முந்தைய இதழின் தொடர்ச்சி
மூலதன இயக்கத்தின் மூன்று அம்சங்கள்
மூலதன இயக்கம் மூன்று உள்ளடக்கங்களை கொண்டிருக்கிறது ஒன்று உற்பத்தி சாதனங்களை பழைய தனி உடமை முறையில் இருந்து மூலதனத் தனியுடைய முறைக்கு மாற்றுவது இரண்டு உழைப்பை உற்பத்தி சாதனைகளி லிருந்தும் சமூக கட்டுப்பாடுகளிலிருந்து பிரித்து ஏதும் மற்ற உழைப்பாளிகளை படைப்பது. மூன்று பிழைப்பு சாதனங்களை பண்டங்களை பயன்படுத்துவதற்கு தடைகளை தகர்த்து அனைவரும் பயன்படுத்தும் படி மாற்றுவது. வேறு வார்த்தைகள் சொன்னால் உற்பத்தி சாதனங்களை மூலதன மயப்படுத்தி உழைப்பையும் உற்பத்தியையும் சமூகமயப் படுத்தியது. இந்த மூன்று மூலதன இயக்கத்தின் ஜனநாயக அம்சங்களாகும். முதலாளிதுவத்திற்கு முந்தைய சமுதாயத்தின் மூடத்தனங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஒடுக்கும் முறைகளுக்கும் எதிரான இயக்கங்களின் ஊற்றுகண்கள் ஆகும். இந்த மூன்று அம்சங்களும் ஜனநாயக இயக்கத்தில் மூலதனமயமாக்கல் மற்றும் சமூகமயமாக்கல் என்ற இரண்டு போக்குகளை படைத்தது. மூலதன இயக்கத்தில் மூலதனம் வளரும் போது உழைப்பும் உற்பத்தியும் சமூகமயமாவது தவிர்க்க முடியாது. அதை தலைகீழாக சொன்னால் உழைப்பும் உற்பத்தியும் சமூகமயமானால்தான் மூலதனம் வளர முடியும் இந்த சமூக மயமாதலே மானுட சமுதாயத்தின் முன்னோக்கிய வளர்ச்சி ஆகும்.ஆகவே தான் பேரறிஞர் மார்க்ஸ் மூலதனத்தை சமூக சக்தி என்று வலியுறுத்தினார்.ஆனால் மூலதன மயமாதல் என்பது தனி உடைமை முறையை நிலை நிறுத்துவதாகும். சுருங்கச் சொன்னால் முதலாளித்து வதிற்கு முந்தைய சமுதாயத்தின் அனைத்து உற்பத்தி உறவுகளையும் மாற்றி அமைத்து முதலாளித்துவ ஜனநாயக இயக்கம் தனி உடைமை உறவுகளை மட்டும் பாதுகாத்தது. மூலதன இயக்கத்தின் மூன்று அம்சங்கள் தனியார்மயமாதல்மற்றும் சமூகமயமாதல் என்ற இரண்டு போக்குகளை துல்லியமாக வெளிப்ப டுத்தியது.
யுத்த சூழல் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்த நாட்டின் மீதும் யுத்தத்தை திணித்தது. தற்காப்பு நடவடிக்கையாக நாட்டின் உள்கட்டு மனத்தை ஆயுத உற்பத்தியானதாக மாற்றியது. உலகம் முழுவதும் பாசிஸ்ட்டுகளாலும் ஏகாதிபத்தியங்களாலும் ஒடுக்கப்பட்ட தேசங்களையும் காலனி மக்களையும் அணி திரட்டியது. உலக யுத்தத்தில் பாசிஸ்டிக்டுகளுக்கு எதிராக ஏகாதிபத்தியங்களோடு இணைந்து கொண்டது. இரண்டாம் உலக யுத்தத்தில்சோவியத் ரஷ்யா வலிமையான நாடாக வெளிப்பட்டது பாசிஸ்ட் ஜெர்மனி கைப்பற்றிய தேசங்களை வென்று விடுவித்தது. அதே தேசங்களின் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆட்சியில் அமர்த்தியது உலக யுத்தத்தில் வெல்லற் கரிய சக்தியாக வளர்ந்திருந்த ரசிய பாட்டாளி வர்க்க அமைப்பான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்து நாட்டின் மீது போர் தொடுத்த போது அந்நாட்டின் ராணுவ பலம் உலகை வியக்க செய்தது. ஆனால் மூலதன இயக்கத்தில் மாமனிதர் லெனின் காட்டிய வழியில் இருந்து அதாவது பண்ட சுழற்சி மூலதனத்தின் சமூகமயமாக்கும் பாத்திரத்தை பாதுகாப்பதற்கான புரட்சிகர பாதையில் இருந்து விலகியது. சோவியத் யூனியன் ராணுவ மேலாண்மை பாதுகாக்க நாட்டின் உற்பத்தி சக்திகளை ஆயுத உற்பத்தியில் குவித்தது பிழைப்பு சாதனங்களுக்கான உற்பத்தி இதர தேசங்களின் வசமானது. அமெரிக்காவின் ஆதிக்க முயற்சிக்கு எதிராக சோவியத் யூனியன் ஆதிகம் செய்தது. தேசிய இனங்களுக்கு இடையில் ஆன முரண்பாட்டில் அமெரிக்க ஒருபுறம் சோவியத் யூனியன் இன்னொறுபுறம் இருந்து மோதி கொண்டார்கள் .இந்த மோதலில் எண்ணற்ற தேசிய உணர்வு கொண்ட முண்ணணிகள் இருபுறத்திலும் கொல்லப்பட்டார்கள். நேட்டோ வார்ஷா யுத்த வியூகங்களுக்குள்ளே உலகம் சிக்கிக் கொண்டது.
மூலதன தனி உடமை முறையின் வளர்ச்சிஆதியில் தொழில் மூலதனம் தனிநபர் அல்லது குடும்பத்தின் உடமையாக இருந்தது பின்னர் அது பங்குகளாக பிரிக்கப்பட்டு பங்குதாரர்களின் உடமையாக மாறியது பின்னர் பங்குகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு தனி பங்கின் மதிப்பு குறைக்கப்பட்டது பங்குதாரர்களின்எண்ணிக்கை அதிகமானது. இதனால் மூலதன உடைமையாளர்கள் எண்ணிக்கை அதிகமானது. ஆனால் உற்பத்தி சாதனங்களாகவும் உழைப்பு கூலிகளாக இருந்த மூலதனத்தின் மீது மூலதன உடமையாளர்கள் நேரடியாக உரிமை இழந்தார்கள் பின்னர் அந்தப் பங்குகளே விற்பனைக்கானதாக மாறியது. பங்கு சந்தை வியாபாரம் மூலதனத்தை குவித்த போதிலும் மூல தனத்தின் மீது உரிமையுள்ள தனிநபர்களின் எண்ணிக்கை அதிகப் படுத்தியது உற்பத்தி விநியோகத்தின் மீது மூலதனம் உடமையாளர்கள் தலையீட்டை குறைத்து நிர்வாகமயமாக்கியது. மூலதன இயக்கத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் பண்ட சுழற்சியை தேசிய அளவில் செம்மைப்படுத்தியது. மூலதனம் இருப்பதற்கும் வளர்ப்பதற்கும் பண்ட சுழற்சி உலகம் முழுவதும் விரிந்து பறந்து செல்வது தவிர்க்கப்பட முடியாத அவசியமாக இருந்தது. தேசிய உடமை முறை எதிரானதாக மாறியது உலகம் முழுவதும் பறந்து சென்ற தேசம் ஏகதிபத்தியமானது. ஏகதிபத்தியதிற்கு எதிரான தேசிய எழுச்சிகள் உலகை யுத்த நெருக்கடியில் சிக்க வைத்தது. ஏகாதிபத்தியம் தேசம் கடந்த உடமை முறையை அமல்படுத்து வதற்கான தந்திரங்களும் சதிகளும் அம்பலபட்டு எதிர்க்கப்பட்டன. இரண்டாம் உலகயுத்ததின் முடிவில் உருவான சர்வதேசிய உடமை முறைகளுக்கான கருத்துக்கள் வலிமை பெற்றன.அக் கருத்துக்களின் அமைப்பாக 1947 இல் இருந்த. காட் (GATT) 1995 இல் உலக வர்த்தக மையமாக(WTO) வளர்ந்தது. உலகம் முழுவதும் மூலதனத் தனி உடமை முறையை ஏற்றுக் கொள்வதற்கான இயக்கமாக உருப் பெற்றது. இறையாண்மை பெற்ற 194நாடுகளில் 157 நாடுகள் உலக வர்த்தக மையத்தின் கோட்பாடுகளை ஏற்று கட்டுப்பட்டன. மேலும் 16 நாடுகள் பார்வையா ளர்களாக இணைந்து கொண்டன . தேசிய உடமை முறையை சர்வதேச உடமை முறையாக மாற்றுவது யுத்தத்தை தவிர்க்கும் தேவையாக மாறியது . தேசிய அளவிலான உற்பத்தியும் விநியோகமும் அதற்குரிய முதலாளித்து உற்பத்தி உருவான தேசிய உடமை முறையும் மூலதனத்தில்உலகமயமாக்கும் இயக்கத்திற்கு தடையாக இருந்தது. மூலதன இயக்கத்தின் சமூகமயமாகும் போக்கிற்கு எதிராகவே மூலதன தேசியமயமாக்கம் இருந்தது. ஏகபோக தீர்வைகோரிய முதலாளித்துவ ஜனநாயக போக்கு பல வடிவங்களில் வெகு மக்களின் எதிர்ப்பை சந்தித்ததுஆகவே உலகமயமாகும் சர்வதேச பொருளாதார அடிக்கட்டுமானத்திற்கு ஏற்ப சர்வதேச மேல் கட்டுமானமும் உருவாகி உறுதிப்பட்டது சமூக ஜனநாயக போக்கில் அரசுடமை முறையும் தேசிய எல்லைக்குள் மூலதன இயக்கத்தை முடக்குவதாக இருந்தது. எனவே அதுவும் மூலதன சமூகமயமாக்கும் போக்கிற்கு எதிராக இருந்தது. சமூக ஜனநாயகத்திற்கும் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும் இடையிலான பனி போர் உற்பத்தி சாதனங்களை உலகமயமாக்கி இருந்தது ஆனால் உழைப்பையும் உற்பத்தியும் சமூகமயமாக்கும் கடமைகளை நிறைவு செய்யவில்லை அதனால் இரண்டு போக்குகளில் இரண்டு வகையான தேசிய உடமை முறையும் உலகமயமாகும் மூலதன இயக்கத்திற்கும் பொருந்தி போகவில்லை. ஆகவே இரண்டு போக்கின் தலைமையாய் இருந்த நாடுகளின் அரசு வடிவமும் நெருக்கடிக்கு உள்ளாயின.
ஆனால் முன்னேறிய தேசங்கள் ஏகாதிபத்தியமாக வளர்ந்த போது தேசிய இனங்கள் மத்தியில் இரண்டு போக்குகள் உண்டானது ஒன்று தேசங்கள் ஒன்றிடையும் போக்கு இன்னொன்றுதேசங்களை அழிக்கும் போக்கு. ஏகாதிபத்தியங்கள் அழித்தொழிக்கும் போக்கின் அம்சங்களாக மாறினார்கள். தேசங்களை ஒருங்கிணைக்கும் போக்கின் அம்சங்களாக தோன்றிய மாமனிதர்கள் ஒன்றுகூடி கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்கினார்கள். அந்த இயக்கத்தின் தலையாய மனிதர்களின் மாபெரும் முயற்சியில் பல்வேறு தேசிய இயக்கங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு முதல் அகிலம் உருவானது. இரு சர்வதேசிய மேற்கட்டுமானத்தின் முதல் வடிவமாக வெளிப்பட்டதுமாகும்.
சமூக ஜனநாயக போக்கின் முயற்சியால் மீண்டும் அகிலம் உண்டானது ஆனால் இரண்டு அமைப்புகளும் உலக யுத்தத்தை தடுக்கும் சக்தி கொண்டவள் இல்லை. இரண்டாவது உலக யுத்தத்திற்கு பின் யுத்தத்திற்கு எதிரான இயக்கம் வலிமை பெற்றது. தேசங்களுக்கு இடையிலான மோதல்களை தடுக்க கூடுதல்களின் வலிமை கொண்ட மையமாக ஐக்கிய நாடுகள் சபை (UNO) உருவானது. படிப்படியாக அது பலம் பெற்று சர்வதேசப்படை சர்வதேச சட்டம் சர்வதேச நீதிமன்றம் என சர்வதேச ரீதியில் மேல் கட்டுமானம் உருவாக்கியுள்ளது. சர்வதேச மேல் கட்டுமான அமைப்புகளாக, உணவு மற்றும் விவசாய அமைப்பு(FAO) சர்வதேச அணுசக்தி பேராயம் (IAEA) சர்வதேச குடியுரிமை அமைப்பு(ICAO) சர்வதேச வேளாண்மை வளர்ச்சி நிதி (IFAD) சர்வதேச தொழிலாளர் அமைப்பு(ILO) சர்வதேச நீர் வழி அமைப்பு (IMO)சர்வதேச நிதியம் (IMF) சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியம்(ITU)சர்வதேச கல்வி விஞ்ஞான பண்பாட்டு அமைப்பு (UNESCO) ஐக்கிய நாடுகள் தொழில் வளர்ச்சி அமைப்பு (UNIDO) ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா அமைப்பு (UNWTO) பிரபஞ்ச தபால் ஒன்றியம் (UPU) உலக வங்கி (WB)உலக உணவு திட்டம் (WFP) உலக சுகாதார அமைப்பு (WHO) உலக அறிவக சொத்துரிமை அமைப்பு (WIPO) ஆகிய இவை உலக நாடுகளை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
முதலாளித்துவ ஜனநாயக இயக்கம் ஏகாதிபக்தியமாக சீரழிந்த போது தேசிய இனங்களுக்கு பாட்டாளி வர்க்க தலைமையிலான சமூக ஜனநாயக இயக்கம் தலைமை கொடுத்தது. முதல் உலக யுத்தத்தில் ஓட்டோமான் பேரரசையும் ருசிய பேரரசையும் வீழ்த்தி சுயநிர்ணய உரிமையோடு ஒருங்கிணைந்த தேசங்களின் அரசாக சோவியத் ஒன்றிய அரசை புதிதாக படைத்தது. இரண்டாவது உலக யுத்தத்தில் பாசிசமாக மாறிய தேசிய அரசை வீழ்த்தி ஐரோப்பியாவில் வீழ்த்தப்பட்ட தேசிய இனங்களின் சுதந்திர அரசுகளை நிறுவியது. இரண்டாவது உலக யுத்தத்திற்கு பின் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய தேசங்களுக்கும் காலனிய நாட்டு மக்களுக்கும் துணை நின்றது. முதலாளித்துவ ஜனநாயக போக்கை பலப்படுத்துவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தின் ஆயுத பெருக்கத்திற்கு போட்டியாக சமூக ஜனநாயக போக்கை பலப்படுத்துவதற்காக சோவியத் ஒன்றியம் ஆயுத உற்பத்தி பெருக்கிக் கொண்டது. இதனால் பிழைப்பு சாதனங்களுக்கான பண்ட உற்பத்தியில் பலவீனப்பட்டது. அமெரிக்கா போர் வியூங்களுக்கு எதிரான போர் வியூங்களுக்காக ஒடுக்கப்பட்ட தேசங்களின் பாதுகாவலனாக இருந்த சோவியத் ஒன்றிய அரசு இதன்பிறகு தேசங்களை ஒடுக்கும் அரசாக மாறியது. இதனால் தேசங்கள் மற்றும் உழைக்கும் மக்களின் எதிர்ப்பை சந்தித்தது . அணு ஆயுத தயாரிப்புக்கும் யுத்தத்திற்கும் எதிராக வேகுமக்கள் நிர்பந்தம் உருவானபோது சமூக ஜனநாயகப் போக்கு கடுமையான எதிர்ப்பை சந்தித்தது தேசங்களின் எதிர்ப்புணர்வை தணிக்க தேசங்களில் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை என சோவியத் ஒன்றியம் தீர்மானித்தும் குறிப்பாக வார்ஷா உடன்படிக்கை நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருந்ததும் சமூக ஜனநாயக போக்கின் கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிகள் கவிழ காரணமானது. சோவியத் ஒன்றிம் தேசிய இனங்களை சார்ந்த கட்டமைத்திருந்த பொருளாதார கட்டுமாணம் சிதைந்தது. தொடரும் அடுத்த இதழில்