ஐந்து தரிசனங்களில் இறுதியான மீமாம்சையுடன் வேதாந்தம் தம்மை உத்திரமீமாம்சை என்று கூறிக்கொண்டு மீமாம்சையுடன் ஒட்டிக் கொண்டது. மீமாம்சையை பூர்வ மீமாம்சை என்றும் வேதாந்தத்தை உத்திரமீமாம்சை என்றும் கூறி இரட்டைத் தன்மையோடு காணப்படுவதுபோல், ஐந்து தரிசனங்களில் மற்ற நான்கு தத்தவங்களையும் இரண்டாக இணைத்து, இரட்டைத் தத்துவமாக சேர்க்கப்பட்டுள்ளது.
சாங்கிய-யோகம், நியாய-வைசேஷிகம், பூர்வமீமாம்சை-உத்திர மீமாம்சை. கடவுளை ஏற்றுக் கொள்ளாதத் தத்துவங்களோடுமூன்றாக இணைத்துக் கூறும் போதுகடவுள் உள்ளே நுழைக்கப்படுகிறது என்பதே உண்மையாகும். எவ்வளவுதான் இணைத்துவிளக்கம் கொடுக்கப்பட்டாலும் முரணில்லாமல் அத்தத்துவங்கள் காணவில்லை. அந்ததத்துவங் களுக்கே உரியகடவுள் அற்றத் தன்மையை முழுமையாக நீக்க முடியவில்லை.
இந்த இரட்டைத்தரிசனங்களைப் பற்றி பத்மன்தமது நூலில் சிறப்பாககூறியுள்ளார்.
“… வைதீக ஷட்தர்சனங்களில் (வேதம்சார்ந்த ஆறு நோக்குகளில்) 3 இரட்டைத் தரிசனங்கள் உள்ளன.அந்த வகையில், அணுவியல் பேசும் வைசேஷிகத்தோடு, அளவையியல் என்ற தர்க்கவாதப் பகுப்பாய்வின் மூலம் இறைவனை முன்னிறுத்தும் நியாயம் உடன்பிறப்புத் தத்துவமாகத் திகழ்கிறது. இதேபோல், பிரகிருதி - புருஷக் கோட்பாட்டின் துணைகொண்டு பரிணாமவாதம் பேசும் சாங்கியமும், உடல் - மனப் பயிற்சிகள் மூலம் மனிதனை இறைநிலைக்கு உயர்த்தும் யோகமும் ஓர் இரட்டைத் தரிசனங்கள். தேவர்களை (தெய்வங்களை) திருப்திப்படுத்திப்பயன்பெறும் வேள்விச் சடங்குகளுக்கு முக்கியத்துவம் தரும் கர்மகாண்டமாகிய பூர்வ மீமாம்சையும், ஆத்ம விசாரத்தின்மூலம் ஆண்டவனோடு ஒன்றிணையும்முக்தியை வலியுறுத்தும் உத்தரமீமாம்சையாகிய வேதாந்தமும் மற்றோர்இரட்டைத் தரிசனங்கள்.
இதில் விசித்திரம் என்னவென்றால், இந்த இரட்டைத்தரிசனங்களில் மூத்தவைகளான வைசேஷிகம், சாங்கியம், (பூர்வ) மீமாம்சை ஆகிய மூன்றும், ஆண்டவனைமறுக்கின்றன அல்லது முக்கியத்துவம் தராமல் ஒதுக்கு கின்றன. ஆனால், அவ்வவற்றோடு தொடர்புடைய பிந்தைய தரிசனங்களான நியாயம், யோகம், வேதாந்தம்ஆகியவை, ஆண்டவன் இருப்புக்கானகாரணங்களைக் கூறி வலியுறுத்துகின்றன.”(தத்துவ தரிசனங்கள்- பக்-69)
அந்த மூன்றில்யோகம் மனதையும், உடலையும்பேணுவதற்கான வழிமுறை ஆகும். கடவுள் கோட்பாடு தேவையில்லாது சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்துநியாயம், தொடக்கக் காலத்தில் கடவுளைப்பற்றி இத் தத்துவம் பேசவில்லை, பிற்காலத்தில்தான் இணைக்கப் பட்டுள்ளது. இறுதியில் உள்ள வேதாந்தம் தான் கடவுள்தன்மையுடன் காணப்படுகிறது. இந்தஆறில் வேதாந்தம் தனித்துக்காணப்படுகிறது. அதுவும் ஐந்தாவதான மீமாம்சையில் பிற்சேர்கையாக ஒட்டப்பட்டுள்ளது. மீமாம்சையைபூர்வ மீமாம்சை என்றும்வேதாந்தததை உத்திர மீமாம்சைஎன்று கூறி ஐந்து தரிசனங்களுள் நுழைக்கப்பட்டுள்ளது.
அடுத்து நியாயத்தத்துவத்தின் அடிப்படைகளைப் பார்ப்போம்.
நியாயம்என்ற சொல்லுக்கு தர்க்கம் (அளவையியல்), வாதாடுதல் என்றுபொருள் கொடுக்கப்படுகிறது. தர்க்கத்தின்அடிப்படையில் வாதாடுதல் என்பதே நியாயத் தத்துவத்தின் போக்காகும். வைசேஷிக தத்துவத்தின்முக்கிய அடிப்படை அணுக்கோட்பாடுஎன்றால், நியாயத் தத்துவத்தின்அடிப்படை தர்க்கித்தல் என்று கூறலாம். இதனை, கி.லக்ஷ்மணன்கூறுகிறார்:-
“தர்க்கத்தின் முடிவைவிட, தர்க்க முறைக்கே அவர்கள் முக்கியத்துவம் அளித்தனர். நியாயிப்பதால் அடையும் முடிவுகளைவிட்டு,நியாயிக்கும் முறையிலே சென்றது அவர்களுடைய கவனம். இத்துறையிலே வேறு எம்மதத்தினரும் செலுத்தாத அளவுகருத்தைச் செலுத்தி, செம்மையாகநியாயிப்பது எங்ஙனம் எனவரையறை செய்து, வரம்புஅமைக்க முற்பட்ட பெருமையினால்தான், நையாயிகர் என்ற சிறப்புப் பெயரும் இவர்களுக்குஏற்படலாயிற்று.”
(இந்தியதத்துவ ஞானம், பக்-247)
நியாயத் தத்துவத்துக்கு கிடைக்கும் முதல்நூல் கவுதமர் என்பவரால் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் எழுதிய “நியாய சூத்திரம்” ஆகும். இந்த நூல் ஐந்துஅத்தியாயங்களையும் 548 சூத்திரங்களையும் கொண்டுள்ளது.
இந்தியத் தத்துவத்தில்அறிவதற்கான வழிகளாக பிரமாணங்களைப்பின்பற்றினர். பிரமாணங்கள் பலவைகளாக இருந்தாலும் ஆறுமுக்கியமானதாகும், அதில்உள்ள 1..பிரத்தியட்சம், 2.அநுமானம், 3.ஆப்தவாக்கியம், 4.உபமானம்என்கிற முதல் நான்கைமட்டுமே நியாய தத்துவவாதிகள்ஏற்கின்றனர், இறுதி இரண்டையும்ஏற்கவில்லை. ஏற்றுக் கொண்டநான்கை சுருக்கமாகப் பார்ப்போம்.
முதல்பிரமாணம் பிரத்தியட்சம். இதைஒர் எளிமையான உதாரணத்தின் மூலம் விளக்குவோம். வெளிஊரில் வேலைக்கு சென்ற முருகன் கிராமத்துக்கு வந்ததகவலை அறிதலை வைத்துநான்கு பிரமாணங்களைப் பார்ப்போம்.
“டேய்நமது கல்லூரி நண்பன்முருகன் கிராமத்துக்கு நேற்றுவந்துள்ளான் என்று அவன்அம்மா கூறினார்.” முருகனின்வருகை பற்றி அவனதுஅம்மா கூறியதன் மூலம்முருகன் கிராமத்துக்கு வந்தசெய்தி உறுதியாகிறது. இந்த உறுதி காது என்கிறபுலனால் அறியப்பட்டது. “அப்படியா, வந்துட்டானா,” “ஆமாண்டா, நேற்றுராத்திரி அவன் வீட்டின் வாசலில் பார்த்தேன்” என்றான்மற்றொருவன்
இதுகண் என்கிற புலனால்அறியப்பட்ட உறுதியான செய்தி. இந்த இரண்டும் காட்சிஅளவையான பிரத்தியட்சமாகும்.
வேறொரு நட்புவட்டதும்முருகனின் வருகையைப் பற்றிபேசிக் கொண்டன.
“டேய் முருகன்வந்துட்டான்போல.” “உனக்குஎப்படி தெரியும்.” “அவனுடையஅப்பா அம்மா மட்டும்இருக்கும் போது வீட்லசத்தம் எதுவும் இருக்காது,நேற்று அவங்க வீட்லஒரே சத்தம்”. முருகன் வந்தது அநுமானத்தால் அறியப்படுகிறது. இரண்டு பேர்பேசும் சத்தம் போல்இல்லாமல் நேற்று அதிகமாகஇருந்தது என்பதின் மூலம் முடிவெடுப்பது அநுமானித்தல் எனப்படுகிறது. இது இரண்டாவதுபிரமாணம் ஆகும்.
“டேய்முருகா, சென்னையில் எல்ஐசிதான் பெரிய கட்டிடமாடா”, “இத என்னடா அவன்கிட்டகேட்கிற, செய்தித்தாளிலும் வாரப் பத்திரிகையிலும் படிக்கலையா, அதைவிட அதிக அடுக்குகளைக்கொண்ட கட்டிடங்கள் நிறைய சென்னையில்ல இப்போ இருக்கு” இது ஆப்தவாக்கியம். அதாவதுஅறிந்தோர் உரை. குறிப்பாக நூல்களினால் அறியப்பட்டது.
நான்காவது உபமானம். “டேய் முருகா, புதிசா சென்னையில் வந்திருக்கிறமெட்ரோ ரயில் எப்படிடா, மேலே பறக்குதாம், பூமிக்குஉள்ளே போகுதாம்.” “அதுஒண்ணும் இல்லைடா, நம்ஊர்ல போகிற ராயில்மாதிரிதான் கொஞ்சம் சிறியதாகஇருக்கும், ஆனா வேகமாபோகும்.” தெரிந்த ரயிலோடுஒப்பிட்டு மெட்ரோ ரயில்இங்கே அறியப்படுகிறது. இதுஉபமானம் அதாவது ஒப்பிட்டுஅறிதல்.
நியாயவாதிகள் இந்தநான்கைக் கொண்டு உலகில்காணும் அனைத்தையும் அறிகின்றனர். சிந்துக்கும் மனங்களின்சார்பற்ற வகையில் புறவுலகுஇருப்பதை நியாயத் தத்துவம்ஏற்கிறது.
உலகைப் பற்றியஅறிவு உண்மையானது என்று தொடக்கக்கால வைசேஷிகர்களைப் போலவே தொடக்கக்கால நியாயத் தத்துவமும் கருதியது. தர்க்கமே உலகைஅறிவதற்கான வழிமுறையாகும். ஆனால், கிடைக்கும் அறிவைவிட, அறிவைஅடைவதற்கான வழி முறைக்கே அதிகமுக்கியத்துவம் நியாயம் தத்துவம் கொடுக்கிறது..
வைசேஷிகத்தில் உள்ள ஏழு வகையினங் களையும் (பதார்த்தத்தையும்) நியாயத் தத்துவவாதி ஏற்றுக் கொள்வர், அந்த ஏழையும் பிரமேயம் என்ற ஒரே பதார்த்தத்துக்குள் அடக்குவர். மேலும் கூடுதலாக பதினைந்து பதார்த்தங்களை சேர்த்து அவர்கள் பேசும் பாதார்த்தங்கள் மொத்தம் பதினாறு ஆகிறது.
வைசேஷிகருக்குபொருள் (திரவியம்) தான்முதன்மையானது, நியாயதத்துவாதிக்கு பிரமாணம் முக்கியமானது. வைசேஷிகம் பொருளைஅடிப்படையாகக் கொண்டது, நியாயம்பொருளை அறியும் வழிமுறைக்கேமுக்கியத்துவம் கொடுக்கிறது.ஆத்மா, தெய்வம், முக்தி ஆகியவைபற்றி நியாய தத்துவத்தின் கருத்துகளை சுருக்கமாக அடுத்து பார்க்கப்போம்.
ஆத்மா நிலையானப்பொருள், அறிவுடைமை அதன்சிறப்பு. ஆத்மாக்கு உடலோடும் மனதோடும் தொடர்பு கொள்வதனாலேயே அறிவு கிடைக்கிறது.
பிறதத்துவங்களின் ஆத்மா பற்றியகருத்தோடு ஒப்பிடும் போதுஇந்த ஆத்மா வித்தியாசமாக இருக்கிறது. ஆத்மாவுக்கு அறிவுஉலகப் பொருளோடு தொடர்புகொள்வதினால் ஏற்படுவதாகக் கூறுவதுவிநோதமாக இருக்கிறது. அத்மாபேருணர்வு கொண்டது, முழுநிறைவு பெற்றது என்றே மற்றதத்துவங்கள் ஆத்மாவைப் பற்றி பேசுகின்றன. ஆத்மாவுக் கான அறிவுவெளியுலகால் பெறப்படுவதாக நியாயம்கூறுவது விநோதமாகவே இருக்கிறது.
ஆத்மாக்கள் பல, ஒவ்வொரு ஆத்மாவும் கர்மவினையினால் பல பிறவிகள்எடுக்கின்றன என்பதே நியாயத்தத்துவத்தின கருத்து
தொடக்க காலநியாய நூல்களில் தெய்வத்தைப்பற்றிய குறிப்புகள் கிடையாது. பின்பு வந்த நூல்களிலேயேதெய்வம் சேர்க்கப் பட்டுள்ளது.
கி.லஷ்மணன்:-“நையாயிகம் பற்றிய முதனூலிலே இறைவனைப்பற்றி முக்கிய விவரம்எதுவும் கிடையாது. பின்வந்த நூல்களே இறைவனைப் பற்றி விவரமாகப் பேசுகின்றனஎன்பது இங்குக் குறிப்பிடத்தக்கது” (இந்தியத்தத்துவஞானம், பக்-266)
நியாயதத்துவத்தில் காணப்படும் கடவுள்தன்மையப் பற்றி ஓ.ரா.கிருஷ்ணன் கூறுவதையும் சேர்த்துப் பார்போம்.
“நியாயதத்துவத்தின் ஆதிநூலில் கடவுள்பற்றி எதுவும் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. பிற்காலத்தில் நியாய தத்துவத்தில் இணைக்கப்பட்டுள்ள கடவுளும் ஒரு ஆன்மாவாகவே கருதப்படுகின்றது, ஆனால் கடவுள் ஆன்மாவாக இருந்தாலும், அவர் எல்லாம் வல்லவர் பிரபஞ்சத்தின் மூலபதார்த்தங்களாகக் காட்டப்படுபவற்றைக் கொண்டு உலகையும் உயிர்களையும் படைக்கிறார், காக்கிறார், அழிக்கிறார்என்று இங்கு கூறப்படுகின்றது ஆன்மாக்கள் எல்லாம் வல்லவையல்ல, அதனால் தான்ஆன்மாக்கள் ஜீவாத்மாக்கள் என்றும், கடவுள் பரமாத்மா என்றும்இங்கு கூறப்படுகின்றது.”
(இந்தியஞான மரபுகள் பௌத்தத்தின் பார்வையில், பக்152).
தெய்வத்தின்இருப்பை பிற தத்துவங்கள்என்ன அடிப்படைக் காரணத்தைகொண்டு விளக்க முயற்சித்ததோ அதையே முதலில் நியாயத் தத்துவவாதியும் கருதினர். பானைசெய்வதற்கு ஒரு குயவன்இருப்பது போல உலகைப் படைப்பதற்கு ஒரு கடவுள்தேவை. குயவன் இல்லாது போனால் குடம் இல்லை, அதே போல கடவுள் இல்லாது உலகம் இல்லை.
பிரபஞ்சப் படைப்புக்குதெய்வம் நிமித்த காரணம். இறைவன் நித்திய திரவியங்களை அதாவது நிலையானப் பொருட்களை படைக்கவில்லை, இந்தப்பொருளை துணையாகக் கொண்டேபிரபஞ்சத்தை தெய்வம் படைக்கிறார். படைத்ததை காப்பதும்அழிப்பதும் கடவுளின் செயலேஇதுவே பிற்கால நியாயதத்துவத்தின் கடவுள் பற்றிகொள்கை.
ஒன்றும் இல்லாதத்தில்இருந்து தெய்வம் இந்தஉலகத்தைப் படைக்கவில்லை. படைப்புக்கு வேண்டிய பொருட்கள் நிலையாகஇருக்கின்றன அந்தப் பொருளைப் பயன்படுத்தியே உலகம் தெய்வத்தால் படைக்கப்படுகிறது. அதனால் படைப்புக்கு தெய்வம் நிமித்தக்காரணனே.
நிமித்த காரணன் என்று தெய்வத்தை ஏன் கூறப்படுகிறது?.
ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். குடம் செய்ய வேண்டும் என்றால் கழிமண் தேவை. இந்தக் கழிமண் உபாதானக் காரணம், கழிமண்ணை பானையாக செய்வதற்குஒரு குயவன் தேவை, அந்தக் குயவனே நிமத்தகாரணன். உலகப் படைப்புக்குதிரவியங்கள் அதாவது பொருட்கள்உபாதானக் காரணம், தெய்வம் நிமித்தக் காரணன். குயவனைப்போல் தெய்வம் பொருட்களைக் கொண்டே உலகைப் படைக்கிறார்.