செய்திக்கு பின்

 பொய்யாக வரலாற்றை திரிக்காதீர்-மணிபூர் கலவரம். அங்குள்ள பழங்குடி மக்களை பிரிதாளும் சூழச்சி பிஜேபியின் செயலே

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
நான் நேற்று எழுதியுள்ளதன் தொடர்ச்சியாக சில தோழர்களின் கேள்வியும் இன்னொருபுறம் தனது ஜாதியரசியலை முன்னெடுக்கும் தவறான போக்கும். இவர்கள் தாங்கள் பேசுவது மட்டுமே ஆய்வென்று நம் தலையில் கட்டும் ஏமாற்றுதனம் பலகாலமாக பார்த்துக் கொண்டுள்ளோம்.
இன்று மணிபூர் பிரச்சினையை பிஜேபியை தாக்குவதற்காக மெய்த்தி பழங்குடி இன மக்கள் பிராமிண்கள்(பார்பனர்கள்) என்று புதிய கண்டுபிடிப்பை நமது இடதுசாரி புத்தி ஜீவி அறிவிப்பதை ஏற்க்க முடியவில்லை அவருக்கான பதிலே இவை.
--------
அய்யா பழங்குடி செயற்பாட்டாளரே உங்களுக்கு தெரியுமா? இவர்கள் ஜாதியற்றவர்கள் என்று.
ஜாதி அடையாளதிற்குள் அடைத்து வைக்க நினைக்கும் பிற்போக்கு தனம் அல்லவா?

இந்த மாநிலத்தில் பெரும்பாலான குடிமக்கள் மைத்தி (Meitei) இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் (Meiteilon) மணிப்பூரி என்றழைக்கப்படும் தம் பரம்பரை மைத்தி மொழியைப் பேசி வருகின்றனர். இம்மொழி 1992ஆம் ஆண்டில் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது.

மணிபூர் பற்றி முழுமையாக புரிந்துக் கொள்ள இந்த லிங்க் அழுத்தி வாசிக்க



மணிப்பூர் கலவரம் பின்புலம் ( முகநூலில் கோபால் ராஜன் பதிவுஆளும் கட்சியான பாஜக பெரும்பான்மை ஆளும் வர்க்க சமூகமான மெய்தி என்ற இனத்தை பழங்குடியினராக அறிவித்து இட ஒதுக்கீடு அளிப்பதாக உறுதியளித்ததன் பெயரில் கலவரத்திற்கு வழிவகுத்தது. சமூகநீதி இட ஒதுக்கீட்டை ஒழித்து, EWS ஒதுக்கீட்டை கொண்டு வந்த பாஜகவின் பிறப்பு இட ஒதுக்கீட்டை எதிர்த்து தான். விபிசிங் கொண்டு வந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள் பாஜக.
ஒரிசாவில் பாணர்களுக்கு (பழங்குடியினர்) இட ஒதுக்கீடு என கலவரத்தை தூண்டியவர்கள் பாஜக.
பஞ்சாப், இராஜஸ்தான், உபியில் ஜாட்டு களுக்கு இட ஒதுக்கீடு என கலவரம் நடத்தியவர்கள் பாஜக.
மீனா என்ற இனத்தை பழங்குடியினராக அறிவிக்க ராஜஸ்தானில் கலவரம் செய்தவர்கள் பாஜக.
சமீபத்தில் முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து லிங்காயத்துகளுக்கு வழங்குவதாக கர்நாடகாவில் தேர்தல் அரசியலுக்காக கலவரத்தை தூண்ட முயற்சித்தது பாஜக.
இட ஒதுக்கீடு, மதம் ஆகிய உணர்வு சார்ந்த விடயங்களை கலவரத்திற்கான யுத்தியாக பாஜக பிரயோகிப்பது மக்கள் விரோத நடவடிக்கை ஆகும்.
பிளவுவாத மதவாத, சாதியவாத அரசியலை எதிர்ப்பதில் தான் ஆளும்வர்க்க பார்ப்பனிய கார்பரேட் நல அரசியலை முன்வைக்கும் பாஜக போன்ற சக்திகளை தனிமைப்படுத்த முடியும். அதன் வழியே சனநாயகத்தை உயர்த்தி பிடிக்க இயலும்.
இன்று மணிபூர் பிரச்சினை என்னே?
+++++++++++++++++++++++++++++
நமது போராளிகள் என்போர் ஏன் தமிழ் தேச போராளி என்போரும் வடகிழக்கு மாநிலங்களில் இன்று நடப்பதும் பல பத்தாண்டுகளுக்கு முன்னர் அந்த மாநில போராளிகளின் போராட்டத்தையும் அறிந்திருந்தால் இவர்களின் கற்பனை கோட்டை எங்கே அங்கே அவர்களின் போராட்ட களமெங்கே? தேவைப்பட்டால் வாசிக்க வரலாற்று பக்கங்களை...
உண்மையில் போரளிகளையும் போராட்டத்தையும் புரிந்துக் கொள்ள அந்த போராட்டதின் வர்க்க அடிப்படை புரிந்திருக்க கண்டிருக்க வேண்டும்.
இன்று மணிபூர் பற்றி எறிகிறது, அதன் போராட்ட களத்தை நீங்கள் அறிந்திருந்தால் இன்றைய பின்னடைவு பழங்குடிகளுகிடையில் இந்த மோதல் புரிந்துக் கொள்ள முடியும்.
வட கிழக்கு மாகாணங்கள் பூகோள ரீதியிலும் சமூக ரீதியிலும் வேறானவை மற்ற இந்திய பகுதியை விட. இங்கே சாதிகளுக்கிடையே சண்டை மூட்டிக் கொண்டிருக்கும் ஆளும் வர்க்கம் அங்கே பழங்குடி மக்களுகிடையில் பூசலை உண்டாக்கி அவர்களிக்கிடையில் மோத வைத்துள்ளது.
இங்கே தமிழ் தேசியம் பேசுவோர் அல்லது தனித் தமிழ்நாடு பேசுவோர் சற்று இங்கே என்ன நடந்தது என்றாவது புரிந்திருந்தால் சிறப்பு.
ஒன்றுபட்டு போராடிக் கொண்டிருந்த மக்களை இன்று பிரித்து வைத்து மோத வைத்த தந்திரத்தை அறிந்துக் கொள்ளுங்கள் இல்லையேல் கற்பனையில் மிதக்க வேண்டியதுதான்.
இம்பாலை தவிர்த்து மற்ற பகுதி மலை பகுதிகளே. தெமிலேங்க் என்றொரு மாவட்டமுள்ளது அடுத்து மோரேதான் ஆம் பர்மா அங்கு தமிழர்கள் தான்.
மணிபூரில் பெரும்பாலான குடிமக்கள் மைத்தி (Meitei) இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் (Meiteilon) மணிப்பூரி என்றழைக்கப்படும் தம் பரம்பரை மைத்தி மொழியைப் பேசி வருகின்றனர். இம்மொழி 1992ஆம் ஆண்டில் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது.
அதற்கு அடுத்து தடௌஸ்(குக்கி) மற்றும் நாகா பழங்குடி மக்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளனர்.குக்கி மற்றும் நாகா பழங்குடியின மக்களிடையே அடிக்கடி மோதல்கள் நடைபெறுகிறது
சரி தோழர்களே செய்திதாளில் உள்ள செய்திகளே கீழே.... இவை விமர்சன பூர்வமாக புரிந்துக் கொள்ளுங்கள் தோழர்களே ....
செய்திதாள் எவ்வளவு பொய்யாக பேசுகிற்து பாருங்கள்.
மணிப்பூரில் பல்வேறு பழங்குடியின சமூகங்களும், பழங்குடி அல்லாத சமுகங்களும் உள்ளன. இதனிடையே, அம்மாநிலத்தில் மெய்டீஸ் என்ற பழங்குடி அல்லாத சமுகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் என்ற அந்தஸ்த்து வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
மெய்டீஸ் சமுகத்திற்கு பட்டியலின பழங்குடியின சமுகம் என்ற அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமுகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் அம்மாநிலத்தின் மலைப்பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் நேற்று பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணிக்கு எதிராக மாநிலத்தின் சில பகுதிகளில் எதிர்தரப்பும் பேரணி நடத்தியது.
மணிப்பூரில் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. இம்பால், மணிப்பூரில் பல்வேறு பழங்குடியின சமூகங்களும், பழங்குடி அல்லாத சமுகங்களும் உள்ளன. இதனிடையே, அம்மாநிலத்தில் மெய்டீஸ் என்ற பழங்குடி அல்லாத சமுகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் என்ற அந்தஸ்த்து வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மெய்டீஸ் சமுகத்திற்கு பட்டியலின பழங்குடியின சமுகம் என்ற அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமுகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் அம்மாநிலத்தின் மலைப்பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் நேற்று பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணிக்கு எதிராக மாநிலத்தின் சில பகுதிகளில் எதிர்தரப்பும் பேரணி நடத்தியது. அப்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மலைப்பகுதியில் உள்ள மாவட்டமான சவ்ரசந்திரபூரில் இரு தரப்புக்கும் இடையே நேற்று கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறியது. இந்த மோதலின் போது வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டன. தெருக்களில் இருந்த கார்கள், பைக்குகள், கடைகளுக்கும் கலவரக்காரர்கள் தீ வைத்தனர். இந்த வன்முறை மெல்ல அண்டையில் உள்ள மலைப்பகுதி மாவட்டங்களுக்கும் பரவியது. இந்த வன்முறை சம்பவத்தில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பழங்குடியினருக்கும், பழங்குடியினர் அல்லாதோருக்கும் இடையேயான இந்த மோதலால் மணிப்பூரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. சமூகவலைதளங்களில் கலவரம் தொடர்பான காட்சிகளும் பகிரப்பட்டதால் கலவரம் மெல்ல மெல்ல அண்டை மாவட்டங்களுக்கும் பரவி வருகிறது. இதனை தொடர்ந்து வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும், கலவரம் தொடர்பான வீடியோக்கள், போலி வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவுவதை தடுக்க மணிப்பூரில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கலவரத்தை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரு தரப்புக்கு இடையேயான மோதல் கலவரமாக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
All reactions:
கவின்மொழி, துருவன் and 5 others
9 comments
Like
Comment
Share

9 comments

Most relevant

  • கவின்மொழி
    இதில் எந்த போராட்டத்தை ஆதரிக்கிறீர்கள் தோழர்?
    • Like
    • Reply
    • 6h
    • Palani Chinnasamy
      கவின்மொழி இங்கே தமிழ் தேசியம் பேசுவோர் அல்லது தனித் தமிழ்நாடு பேசுவோர் சற்று இங்கே என்ன நடந்தது என்று பேசேழுதினேன் தோழர். இவை மொத்தமே பிஜேபியின் மக்களை பிரிதாளும் சூழ்ச்சி தோழர்
      ஒன்றுபட்டு போராடிக் கொண்டிருந்த மக்களை இன்று பிரித்து வைத்து மோத வைத்த தந்… 
      See more
      • Like
      • Reply
      • 6h
  • Chandra Mohan
    மைத்தி பழங்குடியினர் அல்ல! சமவெளியில் வசிப்பவர்கள்.
    • Like
    • Reply
    • 5h
    • Palani Chinnasamy
      Chandra Mohan எங்க சமவெளி உள்ளது தோழரே மேலும் அங்கு எல்லோரும் பழங்குடி மக்களே தான் நான் கூறவில்லை அரசு தான் கூறுகிறது அதற்கான அரசு ஆதாரங்கள் உள்ளன என்ன செய்ய தோழர்
      • Like
      • Reply
      • 4h
      • Edited
    • Chandra Mohan
      Palani Chinnasamy. பாஜக மோதல்களை உருவாக்கும் சூழ்ச்சி செய்கிறது. தனியாக ஒரு பதிவு போடுகிறேன்.
      • Like
      • Reply
      • 4h
    • Palani Chinnasamy
      Chandra Mohan நீங்கள் செய்துக் கொண்டிருக்கும் உங்கள் அரசியல் என்னவென்று தெளிவாக எனக்கு தெரியும் நான் உங்களை வலிந்து அழைக்கவில்லை. விவாதிக்க தொடங்கியது நீங்களே பின்னர் விவாதத்திலிருந்து விலகி ஓடுவது ஏனோ அதை சொல்லுங்கள்.
      • Like
      • Reply
      • 1m
    • Palani Chinnasamy
      Chandra Mohan மிகவும் தவறான கணிப்பு அங்குள்ள பழங்குடிகளை ஜாதியாகவும் மற்ற அடைப்புகளுக்குள் கொண்டு வருவதும். மக்கள் போராட்டத்தை வெறும் இட ஒதுக்கீடு பிரச்சினையாக மாற்றிய பிஜேபிக்கும் உங்களுக்கும் வேறுபாடு இல்லை. அங்கிருந்த போராளிகள் இன்று எங்கே போய்விட்… 
      See more
      • Like
      • Reply
      • 1h
    • Palani Chinnasamy
      வருத்தமாக உள்ளது உங்களைப் போன்று ஒரு உங்களுடைய இது போன்ற எழுத்துக்கள். பழங்குடிகளை ஜாதியாக எப்பொழுது இருந்து பார்க்க தொடங்கி விட்டீர்கள். அந்தப் பகுதியில் குறைந்து நான்காண்டுகள் நான் பணிபுரிந்துள்ளேன் அதன் அடிப்படையில் நார்த் ஈஸ்ட் எவ்வகையில் உள்ளது என்று நான் தெளிவாக பேச முடியும். தோழர்களே அகநிலையில் இருந்து எழுதுவதை விடுங்கள் . நன்றி
      • Like
      • Reply
      • 1h
பாஜக வின் தோற்றுப்போன மோடி - அமித்சா இரட்டை என்ஜின் ஆட்சி, மணிப்பூர் மாநிலத்தில் உள்ள தனது பாஜக அரசாங்கம் மூலமாக, மதத்தின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தி மோதல்கள் உருவாக்குவது மற்றும் அடையாள அரசியல் தில்லுமுல்லுகள் போன்ற இழிந்த அரசியலின் மூலம் தீயை மூட்டிவிட்டுள்ளது. கலவரங்கள் பற்றி எரிய ஆரம்பித்தவுடன், இப்போது ஒரு அரசியல் பிரச்சனைக்கு இராணுவ தீர்வைக் காண அடக்குமுறை ஏவுகிறது.
¶மணிப்பூர் பழங்குடியினரின் உரிமைகளையும், மனித உயிர்களையும் பாதுகாத்திடுவோம்.
¶காவிப் பாசிஸ்டுகளிடம் இருந்து
மணிப்பூரை காத்திட வேண்டும் !
*************************************************
¶மணிப்பூர் பிரச்சினை பற்றிய சுருக்கமான அறிமுகம் :-
----------------------------------------------------------------------
மணிப்பூர் மாநிலத்தில், மெய்தி சமூகத்தின் வலுவான மக்கள்தொகை எண்ணிக்கை மற்றும் அரசியலில் அதன் ஆதிக்கம் ஆகியவற்றால், மெய்தி சமூகத்தின் ST அந்தஸ்து கோரிக்கையை மணிப்பூர் பழங்குடியினர் எதிர்க்கின்றனர். 60 சட்டமன்ற தொகுதிகளில் மூன்றில் இரண்டு தொகுதிகளில் மெய்திகள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
மணிப்பூர் மாநிலம் ஒரு விளையாட்டு மைதானம் போன்றது. மெய்திகள்
பெரும்பாலும் இந்துக்கள்- இம்பால் பள்ளத்தாக்கில் வசிக்கின்றனர். இம்பால் பள்ளத்தாக்கு 34 மலைகளால் சூழப்பட்டுள்ளது. அவைகளில், பழங்குடியினர் வாழ்கின்றனர்.
பழங்குடியினர் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள். (அதே சமயம் பள்ளத்தாக்கில் பழங்குடியினரின் சிறிய மக்கள் தொகையும், இதேபோல், மலைகளில் மெய்தி சமூகத்தின் சிறிய மக்கள் தொகையும் உள்ளது.)
மாநிலத்தின் மக்கள்தொகையானது, 2023 இல் 36.49 லட்சம் ஆக மதிப்பிடப் படுகிறது. (2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் மக்கள் தொகை 28.56 லட்சம் ஆகும்.) சுமார் 70% மாநில மக்கள்தொகை இம்பால் பள்ளத்தாக்கில் உள்ளது. மீதமுள்ள மலைப் பகுதிகளில் பழங்குடியினர் வசிக்கின்றனர். மெய்தி மக்கள் தொகை 53 % ஆகும். பழங்குடியினர் 41 % உள்ளனர். ST பழங்குடியினர் இட ஒதுக்கீடு 31 % மட்டுமே!
பார்ப்பனர் துவங்கி பிற்பட்ட சாதிகள் வரையுள்ள ஆதிக்க சமூகமான மெய்திகள் மணிப்பூர் பழங்குடியினர் பட்டியலில் இணைக்கப்பட்டால், தங்களுடைய மொத்த இடஒதுக்கீடும் அழிந்து போய்விடும் என அஞ்சுகின்றனர். இது ஒருபுறமிருக்க, ஏற்கெனவே வனப்பகுதிகளில் இருந்து பழங்குடியின கிராம மக்களை வெளியேற்றி வரும், மணிப்பூர் மாநில பாஜக அரசாங்கம் "காப்புக் காடுகள், பாதுகாக்கப்பட்ட காடுகள், ஈரநிலங்கள் மற்றும் வனவிலங்குகள்" பற்றிய ஒரு சர்வே கணக்கெடுப்பு என்ற பெயரால் பெரும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
√ பழங்குடியினர் வாழ்வாதாரம் பெரும் ஆபத்தில் உள்ளது ; எனவே தான் கிளர்ச்சி பரவி வருகிறது.
¶காவிப் பாசிஸ்டுகளிடம் இருந்து
மணிப்பூரை காத்திட வேண்டும் !
All reactions:
கி. நடராசன், Thangathamilvelan Thangam and 10 others
25 comments
2 shares
Like
Comment
Share

25 comments

  • Ravindran Krishnamurthy
    பழங்குடியின மக்கள் பெரும்பாலும் கிருத்த மதம் தழுவி இருக்கிறார்கள். இதுவே சங்கிகளுக்கு எரிச்சல். அவர்களது பழங்குடியின இட ஒதுக்கீட்டை நீர்த்துப் போகச் செய்ய இந்த 53 சத மைத்தி பார்ப்பனர்களையும் பழங்குடி என்று அறிவித்து விட்டார்கள். கலவரத்திற்கு பாசிச பாஜக வே முழுக்காரணம்.
    • Like
    • Reply
    • 3h
    • Palani Chinnasamy
      Ravindran Krishnamurthy மிகவும் தவறான பதிவு. அங்கு பார்ப்பனர்கள் என்பது இல்லை எல்லோரும் பழங்குடிகள் தான்
      • Like
      • Reply
      • 1h
    • Palani Chinnasamy
      Ravindran Krishnamurthy இன்று பத்திரிகையிலும் செய்திகளும் எந்த வர்க்கத்தின் கையில் உள்ளதோ இப்படி தான் எழுதும் உண்மையில் அந்த மக்கள் இனக்குழுக்களாக தான் உள்ளனர். உங்களால் முடிந்தால் அங்குள்ளவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.
      • Like
      • Reply
      • 1h
  • Palani Chinnasamy
    மிகவும் தவறான பதிவு. அங்கு பார்ப்பனர்கள் என்பது இல்லை எல்லோரும் பழங்குடிகள் தான்
    • Like
    • Reply
    • 1h
    • Chandra Mohan
      Palani Chinnasamy. இல்லை என எப்படி சொல்கிறீர்கள். OBC பாதிக்கும் மேலாக இருக்கிறார்கள். இந்திய அரசாங்கம், மணிப்பூர் அரசாங்கம் சொல்வது என்னவென படிக்கவும். பிறகு விரிவாக விவாதிக்கலாம்
      • Like
      • Reply
      • 1h
    • Palani Chinnasamy
      Chandra Mohan தோழர் ஓ பி சி எஸ்சிஎஸ்டி அல்லா விஷயம்
      • Like
      • Reply
      • 1h
    • Palani Chinnasamy
      Chandra Mohan நான் அங்கே நேரடியாக பணியில் இருந்தேன் அதை கண் கொண்டு பார்த்து தான் சொல்கின்றேன். இவை மட்டுமல்ல பல்வேறு விதமான போராட்டங்களையும் பல்வேறு உயிர் இழப்புகளையும். ராணுவம் மற்றும் துணை ராணுவம் போராளிகள் பற்றி பல தகவல்களை ஆவணப்படுத்தி இருந்தேன். பல்வேறு இடமாற்றம் பல காரணங்களால் எனது சேகரிப்புகள் இப்பொழுது இல்லை இதை மட்டும் கூறிக் கொள்கின்றேன்
      • Like
      • Reply
      • 1h
    • Chandra Mohan
      Palani Chinnasamy நான் அங்கு சென்றுள்ளேன். போராளி அமைப்புகள் மற்றும் ஆய்வாளர்கள் உடன் விவாதித்து உள்ளேன். மணிப்பூர் பழங்குடிகள் மற்றும் சமவெளி மெய்த்தி பற்றிய ஏராளமான விவரங்கள் உள்ளது.
      • Like
      • Reply
      • 1h
    • Chandra Mohan
      Palani Chinnasamy உங்கள் பதில் ஆச்சரியமாக உள்ளது. அனைவரும் ST என்றால் ஏன் OBC வருகிறது.
      • Like
      • Reply
      • 1h
    • Palani Chinnasamy
      Chandra Mohan ஐயா இன்றுள்ள சிஸ்டம் என்ன
      • Like
      • Reply
      • 1h
    • Chandra Mohan
      Palani Chinnasamy ஓரிடத்தில் பணியில் இருப்பது, வாழ்வது எசந்பது எல்லாம் விஷயங்கள் கிடையாது. சமூகத்தை சரியாக படிக்கிறோமா என்பது தான் முக்கியமானது.
      • Like
      • Reply
      • 1h
    • Palani Chinnasamy
      Chandra Mohan சிறப்பு அப்படி எனும் பொழுது மெய்தி குக்கி நாகாஇனக்குழுக்களுக்கான அடையாளங்கள் சொல்லுங்கள்
      • Like
      • Reply
      • 1h
    • Palani Chinnasamy
      மக்களை ஜாதி அடையாளத்துக்குள் கொண்டு வந்து ஜாதிகளாக பிரித்து வைத்து மோதவிட தானே ஜாதிகள் வேண்டும். அதை செவ்வனவே இந்திய முழுக்க ஆளும் வர்க்கம் செய்து கொண்டு தான் உள்ளது. அதனைப் பற்றி உங்களுக்கு அறியாமை இல்லை. ஆக இனக்குழுக்களாக உள்ள ஒரு இடத்தில் இந்த ஜாதியை பயன்படுத்தும் நோக்கம் என்னவென்று நீங்களே சொல்லுங்கள்
      • Like
      • Reply
      • 1h
  • Palani Chinnasamy
    Chandra Mohan மிகவும் தவறான கணிப்பு அங்குள்ள பழங்குடிகளை ஜாதியாகவும் மற்ற அடைப்புகளுக்குள் கொண்டு வருவதும். மக்கள் போராட்டத்தை வெறும் இட ஒதுக்கீடு பிரச்சினையாக மாற்றிய பிஜேபிக்கும் உங்களுக்கும் வேறுபாடு இல்லை. அங்கிருந்த போராளிகள் இன்று எங்கே போய்விட்டனர்? ஒன்றுபட்டு போராடிக் கொண்டிருந்த PLA எங்கே போய்விட்டது என்று தெரியுமா? உங்களுடைய ஆய்வுகளை மூடி வைத்துவிட்டு களத்தில் பாருங்கள். எங்கும் வேலையே இல்லாத இந்த நேரத்தில் வேலை வாய்ப்புக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் மக்களைப் பிரித்து வைத்து போராட வைக்கும் ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சியை புரிந்து கொள்ளுங்கள்.
    • Like
    • Reply
    • 1h
    • Chandra Mohan
      Palani Chinnasamy களத்தில் இருந்து தான் பேசிக் கொண்டு இருக்கிறோம். அங்கு நடப்பது பற்றி சொல்வதற்கு அமைப்பு மற்றும் தோழர்கள் உள்ளனர்.
      • Like
      • Reply
      • 1h
    • Palani Chinnasamy
      Chandra Mohan சிறப்பு சிறப்பு அதுக்கு தான் இது போல எழுதிக் கொண்டு உள்ளீர் நன்றி
      • Like
      • Reply
      • 1h
  • Palani Chinnasamy
    வருத்தமாக உள்ளது உங்களைப் போன்று ஒரு உங்களுடைய இது போன்ற எழுத்துக்கள். பழங்குடிகளை ஜாதியாக எப்பொழுது இருந்து பார்க்க தொடங்கி விட்டீர்கள். அந்தப் பகுதியில் குறைந்து நான்காண்டுகள் நான் பணிபுரிந்துள்ளேன் அதன் அடிப்படையில் நார்த் ஈஸ்ட் எவ்வகையில் உள்ளது என்று நான் தெளிவாக பேச முடியும். தோழர்களே அகநிலையில் இருந்து எழுதுவதை விடுங்கள் . நன்றி
    • Like
    • Reply
    • 1h
    • Chandra Mohan
      Palani Chinnasamy பழங்குடியினரை சாதியாக எங்கும் நான் சொல்லவில்லை. மெய்தியை கூட பார்ப்பனர்கள் துவங்கி பிற்பட்டவர்கள் வரை உள்ள சமூகம் என்றே குறிப்பிட்டுள்ளேன்.
      • Like
      • Reply
      • 1h
    • Palani Chinnasamy
      Chandra Mohan திரும்பவும் தவறு என்று கூறுகின்றேன்
      • Like
      • Reply
      • 1h
    • Chandra Mohan
      Palani Chinnasamy நீங்கள் தவறு என்பதால், சமூகப்பொருளாதாரக் காரணிகள், விவரங்கள் , அரசியல் ஆய்வுக் கோணங்கள் மாறிவிடாது.
    • Palani Chinnasamy
      Chandra Mohan தவறாக திரிக்காதீர்கள் என்று சொல்கிறேன். இனக்குழுக்களான மெய்த்தி நாகா குக்கி இவையாவது அறிவீர்களா?
    • Chandra Mohan
      Palani Chinnasamy சான்றுகள் இருந்தால் அவற்றை முன்வைத்துப் பேசவும். "மெய்த்தி பழங்குடியினர்" என்ற பாஜக அரசியலை இங்கே வந்து பரப்புரை செய்ய வேண்டாம். இந்தியாவில் உள்ள பல்வேறு
      தேசிய இனங்கள் துவங்கி சிறுபான்மை பழங்குடியினர் வரை நாம் தொடர்ந்து பழகி வருகிறோம், படித்து வருகிறோம். நான் ஒரு பழங்குடி செயற்பாட்டாளரும் கூட !
      நான் இங்கு முன்வைத்துள்ள மய்ய அரசியல் கோணத்தை திசை திருப்ப வேண்டாம்.
      உங்களுக்கு சொல்வதற்கு ஏராளமான ஆர்வம் இருப்பதால், உங்கள் முகநூல் பக்கத்தில் விரிவாக பதிவு செய்து விட்டு என்னை tag செய்யவும். நேரம் அனுமதித்தால் அவசியம் வந்து விவாதிக்கிறேன். நன்றி, வணக்கம்!
    • Palani Chinnasamy
      Chandra Mohan ஜாதிக்கும் இன குழுவிற்கும் வேறுபாடு தெரியவில்லை நீங்கள் பிஜேபி செய்யும் அதே வேலையைதான் செய்கிறீர் வேறென்ன செய்கிறீர்
    • Chandra Mohan
      Palani Chinnasamy. இத்தகைய தேவையற்ற விவாதங்களை இங்கே அனுமதிக்க முடியாது. உங்கள் அறிவுக்குட்பட்டவற்றை போய் தனியாக எழுதுங்கள்.

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்