அன்பு தோழர்களே கவின்மொழி அவர்கள் தன்முகநூல் பகுதியில் எழுதிய விவாதம் அதன் மீதான விமர்சனம் எப்படி சென்று கொண்டுள்ளது என்பதனை பதிவு செய்யவே இந்த எழுத்து.
எதிரியையும் நண்பனையும் புரிந்துக் கொள்ளமையும், விவாதமென்பதை நமது அகநிலையிலிருந்து விடுத்து பேசும் பொருளின் கோணத்திலிருந்து மார்க்சிய வகை பட்டதா தன்நிலை வகைப் பட்டதா என்று புரிந்துக் கொண்டாலே விவாதம் சிறக்கும் தோழர்களே.
மேலும் நாம் வாழும் சமூகத்தில் உள்ள எல்லா பிற்போக்குதனங்களையும் வெறும் ஏகாதிபத்திய கலாச்சார சீரழிவுகள் என்று ஒதுக்கி தள்ளுவதோடு அந்த முரணை தீர்பதற்கு மக்களுக்கு வழிவகை செய்ய என்ன செய்துக் கொண்டுள்ளோம்?
1944 ல் மாவோ கூறியிருப்பார்," ஊழியர்கள் கட்சியின் வரலாற்றில் உதித்த சிக்கல்களின் மீது கருத்தியல் ரீதியாகக் குறைபாடு இல்லாமல் தெளிவாக் மாறுவதற்கு நாம் வழிவகை செய்ய வேண்டும் எனவும் அதே நேரத்தில் முன்பு தவறுகளை இழைத்த தோழர்களைப் பற்றிய முடிவுகளுக்கு வந்து சேர்வதில் நாம் கனிவான கொள்கையைப் பின் பற்ற வேண்டும்", கடந்த கால தவறுகளை மீண்டும் செய்வதை தவிர்ப்பார்கள்;மறுபுறத்தில் அனைத்துத் தோழர்களும் நமது பொது பெரும் முயற்சிக்காக அய்க்கிய படுத்தமுடியும்".
மேலும் மாவோ,"நம்மிடம் குறைப்படுகள் உள்ளதெனில் அவற்றைச் சுட்டிக் காட்டவும் விமர்சிக்கவும் பயப்படக் கூடாது.ஏனெனில் நாம் மக்களுக்காகச் சேவை செய்கிறோம். எவரும், அவர் யார் அன்பது முக்கியமல்ல, நமது குறைபாடுகளைச் சுட்டிக்காட்டலாம் அவர் குறிப்பிடுவது சரியானதாக இருக்குமாயின் அவற்றைச் சரிசெய்துக் கொள்வோம். அவர் எடுத்துச்சொல்வது எதுவும் மக்களுக்கு பயனளிக்குமாயின் அதன்படி செயற்படுவோம்".
இங்கே நீங்கள் விவாதித்துக் கொண்டிருப்பதை சற்று சீர்தூக்கி பாருங்கள். உங்கள் விவாதமுறை என்னவென்று புரிந்துக் கொள்ள. படங்கள் மேலே உள்ளது.
யாரும் பின்நவீனத்துவ குப்பையையோ நீங்கள் கூறும் சீரழிவு கலாச்சாரத்தையோ பேசவில்லை, நீங்கள் மார்சியத்தையே உங்களின் தேவை போல் பேசுகின்றீர்கள் என்பதுதான் விமர்சனம். அதை புரிந்துக் கொள்ளாமல் எத்தனை எத்தனை தேவையற்ற இட்டுகாட்டல்.
தோழர்களே நாம் மார்க்சியத்தை நேசிப்பவர்கள் நமது பணியால் மார்க்சியம் வளர வழி செய்யவேண்டுமே ஒழிய தம்மை மேண்மை படுத்தி காட்ட மார்க்சியத்தை கேடாக பயன்படுத்தாதீர் என்பதோடு உங்களின் எல்லா விவாத லிங்குகளையும் கீழே உள்ளது வாசித்து விவாதிக்க அழைக்கிறேன்.
தனிநபர் தாக்குதல் அற்ற மார்க்சிய முறையில் விவாதிக்க அழைக்கிறேன் வாருங்கள் விவாதிப்போம் தோழர்களே...
"கட்டற்ற பாலியல் சுதந்திரக் காதலை" எதிர்ப்பது என்ற பேரால் "காதலு"க்கு நிலபிரபுத்துவக் கால வரையறையை மார்க்சின் பேரால் sidhambaram Voc என்ற தோழர் வழங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இப்போது அவசியமா அதற்கு பதிலளிப்பது என்றால் மார்க்ஸ், லெனின் பேரால் விளக்கப்படும் தவறான வரையறைகளுக்கு பதிலளிப்பது அவசியம் என கருதுகிறேன். கீழ்க்கண்டவை அப்பதிவு.....
"மார்க்ஸ் தன் மகளைக் காதலித்த தோழருக்கு எழுதிய கடிதமொன்றில் திருமணத்திற்கு முன்பு இருவரும் தொட்டுப்பேசுவதையும் நெருக்கமாக பழகுவதையும் கண்டித்திருப்பார். அக்கடித்தத்தை நாம் வாசிக்க வேண்டும்.
காதல் என்பது திருமணத்திற்கு முன்பு தொட்டுப்பேசுவதும் ,உறவு வைத்துக்கொள்வதும் , குடித்துவிட்டுக் கூத்தடிப்பதும் அல்ல."-sidhambaram Voc பதிவு.....
"மார்க்சியம் பேசுபவர்கள் கூட காதலை காமத்தின் கருவியாக கருதுவதுதான் பரிதாபத்துக்குரியது. sidhambaram Voc comment.....
" திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்வது பாட்டாளி வர்க்கப் பண்பாடு அல்ல தோழர். ஏனெனில் காமம் தீர்ந்த பின்பு சிலருக்கு காதலும் தீர்ந்துவிடுகிறது. பிறகு அது திருமணம் வரை செல்வதற்கு வாய்ப்பு குறைவுதான்.திருமணம் செய்துகொள்வதாக இருந்தாலும் உடல்தேவைகளை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது என்பது காமத்தை பிரதானப்படுத்துவதே. மனமொத்த புரிதலே முதன்மையானது. தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் செய்தாலும் அது ஒழுக்கக்கேடுதான் தோழர். "-----பகத்சிங் பாரதி Comment........
-------------------------
மேற்கண்ட பதிவுகள் மார்க்ஸ், லெனின் போன்றோரின் சொற்களை, விவாதங்களை , எக்கட்டத்தில் யாருக்கு எதற்காக கூறப்பட்டது....எதற்காக விவாதிக்கப்பட்டது என்ற உண்மைகளை மறைத்து, யாந்திரிகமாக, இயங்கிலற்ற முறையில் மார்க்சியத்தையும் மார்க்சிய கோட்பாடுகளையும் பயன்படுத்தும் மிக தவறான மேற்கோள் முறைகளாகும். இவர்கள் குறிப்பிடும் சொற்றொடர்களை…. நூல்களை….. படிக்காத தோழர்களை குழப்பி மார்க்சிய ஆசான்களின் பேரில் தவறான கருத்துக்களுக்கு இட்டுச் செல்வது ஆகும்.
* முதலில் கட்டற்ற பாலியல் சுதந்திரக் காதலை மார்க்சியம் ஆதரிக்கவில்லை.
* "பாலுறவு விவகாரங்களில் நெறியற்ற போக்கு முதலாளித்துவ இயல்புடையதாகும். சீரழிவின் அடையாளம் ஆகும். பாட்டாளி வர்க்கம் வளர்ந்து வரும் வர்க்கம் .மதி மயக்கம் தரும் அல்லது உணர்ச்சி எழுச்சி அழிக்கும் போதை எதுவும் அதற்குத் தேவை இல்லை.பாலுறவுகளில் ஒழுங்கீனத்தின் மூலமோ குடியின் மூலமோ அது போதைப் பெறத் தேவையில்லை .", "தன்னடக்கமும், தற்கட்டுப்பாடும் அடிமை நிலை அல்ல; காதலிலும் அவை இன்றியமையாதவை.", "காதலில் இருவர் பங்கு கொள்கிறார்கள் .மூன்றாவது ஒரு புதிய ஜீவனும் உதிக்கிறது. ஆகவே இது சமுதாய நலன் சம்பந்தமானது ஆகி விடுகிறது ."-----என் நினைவுகள் லெனின் நூலில் உள்ள லெனின் கிளாரா ஜெட்கினிடம் கூறும் மேற்கண்ட சொற்றொடர்கள் எனக்கு மிகுந்த பிடித்தமான சொற்றொடர்களாகும்.
* ஆனால் இவற்றை எதை எதிர்த்து லெனின் கூறினார் "விடுதலைக் காதல்" என்ற காதல் என்பது யார் யாரிடமும் உறவு கொண்டு பிரியும் சுதந்திரம்- என் ற கோட்பாட்டை எதிர்த்து கூறினார்.இந்த வாக்கியங்களை கட்டற்ற பாலியல் சுதந்திரம் கோரும் பின்நவீனத்துவவாதிகளுக்கு எதிராக பயன்படுத்துவது சரியானதே.
* ஆனால் காதல் என்றாலே திருமணம் என்ற சமூக ஏற்பாட்டுக்கு முன் தொடக்கூடாது, உடலுறவு தவறு, பண்பாட்டு சீரழிவு, கட்டுடைத்தல், பின்நவீனத்துவம் என்ற வரையறையறையை படிக்கும்போது பாசிச பாஜகவின் ...நில ஆண்டைகளின் வரையறையை படிப்பது போல் உள்ளது. அதற்கு மார்க்ஸின் கடிதத்தை பயன்படுத்தியவுடன் நிச்சயமாக பதிலளிக்க வேண்டி வந்தது. காதலில் காமம் ஒழுக்கக்கேடு என்பதும்....கட்டற்ற பாலியலையும், காதலில் உடலுறவையும் சமப்படுத்துவது தவறானதாகும்..... காதலின் இயற்கைத் தன்மையை மறைத்து வறட்டுத்தத்துவம் நாமாக எழுதக் கூடாது. மேலும் மார்க்சியம் வறட்டுத்தத்துவம் அல்ல………..
* தோழர்களே! நிச்சயமாக காதலை பற்றிய மார்க்சிய ஆசான்களது வரையறை இதுவல்ல.......காதல் அன்பை மையமாகக் கொண்டு சுதந்திர தேர்வாகவும், ஆண்பெண் சமத்துவத்துவத்தை அடிப்படையாகவும், உறவில் சமூக கடமையை உணர்ந்த பொறுப்பு வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும். கருத்து முரண்பாடு ஏற்பட்டு சேர்ந்து வாழ முடியவில்லையெனில், பிரிவு என்ற வாய்ப்பை நேர்மையாக தேர்ந்தெடுத்து பிரிவது….என்பதுவே.
* மார்க்சிய ஆசான்களில் யாரும் திருமணத்துக்கு முன் காதலுக்கு வரையறையை சொல்லவில்லை. திருமணம் எவ்வாறு சுதந்திர தேர்வாகவும், சொத்துடைமை தடையில்லாமல் அன்பை மையமாக, சமத்துவத்தை மையமாக கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.
* ஆணாதிக்க சொத்துடைமை கொண்ட குடும்ப அமைப்பில், பாசிச சுரண்டல் பொருளாதார வாழ்வில் காதல் வாழ்வு சின்னாபின்னமாக்கப்படுகிறது. ஒழுக்கம் ஏழைப்பெண்களுக்கு அவர்கள் விரும்புவதல்ல. காதல் வாழ்வு அவர்கள் விரும்புவதல்ல....முறைப்படி திருமணம் செய்த இந்து முஸ்லீம் காதல் தம்பதியின் கரு கலைக்கப்படுகிறது.....படித்த பெண்கள் பழை ய நிலபிரபுத்துவ விழுமியங்களில் ஒடுக்கப்படும்போது....பொருளாதார சுரண்டல் குடும்ப அமைப்புகளை கலைக்கும்போது.......காதல், திருமணம் பற்றிய எந்த ஒழுக்கத்தை பேசுகிறீர்கள். காதலும், குடும்பமும் சுரண்டல் சமூகத்தால் கலைக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது கம்யூனிஸ்டுகள் நிறையவே ஆண்பெண் உறவுகளில் ஆய்வு செய்து குடும்ப உறவுகளைப் பற்றி தெரிந்து தீர்வு காண வேண்டியுள்ளது.
* ஏங்கெல்சும், அலெக்சாண்டிரா கொலெண்டையும் புதிய சமூகத்தில் குடும்ப உறவு முறையை மக்களே தீர்மானிப்பார்கள் என்கிறார்கள். அவையும் மேற்சொன்ன காதல் வாழ்வின் வரையறையில் வலியுறுத்தினர். காதலில் ஒருவொருக்கொருவர் அன்பாகவும் சமத்துவமாகவும் சமூக கடைமையோடும் வாழ வேண்டும் என்பதோடு நிற்க வேண்டியுள்ளது. இன்றைய சமூகத்தில் திருமணம் பெண்ணுக்கு கூடுதல் பாதுகாப்பானதாக சில அம்சங்களில் உள்ளது.
*"புதிய சோசியலிச சமூகத்தில் எந்த மாதிரியான உறவுகள் இருக்க வேண்டும் என்பது குறித்து கொலெண்டையும் ஏங்கல்ஸ் போலவே எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.புதிய தலைமுறைகள் எழும்போது அவர்களே இந்த உறவுகள் குறித்து தீர்மானித்துக் கொள்வார்கள் என்று கொலெண்டை தெரிவிக்கிறார்.இருந்தாலும் வருங்காலத்தில் ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் எந்தக் காலகட்டத்திலும் பணபலத்தைக் கொண்டோ, அல்லது வேறு எந்த சமூக ஆதாரத்தைக் கொண்டோ, எந்த ஒரு பெண்மணியையும் வாங்கி வசப்படுத்திக் கொள்ளும் வசதி புதிய சமூகத்தில் அறவே இருக்கவே கூடாது என்று கொலெண்டை கனவு கண்டார் "------சொ.பிரபாகரன், அலெக்சாண்டிரா கொலெண்டை வாழ்வும் பணியும், காதல் நூலிலிருந்து.........
* இறுதியாக காதல் , திருமணம் பற்றி தெளிய "குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்" என் ற ஏங்கெல்சின் நூல், காதல் எவ்வாறு சோவியத் ரஷ்யாவில் கையாளப்பட்டது என்ற மேம்பட்ட பார்வையை பெற "காதல்" என் ற நாவல் தொகுப்பு அலெக்சாண்டிரா கொலெண்டை அவர்களின் நூல் படித்து தெளியுமாறு அனைத்து தோழர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
* நாம் செல்ல வேண்டிய தூரம் வெகு தொலைவில்....அதற்குள் தீர்ப்புகள் வேண்டாம் தோழர்களே!
42You, Vchinnadurai Durai, Shanmugam Chandrasekharan and 39 others
இதற்கு பதிலுறையக செழியன் தோழரின்பதில்
விமர்சனத்தின் பெயரில் உள்ள வன்மத்தை புரிந்துக் கொள்ளவே
தோழர் திருப்பூர் குணா பதிவு
இதில் விவாதம் எந்த அடிப்படையில் உள்ளது புரிந்துக் கொள்ள
தோழர் கவின் மொழியின் பதிவு இவை
எனது விளக்கம்.
குடும்பச் சண்டைகள் ஏன்?”
“ஒருவரது உழைப்பு சுரண்டப்படும்போது, அங்கு தோன்றும் உறவை பகைமை உறவு என்று நாம் கொள் கிருேம். தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் தோன்றும் உறவு பகைமை உறவு.”
“பகைமை உறவு என்றால்.”
“தொழிலாளியும் முதலாளியும் என்றும் ஒற்றுமையாக இருக்க முடியாது. ஒரு வர்க்கத்தை மற்றவர்க்கம் அழிப்பதன் மூலமே பகைமை தீர்க்கப்படும் இதே போலவே உழைப்பு அத்துமீறிச் சுரண்டப்படும் பெண்கள் உழைப்பைச் சுரண்டும் கணவருக்கோ, குடும்பத்திற்கோ எதிராகப் போராடுகின்றனர். இதனலேயே இன்றைய சமுதாய அமைப்பில் குடும்பங்களிடை ஒற்றுமையையோ, மகிழ்சியையோ காணமுடியாது.
வரலாற்றுத் தரவுகளை தொகுத்து மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரால் வெளியிடப்பட்ட பெண்ணடிமையின் ஆரம்பம் பற்றிய கருத்துக்கள் இன்றைய மனிதகுல வரலாற்றின் ஆரம்பகாலத்தில் நிலைப்பெற்றிருந்த தாயுரிமைச் சமுதாயத்தில் பெண் தலைமை பெற்றிருந்தாள். தாயை வைத்தே பிள்ளைகளை அடையாளங் காணும் குழுமணமுறையும், கூட்டுவாழ்க்கையும் அன்று இருந்தது. தமக்கென எதையும் சேர்த்து வைக்க அறியாத, கூடி உழைத்ததை கூடியே உண்டு வாழ்ந்த அப்புராதன பொதுவுடைமைச் சமுதாயம் காலப்போக்கில் தகர்ந்து போனது.
தனியுடமைச் சமுதாயம் உருவானது. ஆண் தனது சொத்துக்குரிய சரியான வாரிசை அடையாளங்காணும் தேவை ஒருதார மணக்குடும்ப முறையை உருவாக்கியது. அன்றிலிருந்து பெண் சமூக உழைப்பிலிருந்து பிரிக்கப்பட்டு வீட்டு வேலைக்கு உரியவளாக்கப்பட்டாள். ஏங்கல்ஸ் அவர்களின் கூற்றுப்படி “வரலாற்றில் தோன்றியமுதல் வேலைப்பிரிவினை அதுவானது. முதல் அடிமையும் பெண்ணானாள்’ பிற ஆடவனை நிமிர்ந்து நோக்காத அடக்கமும், கணவனுக்கு அஞ்சி, நாணி ஒடுங்கும் தன்மையும், எதிறுரை பேசாத அடிமை சிறுமதியும் பெண்களின் பண்பாக படிப்படியாகப் பேணிவளர்க்கப்பட்டது. ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்று நாம் பெருமையுடன் பேசிக்கொள்ளும் பழைய பண்பாட்டு உறவுமுறைகள் தனிமையுடைமை அமைப்பின் வெளிப்பாடாக உலகெங்கும் தோற்றம் பெற்றவையே.
அடிமைகளின் உழைப்பில் உல்லாசமாக வாழ்ந்த ஆளும் வர்க்கம் தம் அனுபவிக்கும் போகப் பொருட்களில் ஒன்றாகவே பெண்களையும் ஆக்கிக்கொண்டது அதாவது ஆணாதிக்க சமூகத்தில் பெண் அடிமையே ஆகவே இச் சமூகத்தில் ஆண் ஒடுக்குபவனாகவும் பெண் ஒடுக்கப் படுபவளாகவும் உள்ளானால். ஒடுக்குபவனும் ஒடுக்கப் படுபவனும் ஒற்றுமையாக இருக்க முடியாது என்பதே நமகளித்த அரசியல் ஆகவே இந்த சுரண்டல் அற்ற ஆண் பெண் சமத்துவமான அமைப்புமுறையிலே ஆணும் பெண்ணும் நட்பாக வாழ முடியும்…