21 நூற்றாண்டின் முதலாளித்துவம்- சுகுமார்.ஆர்

 முந்தைய இதழின் தொடர்ச்சி இருபதாம் நூற்றாண்டின் இறுதி பத்து ஆண்டுகளில் உலகப் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய போது 1930 ஆவது பத்தாண்டுகளின் நெருக்கடியின் போது தலை நிமிர்ந்து நின்ற சோவியத் ஒன்றியம் தள்ளாடியது . மூலதன இயக்கத்தின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்த அரசுடைமை முறையை உயர்த்திப் பிடித்த சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும் அதை பின்பற்றிய நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆட்சி அதிகாரத்தை அதாவது மூலதன இயக்கத்தின் மீதான அதிகாரத்தை இழந்தது. சோவியத் ஒன்றியத்தில் சுயநிர்ணய உரிமையுடன் இணைந்திருந்த தேசங்கள் கூட பிரிந்தன. ஆனால் மூலதன இயக்கத்தின் தேவையால் அத்தேசங்களையும் சேர்த்து ஐரோப்பியன் இதர தேசங்களையும் ஒருங்கிணைத்து புதிய அய்ரோப்பிய ஒன்றிய அரசு உதயமானது . இந்த நிகழ்வு தேசிய இனங்களுக்கிடையிலான மோதலுக்கான வரலாற்றுக் கட்டம் முடிவடைந்து இணைவதற்கான வரலாற்றுக் கட்டம் தொடங்கப்பட்டு விட்டதை அறிவிக்கிறது. மாமனிதன் லெனின் தேசங்களுக்கிடையிலான மோதல் கட்டத்தில் கருநிலையில் தொடங்கி வைத்த ஒருங்கிணைப்பின் வரலாற்று வளர்ச்சியாகவே சோவியத் ஒன்றிய அரசு உதிர்ந்ததும் ஐரோப்பிய ஒன்றிய அரசு உதித்ததும் வரலாற்று நிகழ்வாக இருக்கிறது.

புதிய ஜனநாயகப் போக்கு

கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்பாட்டில் இருந்த மூலதன சமூகமயமாகும் திசையில் இருந்து விலகிச் சென்ற போது சமூக ஜனநாயக போக்கில் பிளவு ஏற்பட்டது. மாவோ தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி உடைமை முறை மீதான ஜனநாயகப் போராட்டத்திற்கு முதன்மை அளிப்பதில் இருந்து விலகி சமூகமயமாகும் ஜனநாயக போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது. மாமனிதன் லெனின் உழைப்பும் உற்பத்தியும் சமகமயமாக இயக்கத்தை தீவிர படுத்தவே அரசுடமை முறையையும் கூட்டுறவு முறையும் பயன்படுத்தினார். அரசுடமை முறையை சமூகமயமாகும்ஜனநாயக கடமைகளை நிறைவு செய்யத் தவறிய தேசங்களையும் மக்களையும் ஒடுக்குமுறை கருவியாக மாறிய போது ஜனநாய இயகத்தில் புதிய போக்கு ஒன்று அடையாளம் காணப்பட்டது. உலக கம்யூனிஸ்டுகளுக் கிடையிலான மாபெரும் விவாதம் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு எதிரான சமூக ஜனநாயக போக்கிலிருந்து வேறுபட்ட புதிய ஜனநாயகப் போக்கு ஒன்றை உறுதி செய்தது. புதிய ஜனநாயகப் போக்கு உற்பத்தி சாதனங்களை நவீனப்படுத்து வதில் மூலதனத்தின் சுதந்திரத்தை அனுமதிப்பதும் தனி மனிதர்களின் வேலை உரிமைகளையும் வாங்கும் சக்தி யான கூலி உரிமை களையும் பாதுகாக் கும் பாட்டாளிகளின் போராட்டத்தை தீவிர படுத்தி வளர்த்திருப்பதையும் செய்தது. இந்த அணுகுமுறை மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்பாட்டில் இருந்த மூலதனம் உலக சந்தையில் வலிமையா னதாக வளர்ந்தது. உலகில் பல நாட்டு மூலதனங்கள் நெருக்கடியில் சிக்கிய போது சீனம் மூலதனம் வளர்ந்தது. உலக சந்தையில் அமெரிக்காவையும் இதர முதலாளித்து நாடுகளையும் பின்னுக்கு தள்ளியது. உலக மயமாதலில் தனியார் மயமாகும் போக்குக்கு எதிராக சமூக மயமாதலின் உந்து சக்தியாக சீன கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் மூலதனம் செயல்பட்டது.

உலகமயமாதலும் தனியார் மயமாதலும்

மூலதன வளர்ச்சி தேசிய எல்லைகளைக் கடந்த போது முதலாளித்துவ ஜனநாயகப் போக்கு ஏகாதிபத்திய அரசுகளையும் சமூக ஜனநாயக போக்கு அதிகார வர்க்க ஆதிக்க அரசுகளையும் படைத்தது .சோசலிசத்தின் பெயரால் சோவியத் ஒன்றியமும் ஜனநாயகத்தின் பெயரால் அமெரிக்காவும் முறையே வார்ஷா நேட்டோ தலைமை தாங்கி நடத்திய பனிபோர் உலகை யுத்த பயத்தில் எப்போதும் வைத்திருந்தது. மூலதன வளர்ச்சியில் தேசியப் பிரச்சினையின் முதல் வரலாற்று கட்ட இயல்பான தேசிய வாழ்வுக்கான விழிப்புணர்வு தேசிய அடக்குமுறைகளுக்கு எதிரான தேசியஇயக்கங்களும் போராட்டங்களும் தேசிய அரசுகளின் தோற்றமும் இரண்டாம் உலக யுத்ததிற்கு முந்திய நிகழ்வுகள் ஆனது. இரண்டாம் உலக யுத்தத்தில் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் ஏகாதிபத்திய கனவுகள் தேசங்களை கொடூரமான முறையில் அடக்கி அழித்தன. முதல் உலக யுத்தத்தின் முடிவில் கம்யூனிஸ்ட் கட்சி தோற்றுவித்த தேசங்களுக்கு இடையிலான ஒருங்கிணைவு இரண்டாம் வரலாற்றுக் கட்டத்தை தொடங்கி வைத்தது அமெரிக்க மற்றும் சோவியத் ஒன்றியங்களுக்கு இடையிலான ஆதிக்க போட்டியில் அணிசேரா நாடுகள் தங்களுக்குள் ஒன்று கலந்து முன்னேறுவதை ஊக்குவித்தனர்.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி நேட்டோ வார்ஷாவுக்கு இடையிலான பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்தது. இரண்டாம் உலக யுத்தத்தில் அழிந்தது போக மீதமுள்ள தேசிய முன்னணிகள் பனிப்போரில் அழிக்கப்பட்டு இருந்தனர். தேசங்களுக்கு இடையிலான ஒன்று கலத்தல் அதிகரித்தது. போட்டியில்லாத உலகில் தனி ஆதிக்கத்தை நிறுவ அமெரிக்க எடுத்த முயற்சிகள் தோல்வி கண்டன. ஐக்கிய நாடுகள் சபை மூலம் இதர நாடுகளை அடக்கி உலகளாவிய மூலதனத்தின் மீது அமெரிக்காவின் ராணுவ ரீதியான ஆதிக்கத்தின் நிறுவு எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி கண்டன மூலதனத் தின் தேசியத்தன்மையை தகர்த்து சர்வதேச தன்மையை நிலைபெற்றது மூலதனம் உலகமயமானது மூலதனம் உலகமய மாவதற்கு தடையாய் இருந்த தேசிய கட்டுப்பாடுகளை கைவிட அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டன ஏகாதிபத்தி யங்களின் ஏகபோக முலதனங்களுக்கிடை யிலான போட்டி தனித்து அவையும் ஒருங்கிணைந்தன மூலதனத்தின் மீது ஆதிக்கத்தை நிலை நாட்ட சோசலிசத்தின் பெயரால் ஏற்படுத்தபட்டிருந்த தேசிய கட்டுப்பாடுகளும் தகர்ந்தன. அக்கட்டுப் பாடுகளின் அரசு வடிவங்களாக இருந்த சமூக ஜனநாயக போக்கின் அரசுகளும் வீழ்ந்து அந்த தேசங்களும் உலக மூலதன இயக்கத்தில் ஒன்றிணைந்தன. மாமனிதன் லெனின் முன் அனுமானித்து சொன்னது போல மூலதனத்தின் சர்வதேச ஒற்றுமை நிஜமானது விஞ்ஞானத்திலும் அரசியல் பொருளாதாரத்திலும் மாபெரும் ஒருங்கி ணைப்பு ஏற்பட்டது. உலகமயமாதலால் சந்தையும் உற்பத்தியும் உலக மயமானது.மூலதனம் உலகமயமாகும் போது அதன் இணைவாக உழைப்பும் உற்பத்தியும் உலகமயமாக வேண்டும். அதாவது உழைக்கும் உரிமையான வேலை உத்தரவாதம் வாங்கும் சக்தியான கூலி உத்தரவாதம் உலகமயமாக வேண்டும். ஆனால் அந்த சமூகமயமாகும் போக்கு உலகமயமாகவில்லை மாறாக மூலதனத் தின் மீதான தனி உடமை முறையை காப்பாற்ற மூலதன பங்குகளை தனிநபர் உடமையாக்கும் பங்கு சந்தை வியாபாரம் வளர்க்கப்பட்டது. இருப்பினும் மூலதனம் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் குறிக்கிறது சுமார் 793 பன்னாட்டு நிறுவனங்களில் வசம் இன்றைய உற்பத்தி சாதனைகள் குவிந்துள்ளன. பங்கு சந்தை வியாபாரத்தின் மூலம் அந்நிறுவனங்கள் தனியார் சொத்து என்ற பிரம்மை ஏற்படுத்தி உள்ளது. எந்த தனிநபரும் மூலதனத்தை கட்டுப்படுத்த முடியாது. சமூக இயக்கமான பண்ட சுழற்சியில் ஈடுபடாமல் எந்த மூலதனம் எவ்வளவு பெரிய மூலதனமும் நிலைக் கவும் முடியாது வளரவும் முடியாது.

ஆகவே முதலாளித்து உற்பத்தி உறவான தனி உடைமை முறையை காப்பாற்ற முதலாளித்துவம் உற்பத்தி சாதனங்களில் இருந்து பிரிக்கப்பட்ட மூலதன பங்குகளை தனியார்க்கு சொந்தமாக்குவதன் மூலம் பாதுகாக்கிறது . மூலதன பங்குகளை பல மனிதர்கள் வாங்குவதன் மூலம் மூலதனம் தனியார் மயமாகிவிடுவதில்லை மாறாக எல்லைக்குள் இருந்த தனி உடைமை முறை தேசம் கடந்த தனி உடைமை முறையாக மாறுகிறது அதாவது தனி உடைமை முறை உலகமயமாவதாகும்.

21 ஆம் நூற்றாண்டின் முதலாளித்துவம்

21ம் நூற்றாண்டின் முதலாளித்துவம் உலகமயமான தனி உடைமை உற்பத்திக்கான சாதனங்கள் மீது தேசம் கடந்த தனி உடைமையை பாதுகாத்து தேசங்களை ஒழிக்கும் அடக்குமுறை கருவி. முதலாளித்துவத்திற்கு முந்திய தனி உடைமை முறையை மட்டும் அல்லாது தேசிய முதலாளித்துவ தனி உடைமை முறையும் அடக்கி ஒடுக்குகிறது பன்னாட்டு மூலதனத்தின் நிதி இயக்கம் பாரம்பரிய நில உரிமைகளை பறித்துபன்னாட்டு உரிமையாக்கும் நடவடிக்கைகள் மூலமாக பங்கு சந்தையில் மூலதனத்தின் மீதான தேசிய உரிமைகளைப் பறித்து பன்னாட்டு உரிமையாக்குவதன் மூலமாகவும் அழியும் உற்பத்தி சாதனங்களையும் மனித உழைப்பையும் புதுப்பிக்கும் இன்சூரன்ஸ் நடவடிக்கை மூலமாகவும் பன்னாட்டு மூலதனங்கள் உற்பத்தி சாதனங்கள் மீது தங்கள் கட்டுப்பாட்டை உறுதி செய்கின்றன. உலகம் முழுவதிலுமான உற்பத்தியும் விநியோகமும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது செய்தி தொடர்பு சாதனங்கள் மூலமாக மனிதர்களை நெருக்கமாக ஒருங்கிணைத் துள்ளது சரக்கு போக்குவரத்து உலகின் மூளை முடுக்கெல்லாம் இணைக்கப் பட்டுள்ளது. தேசிய மாண்புகள் கேள்விக்குறியாய் மாறி உள்ளது பன்னாட்டு மூலதன இயக்கத்திற்கு பணிந்து ஒருங்கிணைவது தேசபக்தியாக தேசிய முன்னேற்றத்துக்கான சமூக உணர்வாக மதிக்கப்படுகிறது தேசிய விடுதலைக்கான போராட்டங்கள் வெகுமக்கள் செல்வாக் கிழந்து பயங்கரவாதமாய் சீரழிந்துள்ளது பன்னாட்டு மூலதனத்திற்கு பணிந்து போவது பொருளாதார மேம்பாட்டுக்கும் சமூக அந்தஸ்துக்குமான வழியாக உள்ளது .

மானிடம் நவீனமயமாகி உள்ளது. ஆனால் மனிதர்களுக்கு இடையிலான பகை முடிவுக்கு வரவில்லை. இன்னும் உலகின் பெரும் பகுதி ஏழ்மையில் வாடிக் கொண்டிருக்கிறது. சொத்துக்கள் ஒரு சிலர் கையில் குவிந்துள்ளது. 750 கோடி மக்கள் கொண்ட உலகம் 793 பன்னாட்டு நிறுவனம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பன்னாட்டு நிறுவனத்தின் நலன்கள் பாதுகாக்கும் அரசுகளின் அடக்குமுறைக்கும் பழைமை வாத தாக்குதலுக்கும் இடையில் உலகம் சிக்கி தவிக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களில் லாபவெறி சுற்றுப்புற சூழல்களை மாசு படுத்தி நாசம் செய்து கொண்டிருக்கிறது. உலகின் பெரும் பகுதி மக்கள் வாங்கும் சக்தி அற்றவர்களாக தவித்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் உலகம் சந்தித்த பொருளாதார நெருக்கடி உலகமயமாதலும் தனியார் மயமாதலும் கடுமையான எச்சரிக்கையை வழங்கி உள்ளது. சீர் செய்து தனி உடைமையை காப்பாற்ற உலக வங்கி எடுத்த முயச்சிகள் வலிமையான வெகுமக்கள் எதிர்ப்பை சந்தித்தது. எல்லா அடையாளங்களும் பன்னாட்டு போட்டி அம்சமாகி உள்ளன .முதலாளித்துவத்திற்கு முந்திய தனி உடைமை முறையை மாற்றி அமைக்கும் ஜனநாயக இயக்கத்திற்கு இன்று பன்னாட்டு மூலதனமே தலைமை தாங்கு கிறது நாடுகளையும் தேசிய இனங் களையும் பழைய தனி உடமை முறையில் தங்களை தக்கவைத்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவத்திற்கு முந்திய விவசாய வர்க்கங்களையும் மூலதனை இயக்கத் தின் வளர்ச்சியில் உருவாகி இருக்கும் புதிய சிறு முதலாளித்து வர்க்கங் களையும் உலகமயமாதலுக்கு எதிராகவும் ஆதரவாகவும் முரண்பட்ட பல்வேறு அடையாளங்களில் அனைத்தையும் திரட்டி தனியார்மயமாதல் இயக்கத்தை பாதுகாக்கிறது.

உலகமயமாதல் இயக்கத்தின் தவிர்க் கப்பட முடியாத விளைவான சமூகமய மாதலை தடுத்து அனைத்து வகையான ஒடுக்குமுறைகளையும் கையாளுகிறது. மூலதன தனி உரிமை முறையை பாதுகாக்க தனி உடமை முறையை பாதுகாக்க வேண்டும் அனைத்து வழக்கங்களையும் அடையாளங்களையும் திரட்டி கொள்கிறது. மோதிக் கொள்ளும் இரண்டு பிரிவிற்கும் பின் புலமாய் பன்னாட்டு மூலதனமே செயல் படுகின்றன.

தனி உடமையை விரும்பும் பெரும் பான்மையினர் வரலாற்றில் தங்கள் உடமை இழப்பது தவிர்க்கப்பட முடியாத தாகும். முதலாளிகள் கூட தங்கள் உடமையை இழந்து கொண்டிருப்பது நிகழ்கால நிஜமாகும்.

தனியார் மயமாதல் என்பது உற்பத்தி சாதனங்கள் மீதான மூலதன உரிமைகளை பறித்து எடுத்துக் கொண்டிருக்கிறது. இன்று உற்பத்தி சாதனங்கள் மீதும் உழைப்பின் மீதும் ஆளுமை செய்து கொண்டிருக்கும் மூலதனம் பங்குகளாக பிரிக்கப்பட்டு பலரின் உடைமையாகக்கப்பட்டுள்ளது. மூலதன பங்குகளின் உரிமையாளர்கள் பேரளவில்தான் உரிமையாளர்கள், நிஜமான மூலதன இயக்கத்தில் மூலதன பங்கின் உரிமையாளர்கள் நேரடியாக செயல்பாடு அற்றவர்களாகவும் ஏது மற்றவர்களாவும் உள்ளனர். எல்லோரை யும் முதலாளிகளாகி விட முடியும் என்றநம்பிக்கை உருவாக்கும் இயக்கமாகவே தனியார்மயமாதல் இயக்கம் இருக்கிறது ஆனால் நிஜத்தில் அனைவரின் உடைமைகளையும் பரித்தெடுத்து சில நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் மூலதன இயக்கத்தை கொண்டு செல்வது தனியார்மயமாதல் இயக்கமாக இருக்கிறது .

21 ஆம் நூற்றாண்டின் மூலதன இயக்கம் இரண்டு போக்குகளை பிரதானமாகக் கொண்டிருக்கிறது ஒன்று உலகை பன்னாட்டு நிறுவனங்களில் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லுதல், தனியார் மயமாதல்; இன்னொன்று உலகை சமுதாய கட்டுப்பாட்டில் கொண்டு செல்லும் சமூகமயமாதல். தனியார் மயமாதல் இயக்க நிகழ்வுகள் உடமையை பெறவும் பாதுகாக்கவும் தனிநபர்களுக்கிடையில் போட்டியை மோதலையும் பகைமையையும் வளர்கிறது. சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்குப் பிறகு முதலாளித்துவ ஜனநாயக நிகழ்வுகள் என்பது தனியார்மயமாதல் ஆதரவு இயக்கங்களாகவே இருக்கின்றன. அவை அனைத்தும் முதலாளிகளை உருவாக்கும் அல்லது மூலதனத்திற்கு ஊழியர்களை தயாரிக்கும் இயக்கங்களாகும் .

சமூகமயமாக்கும் இயக்கம் என்பது அனைவருக்கும் வேலையையும் வாங்கும் சக்தியையும் உறுதி செய்யும் இயக்கம் ஆகும். சொத்தற்றவர்களாகி கொண்டிருக் கும் உலக மக்களின் வாழ்வுக்கு பாதுகாப்பு இயக்கம் ஆகும். சொத்தற்ற மக்களின் வாழ்க்கை உத்தரவாதம் வேலையை உறுதி செய்வதிலும் வாங்கும் சத்தியை உறுதி செய்வதிலுமே இருக்க முடியும். இயக்கமும் அது தொடர்புடைய நிகழ்வுகளும் சமூக இயக்கமாகும். இதர நிகழ்வுகள் அனைத்தும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தனியார் மயமாதலுடன் தொடர்புடையவே ஆகும்.

தேசம் கடந்த மூலதன தனிஉடைமை முறை அதற்கு முந்தைய அனைத்து உடைமை முறைகளையும் ஒழித்துக் கட்டுகிறது. இந்த மூலதன இயக்கத்தால் ஒடுக்கப்படும் முதலாளித்துவத்திற்கு முந்திய விவசாய வர்க்கங்கள் முதலாளித்து வர்கங்களான வியாபார வர்க்கங்களும் மூலதனத்திற்கு எதிராக அணிதிரல்கிறார்கள், ஆனால் முதலாளித்துவத்திற்கு எதிராக அணிதிரள் வதில்லை .

மூலதன இயக்கத்தின் இன்னொரு அம்சமான பாட்டாளி வர்க்கம் தன்வாழ்வுக்கான போராட்டத்தில் முதலாளி வர்க்கத்திற்கு துணை நின்று உற்பத்தி சாதனங்களை வளர்கிறது இருப்பினும் முதலாளித்துவம் தனது லாபத்தை அதிகப்படுத்தி கொள்வதற்காக கூலியை குறைப்பதன் மூலமாகவும் உற்பத்தி அதிகப்படுத்துவதன் மூலமாகவும் பாட்டாளி வர்க்கத்தை ஒடுக்குகிறது ; சமுதாயத்தின் வாங்கும் சக்தியை குறைத்து சந்தையில் தேக்கத்தை உண்டாக்குகிறது. இதனால் பண்ட சுழற்சி இயக்கம் பாதிக்கப்படுகிறது. அதனால் மூலதனம் நெருக்கடிக்கு உள்ளாகி மானிடம் பின்னோக்கி இழுக்கப்படுகிறது. ஆகவே தான் பாட்டாளி வர்க்கத்தின் வாங்கும் சக்தியை பாதுகாக்கும் போராட்டம் மானுட விடுதலைக்கான போராட்டமாகும் மனிதர்கள் அனைவரையும் ஒரே உற்பத்தி விநியோக இயக்கத்தில் இணைக்கும் மாபெரும் ஜனநாயக இயக்கத்தின் அங்கக உறுப்புகள் ஆகும் பாட்டாளிகள் வாங்கும் சக்தியை பாதுகாத்து கொள்ளவும். வேலையை பாதுகாத்துக் கொள்ளவும் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம் அது எந்த மட்டத்தில் இருந்தாலும் அது உற்பத்தியின் விநியோகத்தை சமூகமயமாக்கும் போராட்டம் ஆகும் மானுடத்தை முன்னோக்கி உந்தி தள்ளும் போராட்டமாகும் .

மூலதனத்திற்கு எதிராக போராடும் விவசாயி வர்க்கங்களும் வியாபார வர்க்கங்களும் தனி உடமை முறையை தக்க வைத்துக்கொள்ள போராடுவதால் இவர்களிடையே போராட்டம் முதலாளித்து சமுதாயத்தை தக்க வைத்துக் கொள்ளும் போராட்டமாகும். அந்தப் போராட்டங்களில் நேர்மையான உண்மையான வீர போராளிகளும் தியாகிகளும் அவர்களு டைய வர்க்கம் ஒழிந்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவத்தை பாதுகாக்கவே போராடிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் முதலாளிகளாகளாகிவிட முடியும் என்ற நம்பிக்கைக்கும் வாழ்வில் இருப்பதை இழந்து கொண்டிருக்கும் நிஜ வாழ்க்கை உருவாக்கும் அவநம்பிக் கைக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய போராட்டம் பெருவீதமாகும் மூலதனஇயக்கத்திற்கு எதிராக இருந்தபோதிலும் தனியார்மயமாக முதலாளித்துவத்திற்கு ஆதரவாக இருக்கிறது.

இந்த வர்க்கங்கள் முதலாளியாக முடியாது, ஏனெனில் ஒருவர் முதலாளியாக வேண்டும் எனில் ஆயிரக் கணக்கானவர்கள் ஏதுமற்ற பாட்டாளிகளாக வேண்டும் எனவே அந்த வர்க்கங்கள் பாட்டாளி ஆகுவது தவிர்க்கப்பட முடியாது ஆகவே அந்த வர்க்கங்கள் உடைமை முறையை பாதுகாத்துக் கொள்வதற்காக போராடுவதற்கு பதிலாக வாங்கும் சக்தியை பாதுகாத்துக் கொள்வதற்காக போராடி பாட்டாளி வர்க்கத்தினுடன் இணைந்தால் மானுட சமூகமாக மயமாவதை துரிதப்படுத்த முடியும்.

எல்லா மனிதர்களையும் வாங்கும் சக்தி உடையவர்களாக ஆக்குவதற்கு மாற்றுவது என்பது பகையற்ற மானிட சமுதாய அமைப்பதற்கான நிபந்தனையாகும். மனிதர்களின் வேலையை உறுதி செய்வதால் மட்டுமே வாங்கும் சக்தியை உறுதி செய்ய முடியும். ஆகவே எல்லோருக்கும் வேலை நல்ல ஊதியம் பெறுவதற்கான இயக்கமே சமூகமயமாகும் இயக்கமாகும் தனியார் மயமாதல் என்பது முதலாளி மயமாகும் இயக்கமாகும் எல்லோரும் முதலாளிகளாக முடியாது ஆனால் எல்லோரும் பாட்டாளிகளாக முடியும். பங்கு சந்தை மூலம் பலர் மூலதான உரிமையாளர்களாக மாறுகிறார்கள் என்பது தனியார் மயமாதலின் வளர்ச்சி அல்ல மாறாக அது மூலதன சமூகமாகும் இயக்கத்தின் தாறுமாறான வடிவம் ஆகும்.

மூலதனம் எந்த தனி நபராலும் வளர முடியாது. மாறாக அது சமூக உழைப்பை பயன்படுத்தி சமூக தேவைகளை உற்பத்தி செய்வதால் மட்டுமே வளர முடியும். சமூகத் தேவை என்பது தனி மனிதர்களின் தேவை அல்ல தனிமனிதர்களை உறுப்பாக கொண்ட சமுதாயத்தின் அங்கக உறுப்பான குடும்பத்தின் தேவைகள் ஆகும்.

குடும்ப அமைப்பே உழைப்பு உற்பத்தி செய்கிறது. ஆகவே குடும்ப அமைப்பின் பராமரிப்பு செலவே உழைப்பின் உற்பத்தி செலவு ஆகிறது. ஆகவே தனி மனிதனின் உழைப்புக்கான கூலி அதாவது வாங்கும் சக்தி என்பது அவன் சார்ந்த குடும்பத்தின் பாரமரிப்பு செலவாகும். ஆகவே வாங்கும் சக்தியை பாதுகாக்கும் வளர்த்தெடுக்கும் இயக்கம் குடும்ப முறைகளை மேம்படுத்தி உயர்தர மனிதர்களை உருவாக்கிதேவையற்ற ஏற்றத்தாழ்வுகளை வேறுபாடுகளையும் அகற்றி சமூகமயமாகும் இயக்கமாகும்.

ஆகவே இந்த இயக்கம் மதப் பகை இனப் பகை சாதிப்பகை ஆகிவற்றை ஒழித்து இறுதியில் அந்த அடையாளங்களையும் தேவையற்றதாக்கும் இயக்கமாகும். நீண்ட காலமாக மானிடம் உயர்த்திப் பிடித்திருக்கும் மானுட மாண்புகளான அன்பு அடக்கம் ஒழுக்கம் பொறுமை ஒப்புரவு ஆகியவற்றை நிஜமாக்கும் இயக்கமாகும். மானுடம் கேடுகள் ஆன இன்னா செல் துரோகம் ஒரு சார்பு மாற்றான் பொருளுக்கு ஆசைபடல் பொறாமை திருட்டு புறம்போக்கு திரிதல் வெறித்தனம் போன்றவற்றை தேவையற்றதாக்கும் இயக்கமாகும்

ஆகவே மானுட விடுதலைக்கான நிஜ இயக்கம் வாங்கும் சக்தியை பாதுகாப்பதற்கும் அதற்கான வேலை உரிமையை நிலைநாட்டுவதற்குமான இயக்கமாகும் இந்த இயக்கமே மானுடர் ஒற்றுமையை உயர்த்திப் பிடித்து உறுதிப்படுத்தும் இதர இயக்கங்கள் மிக உன்னதமான மனிதர்களுக்கிடையே பகை உண்டாக்கி வளர்த்து ஆக்கபூர்வமான மனிதர்களை அழிவு சக்திகளாக மாற்றிவிடும்.

சிந்தனை முறையில் உயர்ந்தவர்களாக.

அரசியல் பொருளாதார வாழ்வில் உயர்ந்தவர்களாக

மானுட வாழ்வில் உயர்ந்தவர்களாக

வளர்வோம் வளர்த்தெடுப்போம் - சுகுந்தன்

இந்த கட்டுரை இத்தோடு முடிவடைகிறது தோழரின் அடுத்த கட்டுரை வந்த பின் தொடரும்.

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்