இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 112ன் படி, ஒரு ஆண்டின் பட்ஜெட்டில், அரசாங்கத்தின் அந்த ஆண்டிற்கான வரவு மற்றும் செலவினங்களின் மதிப்பீட்டிற்கான அறிக்கையை அளிப்பது. பட்ஜெட்டானது, நிதியமைச்சகம், நிதி ஆயோக் மற்றும் செலவு அமைச்சகங்கள் சம்மத்தப்பட்ட ஆலோசனை செயல்முறை மூலம் உருவாக்கப்படுகிறது
அமைச்சங்களின் கோரிக்கை :
அமைச்சகங்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, திட்டமிட்டுச் செலவு செய்வதற்கு நிதியமைச்சகம் வழிகாட்டியாகச் செயல்படுகிறது. நிதியமைச்சகத்தில் உள்ள பொருளாதாரத் தொடர்புகள் துறை பட்ஜெட் பிரிவானது, வரவு - செலவு திட்டத்தினை ஒருங்கிணைந்து தயாரிப்பதற்குக் காரணமாக உள்ளது.
பட்ஜெட் பிரிவானது, அனைத்து ஒள்றிய அமைச்சகங்கள், யூனியன் பிரதேசங்கள், தன்னாட்சி அமைப்புகள், துறைகள் மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கு அடுத்த ஆண்டின் மதிப்புகளின்படி ஒரு அறிக்கையை வெளியிடுகிறது.
விரிவான விவாதங்கள் :
அதன் பின்னர், அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தங்களது கோரிக்கைகளை அரசிற்கு அனுப்பும், பின்னர் அமைச்சகங்கள் மற்றும் நிதியமைச்சகத்திற்கு இடையே விரிவான விவாதங்கள் நடைபெறும். அதே சமயத்தில், பொருளாதாரத்துறை மற்றும் வருவாய் துறையானது, விவசாயிகள், வர்த்தகர்கள், அந்நிய நிதிநிறுவனங்கள், பொருளாதார நிபுணர்கள், சிவில் குழுக்கள் மற்றும் பங்குதாரர்களைச் சந்தித்துக் கேட்டறிந்த தங்கள் கருத்துக்களையும் முன்னின்று கூறவேண்டும்.
நிதிஅமைச்சர் :
வரித் திட்டங்கள் சார்ந்த இறுதி முடிவுகள் நிதியமைச்சரால் எடுக்கப்படும். பின்னர், பிரதமர் முன்னிலையில் இந்தத் திட்டங்கள் விவாதிக்கப்பட்டு, வரவு-செலவு திட்டமானது நிலை நிறுத்தப்படும்.
சபாநாயகர்:
அரசாங்கத்தின் ஆலோசனையின்படி, சபாநாயகர் பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதியினை ஒப்புக்கொண்ட பின் லோக்சபா செயலகத்தின் பொதுச் செயலாளர், ஜனாதிபதியிடம் ஒப்புதல் வாங்குகிறார். பட்ஜெட்டின் முக்கிய மதிப்பீடுகள் மற்றும் திட்டங்களை நிதியமைச்சர் கோடிட்டுக் காட்டுகிறார்.
ஒப்புதல் :
நிதியமைச்சர், பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன் தன்னுடைய 'அமைச்சரவை சுருக்கம்' மூலம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. 'ஆண்டு நிதி அறிக்கை' மத்திய நிதி அமைச்சர் உரையாற்றிய பின் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தினத்தன்று காலையில், பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஒப்புதல் அளித்த பின் குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறப்படுகிறது
மேலே உள்ளவை நடைமுறையில் உள்ளவைதான்... உண்மையில் இருக்க வேண்டியது எப்படி?
வரலாறு காணாத வேலையின்மை, இருக்கும் வேலைகளில் இருந்தும் (சிறப்பான துறைகளாக கருதப்படும் ஐ.டி. மற்றும் சேவை துறைகளில் இருந்து) ஆட் குறைப்பு, விண்ணை முட்டும் விலையேற்றம், பண வீக்கம், “உண்மையான” வளர்ச்சியின்மை இதற்கெல்லாம் மேலாக சாதாரண மக்களுக்கும் கொழுத்த பணக்காரர்களுக்கும் இடையில் உள்ள ஏற்ற தாழ்வு பன் மடங்கு பெருகியுள்ளது. இதை மாற்றுவதற்கான வழிமுறைகளை, திட்டங்களை இந்த பட்ஜெட்டில் ஏதும் இருக்கிறாரா ? என்றால், இல்லை என்பதுதான் வருத்தமான விசியம்.
இந்த சூழலையெல்லாம் மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு , இந்தியா 2014- க்குப் பிறகு வேகமாக வளர்ந்து வருகிறது , இப்பொழுது அமிர்த காலத்தை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ளது என்று பட்ஜெட் உரையில் முழங்குகிறார் நிர்மலா, மோடி மேஜையை தட்டி வரவேற்கிறார்!
இந்தியா பிரிட்டனையும் பின்னுக்கு தள்ளி வேகமாக வளர்ந்து வரும் நாடு என்றால் ஏன் 80 கோடி மக்களுக்கு ரேஷன் இலவசமாக கொடுக்க வேண்டும்?
வளர்ச்சி எல்லாம் இல்லாமல் இல்லை, ஆனால் அந்த வளர்ச்சி யாருடைய வளர்ச்சி ? யாருக்கான வளர்ச்சி என்று பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
ஆர்கனைஸ்டு செக்டார் என்று சொல்லக்கூடிய ஒழுங்கமைக்கப்பட்ட சில தொழில் துறை நிறுவனங்களுக்கு “வளர்ச்சி” இந்த பத்தாண்டு காலங்களில் ஏற்பட்டுள்ளது. ஆனால் இவ்வளர்ச்சி ஒழுங்கமைக்கப்படாத அல்லது அமைப்பு சாரா துறைக்கு , சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற் துறைக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. உண்மையில் ஒழுங்கமைக்கப்படாத துறைகளின் (Informal Sector) வீழ்ச்சியை அடித்தளமாக கொண்டே இந்த வளர்ச்சி கட்டமைக்கப்படுகிறது.
அதனால்தான் இத்தகைய வளர்ச்சியில் வேலை வாய்ப்புகள் இல்லை, மக்களுக்கு போதிய வருமானம் இல்லை, சந்தையில் பொருள் வாங்குவோர் இல்லை அதனால், புதிய முதலீடுகளும் இல்லை. உண்மையில் பொருளாதாரம் வளரவில்லை.
இதையெல்லாம் சரி செய்ய வேண்டிய அரசு இத்தகைய ” கோளாறே” (வேலையில்லா வளர்ச்சி) தனது பெருமையாக எண்ணுகிறது. பொருளாதாரத்தை இப்படித்தான் டிஜிட்டல் மயமாக்குவோம் என மார் தட்டுகிறது. இந்த பார்வையில் விளைந்ததுதான் இந்த பட்ஜெட்!
உண்மையில் இந்திய பொருளாதாரம் வளர வேண்டுமெனில், பாதிப்படைந்துள்ள கோடிக்கணக்கான மக்களும், சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்களும் நிமிர வேண்டுமெனில், அமைப்பு சாரா தொழில்கள் தலைதூக்க வேண்டுமெனில், அதற்கு பட்ஜெட்டில் போதிய நிதிகளை ஒதுக்கி முன்னேற்றத்திற்கான திட்டங்களை அறிவிக்க வேண்டும். இடைக்காலமாக சலுகைகள் அறிவிக்க வேண்டும் . மறைமுக வரி சுமையை குறைத்து நேர்முக வரிகளை சீர்படுத்தி கொழுத்த பண முதலைகள், ஏகபோக கம்பெனிகள் மிகப்பெரிய கார்ப்பரேட்டுகள் மீது சொத்து வரி அதீத லாப வரி போன்ற நேர்முக வரிகள் மூலம் அரசு வருமானத்தை பெருக்க முற்படவேண்டும் . மக்களின் வாழ்வாதாரம் கூடினால் நுகர்வும் சேமிப்பும் கூடும் தேவைகள் பெருக தோழில் முதலீடும் வளரும்.
ஆனால், பணக்காரர்களுக்கு நேர்முக வரியை (Corporate Tax) குறைக்கும் இந்த பட்ஜெட் மக்கள் மீதான மறைமுக வரிச்சுமையைகுறைக்க எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்த பட்ஜெட் மாநில அரசுகளுக்கு அவர்தம் முதலீட்டு செலவினங்களுக்காக ஒன்றிய அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ளதாக கூறுகிறது. உண்மையில் அதிக நிதி மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுகிறதா? என்றால், இல்லை என்றே புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
2021-2022ல் வழங்கப்பட வேண்டிய நிதி 4,60,575 கோடி ரூ. ஆனால் அதை 3,67,204 கோடியாக 2022-2023 பட்ஜெட்டில் குறைத்து அறிவிக்கப்பட்டது, அதுவே பின் திருத்தப்பட்ட மதிப்பில் ரூ.3,07,204 கோடியாக மாற்றப்பட்டது.
2023-2024 பட்ஜெட் ரூ. 3,59,470 கோடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. வரி மூலம் கிட்டும் வருமானத்தில் மாநிலங்களின் பங்கு தற்பொழுது (2023-2024ல) 30.4% சதவிகிதமாக உள்ளது .
2021-2022ல் மாநிலங்களின் பங்கு 33.2% சதவிகிதமாக இருந்ததை எண்ணிப்பார்த்தால் மாநிலங்களுக்கு கிடைக்கும் பங்கு -14வது நிதி கமிஷன் உறுதி அளித்தவாறு- கிடைக்க வெகு நாட்களாகும் போல தோன்றுகிறது.
இவையெல்லாம் மாநிலங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை தரும் விஷயங்கள் அல்ல.
மாநிலங்கள் நிதி சுதந்திரமோ, நிதி அடிப்படையோ இல்லாமலிருந்தால் அது மக்களின் வாழ்வாதாரங்களையும் அவர்களது வாங்கும் திறனையும் வெகுவாக பாதிக்கும் . அதனடிப்படையில் பொருள் உற்பத்தியும், அதற்கான முதலீடும் பாதிப்படையும். நன்றி ச.அருணாசலம் (https://aramonline.in/12268/bjp-govt-budget-nirmala-2023/).
Outlay on Major Schemes
2021-2022 2022-2023 2022-2023 2023-2024
Actual Budget Estimates Revised Estimates Budget Estimates
(A) Core of the Core Schemes
1 Mahatma Gandhi National Rural
Employment Guarantee Program 98468 73000 89400 60000
2 National Social Assistance Program 8152 9652 9652 9636
3 Umbrella Programme for Develop
ment of Minorities 1428 1810 530 610
4 Umbrella Programme for Develop
ment of Other Vulnerable Groups 1745 1931 1921 2194
5 Umbrella Programme for Develop
ment of Scheduled Tribes 3779 4111 3874 4295
6 Umbrella Scheme for Development
of Schedule Castes 4979 8710 7722 9409
(B) Core Schemes
7 Ayushman Bharat - Pradhan Mantri Jan
Arogya Yojna (PMJAY)