ஆண்டு தவறாமல் பட்ஜெட் என்னவோ வருகிறது இதுவரை ஆண்டாண்க சமர்பிக்கப் பட்ட அறிக்கையும் செயல்பாடும் என்னே?
வெறும் குறைக்கூறி கடந்து செல்வதல்ல நமது பணி அதனால் அதனை பற்றி விவாதிப்போமே தோழர்களே.
பெரும்பான்மையான உள்ள உழைக்கும் ஏழை எளிய மக்கள் தங்களின் வாழ்க்கைக்கு முன்னேற்றத்திக்கு உகந்த முறையில் அமையாத என்று எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது ஏதோ வேலையில் உள்ள சிறு கூட்டம் தங்களின் உழைப்பால் சேர்த்த செல்வத்தை தங்களின் எதிர்கால தேவைக்கும் இன்றைய தேவைக்கும் பயன்படுத்த ஏதுவாக சட்டமிருக்க வேண்டும் என்று எண்ணுவதும்...
பட்ஜெட்டில் ஒதுக்கப் படும் நிதியானது உண்மையில் போய் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேருவதில்லை ஏன்?
சரி நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இந்த பட்ஜெட் 4503097.45 கோடியை நிதியளிக்க போவதாக கூறியுள்ளது. அதில் நாட்டின் முக்கியமான விவசாய கடன் வழங்க ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளதை மட்டுமே பார்ப்போம். இதில் மத்திய அரசின் செயலக தேவைக்காக மட்டுமே 1405.37 கோடி போய் விட்டது, பி.எம்.கிசான் யோஜனா 60000.00 கோடி இப்படி பல்வேறு நிதி ஒதுகீடே 98980.03 கோடி (கிட்ட 1 லட்சம் கோடி) பல்வேறு நிதியளிக்க முன் வந்துள்ளது115531.79 கோடி. ஆக செய்திகளும் உண்மையை புரிந்துக் கொள்வதோடு இவை விவசாயிகளின் நலன் பயக்குமா என்பதனை புரிந்துக் கொள்ள 363 பக்க செலவீனங்களுக்கான பகுதியில் 8 பக்கம் வாசித்தாலே நாம் தெளிவடைய முடியும் மேலும் இவை எவ்வகையான நிதிநிலை அறிக்கை என்பதனை புரிந்துக் கொள்வோமே...
Receipt Budget (E) 2023-24.pdf
IMPLEMENTATION OF BUDGET ANNOUNCEMENTS 2022-2023
EXPENDITURE BUDGET 2023-2024 [Incorporating Notes on Demands for Grants] MINISTRY OF FINANCE
இதுவரை ஒன்றிய அரசு நிறைவேற்றிய பட்ஜெட்டுகள் ஓரிடத்தில் PDF வடிவில்
பல்வேறு செய்திதாள்களின் கருத்துகள் கீழே:-
நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், இந்தியப் பொருளாதாரம் ஒளிரும் நட்சத்திரம் என்றும், தொழிற்துறையினருக்கான பட்ஜெட் என்றும், இந்த பட்ஜெட் அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூபிரிண்டாக இருக்கும் என்றும் விவசாய கடன் வழங்க ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது உள்பட ”7 முக்கிய அம்சங்கள் அடங்கியதாக இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் நிர்மலா சீதாராமன். கூறினார்.
அடுத்த 3 ஆண்டுகளில் பழங்குடியினர் மேம்பாட்டுக்காக ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமரின், வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.79000 கோடி நிதி ஒதுக்கீடு.
மீனவர் நலனுக்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை உபயோகப்படுத்தும் வகையில் தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளுடன் இணைந்து புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்பட்டும் என்றும் மருந்து துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்ள புதிய திட்டம் கொண்டு வரப்படும்.
கர்நாடக மாநிலத்தில் பாசன திட்டங்களுக்கு ரூ.5ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் வட்டியில்லா கடன் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படுகிறது.
இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது...
அனைத்து நகரங்களும் நகரங்களும் 100% செப்டிக் டேங்க்கள் மற்றும் சாக்கடைகளை மெக்கானிக்கல் டி-ஸ்லட்ஜிங் செய்து மேன்ஹோலில் இருந்து மெஷின் ஹோல் முறையில் மாற்றும். அதன்படி, மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிக்க புதிய இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளது.
நிரந்தர கணக்கு எண்ணை வைத்திருக்க வேண்டிய வணிக நிறுவனங்களுக்கு, குறிப்பிட்ட அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் பொதுவான அடையாளங்காட்டியாக PAN பயன்படுத்தப்படும்.
ரயில்வே துறைக்கு ரூ. 2.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மீனவர்கள் நலன், மீன்பிடிப்பு துறை வளர்ச்சிக்கு நிதி ரூ.6,000 கோடி ஒதுக்கீடு
விவசாயம், சுகாதாரம் மற்றும் நிலையான நகரங்கள் ஆகிய துறைகளில் துறைகளுக்கு இடையேயான ஆராய்ச்சி, அதிநவீன பயன்பாடுகள் மற்றும் அளவிடக்கூடிய சிக்கல் தீர்வுகளை மேம்படுத்துவதில் முன்னணி தொழில்துறை வீரர்கள் பங்குதாரர்களாக இருப்பார்கள்:.
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை உருவாக்கவும், செயற்கை நுண்ணறிவுக்கான 3 சிறப்பு மையங்களும் உயர் கல்வி நிறுவனங்களில் அமைக்கப்படும்.
ஆற்றல் மாற்றத்திற்கான முன்னுரிமை மூலதனம் ரூ.35,000 கோடி; சாத்தியமான இடைவெளி நிதியைப் பெற பேட்டரி சேமிப்பு.
பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்த 50 கூடுதல் விமான நிலையங்கள், ஹெலிபாட்கள், வாட்டர் ஏரோ ட்ரோன்கள், மேம்பட்ட தரையிறங்கும் மைதானங்கள் புதுப்பிக்கப்படும்.
ஸ்டார்ட்அப்கள் மற்றும் அகாடமியாவின் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சியை வெளிக்கொணர, தேசிய தரவு ஆளுமைக் கொள்கை கொண்டுவரப்படும். இது அநாமதேய தரவை அணுக உதவும்.
பொறியியல் துறையில் 5ஜி தொழில்நுட்பத்திற்காக 100 ஆய்வகங்கள் உருவாக்கப்படும்
அடுத்த 3 ஆண்டுகளில், ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள உதவி பெறுவார்கள். 10,000 உயிர் உள்ளீட்டு வள மையங்கள் அமைக்கப்படும்: இயற்கை உரங்களை ஊக்குவிக்க “பிஎம் பிரணாம்” என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும்.
டெல்லி: நாடாளுமன்றத்தில் 2023-24ம் ஆண்டுக்கான இந்த பாராளுமன்றத்தின் இறுதி முழு பட்ஜெட்டை தாக்கல் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செய்து வருகிறார். அப்போது, இது, அமிர்த காலத்தின் முதல் பட்ஜெட் என்று கூறினார். ஏற்கனவே கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது, இந்தியா 75ல் இருந்து 100க்கு செல்வதற்கான ‘அமிர்த காலத்திற்கான’ அடிக்கல் நாட்டப்படும் என குறிப்பட்ட நிலையில், இன்றைய பட்ஜெட் முதல் பட்ஜெட் என்று கூறினார்.
நிதியமைச்சர் குறிப்பிட்ட ‘amrit kaal’ என்ற வார்த்தை வேதகால ஜோதிடத்திலிருந்து வந்தது, அங்கு ‘அமிர்த கால்’ என்பது நல்ல காலத்திற்கான துவக்கமாகும். தமிழில் அமிர்தம் என்பதற்கான பொருள், சுபமானதாக கருதப்படுகிறது. ஆக்கப்பூர்வமானது, நேர்மறையானது, என்றும் அழிவில்லாதது, நீங்க நிறைவு கொடுப்பது, இன்பம் என பல்வேறு பொருள்களைக் கொடுக்கிறது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் முன்னதாக டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் சந்தித்தனர். பின்னர் பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதையடுத்து காலை 11மணி அளவில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட் வாசிக்கத் தொடங்கினார்.அந்த வகையில் இந்த பட்ஜெட்டில் மிக மிக முக்கியமாக தனிநபர் ஆண்டு வருமான வரி உச்சவரம்பு ரூ. 7 லட்சமாக உயர்த்தியிருப்பது மக்களுக்கு வரப்பிரசாதம். மேலும் வேளாண், கால்நடை பராமரிப்பு, மீன் மற்றும் பால்வளம் ஆகியவற்றுக்கு ரூ. 20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம், 80 கோடி பேருக்கு இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம், பெண்களுக்கு 7.5 % வட்டியில் சிறு சேமிப்புத் திட்டம், கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட சிறு தானிய உற்பத்தியை அதிகரிக்க, ஆராய்ச்சி மையம் அமைக்க திட்டம், பசுமை வளர்ச்சிக்கு திட்டம், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பதற்கான திட்டம், நாடு முழுவதும் 157 புதிய செவிலியர் கல்லுரிகள் தொடங்குதல், பள்ளி மாணவர்களுக்கு பஞ்சாயத்து அளவில் டிஜிட்டல் நூலகங்கள் தொடங்குதல், புதிய கல்வி கொள்கையில் அம்ரித் பிதி திட்டம்,
38,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதல், நகர்ப்புற உட்கட்டமைப்புக்கு ரூ. 10,000 கோடி நிதி ஒதுக்கீடு, பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ. 79,000 கோடி நிதி ஒதுக்கீடு, இளைஞர்கள் எதிர்காலம், திறன் வளர்ப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கான நடவடிக்கைகள், மீனவர் நலனுக்கு ரூ. 6,000 கோடி நிதி ஒதுக்கீடு, சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ. 9,000 கோடி கடன் வழங்குதல், ரயில்வே துறைக்கு ரூ.2.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, போக்குவரத்துத்துறைக்கு 75,000 கோடி நிதி ஒதுக்கீடு, மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்குதல், முதியோர் வைப்புத்தொகை வரம்பு உயர்வு ஆகிய பல்வேறு முக்கிய அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் பெரும் பயன் பெறுவார்கள்.
அதாவது பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கும் வேளாண், கல்வி, தொழில், சுகாதாரம், இளைஞர் நலன், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறையின் வளர்ச்சிக்கான திட்டங்களால் அத்துறைகளும் முன்னேறி, மக்களும் பயனடைந்து, நாடும் வளம் பெறும். இந்த வருடத்திற்கான பொருளாதார வளர்ச்சி 6.8 % மாக இருக்கும் என்பதும், நிதிப்பற்றாக்குறை குறைக்கப்படும் என்பதும் பட்ஜெட் உரையில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பட்ஜெட்டை நடுநிலையோடு பார்த்தால் வரவேற்கத்தக்கதாக, பாராட்டுக்குரியதாக அமைந்திருக்கிறது.
புதிய வருமான வரி முறையைப் பொறுத்தவரையில், ஏற்கெனவே ரூ.5 லட்சத்துக்குள் வருமான வரிக்கு உட்பட்ட வருமானம் உள்ளவர்கள் வரி கட்ட வேண்டியதில்லை. இந்த வரம்புதான் தற்போது உயர்த்தபட்டுள்ளது. இனி ரூ.7 லட்சத்துக்குள் வருமான வரிக்கு உட்பட்ட வருமானம் உள்ளவர்கள் வரி கட்ட வேண்டியதில்லை.
வரி உயர்வு:
- சிகரெட் மீதான சுங்கவரி உயர்த்தப்பட்டுள்ளது.
- தங்கம், வெள்ளி, வைரம் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படுகிறது.
- தங்கக் கட்டியில் செய்யப்பட்ட பொருட்களுக்கு சுங்க வரி அதிகரிப்பு.
- சமையலறை சிம்னி சுங்க வரி 15 சதவீதம் அதிகரிப்பு.
- ரப்பர் மீதான இறக்குமதி வரி 25 சதவீதமாக அறிவிப்பு.
வரி குறைவு:
- டிவி பேனல்கள் மீதான வரி 2.5 சதவீதம் குறைக்கப்படும்.
- செல்போன் உதிரிபாகங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படுகிறது.
- ஆய்வுக் கூடங்களில் உருவாக்கப்படும் வைரங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படும்.
- இறால் உணவுகள் மீதான சுங்க வரி குறைக்கப்படுகிறது. ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் இந்த வரி குறைக்கப்படுகிறது.
பிற முக்கிய அம்சங்கள்:
- 2023-24 நிதி ஆண்டுக்கான விவசாய கடன் இலக்கு 20 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
- கழிவுநீர் தொட்டிகள், கால்வாய்கள் சுத்திகரிப்பில் 100 சதவீதம் இயந்திரப் பயன்பாடு உறுதி செய்யப்படும். நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் இது அமல்படுத்தப்படும்.
- நாட்டில் கடந்த 2014 முதல் புதிதாக அமைக்கப்பட்ட 157 மருத்துவக் கல்லூரிகளுக்கு அருகிலேயே 157 செவிலியர் கல்லூரிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கானதாக இது இருக்கும்.
- லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு அளிக்கும் நோக்கில் பிரதமரின் கவுஷல் விகாஸ் 4.O திட்டம் கொண்டுவரப்படும்.
- நாடு முழுவதும் 30 ஸ்கில் இந்தியா இன்டர்நேஷ்னல் மையங்கள் உருவாக்கப்படும்.
- அடுத்த 3 ஆண்டுகளில் ஏகலைவா மாடல் உண்டு உறைவிடப் பள்ளிகளுக்காக 38 ஆயிரத்து 800 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
- மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் 30 ஸ்கில் இந்தியா சர்வதேச மையங்கள் அமைக்கப்படும்.
- ஒரு கோடி விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் செய்ய மானியம் வழங்கப்படும்.
ரயில்வே துறையை மேம்படுத்த ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது. இதுவரை ரயில்வேக்கு செய்யப்பட்ட ஒதுக்கீட்டில் இதுவே அதிகம்.
- 2047-க்குள் சிக்கில் செல் அனீமியா எனப்படும் மோசமான ரத்தசோகை நோயை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பான வசிப்பிடம், சுகாதாரம், நீர் ஆதாரம், மின்சாரம் ஆகியனவற்றை உறுதி செய்ய ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.
- நாடு முழுவதும் 157 மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக அதே இடங்களில் 157 நர்ஸிங் கல்லூரிகள் அமைக்கப்படும்.
- வேளாண் பெருமக்கள் நலன் கருதி கால்நடை வளர்ப்பு, பால்வளம், மீன்வளத் துறை மேம்பாட்டுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்படும்.
- உயர் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் விதமாக 3 செயற்கை நுண்ணறிவு ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்படும்.
- நகர்ப்புற கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.
- போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்ற ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வங்கி வைப்புத் தொகை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்வு. பெண்கள் வங்கிகளில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வைக்கும் தொகைக்கு 7.5% வட்டி வழங்கப்படும். இது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் அமலில் இருக்கும்.
- கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான மாற்று எரிபொருள் திட்டத்திற்கு ரூ.35 ஆயிரம் கோடி வழங்கப்படும்
- பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கான நிதி 66 சதவீதம் உயர்த்தப்படும். அதாவது, இத்திட்டத்திற்கு ரூ.79 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.
- விவசாய கடன் இலக்குத் தொகை ரூ.20 லட்சம் கோடி
- பழங்குடி மக்களுக்கான வீடு, குடிநீர், சாலை, தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.15 ஆயிரம் கோடி
வரும் 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து எந்தெந்த பொருட்களுக்கான விலை உயரும், எவற்றின் விலை குறையும் என்பது குறித்து பார்ப்போம்.
விலை உயரும் பொருட்கள்:
- தங்கம், வெள்ளி நகைகள்
- கவரிங் நகைகள்
- சிகரெட்
- இறக்குமதி செய்யப்பட்ட கார்
- இறக்குமதி செய்யப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள்
- மின்சார சமையலறை புகைபோக்கி
- இறக்குமதி செய்யப்பட்ட சைக்கிள்
- பொம்மைகள்
விலை குறையும் பொருட்கள்:
- இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொபைல் போன்கள்
- இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தொலைக்காட்சிகள்
- லித்தியம் அயன் பேட்டரிகளுக்கான இயந்திரங்கள்