ஜாதியம் தேடி தொடர் கட்டுரை…

 ஜாதியம் தொடர்ஆரியர்கள் வருகை

இலக்கு 24 ல் நான் எழுதிய கட்டுரையை புரிந்துக் கொள்வதை விட பிராமணர்களை நான் புரிந்துக் கொள்ளவில்லையாம் அதற்கு மறுப்பு தெரிவைப்பதோடு எனது நிலைப்பட்டை முன் வைப்பதை விட முதற்கண் முந்தய கட்டுரையின் சுருக்கம் பார்ப்போம் பின் இந்த பகுதிக்கு செல்வோம் தோழமைகளே.

அறிமுகம்:-சாதியம் என்பது மக்கள் தோன்றிய காலம் தொட்டே இருந்த ஒன்று அல்ல. 

இவை தனி உடமை தேவையை ஒட்டி சொத்து சேர்க்கும் ஒரு கூட்டம் தோன்றிய பொழுது அடுதவர்களின் உழைப்பை சுரண்ட தேவையான பல வகை சுரண்டல் முறை உலகெங்கும் காண முடியும்.அதில் இந்திய துணை கண்டத்தில் அந்த சுரண்டல் முறையின் ஒரு வடிவம் சாதியாக உருதிரண்டு நிலவுடைமை சமூகத்தில் அவை உருபெற்றது.

அதாவது உலகில் உள்ள மற்றச் சமூக அமைப்பு போலவே இந்தியச் சமுக அமைப்பும் வர்க்க அமைப்பே அதில் சில தனிச் சிறப்புகள் உண்டு (வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில்). இந்தியச் சமூகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதி நிலவி வந்தாலும் அதன் செயல்பாடும் வடிவமும் எல்லா காலங்களிலும், ஒரே மாதிரியாய் இருந்ததில்லை.

நிலபிரப்புத்துவ அமைப்பு முறையில் தொழிற் பிரிவினை அடிப்படையில் சாதியம் உறுதியாக செயல்பட்டது. இன்றோ நடைமுறையில் அவை இருந்தாலும் கோட்பாட்டு அளவில் மறுக்கப் பட்டுள்ளது (சட்ட ரீதியா).

இதனை எதிர்த்து கீழ்காணும்  கோட்பாட்டை மட்டுமே ஏற்கும் அந்த அறிவாளிகள் கூறுகின்றனர், ஆரியர்கள் இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்த போது தொல் திராவிடர்களை (இங்கிருந்த ஆதிகுடிகளை) அடிமைப்படுத்தி நிறுவிய அமைப்பே சாதி அமைப்பு என்கிறது இனக் கோட்பாடு. பார்ப்பனர்களின் சூழ்சியால் தான் ஜாதி வருணம் உருவாயிற்று அவர்கள்தான் இதற்கு காரணம் என்கின்றது மத கோட்பாடு”.

ஆரியர்கள்தான் எல்லாவற்றிக்கும் காரணம் என்று கூறி சமூக வளர்ச்சி விதியை வெறும் மதமாக இனவாதமாக குறுகிக் கொள்வதா? கூறுங்கள் தோழர்களே....

ஜாதியம் பற்றி தேடுதலில் ஆரியர்கள் அதாவது பார்ப்பனர்கள் இவர்களைப் பற்றி பேசாமல் ஜாதியை பற்றி பேசுவது அபத்தம் ஏற்க முடியாது என்று பலரும் கூறுகின்றனர். ஆக ஜாதியைப் பற்றி தேடும் முன் ஆரியர்கள் யார் அவர்களுடைய வரலாற்று பின்னணி ஒரு தெளிவடைவோமே பிறகு செல்வோம் ஜாதியை பற்றி தேர்தலில் .

சரி ஆரியர்கள் யார்?

வரலாற்று ஆசிரியர்கள் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை சொல்லி இருந்தாலும் ஆரியர்கள் என்பவர்கள் கி.மு 1500வாக்கில் கைபர் போலன் கணவாய் வழியாக மேச்சல் குடிகளான சிற்சில குழுக்கள் பல சமயங்களில் அந்தப் பகுதிகளில் குடியேறியது.

கிமு2000ஆண்டுகளில் ரஷ்யாவில் அரான் கடற்கரை பிரதேசங்களில்  இருந்து ஒரு மேச்சல் குழுவானது தெற்கு நோக்கியும் மேற்கு நோக்கியும் செல்லலாயினர். அதில் ஒரு பிரிவினரே இந்திய தீபகற்பத்தில் தங்களின் கால்நடைகளை மேய்ப்பதற்காக வந்தனர். ஆரம்பத்தில் பல பகுதியில் அலைந்து திரிந்த இவர்கள் இங்குள்ள குழுக்களுடன் அக்கம் பக்கத்தில் சேர்ந்து வாழலானர்.இவர்களை நமது வசதிக்காக ஆரியர்கள் என்று அழைப்போம். (நேரமுள்ளபோதுவிரிவாகவிவாதிப்போம்) இவர்கள் இங்கே வரும் சமயத்தில் மிக உயரிய நகர நாகரிகம் படைத்த மக்கள் வாழ்ந்திருந்தனர் ந்தமக்களை திராவிடர்கள் என்று அழைப்போம் நமது வசதிக்காக.

ஆரியர்கள் ஆடு மாடு மேய்ப்பவர்களாகவும் நிரந்தரமாக எங்கே தங்காமல் தங்கள் மேச்சலுக்காக இடம் மாறி கொண்டே இருந்தனர்.இங்கிருந்து பூர்வ குடிகள் நகரங்களை அமைக்கவும் கோட்டைகளை கட்டவும் பழகி இருந்தனர்.

ஆரியர்கள் வருகைக்கு முன் இங்கிருந்த வழிபாட்டு முறைகள்.

ஆரியர்களின் மூல நூலான ரிக்கு வேதத்தில் இங்கிருந்த வழிகாட்டு முறையையும் அவர்களின் பெயரின் குறிப்பிட்டுள்ளனர்.ஆரியர்களின் வருகைக்கு முன் இங்கு வணக்கத்திற்குரிய கடவுள்களை ஆரியர்களும் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொண்டனர். இந்தப் பகுதியில் இருந்த கடவுள்கள் பலவற்றை ஆரியர்கள் ஏற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள் அதேபோல் அவர்களின் கடவுள்களையும் வரிசையில் பின்னுக்குத் தள்ளப்பட்டன.

ஆரியர்களின் கடவுள்கள் 

வேதங்கள் கூறும் வழிபாட்டு மூர்த்தி களான தேவர்கள் இந்திரன் வருணன் அக்னி மித்திரன் ஆகியோர்தான் .....பகவதி பெருமாள் விஷ்ணு சிவன் கிருஷ்ணன் ராமன் சுப்பிரமணிய கணபதி அனுமான் ன்று இன்று வழங்கப்படுகிற கடவுள் ஆரியர்களின் கடவுளாக  இல்லை ...

இந்தியாவில் குடியேறுகின்ற காலத்தில் ஆரியர்களுடைய புரோகிதர்கள் என ஒரு தனி  தொழில் பிரிவினை கொண்டிருக்க வில்லை.

அன்றும் இன்றும் ஒன்றா

ஆரியர்கள் ஒரே தடவையாக குடியேறவில்லை   ஒன்றன்பின் ஒன்றாக பல குழுக்களாக பல காலகட்டங்களில் குடியேறியுள்ளனர்.இவ்வாறு குடியேறியவர்கள் ஒரே கோத்திரத்தையோ ஒரே குழுவையே சார்ந்தவர்களோ ஒரே பகுதியை சார்ந்தவர்களும் அல்ல. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு எடுத்துக் கொள்ளவும்.அமெரிக்காவிற்கு குடியேறும் ஒரு தமிழ் எஞ்சினியரை கணக்கில் எடுத்துக் கொள்ளவும்நாட்டால் இந்தியராகவும் மொழியால் தமிழராகவும் மதத்தால் ஒன்றாகவும் இருப்பதில்லை.இப்படி பல பிரிவுகளில் உள்ளது.அன்று நாடோடிக் குடிகளுக்கு எந்த அடையாளமும் நிரந்தரம் இல்லை என்பதை புரிந்து கொள்வதற்கு இவை 

ஜாதியை அம்பேத்கார் இனவாத சித்தாந்தமாக  கருதவில்லை இனத்தின் (race) தூய்மையே பாதுகாக்கவும் இனங்கள் தம்முள் கடந்து போகாமல் தடுக்கவும் ஜாதியும் பயன்பட்டது என்பதில் அம்பேத்கார் உடன்படவில்லை.இந்த விதத்தில் சாதியத்தை ஆரிய இனத்தோடு திராவிட இனத்தோடு அவர் முற்றாக தொடர்புபடுத்தவில்லை.அது மட்டும் இன்றி தொடர்ச்சியாக ஏற்பட்ட வரலாற்று நிகழ்வுகளில் இனக்குழுகளுக்கு இடையில் கலப்பு தவிர்க்க இயலாமல் ஏற்பட்டதையும் அம்பேத்கர் சரியாக குறிப்பிடுகிறார்.தூய இனம் என்ற கருத்தாக்கத்தை அம்பேத்கர் நிராகரிக்கின்றார்.  இந்த விதத்தில் ஒரே இனத்தை சேர்ந்தவரில் தீண்டத்தகாரும் தீண்டத்தகுந்தோறும் உண்டு. அதாவது தீண்டத்தகாரில் ஆரிய இனமுண்டு திராவிட இனமும் உண்டு. அம்பேத்கர் குறிப்பிட்டதை போல சென்னைப் பிராமணரும் சென்னை பறையரும் இனத்தால் ஒரே கூட்டத்தை சேர்ந்தவர்கள் (ஜாதி ஒழிப்பு பக்கம் 27 ).

இந்தியாவில் குடியேறுகின்ற காலத்தில் ஆரியர்கள் தனியாக தனித்து பிரிவாக வாழவில்லை. (பிராமண மதம் தோற்றம் வளர்ச்சி ஜோசப் இடமருகு).

உழைப்பு பிரிவின் அடிப்படையில் பூசாரிகள் சத்திரியர்கள் வைசியர்கள் சூத்திரர்கள் என்ற நான்கு பிரிவு உள்ளாகின ஆனால் ஆரம்ப காலத்தில் பார்ப்பனர்களின் குழந்தைகள் பார்ப்பனர்களாகவோ சூத்திரர்களின் குழந்தை சூத்திரர்களாகவோ இருக்க வில்லை விருப்பத்தின் பால் ஒவ்வொருவரும் அவருக்கான வேலை தேர்ந்தெடுக்கும் உரிமை இருந்தது. காலப்போக்கில் அந்த நிலை மாறியது பிறப்பின் அடிப்படையில் வர்ணத்தை நிச்சயிக்கும் முறை உருவாகி வந்தது. ஒருவருக்கு மேலே ஒருவர் செல்ல முடியாத நிலை உருவானது அதே சமயம் ஒரு பிரிவை புறக்கணிக்கும் மக்களை கீழே அழுத்தவும் அவர்களுக்கு முடிந்தது. வருணத்திற்குள் ஒவ்வொருவரும் சட்டத்தை மதிக்கும் படி கட்டாயப்படுத்தப்பட்டனர். வர்ண கலப்பு கு அழிவை ஏற்படுத்தும் என்று அவர்களுக்கு உபதேசிக்கப்பட்டது.  போர்களும் புதிய குடியேற்றங்களும் வருணக்கலப்புக்கு காரணமாகியது.

அதேவேளையில்இந்தியாவை அடைந்த ஆரியர்கள் அனைவரும் ஒரே மதத்தினராக இருந்தார் என்று சொல்வது சரியல்ல மதங்கள் எதுவும் அன்று தோன்றி இருக்கவில்லை பல சிறு சிறு கோத்திரங்கள் மட்டுமே அன்று இருந்தன பல கோத்திரங்களும் அவர்கள் கூடிய கடவுளும் ஆச்சாரங்களும் இருந்தன.பழைய காலத்தில் கோத்திர தலைவருக்கு தெய்வீகத்தன்மை அளித்தோ இயற்கைக்கு மனித வடிவம் அளித்தோ அவர்கள் வழிபாடுநடத்தினர்.  ஆரியகோத்திரங்களில் பலவும் இயற்கை பிரதிபலிப்புக்கு மனித வடிவம் கொடுத்தது வழிபடுவையாக இருந்தன.சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் ஆகாயம் பூமி ஆகியவற்றிற்கு கடவுள் வடிவம் கொடுத்து வழிபட்டனர்.காலை மாலை இரவு பகல் இடி மின்னல் முதலியவற்றிற்கும் கடவுள் வடிவம் கொடுத்தனர். மனித கற்பனை அந்த ஆரம்ப காலத்தில் இவ்வாறாக இருந்தது.(நன்றி ஜோசப் இடமருகு பிராமண மதம் தோற்றம் வளர்ச்சி).

ஆதாரம் 

1. கேம்பிரிட் ஹிஸ்டரி  ஆப் இந்தியா Vol I (1992).

2. Menen Aubrey, The New Mystics and the true Indian Tradition ( London. 1974).

3. Thaper Romila "A History of India " vol I .

 உண்மையில் கற்றது கைமண் அளவு கல்லாதவை கடல் அளவு என்று சும்மா சொலியிருக்க மாட்டர்.

நாம் இங்கே விவாதிக் கொண்டிருக்கும் பலரும் வரலாற்று ஆவணங்கள் மற்றும் தொல்லியல் ஆவணங்கள் படித்தவர்கள் எத்தனை பேர் இருப்பர் என்று தெரியவில்லை. நான் சில நாளாக வாசித்த நூல்கள் வாயிலாக ஆரியர்கள் வருகை என்பதும் ஆரியர் பற்றி வேதங்கள் கூறும் எல்லாமே ஆங்கிலேயர்களின் புனைவிற்கு துணை போயின மற்றும் கேட்ட கேள்விகளுக்கு எனது இணையத்தில் பதில் தேடியுள்ளேன். இந்திய வரலாறு பற்றி, ".ஏல் பஸ்யம், ரோமிலா தாப்பர், ஆக்ஸ்போர்யூனிவர்சிட்டி, சோசப் இட மருகு" நூல்களிலிருந்து நல்ல புரிதல் அடைந்துள்ளேன்.ஆர்.எஸ்.சர்மா எழுதிய ஆரியரை தேடி போல ஆரியர்களா அவர்கள் யார் ? என்று சிறு நூல் எழுத தகவல் சேகரித்துள்ளேன்.

சரி சில தேடுதல்கள் 

பஞ்சாப் அரியான,ஜம்மு,ராஜஸ்தான் பகுதிகளில் செய்யப்பட்ட ஆய்வில் ரிக்வேதத்தில் கூறபடுவதுபோல் தேர் சக்கரங்களோ இரும்போ, விவசாயம் செய்யப்பட்டதற்கான அறிகுறியோ காணப்பட்டவில்லை போதுமான அளவில் தாமிரக்கருவிகளோ கிடைக்க வில்லை. இங்கு ஆரியர்கள் குடியேறிய காலம் கிமு 1300,இந்த காலத்துக்கு பின்னால் 300 ஆண்டுகள் கழித்துதான் ரிக்வேதம் காலமாக உள்ளது.

இங்கே காலத்திற்கும் களத்திற்கும் அப்பாற்பட்டு வரலாற்றை பேசுகின்றனர் நமது ஆங்கிலேய எழுத்துகளை பின்பற்றுவோர்.

அன்று ஆரியர்களின் வருகையானது மேய்ச்சல் குடிகளாக அதிக பட்சம் நூறு பேருக்கு மேல் ஒரு இடத்தில் சேர்ந்து வாழ்வது கடினமான காரியம்.அந்த காலப் பகுதியில் பல்வேறு கட்டங்களில் தங்களின் கால்நடைகளின் மேச்சலுக்காக இடம்பெயர்ந்தவர்களே அந்த மேச்சல் குடிகள். அவர்களைதான் ஆரியர்கள் இங்கு வந்து இந்த நாட்டை அடிமை படுத்திவிட்டனர் என்று கூச்சலிடுகின்றனர்.

அவர்கள் இங்கே நுழையும் பொழுது  சிந்து சமவெளி நாகரிகமானது நகர நாகரிகமாகவும் உயர்ந்த சமூக வளர்சியையும் அடைந்து இருந்தது என்பது தொல்பொருள் ஆராய்சி கூறுகிறது. அப்படியெனும் பொழுது, வேளாண் வளர்ச்சியும், நீர்ப்பாசன வசதிகளையும், சுரங்கத் தொழில்களும் மேம்பட்டில்லாமல் எப்படி இந்த வளர்சியை அச்சமூக அமைப்பு கொண்டிருக்க முடியும்?.

இதற்கு பெரும்மனித ஆற்றல் தேவை கூட்டு சமூக வாழ்வும் அவசியமானது அல்லவா? (இந்த பகுதியானது காலமாற்றம் அல்லது இயற்கை பேரிடரால் அழிந்திருக்கும் என்கின்றனர் ஆரியர்களின் போரில் அழியவில்லை என்பதனை கவனம் கொள்ள வேண்டும்).

நைல்நதி நாகரீகமும்,மெசடோமிய, சிந்து சமவெளி நாகரிகங்களும் பெரும் வேலைப் பிரிவினையாகக் கொண்டிருந்தது அல்லது கொண்டிருக்கவேண்டும்.அங்கே அரசு உருவாகியிருந்தது இதனை கருத்தில் கொள்ள வேண்டும் நாம்.

ஆரியர்கள் இங்கிருந்தோரிடம் கலக்கவில்லையா?

மனிதகுல வளர்ச்சியில் திறமையுள்ள குலங்கள் மற்ற குலங்களை அபகரித்து இணைப்பது மூலம் குல சமூகங்களாக மாறுகின்றன. இவையே அடிமை சமுகமாக வும் பரிணமிக்கின்றன. இதற்கான திறமை இல்லாத குலங்கள் காலப்போக்கில் அழிந்து விடும். இல்லையெனில், அக்கம் பக்கமாக உள்ள குலங்கள் இயல்பாக இணைந்து குல சமூகங்களாக  மாறுகின்றன. இவை மேச்சல் குடிகளான ஆரியர்களுக்கும் பொருந்தும்,அவர்கள் இங்கிருந்த மக்களோடு மக்களாகி விட்டனர்.அவர்களின் எண்ணிக்கை இங்கிருந்தவர்களை விட மிகக் குறைவு இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்திய துணைக்கண்டம் பெரும் நிலப்பரப்பையும் பல்வேறு இயற்கை பௌதீக பூகோள காரணங்களால் பல்வேறு பகுதிகளாக பிரிந்து கிடந்தது.அவை ஏன் மொகலாயர்கள் ஆண்ட அத்துனை ஆண்டுகளில் கூட ஒன்று பட்ட இந்திய பகுதி உருவாகவில்லை இதனை பற்றி உங்களின் வரலாற்று அறிவை பயன்படுத்தினால் புரிந்துக் கொள்ள எளிதாகும்.

தென் இந்திய பகுதிகளை திராவிடம், என்றும்.வட இந்திய பகுதிகளை ஆரிய வர்த்தம் என்றும் கருத்துகான நூல் ஆதாரம் தேடுங்கள்.… இக்கருத்து பரவிய காலத்தில் ஆரியர் என்ற இனமோ திராவிடர் என்ற இனமோ இந்திய துணைக்கண்டத்தில் இல்லை.

ஆரியர்களை கிபி 400பின் இந்தியாவில் ஒரு இனமாக நிலை நிறுத்த முயற்சிக்கின்றனர் அவை எல்லாவற்றின் கலப்பில் விளைந்தது என்னும் பொழுது அவற்றை ஒரு இனமாக எப்படி ஏற்பது??? அதேபோல்திராவிடர் என்ற இனம் எப்போதும் கிடையாது திராவிடம் என்ற வார்த்தை வெறும் நிலப்பகுதியை குறிக்கும் அடையாளமாக உள்ளது.

இதனை புரிந்துக் கொள்ள உலகளாவிய நிகழ்வுகளை கணக்கில் கொள்வோம்.

ஜாதி உருவாக்கதிற்கு முன்

சாதி அமைப்பு என்பது நன்கு வரையறுக் கப்பட்ட ஒரு நிறுவனம் அல்ல, இது ஒரே ற்றை வரலாற்று  நிகழ்வில் உருவாகவில்லை ஆனால் வெவ்வேறு சமூக தோற்றங்களைக் கொண்ட வளர்ச்சி போக்கில் ஒரு ஒழுங்கற்ற அமைப்பாகும், அவை அனைத்தும் காலப்போக்கில் கலந்தன.

மனிதர்கள் ஆரம்பத்தில் அனைவரும் சிறிய குழுக்களிலோ அல்லது பழங்குடியினரிடமோ இருந்துள்ளனர், மற்ற குழுக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவில்லை.

குலத்தை - இது ஒரு பொதுவான தோற்றம் மற்றும் வம்சாவளியை நம்பும் சற்றே முதிர்ச்சியடைந்த குழு. இந்தியாவில், இது தோராயமாக கோத்ரம் என்றும்  வம்சாவளி என்றும் நம்புகிறார்கள். இத்தகைய குலங்கள் பெரும்பாலான பண்டைய மனித சமூகங்களில் இருந்தன. குலங்கள் தங்களுக்குள் ஒரு வலுவான உறவையும் பிணைப்பையும் உருவாக்கின.

பழங்குடியினர் - பல்வேறு குலங்கள் ஒன்றிணைந்து ஒரு பழங்குடியினது குழுவை கோத்திரத்தை  நன்கு கட்டமைக்கப் பட்டிருக்கலாம். அவர்கள் தங்கள் சொந்த தலைவர்களைக் கொண்டிருக்கலாம் மற்றும் பொதுவான கலாச்சார நடைமுறைகளை உருவாக் கலாம். நாடுகள் - பழங்குடியினர்  இன்னும் பெரிய குழுக்களை உருவாக்கினர். இதனை புரிந்துக் கொள்ள சமூக வரிசைமுறைகளை ஏறக்குறைய அனைத்து சமூகங்களும் இறுதியில் ஒரு பிரமிடு அமைப்பில் படிநிலைகளை உருவாக்கி உள்ளதை காணலாம்.

ரிக் வேத காலத்தில்  பல்வேறு பழங்குடியினர் இருந்தனர்  100 பழங்குடி குழுக்கள் மேல் ஒன்றிந்து ஒன்றாக வாழும் பொழுது அவர்கள் இடையில் ஏற்பட்ட உறவுமுறையானது எப்படி இருந்தது என்பதனை நாம் அறிந்திருப்பதை சீர் செய்துக் கொள்ள உலகின் சில நாடுகளில் கிடைத்த ஆதாரப்படி, எகிப்திலும், மெசபட்டோமவிலும் ஜப்பானிலும் இது போன்ற படிநிலை அமைப்பு இருந்ததை கீழகாணும் சித்திரங்கள் விளக்குகின்றன.

 

எகிப்தில் 8 நிலைகள் பிரமிட் அமைப்பு இருந்தது. இவை ஆரம்ப அரசின் உருவாக்கதில் செயலாற்றியுள்ளது.

 

ஜப்பானிலும் 8 பிரமிட் அமைப்பு இருந்தது

 

இவை நமது புரிதலுக்காக மட்டுமே. உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள சமூக அமைப்பு போலவேதான் இந்திய சமூக அமைப்பும் அதில் சில சிறப்பு கூறுகள் உள்ளன அவ்வளுவே.

இந்தியாவில் ஆரியர்கள்தான் இந்த வர்ணம் ஜாதியமுறையை உருவாக்கினார்கள் என்பது மனித சமூக வளர்ச்சியை புரிந்துக் கொள்ளாத மதவாத கருத்துமுதல்வாத கண்ணோட்டமேயன்றி வேறில்லை என்பேன். 1854 ல் ஜப்பானில் ஜாதி ஒழிபிற்கு சட்டமியற்றப்படு செயலின்றி இருந்தவை இரண்டாம் உலகப் போருக்கு பின் எப்படி காணாமல் போனது அதை தேடுங்களே சில விடை காண பயனளிக்கும்.

கீழே மெசபட்டோமிய சமூக அமைப்பு.

 

  

 தொடரும்……

இன்னும் தேடுவோம் விவாதிப்போம் தெளிவடைவோம் தோழர்களே.…

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்