இன்றைய சமூக ஜனநாயகவாதிகளின் (கம்யூனிஸ்டுகளின்) பிரச்சார, கிளர்ச்சி வெளியீடுகளில், இந்த மேற்கோளைக் காண்பது அரிதாகிவிட்டது. அப்படி இது காணப்படும்போது கூட, பூஜையறைப் படத்தை தொழுகின்றவரின் பாணியிலே தான், அதாவது சம்பிரதாய முறையில் எங்கெல்சுக்கு மரியாதை செலுத்தும் பாணியில்தான் பெரும்பாலும் எடுத்தாளப் படுகிறது. ''அரசுப் பொறியமைவு (அரசு எந்திரம்) அனைத்தையும் தொல்பொருள் காட்சிக் கூடத்தில்'' கொண்டுபோய் வைப்பதில் அடங்கியுள்ள புரட்சியின் வீச்சையும் ஆழத்தையும் மதிப்பிட்டறிய எந்த முயற்சியும் எடுக்கப்படுவதில்லை. அரசுப் பொறியமைவு என்று எங்கெல்ஸ் குறிப்பிடுவதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதாகக் கூட பல சந்தர்ப்பங்களில் தெரியக் காணோம். இன்றைய கம்யூனிஸ்டு கள் அரசு பற்றிய மார்க்சியம் கூறிய உண்மைகளை மக்களிடம் எடுத்துச் சொல்வதில்லை.தங்களுடைய அணிகளுக் குக் கூட அதனை போதிப்பதில்லை. எப்படி வர்க்கங்கள் தோன்றி அரசு உருவானதோ அதேபோல் வர்க்கங்கள் ஒழிந்து அரசும் மறைந்துபோகும் என்று மார்க்சியம் கூறும் உண்மையை மக்களிடம் கொண்டுசெல்ல கம்யூனிஸ்டுகள் தவறுகிறார்கள். மேலும் வர்க்கங்கள் ஒழிவது தானாக, தன்னியல் பாக நடக்காது. அதற்காக மக்கள் கம்யூனிஸ்டுகளின் தலைமையில் போராடி சோசலிச அரசை அமைப்பதன் மூலமே இதனை சாதிக்க முடியும் என்ற உண்மை யை மக்களிடம் கொண்டுசெல்ல கம்யூனிஸ்டுகள் தவறுகிறார்கள். இந்த அரசுப் பொறியமைவை அகற்றிவிட்டு அதனை தொல்பொருள் காட்சியகத்தில் வைப்பதை நோக்கி கம்யூனிஸ்டுகள் செயல்பட வேண்டும். அதற்காக மக்களிடம் விழிப்புணர்வு ஊட்டி மக்களைத் திரட்ட வேண்டும்….. தேன்மொழி.......
மரணத்தினால் பாதைகள் நெரிசலடையும் போது உன் மகன் போன்ற பிரயாணிகளால் அவை மறிக்கப்படுகின்றன. நீ உன் கண்ணிரைத் துடைத்து முன்னர் இறந்த, அன்புக்குரிய அகதிகளின் நினைவுச் சின்னங்களாக எமது கண்ணிரில் சிறிதை எடுத்துக்கொள்வாய்.
உனது கண்ணிரை முடித்து விடாதே. பாத்திரத்தில் சிறிது கண்ணிரை வைத்திரு சிலவேளை நாளே அவனது தகப்பனுக்காக அல்லது அவனது சகோதரனுக்காக அல்லது அவனது நண்பன் எனக்காக நாளைக்கு எங்களுக்காக இரு துளிக் கண்ணிரை வைத்திரு.
எனது நண்பனைப் பற்றி எமது மண்ணிலே அதிகம் பேசுகின்றனர். எப்படி அவன் சென்றான் எப்படி அவன் திரும்பவே இல்லை எப்படி அவன் தன் இளமையை இழந்தான். துப்பாக்கி வேட்டுக்கள் அவன் மார்பையும் முகத்தையும் நொறுக்கின தயவு செய்து மேலும் விபரணம் வேண்டாம். நான் அவனது காயங்களைப் பார்த்தேன் அதன் பரிமாணங்களைப் பார்த்தேன் நான் நமது ஏனைய குழந்தைகள் பற்றி எண்ணுகிறேன் குழந்தையை இடுப்பில் ஏந்திய ஒவ்வொரு தாயையும் பற்றி எண்ணுகிறேன்
அன்புள்ள நண்பனே, அவன் எப்போது வருவான் என்று கேட்காதே மக்கள் எப்போது கிளர்ந்தெழுவார்கள் என்று மட்டும் கேள்.
பெளசி அல் அஸ்மார் புகழ்பெற்ற பலஸ்தீனக் கவிஞர்களுள் ஒருவர். "கொமன் ரறி என்ற அமெரிக்க சஞ்சிகையின் 1970 டிசம்பர் இதழில், ஹாவாட் பல்கலைக்கழகச் சட்டத்துறைப் பேராசிரியர் அலன் டெர் ஷோவிற்ஸ் என்பவர் குறிப்பில்.....