மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதம் பயிலுவோம். பகுதி – 6.
ஆன்மீகவாதிகள் சொல்வது சரியா?பொருள்முதல்வாதிகள் சொல்வது சரியா?
1.கேள்வியை எப்படிப் போடுவதுஇப்போது ஆன்மீகவாதிகளின் கருத்துரையும் நமக்குத் தெரிந்துவிட்டது.பொருள்முதல்வாதிகளின் கருத்துரையும் தெரிந்துவிட்டது.ஆகவே இவ்விருவரில் யார் சொல்வது சரி என்று இப்போது கண்டுபிடிக்க முயற்சிக்கப் போகிறோம்.இங்கே மறுபடியும் ஒன்றை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்.அதாவது இவ்விரண்டு கருத்துக்களும் ஒன்றுக்கொன்று நேரெதிரானவை,முரணானவை.மேலும்,இவ்விரண்டில் ஏதாவது ஒருகருத்துரையை,தத்துவத்தை ஆதரித்தால் அதிலிருந்து கிடைக்கும் முடிவுகளினால் மிகமிக முக்கியமான விளைவுகள் ஏற்படும். இந்த விசயத்தை இப்பொழுதே கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
யார் சொல்வது சரி என்று தெரியவேண்டுமானால்,அவ்விருசாரரனின் விவாதங்களையும் மூன்று அம்சங்களாக வடித்துக் கொடுத்திருப்பதை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும். அவை என்னென்ன? ஆன்மீகவாதிகள் சொல்வது பின்வருமாறு;
1. மனதுதான் பொருளைச் படைக்கிறது.
2.சிந்தனைக்கு வெளியே பொருள் என்று ஒன்றும் கிடையாது எனவே பொருள் (உலகம்)என்பது ஒரு மாயை.
3.நமது எண்ணங்கள்தான் பொருட்களைப் படைக்கிறது.இதற்கு நேர் எதிராகப் பொருள்முதல்வாதிகள் பேசுகின்றனர்.
நம் வேலையைக் கொஞ்சம் சுளுவாக்குவோம்.முதலில் சாதாரண அறிவுக்குப் புலப்படுத்தியதும் அதே சமயத்தில் மிகவும் திகைப்பூட்டுவதுமான விஷயத்தைக் கற்க தொடங்குவோம்.
1. பிரபஞ்சம் என்பது சிந்தனைக்குள்ளேதான் இருக்கிறது என்பது உண்மையா?
2.நம் எண்ணங்கள்தான் பொருட்களைப் படைக்கின்றன என்பது உண்மையா?
இந்த இரண்டு வாதங்களையும் பெர்க்லியின் பொருள் கலப்பற்ற “ஆன்மீகவாத” தத்துவம் ஆதரிக்கிறது.எல்லாத்தெய்வத் தத்துவங்களும் என்ன முடிவுகளுக்கு வருகின்றனவோ அதேமுடிவுகளுக்கு இந்த வாதங்களும் கொண்டுபோய் விடுகின்றன. அதாவது மூன்றாவதுகேள்விக்கு வந்து சேருகிறோம்.
3.மனதுதான் பொருளைப் படைக்கிறது என்பது உண்மையாஇவையெல்லாம் அதி முக்கியமான கேள்விகள்.ஏனெனில் தத்துவ மெய்ஞானத்தின் மூலப்பிரச்சனையோடு அவை சம்பந்தப்பட்டுள்ளன. ஆகவே அவற்றைப் பற்றி விவாதிப்பதன் மூலமாகத்தான் யார் சொல்வது சரி என்று கண்டுபிடிக்கப் போகிறோம் மேலும் பொருள்முதல்வாதிகளுக்கு இந்த மூன்று சுவைமிகுந்த கேள்விகள்; எந்த அர்த்தத்தில் என்றுகேட்டால்,அவற்றிற்கு அவர்கள் தரும் விடைகள் எல்லாம் பொருள்முதல்வாத மெய்ஞானங்களுக்கும் பொதுவானவையாக உள்ளன.
2. நம் சிந்தனையில் மட்டுமே பிரபஞ்சம் இருக்கிறது என்பது உண்மையா?
இந்தக் கேள்வியை ஆய்ந்தறிவதற்கு முன்பாக,நாம் உபயோகிக்க வேண்டிவரும் இரண்டு தத்துவ மெய்ஞானத் தொடர் மொழிகளை விளக்கித் தீரவேண்டும்.அவற்றை நாம் அடிக்கடி நமது பயிற்சியினூடே சந்திக்க வேண்டிவரும் அவையென்ன?
அகநிலை யதார்த்தம்:யதார்த்தம் என்பது நமது சிந்தனைக்குள்ளே மட்டும்தான் இருக்கிறதுஎன்று சொல்வதைக் குறிக்கிறது.
புறநிலை யதார்த்தம்:சிந்தனைக்கு வெளியேதான் யதார்த்தம் என்பது இருக்கிறது.என்று சொல்வதைக் குறிக்கிறது.
பிரபஞ்சம் என்பது ஒரு அகநிலை யதார்த்தமே.புறநிலை யதார்த்தம் அல்ல என்று ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர்.பிரபஞ்சம் என்பது புறநிலை யதார்த்தம் என்றுபொருள்முதல்வாதிகள் கூறுகின்றனர்.
பிரபஞ்சமும் பொருட்களும் நம் சிந்தனைக்குள்ளேதான் இருக்கின்றன என்று பெருக்லி நிருபித்துக்காட்ட விரும்புகிறார். அதற்காகப் பொருட்களை அவற்றின் குணாம்சங்களாக(அதாவது நிறம், மணம், பருமண், திரட்சி முதலியவை) அவர் பிரித்துச் சித்தரிக்கிறார். யார் யார் எப்படி எப்படி இந்த குணாம்சங்கள் அந்தப் பொருட்களிடையே இல்லை.
அவையெல்லாம் நம் ஒவ்வொருவருடைய மனதில்தான் இருக்கின்றன என்று எடுத்துக்காட்டுகிறார்.பிறகு அதிலிருந்து ஒரு முடிவுக்கு வருகிறார்.அதாவது பொருள் என்பது குணாம்சங்களின் தொகையே; அவை அகநிலையில்தான் இருக்கின்றன. புறநிலையில் இல்லை. எனவே பொருள் என்று ஒன்றில்லை; என்கிறார். உதாரணத்துக்காக மீண்டும் சூரியனையே எடுத்துக்கொண்டு பார்ப்போம் சிவப்பு வட்டத்தகடாகத் தெரியும் அது ஒரு புறநிலை யதார்த்தம் என்றே நம்புகிறீர்களா என்று பெர்க்லி கேட்கிறார் அப்படி கேட்டுவிட்டு குணாம்சங்களைப் பற்றி சர்ச்சை செய்யும் தமது தர்க்க முறைப்படி, சூரியன் சிவப்பாகவும் இல்லை, வட்டத் தகடாகவும் இல்லை என்று நிரூபித்துக் காட்டுகிறார். ஆகவே சூரியன் என்பது புறநிலை யதார்த்தம் அல்ல; ஏனெனில் அது
தன்னாலே புறநிலையில் இருக்கவில்லை. அது நம் மனதுக்குள்ளேதான் இருக்கிறது. எனவேஅது ஒரு அகநிலை யதார்த்தமே யொழிய வேறொன்றும் இல்லை என்கிறார்.
என்னதான் இருந்தாலும்,சூரியன் இருக்கத்தான் செய்கிறது என்று பொருள்முதல்வாதிகள் கூறுகிறார்கள். அந்தச் சிவப்பு வட்டத் தகடாகப் பார்க்கிறோமே என்பதனால் அப்படிச் சொல்லவில்லை. சிவப்பு வட்டத்தகடு என்று சொல்வது வெளுத்ததெல்லாம் பால் என்று நினைப்பது போல் பிறந்த யதார்த்தமாகும்.யதார்த்தத்தைப் புலன்களின் துணையை மட்டும் கொண்டு கண்டறியும் குழந்தைகளும் ஆதிகால மனிதர்களும் அப்படித்தான் யதார்த்தத்தைக்கண்டார்கள்,காண்கிறார்கள். பொருள்முதல்வாதிகள் அப்படிச் சொல்லவில்லை.விஞ்ஞானத்தை உதவிக்கழைத்துக்கொண்டு சூரியன் உண்டு என்று சொல்கிறார்கள்.புலன்கள் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு விஞ்ஞானம் வகை செய்கிறது.அது அப்படி இருக்கட்டும்.சூரியனை உதாரணமாகக் கொண்ட இந்த விஷயத்தில் கேள்வியை நாம் தெள்ளத் தெளிவாகப் போட வேண்டும். சூரியன் ஒரு வட்டமான தகடு அல்ல என்றுபெர்க்லி சொல்வதை நாம் ஒத்துக்கொள்கிறோம். ஆனால் அவற்றிலிருந்து அவர் ஒரு முடிவுக்கு வருகிறாரே,அந்த முடிவை மட்டும் நாம் ஏற்கவில்லை. சூரியன் ஒரு புறநிலை யதார்த்தம் அல்ல என்கிற அவரது முடிவை நாம் ஏற்கவில்லை.
பொருட்களின் குணாம்சங்களா, இங்கே விவாதத்திலிருக்கிற விஷயம்? அல்லவே அல்ல பொருட்கள் உண்டா இல்லையா என்பதுதான் விவாதத்திலிருக்கும் கேள்வி. நமது புலன்கள் நம்மை ஏமாற்றுகின்றனவா,பொருள்வகைப்பட்ட யதார்த்தத்தைப் புலன்கள் திரித்துக் காட்டுகின்றனவா என்பதல்ல நாம் பேசிக்கொண்டு இருக்கிற விஷயம். அதற்குப் பதிலாக, இந்த யதார்த்தம் நமது புலன்களுக்கு அப்பால், புலன்களுக்கு வெளியே இருக்கின்றதா? இல்லையா என்பதைத்தான் விவாதித்துக் கொண்டு இருக்கிறோம்.
நமது புலன்களுக்கு அப்பால் இந்த யதார்த்தம் இருக்கத்தான் செய்கிறது என்றுபொருள்முதல்வாதிகள் அடித்துச் சொல்கிறார்கள்.அதற்கான வாதங்களையும்சமர்ப்பிக்கின்றனர்.இந்த வாதங்கள்தான் விஞ்ஞானமாக விளங்குகின்றன.ஆன்மீகவாதிகள் தாங்கள் சொல்வதுதான் சரி என்பதை நிரூபித்துக்காட்ட என்ன செய்கிறார்கள்வார்த்தைளைப் பிடித்துக் கொண்டு சண்டைக்கு நிற்கிறார்கள்; நீட்டி நீட்டிப்பிரசங்கங்கள் செய்கிறார்கள்; புத்தகம் புத்தகமாக எழுதிக் குவிக்கிறார்கள்.
அவர்கள் சொல்வதே சரி என்று ஒரு நிமிசம் வைத்துக்கொள்வோம். அப்படியானால், நமது சிந்தனைக்குள் மட்டும்தான் பிரபஞ்சம் இருக்கிறது என்றால்,மனிதன் உண்டாவதற்கு முன்னால் பிரபஞ்சம் இருந்ததில்லையாஇருந்ததில்லை என்று சொல்வது பொய் என்று நமக்குத் தெரியும் ஏனென்றால் பூமியில் வெகுகாலம் கழிந்த பிறகுதான் மனிதன் தோன்றினான் என்று விஞ்ஞானம் நிரூபிக்கின்றது.மனிதன் தோன்றுவதற்கு முன்னால் பூமியில் மிருகங்கள் இருந்தனவே அந்த மிருகங்களிடையே சிந்தனை குடிகொண்டு இருக்கக் கூடுமல்லவா? என்று சில ஆன்மீகவாதிகள் நம்மைக் கேட்ப்பார்கள்.ஆனால் அந்த மிருகங்களுக்கும் முன்னால் பூமி இருந்தது.எந்த ஜீவராசியும் வசிக்க இயலாத வகையில்வாழமுடியாத நிலைமையில் பூமி இருந்து வந்தது என்பது நாம் அறிந்த விஷயம்தான்.சரி,ஜீவராசிகள் எதுவுமின்றி சூரிய மண்டலம் தனியே இருந்து வந்தது, மனித வாடையே அப்போது அங்கு இருந்தது கிடையாது. என்று ஏற்பட்டுப் போனால்,சிந்தனையும் மனதும் கடவுளிடம் குடிகொண்டிருந்தனவேஎன்று நம்மிடம் சிலர் சொல்லுவார்கள்.ஆக,கடைசியாக,ஆன்மீகவாதத்தின் உன்னதமான வடிவத்தை இங்கே நேரில் காண்கிறோம்.
கடவுள் அல்லது விஞ்ஞானம் இரண்டில் ஒன்றை நாம் தேர்ந்தெடுத்தாக வேண்டும். கடவுள் இல்லாமல் ஆன்மீகவாதம் பிழைத்திருக்க முடியாது.ஆன்மீகவாதம் இல்லாமல் கடவுளும் பிழைத்திருக்க முடியாது.
ஆன்மீகவாதம்,பொருள்முதல்வாதம் இரண்டைப் பற்றியும் கேள்வியை எப்படிப் போடுகிறார்கள் என்று இப்போது தெரிந்துவிட்டது அல்லவா? யார் சரி? கடவுளா, விஞ்ஞானமா?
கடவுள் என்பது சுத்த சுயம்பிரகாசமான ஆன்மா; அது பொருளைப் படைக்கும் கர்த்தா; என்று ருசு அதாவது நிரூபனம் ஏதும் அளிக்காமலேயே அடித்துப் பேசும் ஒரு பேச்சு அதுதான் கடவுள்.
அனுபவம் நடைமுறை இரண்டையும் கொண்டு உலகம் என்பது ஒரு புறநிலை யதார்த்தம்தான் என்று விஞ்ஞானம் நமக்கு நிரூபித்துக் காட்டும்.நமது சிந்தனைகள் பொருட்களைச் படைக்கின்றனஎன்பது உண்மையா என்ற கேள்விக்கும் விஞ்ஞானம் விடையளிக்க வகைசெய்கிறது.
3. “நமது சிந்தனைகள்தான் பொருட்களைப் படைக்கின்றன” என்று சொல்வது உண்மையா?
பொருட்கள் என்பவை அகநிலையில் உள்ள யதார்த்தங்களா அல்லது புறநிலையில் உள்ள யதார்த்தங்களா? நமது சிந்தனைகள்தான் பொருட்களைப் படைக்கிறது என்பது உண்மையா?
என்று ஒரு ஆன்மீகவாதிகளோடு நீங்கள் நடந்துகொண்டே விவாதித்தவாறு ஒரு தெருவின் குறுக்கே சென்றுகொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.அப்போது ஒரு பெரிய பஸ் எதிரே வந்துவிட்டது என்றும் வைத்துக் கொள்வோம் அந்த நேரத்தில்அந்த ஆன்மீகவாதியும் சரி,நீங்களும் சரி தலை தப்பிக்க வேண்டுமானால் பஸ் ஒன்று வருகிறதே என்று கவனித்தாக வேண்டும்! சிந்தனைதானே பஸ்ஸை படைத்தது சிந்தனைக்கு அப்பால் அது கிடையாதே என்று இருந்துவிட முடியாது! ஆகவே நடைமுறையில் பார்க்கப் போனால் பஸ் என்ற ஒன்று இருக்கிறது என்று அங்கீகரிக்க வேண்டிய நிர்பந்தம் ஆன்மீகவாதிக்கு ஏற்படுகிறது. அது சிந்தனைக்குள்ளே இருக்கும் பஸ்ஸா, அல்லது வெளியுலகிலே இருக்கும்பஸ்ஸா என்று அந்த ஆன்மீகவாதி நடைமுறையில் வித்தியாசம் பாராட்டுவது கிடையாது.
அதுவும் ரெம்ப சரிதான்ஆகவே நடைமுறை வாழ்க்கையில் ஆன்மீகவாதிகள் பொருள்முதல்வாதிகளாகத்தான் இருக்கிறார்கள் என்ற அத்தாட்சியை நடைமுறை நமக்குத் தருகிறது.
இது விஷயமாக நாம் இப்படியே பல உதாரணங்களைத் தரமுடியும். அவர்களின் கணக்குப்படி அகநிலை யதார்தங்களாக உள்ள சில விஷயங்களைப் பெற்று அனுபவிப்பதற்காக இந்தஆன்மீகவாதிகளும் அவர்களுடைய ஆதரவாளர்களும் “புறநிலை வகைப்பட்ட” சிலகீழ்த்தரமான செயல்களையும் புரியத் தயங்குவதில்லை என்பதை அந்த உதாரணங்களிலே நாம் பார்க்கலாம்.
அதனால்தான் உலகம் என்று ஒன்று இல்லை என்று பெர்க்லி அடித்துப் பேசிய மாதிரி இப்பேதெல்லாம் யாரும் பேசக் காணோம். இப்போதெல்லாம் இன்னும் சூட்சுமமான, இன்னும் மறைபொருளான வாதங்களையே கிளப்புகிறார்கள். ஆன்மீகவாதிகள் விவாதிக்கும்பாணிக்கு உதாரணங்கள் வேண்டுமென்றால் லெனின் எழுதிய பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் என்ற நூலில் “உலகிலுள்ள மூலங்களின் கண்டுபிடிப்பு” என்று தலைப்பிடப்பட்ட அத்தியாயத்தைப் படியுங்கள்.
ஆகவே “நடைமுறை என்ற உரைகல்தான்”ஆன்மீகவாதிகளைச் சிதறடிக்க நமக்கு சக்தியளிக்கிறது. “நடைமுறை என்ற உரைகல்” என்பது லெனின் கையாண்ட ஒருசொற்றொடர். தத்துவமும் நடைமுறையும் ஒரே மாதிரி அல்ல, அது வேறு, இது வேறு என்று ஆன்மீகவாதிகள் நிச்சயம் சொல்வார்கள். அது உண்மையல்ல. ஒரு கருத்துப் போக்கு சரியா தப்பா என்பதை நடைமுறை ஒன்றுதான் அனுபவத்தின் மூலமாக நமக்கு நிரூபித்துக் காட்டும்.
ஆகவே, பஸ்ஸைக் குறித்துச் சொன்ன உதாரணம் எதைக் காட்டுகிறது? உலகம் என்பது புறநிலையில் யதார்த்தமாயுள்ளது தான். அது நம் மனது படைத்த ஒரு மாயை அல்ல; என்பதைத்தான் காட்டுகிறது. இனி பாக்கி பார்க்க வேண்டியது ஒன்றுண்டு. அதைக் கவணிப்போம். பெர்க்லியின் “பொருட்கலப்பற்ற ஆன்மீகவாதம்” என்ற தத்துவம் விஞ்ஞானத்துக்கு எதிரே நிற்க முடியாது உரைகல் என விளங்கும் நடைமுறையையும் எதிர்த்து நிற்க முடியாது என்று பார்த்தோம். இனி மதங்கள் தெய்வத் தத்துவங்கள் தருகிற ஆன்மீகவாதமுடிவுகள் எல்லாம் சொல்கிறபடி மனதுதான் பொருளைப் படைக்கின்றதா?
4.மனதுதான் பொருளைப் படைக்கிறது என்பது உண்மையாமனத்தின் உன்னதமான வடிவம் கடவுள் என்று ஆன்மீகவாதிகள் கொள்வதை மேலேபார்த்தோம்.கடவுள் அவர்களுடைய தத்துவத்தின் முடிவான விடை,முடிந்த முடிவு.அதனால்தான் “பொருளா,மனதா”என்ற பிரச்சனையை ஆராய்ந்துகொண்டே போனால் அது கடைசி கடைசியாக”கடவுளா, விஞ்ஞானமா?” என்ற கேள்வியாக வந்து முடிகிறது..
ஆன்மீகவாதி சொல்வது சரியா அல்லது பொருள்முதல்வாதிகள் சொல்வது சரியா என்று கண்டுபிடிக்க முயற்சிக்கும்போது இந்தக் கேள்விதான் அவர்கள் கடைசியில் போடுகிறார்கள்.
கடவுள் என்றும் இருந்து வருகிறார்; அவர் மாறினதே இல்லை; என்றைக்கும் அப்படியே இருக்கிறார்; அவர் ஒரு பரிசுத்தமான ஆத்மா; காலமும் களமும் அவருக்கு இல்லை; பொருட்களின், பிரபஞ்சத்தின், சிருஷ்டி கர்த்தா அவர்; என்றெல்லாம் ஆன்மீகவாதிகள் அடித்துப் பேசுகிறார்கள்.
கடவுள் இருக்கிறார் என்ற கூற்றை நிலைநிறுத்துவதற்காக ஆன்மீகவாதிகளின் வாதங்கள் எதையாவது சமர்பிக்கிறார்களாகிடையாது.பொருட்களின் சிருஷ்டி கர்த்தாவான கடவுளைப் பாதுகாக்கவேண்டி இந்த ஆன்மீகவாதிகள் பலப்பல மாயமார்க்கங்களைக் காட்டுகிறார்கள்.
விஞ்ஞான அறிவுள்ள எந்த மனிதனும் அவற்றை ஏற்க முடியாது. விஞ்ஞானம் முளைவிட்டுக்கொண்டிருந்த காலத்துக்குப் போய்ப் பாருங்கள் ஆழ்ந்த அறியாமையின் காரணத்தினால்தான் ஆதிகால மனிதர்கள் அந்தக் காலத்தில் கடவுள் என்ற எண்ணத்தைத் தம் மனதில் சித்தரித்துக் கொண்டார்கள் என்று பார்ப்பீர்கள்.அந்த ஆதிகால மனிதர்களைப் போலவே இன்றைய 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆன்மீகவாதிகளும் மனிதன் பொறுமையோடு விடாமுயற்சியோடு உழைத்துக் கண்டுபிடித்து வெளிப்படுத்திய வற்றை எல்லாம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள், என்பது தெரியவரும். ஏன் என்று கேட்டால், இந்த விவாதத்தின் முடிவில் கடவுளை விளக்க முடியாது என்கிறார்கள் ஆன்மீகவாதிகள். சாட்சி பிரமாணங்கள் எதுவுமில்லாமல் வெறும் நம்பிக்கையாகத்தான் அவர்களைப் பொறுத்தவரையில் கடவுள் இருக்கிறார்.
என்றென்றும் பொருள் இருந்து வந்திருக்க முடியாது. அது ஏதோ ஒரு கட்டத்தில் பிறந்திருக்க வேண்டும் என்று அவர்கள் கூறிவிட்டு யாரோ ஒருவர் பிரபஞ்சத்தைப் படைத்திருக்க வேண்டியதின் அவசியத்தை அவர்கள் “நிரூபிக்க” விரும்புகிறார்கள் அதே சமயத்தில்கடவுளுக்கு மட்டும் ஆதி அந்தம் என்று எதுவும் இல்லை என்றும் நம்மிடம் சொல்கிறார்கள்.
இந்த விளக்கத்தால் புதிதாய்த் தெளிவு என்ன ஏற்பட முடியும். பொருள்முதல் வாதிகளின் நிலை இதற்கு நேர்மாறானது.தங்களுடைய வாதங்களை நிலைநிறுத்து வதற்கு அவர்கள் விஞ்ஞானத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மனித அறியாமையின் எல்லைகளைத் தள்ளிக்கொண்டே செல்லச் செல்ல அதற்கு ஏற்ற அளவிலே இந்த விஞ்ஞானத்தை மனிதன் வளர்த்து வந்திருக்கிறான்.
அதிருக்கட்டும்,மனதுதான் பொருளைப் படைத்தது என்று நினைக்க விஞ்ஞானம்அனுமதிக்கிறதா?கிடையாது.ஒரு பரிசுத்தமான மனது படைத்தது என்ற கருத்தே புரிந்துகொள்ள முடியாத ஒரு விஷயமாகும். ஏனெனில் நம் அனுபவத்தில் அப்படிப்பட்ட ஒன்றை நாம் பார்த்ததே இல்லை. பொருளை மனது படைப்பது சாத்தியமாக வேண்டுமென்றால் அப்போது (ஆன்மீகவாதிகள் சொல்வது போல்) பொருளுக்கு முன் மனது தன்னந்தனியே இருந்திருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் அது சாத்தியமே அல்ல.
அப்படி இருந்திருக்க முடியாது.பொருள் இல்லாமல் மனது ஒருக்காலும் இருக்க முடியாது என்று விஞ்ஞானம் நமக்கு நிரூபித்துக் காட்டுகிறது.அதற்கு மாறாக மனது எப்போதும் பொருளோடு ஒன்றுபட்டுத்தான் இருக்கிறது.குறிப்பாக மனிதனின் மனது மூளை என்ற உறுப்போடு இணைக்கப்பட்டுள்ளது.அந்த மூளைதான் நமது கருத்துக்களுக்கும் சிந்தனைக்கும் தோற்றுவாய் என்பதை நாம் பார்க்கிறோம்.ஒரு சூனியமான வெளியிலே எண்ணங்கள் உறைகின்றன என்று கருதுவதற்கு விஞ்ஞானம் இடம்தரவில்லை.
எனவே கடவுளின் ஆன்மா இருக்க முடிந்திருக்க வேண்டுமானால் அதற்கு ஒரு மூளை (பொருள்) இருந்திருக்க வேண்டும். ஆகவேதான் பொருளைப் படைத்தது கடவுள் அல்ல, மனிதனைப் படைத்ததும் கடவுள் அல்ல.அதற்குப் பதிலாக மூளை வடிவத்திலுள்ள பொருள்தான் ஆன்மாவை, கடவுளை படைத்தது என்று நாம் சொல்ல முடியும்.
ஒரு கடவுளை நம்புவதற்கு விஞ்ஞானம் இடமளிக்கிறதா?காலத்தால் பாதிக்கப்படாத அங்குஇங்குஎன்றபடி ஒரு களத்தில் உறையாத,மாறுதலுக்கு உட்படாத,இயக்கத்தில் ஈடுபடாத,எந்த ஒரு சக்தியையும் நம்புவதற்கு விஞ்ஞானம் இடமளிக்கிறதாஎன்ற விஷயத்தைப் போகப் போகப் பார்ப்போம்.ஆனால் இனி முதற்கொண்டு தத்துவ மெய்ஞானத்தின் மூலப்பிரச்சனைக்கு பொருள்முதல்வாதிகள் கொடுத்த விடைதான் சரி.அவர்களின் ஆணித்தரமான கூற்றுகளை விஞ்ஞானம் நிரூபிக்கிறது, என்று நாம் முடிவு கட்டமுடியும்.
5.பொருள்முதல்வாதிகள் சொல்வதுதான் சரி;அவர்களின் கூற்றுகளை விஞ்ஞானம்நிரூபிக்கிறது.பொருள்முதல்வாதிகள் பின்வருமாறு ஆணித்தரமாகப் பேசுவது சரிதான்.
1.பெர்க்லியின்ஆன்மீகவாதமும்அவருடைய ”பொருட்கலப்பற்ற தத்துவத்தின்”பின்னே ஒளிந்துகொள்கிற தத்துவ மெய்ஞானிகளும் கூறுவதற்கு எதிராக,இந்தப் பிரபஞ்சமும் பொருட்களும் உண்மையிலேயே நமது சிந்தனைக்கு வெளியேதான் உள்ளன.அவை நிலைபெற்றிருப்பதற்கு நம் சிந்தனையொன்றும் அவற்றிற்குத் தேவை இல்லை என்று ஒரு புறத்தில் பொருள்முதல்வாதிகள் கூறுகிறார்கள்.மறுபுறத்தில்,நம் எண்ணங்கள் பொருட்களைப் படைக்கவில்லை அதற்கு மாறாக பொருட்கள்தான் நமக்கு நமது எண்ணங்களைத் தருகின்றன என்றும் கூறுகின்றனர்.
2. ஆன்மீகவாதிகளின் முடிவுகள் எல்லாம் கடைசி கடைசியாக மனம்தான் பொருளைப்படைத்தது என்று அடித்துப் பேசுவதிலேயே போய் முடிகின்றன.அதாவது கடவுள் இருக்கிறார் என்று அடித்துப் பேசுவதிலும்,தெய்வத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட மதங்களை ஆதரித்து நிற்பதிலும் அவர்களுடைய ஆய்வு ஆராய்ச்சி போய் முடிகிறது.இதை பொருள்முதல்வாதிகள் எதிர்க்கின்றனர்.பொருள்தான் மனதைப் படைக்கிறது என்றும் பொருட்களின் படைப்பை விளக்குவதற்கு “கடவுள் ஒன்று உண்டு என்று கற்பனை”வேண்டியதில்லை.என்றும் பொருள்முதல்வாதிகள் விஞ்ஞானங்களை ஆதாரமாகக் கொண்டு ஆணித்தரமாகச் சொல்கிறார்கள். சொல்வது மட்டுமல்ல, நிரூபிக்கவும் செய்கிறார்கள்.
குறிப்பு:- பிரச்சனைகளை,கேள்விகளை,ஆன்மீகவாதிகள் எப்படிப் போடுகிறார்கள் என்றவிஷயத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.கடவுள் மனிதனைப் படைத்தார் என்றுஅவர்கள் அடித்துப் பேசுகிறார்கள். ஆனால் மனிதன்தான் கடவுளைப் படைத்தான் என்பதைநாம் மேலே பார்த்தோம். இன்னொரு புறத்தில் மனதுதான் பொருளைப் படைத்தது என்று ஆன்மீகவாதிகள் கூறுகிறார்கள்: ஆனால் பொருள்தான் மனதைப் படைக்கிறது என்பதையும்நாம் பார்த்தோம். விஷயத்தை அவர்கள் தலைகீழாகப் புரட்டிப் பேசுகிறார்கள் அல்லவா? அதை நாம் அம்பலப்படுத்த வேண்டும்.
நாம் தெரிந்துகொள்ள வேண்டியது
1.ஆன்மீகவாதிகள் அல்லது கருத்துமுதல் வாதிகள் அவரவர்களின் தத்துவங்களை நியாயப்படுத்துவதற்கு தேவையான ஆதாரங்களை முன்வைக்கிறார்கள்.இந்த ஆதாரங்களை நாம் பரிசீலித்து பொருள்முதல்வாத தத்துவம் உண்மையானதா அல்லது ஆன்மீகவாதம் அல்லது கருத்துமுதல்வாதம் உண்மை யானதா என்பதை கண்டறிய வேண்டும்.
2.இவ்விரண்டு தத்துவத்தில் எந்த தத்துவத்தினை நாம் அடிப்படையாகக் கொண்டு நாம் சந்திக்கும் பிரச்சனைகளை புரிந்துகொண்டு தீர்க்க முயற்சிக்கும் போது அதன் விளைவுகள் ஒன்றுக்கொன்று நேர் எதிராக இருக்கும்.அதாவது ஆன்மீகவாதம் அல்லது கருத்துமுதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்டு நமது பிரச்சனையை ஆராய்ந்தால் நமக்கு கிடைக்கும் விடை ஒன்றாக இருக்கும்,அதற்கு மாறாக பொருள்முதல்வாதத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு பிரச்சனையை ஆராய்ந்தால் நமக்கு கிடைக்கும் விடையானது முன்னதற்கு நேர் எதிரான விடையாக இருக்கும்.
3.ஆன்மீகவாதம் அல்லது கருத்துமுதல்வாத தத்துவ அடிப்படையில் நமக்கு கிடைத்த விடையை நமது நடைமுறைக்கு ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டால் அதன் விளைவு ஒன்றாக இருக்கும். இதற்கு மாறாக பொருள்முதல்வாத தத்துவ அடிப்படையில் நமக்கு கிடைக்கும் விடையைக் கொண்டு நமது நடைமுறையை வகுத்து செயல்பட்டால்,அதன்விளைவு முன்னதற்கு நேர் எதிரான விளைவுதான் கிடைக்கும்.
4.ஆன்மீகவாதிகள் அல்லது கருத்துமுதல் வாதிகளின் தத்துவம் சொல்வது சரியா, அல்லதுபொருள்முதல்வாத தத்துவவாதிகள் சொல்லும் தத்துவம் சரியா என்பது நம்முன் உள்ளபிரச்சனை ஆகும்.
5.யதார்த்தம் என்பது நமது சிந்தனைக்குள் மட்டும்தான் இருக்கிறது என்பதை குறிப்பதுஅகநிலை யதார்த்தமாகும்.யதார்த்தம் என்பது நமது சிந்தனைக்கு வெளியே இருக்கிறது என்பதை குறிப்பது புறநிலை யதார்த்தம் ஆகும்.
6. பூமி, சூரியன், சந்திரன் போன்றவைகள் அனைத்தையும் உள்ளடக்கியது பிரபஞ்சம். இந்த பிரபஞ்சமானது நமது மனதுக்குள்தான் இருக்கிறது அதாவது இந்த பிரபஞ்சமானது ஒருஅகநிலை யதார்த்தமே என்று ஆன்மீகவாதிகள் அல்லது கருத்துமுதல் வாதிகள்வாதிடுகிறார்கள். இது உண்மையா? இல்லை என்பது சாதாரணமான மனிதர்களுக்கும்தெரியும்.
7.பிரபஞ்சம் என்பது ஒரு புறநிலை எதார்த்தம் என்று பொருள்முதல்வாதிகள் சொல்கிறார்கள்.அதாவது பூமி,சூரியன்,சந்திரன் போன்ற கேளங்கள் எல்லாம் நமது சிந்தனைக்கும் நமது மனதிற்கு வெளியே உள்ளது என்று பொருள்முதல்வாதிகள் கூறுகிறார்கள்.இது உண்மைதான் என்பது சாதாரண மனிதர்களுக்கும் தெரியும்.
8.ஒரு பொருளைப் பார்த்து அல்லது ஒரு பிரச்சனையைப் பார்த்து வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறான கருத்துக்களைச் சொல்வதால் அந்தப் பொருளானது புறநிலையில் இல்லை என்றும் அது நமது மனதுக்குள்தான் இருக்கிறது என்றும் கருத்துமுதல்வாதிகள் அல்லது ஆன்மீகவாதிகள் வாதாடுகிறார்கள்.அது உண்மையல்ல.உதாரணமாக ஒருவருக்கு காலில் அடிபட்டு கடுமையான வலி ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.அந்த வலியானது நமது மனதுக்குள் மட்டும் இருக்குமானால் நாம் வலியில்லை என்று நினைத்துவிட்டால் வலிஇல்லாமல் போய்விடுமா? இல்லை அல்லவா. ஆகவே அந்த வலியானது நமது சிந்தனைக்கு வெளியேதான் உள்ளது. புற நிலையில் அந்த காயத்துக்கு மருந்தும் அல்லது வலி தெரியாமல் இருக்க ஊசியோ போட்டுக்கொண்டால் மட்டுமே அந்த வலி தீரும்.
9.பொருட்கள் நமது சிந்தனைக்கு அப்பால் புறநிலையில் இருக்கிறதா என்ற கேள்விக்கு பொருள்முதல்வாதிகள் புறநிலையில் பொருள்கள் இருக்கிறது என்று பதில் அளிக்கிறார்கள்.இதுதான் நடைமுறை உண்மையாகும்.இதற்கு மாறாக பொருட்கள் புறநிலையில் இல்லை என்றும் அது நமது மனதுக்குள்தான் இருக்கிறது என்று ஆன்மீகவாதிகள் அல்லது கருத்துமுதல் வாதிகள் வாதிடுகிறார்கள். இது நடைமுறையில் உண்மை இல்லை.
விஞ்ஞானமும் இதனை ஏற்றுக்கொள்ளாது.அப்படியானால் நமக்கு முன்னால் ஒரு சேர்இருக்கிறது என்று நினைத்தால் மட்டுமே அங்கே சேர்இருக்கிறதாஅங்கே ஒரு சேர் இல்லை என்றுநினைத்தால் அங்கே சேர் இல்லாமல் போய்விடுமாநடைமுறையில் நாம் நினைத்தாலும் சரி,நினைக்கா விட்டாலும் சரி அங்கே சேர் இருந்து கொண்டுதான் இருக்கும்.ஆகவே ஆன்மீகவாதிகள் அல்லது கருத்துமுதல் வாதிகள் சொல்வது உண்மையில்லை என்பதை நாம்நமது நடைமுறையிலிருந்தே புரிந்துகொள்ளலாம்.
10.நமது சிந்தனைக்குள் மட்டுமே பிரபஞ்சம் இருக்கிறது என்று ஆன்மீகவாதிகள் அல்லது கருத்துமுதல்வாதிகள் சொல்கிறார் கள்.அப்படியானால் சிந்திக்கக்கூடிய ஆற்றல் உள்ளஜீவராசிகள் இருந்தால் மட்டுமே அவர்களின் சிந்தனைக்குள் இந்த பிரபஞ்சம் இருக்க முடியும்.
ஆனால் எந்த ஜீவராசிகளும் தோன்றுவதற்கு முன்பே இந்த பூமி, சூரியன் நட்சத்திரம் போன்ற பிரபஞ்சம் இருந்ததாக விஞ்ஞானம் நிருபித்திருக்கிறது.அதன் மூலம் இந்த பிரபஞ்சமானது நமது சிந்தனைக்குள் இல்லை,அது புறநிலையில் தான் உள்ளது என்பதை விஞ்ஞானம் நிருபித்துள்ளது.இதன் மூலம் ஆன்மீகவாதம் அல்லது கருத்துமுதல் வாதமானது விஞ்ஞானத்துக்கு எதிராக உள்ளது.
11.கடவுளை நம்பினால் நாம் விஞ்ஞானத்தை மறுக்க வேண்டும்.விஞ்ஞானத்தை நம்பினால் நாம் கடவுளை மறுக்க வேண்டும்.எனினும் கடவுளை நம்புபவர்கள் அவர்களது நடைமுறை வாழ்க்கைக்கு விஞ்ஞானத்தையே நம்புகிறார்கள் விஞ்ஞானத்தையே பயன்படுத்துகிறார்கள் என்பதை நாம் காணலாம்.
12.நமது சிந்தனைதான் பொருட்களைப் படைக்கின்றது என்று ஆன்மீகவாதிகள் அல்லது கருத்துமுதல்வாதிகள் வாதிடு கிறார்கள்.ஒருவர் ரோட்டில் போய்க் கொண்டிருக்கும் போது ஒரு பஸ் வந்து மோத வரும்போது அவர் அந்த பஸ்சிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள முயற்சிப்பாரா அல்லதுஅந்த பஸ் நமது சிந்தனைக்குள்ளேதானே இருக்கிறது அந்த பஸ் அங்கில்லை என்று நினைத்துவிட்டால் அந்த பஸ் அங்கு இல்லாமல் போய்விடும் என்று கருதி பேசாமல் இருந்துவிடுவாரா.தன்னை பாதுகாக்கத்தானே முயற்சி செய்வார்.இந்த நடைமுறையிலிருந்து அந்த பஸ் அவரது சிந்தனைக்குள் இல்லை மாறாகபொருள்முதல்வாதிகள் சொல்வது போல புறநிலையில்தானே உள்ளது.ஆகவே ஆன்மீகவாதிகள் சொல்வது உண்மையல்ல என்பதையும் பொருள்முதல் வாதிகள் சொல்வதே உண்மை என்பதை நடைமுறை அனுபவமும் விஞ்ஞானமும் நமக்கு உணர்த்துகிறது.
13.எது உண்மை என்பதை நாம் தெரிந்துகொள்வதற்கு நாம் நடைமுறை யைச் சார்ந்து இருக்க வேண்டும். நடைமுறையில் நிருபிக்கப்படுவது எதுவோ அதுதான் உண்மையாகும்.
14.தத்துவத்தையும் நடைமுறையைம் நாம் தொடர்புபடுத்தக் கூடாது என்று கருத்துமுதல்வாதிகள்சொல்கிறார்கள்.அது தவறானதாகும்.ஏனெனில் ஒரு கருத்து சரியா அல்லது தவறா என்பதை நடைமுறையின் மூலம் நமது அனுபவமே நமக்கு நிருபித்துக்காட்டும்.
15. கடவுள் என்றும் இருந்துவருகிறார். அவருக்கு ஆதியும் இல்லை, அந்தமும் இல்லை. அவர் ஒரு பரிசுத்தமானவர்,பிரபஞ்ஞச்தையும் உலகத்தையும் கடவுள் தான் படைத்தார் என்று ஆன்மீகவாதிகள் அடித்துச் சொல்கிறார்கள்.ஆனால் இவற்றையெல்லாம் நடைமுறையிலோ விஞ்ஞான முறையிலோ நிருபிக்க மாட்டார்கள்.
16.ஆதிகாலத்திலமனிதர்கள் அறியாமையில் இருந்தபோது அவர்களுக்குப் பயத்தின் காரணமாக கடவுள் நம்பிக்கை ஏற்பட்டது. அது அவர்களின் நம்பிக்கை மட்டுமே. நடைமுறை ஆதாரத்திலிருந்து கடவுள் நம்பிக்கை அவர்களுக்கு வரவில்லை.
17.மனித சமூகம் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு கண்டுபிடித் தவைகளை எல்லாம் அந்தக்கால ஆன்மீகவாதிகள் புறக்கணித்தார்கள்.அந்த விஞ்ஞானிகளைக் கொடுமைப் படுத்தினார்கள்.
18. இன்றைய காலத்திலும் ஆன்மீகவாதிகள் விஞ்ஞானத்தைப் புறக்கணிக்கிறார்கள். விஞ்ஞானமானது மனிதர்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்காது என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.
19.கடவுள் நேரில் வரமாட்டார் என்றும் ஏதாவது ஒரு மனிதரின் மூலமே நமக்கு உதவி செய்வார் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள்.
20.கடவுளைப் பார்க்க முடியாது என்றும் கடவுளை விளக்க முடியாது என்றும் ஆன்மீகவாதிகள் கூறுகிறார்கள்.இதற்கு நேர் எதிராக பொருள்முதல்வாதிகள் நடைமுறையில் புறநிலை எதார்த்தத்தில் விஞ்ஞானப்பூர்வமாக நிருபிக்கப்படுவதை மட்டுமே உண்மை என்று நம்புகிறார்கள்.
21.பொருளை மனதுதான் படைக்கிறது என்று சொல்லும் ஆன்மீகவாதிகளின் கூற்று உண்மையாக இருக்க வேண்டுமானால் பொருளுக்கு முன்பே மனம் தன்னந்தனியாக இருக்க வேண்டும். ஆனால் ஒரு பூத உடல் இல்லாமல் மனம் என்பது தனித்து இருக்கவே முடியாது என்பதுதான் விஞ்ஞானமாகும். ஆகவே ஆன்மீகவாதிகள் சொல்வது உண்மையல்ல.
22.மனிதன்தான் தனது மூளையின் துணைகொண்டு சிந்தித்து கருத்துக்களை உருவாக்குகிறான். அத்தகைய மனிதன் மற்றும் மூளை இல்லாமல் சிந்தனையோ கருத்துக்களோ உருவாகவே முடியாது என்று விஞ்ஞானம் குறிப்பிடுகிறது.ஆகவேஆன்மீகவாதிகள் கூறும் மனம்தான் பொருளைப் படைக்கிறது என்ற கருத்து உண்மையில்லை.
23.கடவுள் என்ற பரமாத்மாதான் மனிதனை படைத்தது என்று ஆன்மீகவாதிகள் வாதாடுகிறார்கள். ஆனால் உண்மையில் கடவுள் என்ற கருத்தையும், கடவுள் சிலைகளையும், கோவில்களையும் மனிதர்கள்தான் படைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது நடைமுறை எதார்த்தமாக உள்ளது.
24.காலத்தால் பாதிக்கப்படாத மாற்ற மடையாத பொருள் உலகில் உண்டா? இல்லை காலத்தால் மாறுதலுக்கு உட்பட்டு இயங்கிக்கொண்டு இருக்கின்ற பொருள்களைத்தான்நாம் புறநிலையில் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.இந்த உண்மையைத்தான் நமக்கு விஞ்ஞானம் போதிக்கிறது.ஆனால் கடவுள் இருக்கிறார் என்பதை ஆன்மீகவாதிகள் நடைமுறையில்காட்டுவதில்லை.அந்தக் கடவுளும் பிற பொருள்களைப் போல் மாறுதலே இல்லாமல் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதாக கற்பனை செய்து நம்மை நம்பச் செய்கிறார்கள். 25. இறுதியாக கருத்து முந்தியதா பொருள் முந்தியதா என்ற விவாதம் கடவுளா? விஞ்ஞானமா? என்ற கேள்வியாக முடிவுறுகிறது.கருத்துமுதல் வாதிகள் அனைவரும் இறுதியாக ஆன்மீகவாதிகளாகவும் பொருள்முதல் வாதிகள் சமூக விஞ்ஞானிகளாகவும் மாறி ஒருவருக் கொருவர் சண்டையிட வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது. தேன்மொழி