட்டிருந்ததுஆய்வாளர்களிடையே மட்டும் வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வந்த அந்த நூலை  தமிழின் பெரும்  வாசகர் பரப்புக்கு முன்னால் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது பாரதி புத்தகாலயம்(இவை சரியான புரிதலுக்கு பயன்படும் என்று நினைக்கிறேன்).

இன்று மணிப்பூர் பற்றி எறிகிறது அங்கு மதமோ ஜாதியோ அல்ல பிரச்சினை அந்த மண்ணை ஆம் மலைபகுதிகளை கைபற்ற இந்திய அரசின் கேவலமான செயலுக்கு அந்த மக்களிகிடையில் மோதல் ஏற்படுத்தி  வேட்டைகாடாக மாற்றியுள்ளனர். இந்த வர்க்க சமூகத்தில் ஆளும் வர்க்கத்தின் தேவையை ஒட்டியே எல்லாம் நடந்தேறுகிறது. அப்படியெனும் பொழுது விவசாயம் தோன்றிய பொழுது ஏற்பட்ட தொழிற்பிரிவினை பின் ஜாதியாக நிலவுடமை சமூகத்தில் ஒடுக்குவதற்கேற்ப கோட்பாடுகள் மக்களுகிடையே பாகுபாடுகள் என்று சுரண்டலை வளப்படுத்தி கொண்டது. ஆனால் இன்று இந்த ஏகாதிபத்திய உலக மயமாக்கல் கால கட்டத்தில் ஜாதி மதம் யாரின் தேவைக்காக கட்டிக்காக்கப் படுகிறது என்று புரிந்துக் கொண்டாலே ஓரளவு நமக்கான தெளிவு பெறமுடியும்.

இவை புரிதலுக்கே தொடரும்... சிபி

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்