இடதுசாரி இயக்களுக்கு இடையில் ஒற்றுமை இன்மை ஏன்? ஒலி வடிவில்
இரண்டாவது உலக யுத்தத்திற்கு பிறகு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்ட நவீன காலனி ஆதிக்கத்தின் கொடூரமான கபடத்தனமான காலனி வடிவம் என்று மாபெரும் விவாதம் நடந்த போது சீன கம்யூனிஸ்ட் கட்சியாலும் மாவோவாலும் குறிப்பிடப்பட்டது.
இன்னும் சில கருத்துக்கள்
மார்க்சிய தத்துவமானது அறிவியலோடு உண்மையோடு நெருக்கமாக பிணைக்கப்பட்ட ஒன்றானது என்பதை அறிவோம்.
இன்று உலகில் எங்கேயுமே சோசலிச நாடுகள் இல்லாத நிலையில் மார்க்சிய தத்துவம் தோற்றுப் போய்விட்டது என்று பிரசாரம் செய்கிறார்கள் உலகெங்கும்.
மார்க்சியத்தை மறுத்து திருத்தி புரட்டி ஏராளமான நூல்கள் கட்டுரைகள் வெளியிடுகின்றனர். வர்க்கப் போராட்டத்தை மறுத்து ஜாதி மத இனப் போராட்டங்களை பெருமளவில் ஊக்கிவிக்கப்படுவதற்காக தத்துவ அடிப்படையில் நூல்கள் கட்டுரைகள் எழுதிக் குவிக்கின்றனர்.
சோவியத்தின் தகர்வோடு சோசலிச நாடுகள் முதலாளித்து மீட்சி ஏற்படுத்தியதியதை சோசலிசத்தின் தோல்வியாகவும் மார்க்சியத்தின் தோல்வியாகவும் முன் வைக்கின்றனர். சோசலிச புரட்சிக்கு பின்பு முதலாளி வர்க்கம் முழுமையாக ஒழிக்கப்படுவதில்லை. பின்பு தொடர்ச்சியான வர்க்க போராட்டங்கள் மூலமாக வர்க்கங்கள் ஒழிந்து சோசலிசம் உறுதிப்படும் வரை வர்க்கப் போராட்டத்தின் அவசியத்தை நமது பேராசான்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். சூழலியல் கூறுக்களின் இடமாற்றத்திற்கு முதலாளி மீட்சி வாய்ப்புண்டு என்பதை லெனின் தெளிவுபடுத்தி உள்ளார்.
இன்றைய மார்க்சிய இயக்கங்களும் தத்துவங்களும் தற்காலிக பின்னடைவை ஏற்பட்டுள்ளது மறுப்பதற்கு இல்லை. ஆனால் உலகையே ஒரே குடைக்குள் கொண்டுவர நினைக்கும் ஏகாதிபத்தியத்தின் சுரண்டலை தற்காலிகமாக பல்வேறு நிதி ஆதாரங்களுடனும் நிதி மூலதன ஆதிகத்தின் மூலமும் மக்களின் போராட்டங்களை திசை திருப்பிக் கொண்டிருக்கலாம் ஆனால் இவற்றுக்கெல்லாம் விடிவு என்பது மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் தான் என்பது கண்கூடாக நாம் கண்டவை தான்.
நிதி மூலதன ஆதிக்கத்தால் ஏகாதிபத்தியங்கள் ஏகாதிபத்திய சூழ்நிலை மறுப்பதற்கு மார்க்சியத்தை புரட்டுவதும் ஏகாதிபத்திய சேவை செய்ய கருத்தியல் ரீதியாக பல்வேறு விதமான தாக்குதலை மார்க்சியத்தின் மீது தொடுத்துக் கொண்டுள்ளனர்.
ஏன் இன்று மார்க்சியம் பேசும் கட்சிகளும் புரட்சி பேசும் மார்க்சிய லெனினிய குழுக்களும் மார்க்சியத்தை பேசிக் கொண்டே ஏதாவது ஒரு வகையில் இந்த ஏகாதிபதிவாதிகளுக்கு சேவகம் செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இச் சூழலில் மார்க்சிய லெனினிய கல்வியானது புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது நம் கண் முன் உள்ள உண்மைதானே.
ஆக தோழர்களே நமது ஒற்றுமைக்கு தேவையானவற்றை நமது ஆசான்கள் கொடுத்து விட்டு போய்யுள்ளனர் அவற்றை கற்பதும் ஒரு சரியான மார்க்சிய லெனினிய கட்சியின் அவசியத்தை உணருங்கள்.
மேலும் இணையத்தில் கேட்க்க ஒலி வடிவில் தோழர்களே.