நமது இடதுசாரி என்போருக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு இடதுசாரிகள் பொதுவுடைமைக்காக போராடுகின்றனர் மற்றவர்கள் தனியுடைமைக்காக போராடுகின்றனர்.
நமது சிந்தனைமுறையும் நாம் வாழும் சமூகத்தில் உள்ள பிற்போக்குதனங்களை தன்னகத்தே கொண்டிருக்கவில்லையா? அவை ஏன் நாம் புரிந்துக் கொள்ள வேண்டாமா?
கம்யூனிஸ்டுகளாகிய நாம் வெறுமனே பொருளாதாரப் பிரச்சனைகளை மட்டும் எடுத்துக் கொண்டு நமது அணிகளுக்கும் மக்களுக்கும் போதனை அளித்து அரசியல் அதிகாரத்திற்காகப் போராடுவதோடு நாம் நின்றுவிடக் கூடாது. அதற்கு மேலும் மார்க்சிய தத்துவம் மற்றும் கம்யூனிச பண்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். நமது மக்களுக்கு மார்க்சிய, கம்யூனிசத்தை போதித்து மக்களை சித்தாந்தரீதியாக வளர்க்க வேண்டும். மேலும் நம்மிடையே கம்யூனிச பண்புகளை திட்டமிட்டு வளர்க்க வேண்டும், கம்யூனிச பண்புகளுக்கு எதிரான தீய பண்புகள் நம்மிடம் இருக்குமானால் அதனை களைவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும் மேலும் மக்களுக்கு நாம் வழிகாட்ட வேண்டும். பல தியாகங்கள் செய்து புரட்சி நடத்திய, சோவியத்து ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் தனிவுடமை சிந்தனையின் அடிப்படையிலான தீய பண்பாளர்கள் உள்ளே நுழைந்து இருந்ததால்தான் பல லட்சக்கணக்கான மக்கள் ரத்தம் சிந்தி உருவாக்கப்பட்ட சோவியத்து அரசை மிகவும் எளிதாக வீழ்த்த முடிந்தது என்ற வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
சித்தாந்தமே திறவுகோல் -சீனாவில் சோசலியச வளர்ச்சி
“மக்கள் உடல் நலத்துடன் நன்கு உண்டு புதிய சீன மக்கள் என்ற உணர்வுடன் தங்கள் கடமைக்ளைச் செய்கின்றனர். 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த கிராமப்புறத்துடன் ஒப்பிடும்போது நம்ப முடியாத அதிசயமாகவே இருந்தது. அன்று நடைபெற்ற புரட்சியே. 1930, 1940ல் வீழ்ந்துகொண்டிருந்த சீனாவிலிருந்து 1972 ஜீனில் ஒற்றுமையுடன் இணைந்திருந்த நாட்டைப் பார்த்ததும் இதுவே என் முதல் மதிப்பாயிருந்தது. நாடு முழுவதும் முடிவற்ற கிராமப்புறங்களில் நடந்திருக்கும் வளர்ச்சியை விளக்கம் கேட்பது இயல்பே. இத்தகைய பெரும் வியப்புறு வளர்ச்சி எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது? எவ்வாறு வழிகாட்டப்படுகிறது? இதைக் கட்டுப்படுத்த முடியுமா? இங்குதான் சிந்தாந்தப் பிரச்னைபற்றி எண்ணத்தோன்றுகிறது. அமெரிக்கரால் இதைப் புரிந்துகொள்வது மிகக்கடினமே! ‘ஹார்வேட் பல்கலைக் கழகத்துப் பேராசிரியர் ஜோன் பெயர்பாங் தனது புதிய சீன அனுபவத்தை இவ்வாறு விபரித்துள்ளார்.
"மக்களுக்குச் சேவை செய்" என்பதே சீனாவின் பிரதான சித்தாந்த சுலோகமாகும்.
"திறமை வாய்ந்தவை வாழுகின்றன" என்ற முதலாளித்துவ சுலோகத்தோடு பழகியவர்களுக்கு தனிமனிதனிலும் பார்க்க, கூட்டு நலன் முன்வைப்பது பயபக்தியான உணர்வு தரலாம். சீன சோஷலிச சமூகத்தில் வாழ்க்கையின் திறவுகோல் இதுவே. புரட்சி என்பது பொருளாதாரத்தில் மட்டுமல்ல; மனிதனது சிந்தனை, பழக்கம், நோக்கம், உணர்வு இவற்றுக்கும் மேலாக சமூக நடைமுறையிலும்" புரட்சி வேண்டும் என மாவோ சீன மக்களுக்குக் கற்பித்தார். உற்பத்திச்சாதனங்கள், விநியோகம் ஆகியவை தனிச் சொத்தாயிருப்பதை தடை செய்வது மட்டும் போதாது என்றார்-::மாவோ, சோஷலிச பொருளாதார அடிப்படையை அமைத்து பண்பாட்டு மேல்மட்ட அமைப்பு அதற்கு இயைந்தவாறு அமைந்து கொள்ளுதல் மட்டும் போதாது. முதலாளித்துவத்திலிருந்து வந்த ஒழுக்க முறைகளை, கொள்கைகளை எவ்வாறு மாற்றுவது என்பதை மக்கள் கற்றுக் கொள்ளாதவரை சோஷலிசத்தைக் கட்டி எழுப்பவோ, நிலைதவோ, முடியாது. சோஷலிசம் என்பது வெறும் உற்பத்தி, வாழ்க்கைத்தரம், வசதிகள் அல்ல; அதிக உற்பத்திக்கு வாய்ப்பான அமைப்பு என்பது மட்டுமல்ல; சோஷலிசம் என்பது ஒரு முழுமையான வாழ்க்கைமுறை; மக்களிடை ஏற்படும்முரண்பாடுகளை நினைவு பூர்வமாக படிமுறையாக தீர்ப்பது; நாள்தோறும் கடைப்பிடிக்கும் சமூக வாழ்க்கை அனுபவங்கள் மூலம் சமூகத் தேவைகளுக்கு முடிவு காண்பது. பேராசிரியர் பெயர்பாங் சீனாவின் சரியான சிந்தாந்தமே வியக்கத்தக்க அபிவிருத்திக்கு திறவுகோல் என்று சரியாகவே விடை கூறியுள்ளார்.
இந்த உண்மை மிகத் தெளிவானது, ஆதிக்கப் பசி கொண்ட சில அரசியல் கட்சிகள் அதன் உறுபினர்களின் ஊழல் மயமான வாழ்க்கை அம்பலமாகி கொண்டிருக்கவில்லையா?, முதலாளித்துவத்தின் முழு உருவத்தையும் அது காட்டி நிற்கிறது; சோஷலிசத்தில் லஞ்சம் ஊழல்களை மக்களே களைந்து கொள்வர். இத்திறமையை சீன காட்டி நிற்கிறது.
உள் கட்சிப் போராட்டங்கள் தனி நபர் முரண்பாடுகளல்ல. இவற்றிற்கு வர்க்கப்பிளவு, சித்தாந்தம், சர்வதேச அரசியல் தொடர்புகள் காரணமாகின்றன.(நன்றி குமரன் பத்திரிக்கை. கொழும்பு)ஈதில் சில சுருக்கம் விளக்கம் என்னுடையவை.