இலக்கு 7 இணைய இதழ் in PDF

இலக்கு 7 இணைய இதழை இங்கே அழுத்தி பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் தோழர்களே 




மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் எல்லா நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பதற்கு வழிகாட்டியது இந்த அகிலத்தின் இரண்டாவது மாநாட்டில் லெனின் வரையறுத்த ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி பாதை குடியேற்ற நாடுகளுக்கு அரசியல் திசை வழியை அமைந்தது. குடியேற்ற நாட்டில் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக ஒற்றுமை ஏற்படுத்துதல் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் இணைவதன் மூலமாக குடியேற்ற நாடுகளில் நடைபெறும் போராட்டமானது ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனநாயக போராட்டமாக இருக்கும். இந்த வழியில் சீன கம்யூனிஸ்ட் கட்சியை சரியாக புரிந்துகொண்டு சீனாவின் குறிப்பான நிலைமைக்கு ஏற்ப புதிய ஜனநாயக அரசை அமைத்தது.குடியேற்ற நாடாக இருந்த இந்தியாவுக்கு இந்த வழி பொருந்தக்கூடியது, அகிலம் தனது பிரதிநிதிகள் மூலமாக இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டுவதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. இந்தியாவில் பல்வேறு வர்க்கங்களின் தலைமையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்து இருந்தது அதோடு ஜமீன்தார் எதிர்ப்பு நிலவுடைமை எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரம் அடைந்து கொண்டிருந்தது. புற சூழல் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவதற்கும் பலம் பெறுவதற்கும் உகந்ததாக இருந்தது .அகிலம் சூழ்நிலையை புரிந்துகொண்டு கம்யூனிச குழுக்களும் தனிநபர்களும் இணைந்து பலம்வாய்ந்த ஒன்றுபட்ட கட்சியை கட்டுமாறு அறிவுறுத்தியது 1925 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துவங்கப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சி ஆனது பல்வேறு விதமான சதி வழக்குகள் போடப்பட்டு துவக்கத்தில் கடும் அடக்குமுறைக்கு உள்ளானது; ஆனாலும் நாடு தழுவிய தொழிலாளர்கள் விவசாயிகள் இளைஞர்கள் அறிவாளிகள் மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அதில் இணைந்தனர்; கடற்படை தரைப்படை விமானப்படை இராணுவத்திலும் கூட அதற்கு கட்சிக் கிளைகள் இருந்தது. தெலுங்கானா போராட்டம் ஒரு பகுதியில் ஆட்சி அதிகாரத்தை நிறுவ கொரில்லா போராட்டம் என வளர்ந்தது. 4,000 பேர் புரட்சிக்காக தியாகிகள் ஆகினர் 3000 கிராமங்கள் 10 ஆயிரம் ஏக்கர் நிலமும் மக்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கம்யூனிஸ்ட் அகிலத்தின் திசை வழியை புரிந்து கொள்வதிலும் அமுல்படுத்துவதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிக்கல்களை எதிர் கொண்டது.

இந்நிலையில் 1933 இல் சீன கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழிகாட்டியது உட் குழப்பங்களுக்கும் பிளவுகளுக்கும் பரிதாபகரமான அத்தியாயத்துக்கு முடிவு கொண்டுவர வலிமைமிக்க ஒன்றிணைந்த ஒரு கட்சியை கட்டும் பணியில் முன்னேறும் படி வேண்டுகோள் விடுத்தது ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் சிலசமயம் இடதுசாரி தந்திரத்தையும் சிலசமயம் வலதுசாரி தந்திரத்தை பின்பற்றியே வந்துள்ளன சரியான வழி முன்வைக்கப்படும் போது அது நிராகரிக்கப்பட்டதே வந்துள்ளது. சீனாவை காட்டிலும் இங்கு எதிர்ப்பு சக்திகள் கூடுதலான பலமும் புரட்சிகர சக்திகள் கூடுதல் பலவீனமும் பெற்றிருந்தன. இதன் விளைவாக தேசிய இயக்கத்தின் தலைமையை முதலாளிவர்க்கம் தக்க வைத்துக் கொண்டு நிலபிரபுத்துவம் ஏகாதிபத்தியதுடன் சமரசம் செய்து கொண்டது.

இன்றைய உலக சூழலில் அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள் புதிய காலனிய முறையில் மேலும் மேலும் தீவிரப்படுத்தும் ஒடுக்குமுறை போர்களும் வரலாறு காணாத கொள்ளையும் நடைபெறுகின்றன. ஆனால் இதை எதிர்த்து சவால் விடுவதற்கு சோசலிச நாடுகளும் இல்லை கம்யூனிச நாடுகளும் இல்லை .கம்யூனிஸ்ட் கட்சிகளும் பலவீனப்பட்டு பிளவுண்டு பல்வேறு விதத்தில் இருக்கும் போது அநீதி போரை எதிர்க்க திறன்இல்லை உண்மைதான். எல்லா ஒடுக்குமுறைக்கு தீர்வு மார்க்சிய லெனினியம் மட்டுமே, உண்மையான புரட்சியாளர்கள் ஒன்றுபட்டு போராடினால் மட்டுமே தீர்வு.

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்