1948இல் தனியார் துறையில் 265 கோடி ரூபாய் மூலதனம் இருந்தது. இத்தொகை 1965ல் 830 கோடி ஆகி 1967இல் 980 கோடி ஆனது .
முதலீடு இரு வகையானது.
1). புதிய மூலதனம் 40% மட்டுமே வருகிறது
2).லாபத்தை மீண்டும் முதலீடு செய்வது 60% உள்நாட்டு லாபம் மூலதனம் ஆகிறது
1960-64 இல் தோன்றிய 79 புதிய உள்நாட்டாருடன் ஒன்றிணைந்த பிறநாட்டு கம்பெனிகளை மட்டும் ஆராய்ந்த பொழுது 49 கம்பெனிகள் தொழில்நுட்ப உதவி என்ற பெயரில் உள்நாட்டில் பங்கு பெற்று மூலதனமாக்கின. (தொழில் நுட்ப உதவிக்கு மூலதனப் பங்கு வழங்கப்பட்டது ).பிற நாடுகளுடன் ஒன்றிணைந்த கம்பெனிகள் 1,2,3 திட்ட ஆண்டுகளில் முறையே 42 ,100 ,164 ஆக வளர்ந்ததே அன்றி குறையவில்லை. அதாவது 16,36,41 சதவீதமாக உயர்ந்தன. இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு இவை எவ்வித துணைபுரிந்தது என்று கூறுவதற்கில்லை.( பொருளாதாரம் வளர்ந்து இருப்பின் பிறநாட்டார் உதவி குறைந்து இருக்கும், ஆனால் நிலைமை அப்படி மாறவில்லை என்பதுதானே உண்மை).
1956 -65 ஆண்டுகளில் தொழில்நுட்ப உதவியுடன் ஒன்றிணைந்த கம்பெனிகள் தொகை : 2524 ( பிரிட்டன் 32% அமெரிக்கா 20% மேற்கு ஜெர்மனி 15% ஜப்பான் 7% ). உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய தேர்மாப்ளாஸ்க், உதட்டு சாம், பல்பொடி, பவுடர் , அழகு சாதனங்கள், உள்ளாடைகள் ஏன் ஐஸ் கிரீம், பிஸ்கட், பேட்டரி மற்றும் தைத்த ஆடைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்காக தொழில்நுட்ப உதவி வெளிநாடுகளிலிருந்து அனுமதிக் கப்பட்டது. இதில் குறிப்பாக வெளிநாட்டு விற்பனை பெயர்களை பயன்படுத்துவதே நோக்கமாக இருந்தது இவற்றோடோ விற்பனை விலை நிர்ணயம் விளம்பரம் யாவையும் வெளிநாட்டவர்களே நேரடியாக நிர்வகித்தனர். ஏனெனில் இந்திய மேட்டுகுடிகளை அவர்களை கவர்ந்திழுக்கும் வண்ணமாக அவ் வர்க்கத்தினருக்காக உருவாகும் பொருட்களாக அவையாக இருந்தது என்றால் மிகையல்ல.
இரண்டாம் திட்ட காலத்தில் வெளிநாட்டார் பெற்ற லாபம் ரூபாய் 165 கோடி அக்காலத்தில் வந்த மூலதனம் ரூபாய் 150 கோடி. மூன்றாம் திட்ட காலத்தில் வெளியேறிய லாபம் ரூபாய் 237 கோடி வந்த மூலதனம் 160 கோடி.
இதனால் தனியார் வெளிநாட்டு உதவி என்பது நாட்டின் லாபத்தை கொள்ளை அடிக்க மட்டுமேதான் நம் நாட்டின் மூலதனம் அதிகரிக்கப் பயன்படவில்லை என்பது கண்கூடாக காணப்படுகிறது.
அரசு பெற்ற வெளிநாட்டு கடனுக்காக ஆண்டுதோறும் வட்டி மட்டும் ரூபாய் 500 கோடி செழுத்திக் கொண்டுள்ளது. இது ஏற்றுமதி வருமானத்தில் 30 சதவீதம் ஆகும்.(1980ல் எழுதப்பட்ட கட்டுரை)*.
இந்தியா இன்று 75 ஆம் ஆண்டு சுதந்திரம் தினம் கொண்டாடுகிறது. இன்றும் கல்வியானது எல்லோருக்கும் மானதாக இல்லை. உயர் கல்வி பெற்றவர்கள் வெளிநாடுகளுக்கு உழைக்க செல்கின்றனர். உள்நாட்டிலோ தொழில் நுட்ப கல்வி பெற்றவர்கள் கூட வேலையின்றி அலைகின்றனர். வெளிநாட்டு தொழில்நுட்பம் இன்னும் வரவேற்கப் படுகிறது; அவை 4G யோ 5G ஆகட்டும், மருத்துவ உபகரண மாகட்டும் இன்னும் இன்றைய அதிநவீன தொழில்துறை சார்ந்த கருவிகளாகட்டும் அவை வெளிநாட்டின் உதவியாக உள்ளது.
உலக மக்கள் தொகையில் 8% ஆன அமெரிக்கா, உலக மூலவளங்களை 40 சதவீதம் அபகரிக்கிறது . இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் அனைத்தும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளால் சுரண்டப்படுகின்றன.
வெளிநாட்டு உதவி சர்வதேச கம்பெனியில் கூட்டு உற்பத்தி என்பவை யாவும் வெறும் பொய்மையே, ஏமாற்றுவதே ஆகும். தன்னம்பிக்கை அற்ற ஆட்சியாளர்கள் தமது சமூகத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே அடிப்படையில் சமூக மாற்றம் அவசியமானது ஆகும்.(ஆதாரம் *பழைய கட்டுரைதான் இன்றைய தேவை கருதி அப்படியே வெளியிட்டுள்ளேன். இக்கட்டுரை kk சுப்பிரமணியம் எழுதிய 'மூலதனம் தொழில்நுட்ப இறக்குமதி இந்தியக் கொள்கை தொழில் வெளிநாட்டு உறவு கூட்டுறவு' என்ற நூலில் இருந்து எடுக்கப் பட்டவை ).சில சேர்க்கை திருத்தம் என்னுடையவையே.
இன்று இந்திய பொருளாதாரம் பற்றி பல வரையரை கொடுத்தாலும் இதனை ஊண்றி கவனித்தால் இதன் இளமைகாலம் பிரிடிஷ் ஆட்சியாளர்களின் பல சூழ்ச்சியோடு இயைந்தே காணப்படுவதை அறியலாம்.
முந்தைய பகுதின் தொடர்ச்சியாக கைவினைஞர்களின் தொழிலும் வணிகமும் நில உடைமை முறைக்கு கட்டுண்டு கிடந்தனர். அவை கீழ்திசை கொடுங்கோன்மை வணிகத்திலும் கைவினை நுட்பத்திலும் ஏற்படவிருந்த மேன்மையை கட்டுப்படுத்தியது .
பிபி மிஸ்ராவின் கூற்றுப்படி இந்திய வணிகர்கள் தம் வளர்ச்சிக்கு அரண்மனை அதிகாரிகளையும் மாகாண ஆளுநர்களை சார்ந்திருக்க வேண்டி இருந்தது இதைப்போன்ற தொழிலும் அரசு சார்பாக இருக்க வேண்டியிருந்தது.
இன்னும் இந்திய சமூகத்தின் நிலவுடைமை அதிகாரத்துக்கு வணிக முதலாளியும் தீர்க்கமான முறையில் கட்டுண்டு கிடக்கிறது. சுருக்கமாக சொன்னால் சிதைந்து கொண்டிருந்த நிலவுடமை சக்திகள் பண்பாட்டு மறுமலர்ச்சிக்கான அடித்தளத்தை வழங்கவில்லை, இந்தியாவை நீண்ட காலத்துக்கு தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இயலவில்லை, ஐரோப்பிய வணிகர்களை விட குறிப்பாக ஆங்கிலேயர் வணிக நிறுவனத்தை விட தீர்க்கமான முறையில் மேலோங்குவதற்க்கு அந்த நேரத்தில் இயலவில்லை .
இந்திய கைவினைஞர்களும் வணிகர்களும் வளராமைக்குரிய காரணமாக ஐரோப்பிய வணிகர்களின் போட்டியும் இருந்தது .
பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் இந்திய நாட்டின் பெரும்பகுதி தெற்கில் சில பிரதேசம் தவிர, மாபெரும் முகலாயப் பேரரசில் அடங்கியிருந்தது. பிரதேச ரீதியாக அனேகமாக ஐரோப்பா முழுமைக்கும் சமமாக இருந்த இந்தப் பரந்த பேரரசின் வளர்ச்சியில் சிறப்பு கூறுகள் இருந்தன . அந்த வளர்ச்சியின் வடிவங்கள் எவ்வளவு அதிகமாக வேறுபட்டிருந்தாலும் இந்தியாவில் பொருளாதார கட்டமைப்பை மொத்தமாக முடிவு செய்வதற்கும் உதவுகிறது.
இந்திய பொருளாதாரத்தில் விவசாயம் ஒரு முக்கியமான துறையாக இருந்தது.
பண்டைய காலத்தில் இருந்தே இந்தியாவில் இருந்திருக்கும் அரசு நிலவுடமை , விவசாய உறவுகள் , அந்த சமயத்தில் இருந்து மொத்த பொருளாதார கட்டமைப்பு ஆகியவற்றின் மீதான தீர்மானம் முக்கியமான காரணியாகத் தாக்கம் செலுத்தியது.எல்லா நிலமும் பெரிய நீர்ப்பாசனக் அமைப்புகளும் அரசின் உடைமையாக இருந்தன . நிதித்துறை அதிகாரிகள் எல்லாம் நிலங்களைப் பற்றிய அடங்கள் என்ற பதிவேடு வைத்திருந்தார்கள். அவற்றுக்காக வசூலிக்கப்பட வேண்டிய வரியை நிர்ணயித்தார்கள். அரசின் பங்கு வழக்கமாக விளைச்சலில் ஆறில் ஒரு பங்குக்கு அதிகமாக இருப்பதில்லை .வரி வசூல் செய்வதற்கு நிலப்பிரபுத்துவ ஜமீன்தார்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது . நாட்டில் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒரு ஜமீன்தார் பொறுப்பாக இருந்தார். வசூலிக்கப்பட்ட வரிகளில் குறிப்பிட்ட சதவீதத்தை அவர்கள் தனக்கு வைத்துக்கொண்டனர். இந்த அமைப்பின் மூலம் நிலபிரபுத்துவ சமூக தன் வருமானத்துக்கு தோற்றம் ஏற்படுத்தி கொண்டது.
நிலம் அரசின் உடைமையாக இருந்தபடியே பெரும்பாலும் ஒன்றாகவே இருந்தது . அரசு நேரடியாக வாரம் அல்லது வரிகள் வடிவத்தில் விவசாயிகளின் கூலி கொடுக்கப்படாத உபரி உழைப்பின் முக்கியமான வடிவமாக அது இருந்தது.
இந்தியாவின் பொருளாதாரம் பற்றி என் எழுத்தில் மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டிய ஒன்று ஏனென்றால் இந்திய நிலை என்பது அன்று நமது ஆசான் மார்க்ஸ் கூறியது போல் நிலவுடமை சமூகத்திற்கும் முதலாளியை சமூகத்திற்கும் இடைப்பட்ட ஒரு மேலோங்கிய கட்டமே என்பார் அதுபோல் இங்கு உள்ள நில உடைமை என்பது பற்றி ஒரு தெளிவான கண்ணோட்டத்திற்கு நாம் வரவேண்டும்.
நிலம் அரசின் உடைமையாக இருந்தது படிப்படியாக மறைந்து தனிப்பட்ட நிலப்பிரபுத்துவ உடமையாக மாறியது. கிராம சமூகம் தன்னுடைய சுய பூர்த்தியை தந்தை வழி முறையில் இழந்தது . பலமான வெகுஜன இயக்கங்கள் முகலாய பேரரசு சிதறிப் போவதைத் துரிதப்படுத்தின. ஆனால் இந்த நிகழ்வுப் போக்குகள் பூர்த்தி அடையாமல் இருப்பதற்கு ஐரோப்பிய நாடுகள் இந்தியாவில் நடத்திய காலனிய போர்களும் அதன் குறுக்கீடுகளும் இந்த வளர்ச்சிப் போக்கை தடுத்து நிறுத்தியது எனலாம். கிராம சமூகத்தின் தனிப்பட்ட உறுப்பினர்களுக்கு இடையிலும், நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலும் குண ரீதியில் புதிய உறவுகள் தோன்றின . இதன் தொடர்பாக இந்தியாவில் நகரங்களில் பொருளாதார வளர்ச்சி மிகவும் அக்கறையை தூண்டுவதாக அமைந்தன.
கிராம சமூகத்தின் உச்சியில் இருந்த கிராம தலைவர் போலீஸ் மற்றும் நிதித்துறை பணிகளை நிறைவேற்றினார். அந்த சமூகத்திற்கு என்று தனியாக எழுத்தர், புரோகிதர் ஆசிரியர் காவலாளி ஜோதிடர் மற்றும் இதரர்கள் இருந்தனர். இந்தக் கடமைகள் பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாக வந்தன, அவற்றை நிறைவேற்றியவர்கள் அந்த சமூகத்தை ஆட்சி புரிந்த குழுவாக இருந்தனர், அவர்கள் செய்த வேலைக்கு ஊதியம் உணவு தானியங்களாகவோ அல்லது பண்டமாக வழங்கப்பட்டது, சில இடங்களில் அந்த அளவிற்கு வரி இல்லாத நிலங்கள் அல்லது குறைவான வரிக் கொண்ட நிலங்கள் தரப்பட்டன.
இந்த சமூகத்தில் இரு பிரிவினர் இருந்தனர் ஒருவர் முழு உரிமையும் கொண்ட உறுப்பினர் மற்றொருவர் குறைந்தபட்ச உரிமைகளை கொண்ட உறுப்பினர்கள் பண்டைய கால இந்தியாவில் உபயோகிக்கப்படாத நிலம் அதிகமாக இருந்தபடியால் கிராம சமூகங்கள் அன்னியர்களை வரவேற்றனர்.
கிராம சமூகத்தின் முழு உறுப்பினர்கள் தங்களுடைய நிலத்தை தங்களுடைய வாரிசுகளிடம் கொடுத்தார்கள். தரிசு நிலம் மேச்சல் நிலம் பசும்புல் நிலம் ஆகியவை கூட்டுமையாக இருந்தன அவற்றுக்கு வரி கிடையாது, விவசாயிகளின் பொருளாதார நடவடிக்கைகளை அரசு கட்டுப்படுத்த வில்லை நிலத்தை உழுது பயிரிட்டு நிலத்திற்கு வாரம் கட்டவேண்டும் என்ற கடமைகளை மட்டுமே அரசு வற்புறுத்தியது. விவசாயம் செய்வதும் அரசுப் பணியாக இருந்தது அதிகாரிகள் பிரதானமான வருமான அளவுகள் என்ற முறையில்தான் கிராம சமூகத்தின் மேல் அக்கறை கொண்டிருந்தனர் எனவே அவற்றைத் தக்க வைப்பதில் அவர்கள் அக்கறை காட்டினார்கள். ஏனென்றால் தன்னுடைய எல்லா உறுப்பினர்களுக்கும் பொறுப்பாக இருந்த கிராம சமூக வரிகள் வசூல் செய்யப்படுவதை உறுதிப்படுத்தியது.
இந்தியாவில் கைத்தொழில்களுக்கும் விவசாய வேலைக்கும் இடையில் உழைப்புப் பிரிவினை குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் செய்யப் படவில்லை சமூகத்தின் உறுப்பினர்களுக்கு இடையில் செய்யப் பட்டிருந்தது,
சமூகத்தின் உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் முற்றிலும் விவசாய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர், மற்றவர்கள் கைவினைஞர்களாக இருந்தார்கள்,
கைவினைஞர்களுக்கு அறுவடையில் குறிப்பிட்ட ஒரு பகுதி கொடுக்கப்பட்டது, அவர்கள் சமூகத்தின் உறுப்பினர்களுக்கு தங்களுடைய கைத்தொழில் உற்பத்திப் பொருளை கொடுத்தனர், உழைப்பின் இத்தகைய அமைப்பு முறை கிராம சமூகத்தில் பலமான உறவுகளை பேணி வளர்ந்தது.
நாட்டின் பொருளாதார பிரிவினையை நிரந்தர படுத்தி நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையில் உழைப்புப் பிரிவினையை தடைசெய்தது உள்நாட்டு சந்தையில் உருவாக்கத்தையும் பண்ட பண உறவுகளின் வளர்ச்சியின் தாமதப்படுத்தியது, இந்தியாவில் நிலவும் ஜாதி முறை சமூகங்களுக்கு உள்ளே குறுகிய ஆனால் நிலையான அக உறவுகளை வளர்ப்பதற்கு முற்பட்டது ஏனென்றால் இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்த விவசாயி அதில் நிரந்தர உறுப்பினராக இருப்பதையும் அவன் செய்ய வேண்டிய வேலை முன்கூட்டி விதித்தது, மதத்தை ஆதரவாக கொண்ட ஜாதி முறை இந்தியாவில் கிராம சமூகங்களை சேர்ந்த ஒவ்வொரு நபரும் பொது உழைப்பில் பங்கெடுக்கும் ஸ்தூலமான வடிவங்களை வகுத்துக் கொடுத்து கிராம சமூகங்களில் உழைப்புப் பிரிவினை சட்டமாக்கியது, பண்டப் பரிவர்த்தனை முதலில் பக்கத்தில் இருக்கும் சமூகங்களுக்கு இடையிலும் அதற்குப்பிறகு சமூகத்துக்கு உள்ளேயும் தொடங்கி சமூகத்தின் உறுப்பினர்களின் உடைமை மற்றும் வர்க்க ரீதியான வகைப்படுத்தலை வளர்த்தது , சமூகத்தின் தலைமையில் இருந்த சிலர் பொது நிலத்தை எடுத்துக் கொண்டு அதை தங்களுடைய தனி உடைமையாக மாற்றுவதற்கு தொடங்கினார்கள் இந்த குழுவினர் இடையில் இருந்தே நிலப் பிரபுத்துவ வர்க்கம் தோன்றியது, கிராம சமூகத்தில் ஏற்பட்ட படிநிலை நிகழ்வுப் போக்கு பெரும்பான்மையான உறுப்பினர் நிலைமையும் பாதித்தது, சமூகத்தில் இவர்கள் நிலத்தின் மீதான தங்களுடைய பரம்பரை உரிமையை வலுப்படுத்திக் கொண்டனர், ஒருபுறம் ஏகபோகமாக நிலத்தை சேர்க்கும் ஒரு கூட்டம் நிலவுடைமையாளர்கள் ஆகவும் இன்னொரு பக்கம் நிலமற்ற அடிமைகளாகவும் சுரண்டலுக்கு வழிவகை செய்தன இவை, மன்னர்களும் அவர்களை சார்ந்த இராணுவம் மற்றும் அவர் பிரிவுகள் மட்டுமே நிரந்தரமாக நகரங்களில் வசித்தனர் இது நகரத்தின் பொருளாதார அமைப்பின் மீது நாட்டின் வளர்ச்சியில் அவற்றின் பாத்திரத்தின் மீது கணிசமான தாக்கத்தைக் கொண்டிருந்தது, நிலப் பிரபுக்கள் கைவினைஞர்கள் மீது ஏராளமான அதிகாரத்தைக் கொண்டு இருந்தார்கள், அவர்களை அனேகமாகப் பண்ணையாட்கள் போலவே நடத்தினார்கள் , கைத்தொழிலுக்கு பிரதானமான அரசர் மற்றும் நிலப்பிரபுக்களின் தேவைகளுக் காகவே தயாரிக்கப்பட்டன, அவர்கள் இப்பொருட்களின் மீதான உற்பத்தி செலவு பற்றி சிறிதும் கவலைப்படாமல் பெரும்பாலும் விலை கொடுக்காமல் எடுத்துக் கொண்டார்கள், இந்திய நிலப் பிரபுக்களும் சக்கரவர்த்தி தருகின்ற சம்பளத்தை தவிர வேறு வருமானம் இல்லாத படியால் அவர்கள் கைவினைஞர்கள் மட்டுமல்லாமல் வர்த்தகளிடமும் கொள்ளையடித்தார்கள், இத்தகைய நிலைமை நகர கைத்தொழில்களில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தாமதப்படுத்தியது இயற்கையே. ஏனென்றால் நகர கைவினைஞர்கள் தமது உற்பத்தியைப் பெருக்குவதில் அக்கறை காட்டவில்லை, இது வெவ்வேறு பிரதேசங்களுக்கு இடையில் வர்த்தக மற்றும் பொருளாதார வளர்ச்சியை பாதித்தது .
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் பிரதானமாக பிரிட்டிஷ் நிதி மூலதனத்தின் சுரண்டலுக்கும் இந்தியா ஏற்கனவே இலக்காயிருந்தது. அளவு ரீதியாக தலைமை நாட்டுக்கு சாதகமாக இந்தியாவின் தேசிய வருமானத்தில் இருந்து நேரடியாக எடுகப்பப்படுகின்ற எந்த வடிவத்திலும் திருப்பி கொடுக்காத தொகையை அதிக படுத்துவதிலும் இது வெளிப்பட்டது.
அந்நிய வர்த்தகம் இந்தியாவின் தேசிய செல்வத்தை கொள்ளையடிக்கின்ற முக்கிய கருவியாயிற்று தொழில்துறை முதலாளிவர்க்கம் ஆதிக்கம் செலுத்துகின்ற காலத்தில் கூட பிரிட்டிஷ் சரக்குகள் பெரிய அளவில் இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் பிரிட்டனில் நடைபெற்ற வர்த்தகத்தில் இந்தியாவுக்கு உபரி இருந்தது, 1830களில் அது இரண்டு மில்லியன் பவுண்டுகள் ஆக இருந்தது இந்த வர்த்தக உபரி நாட்டின் தேசிய செல்வம் வெளியே போவதை பிரதிபலித்தது.
நிதி மூலதனம் இந்தியாவில் ஆதிக்கத்துக்கு வந்தபொழுது வர்த்தக உபரி அந்நிய நாணயத்தின் முக்கியமான தோற்றுவாய் இருந்தது அது முழுவதுமே காலனியாதிக்கத்தின் வரிகளை செலுத்தவே பயன்பட்டது.
ஏகாதிபத்திய சகாப்தத்தில் இந்தியாவை சுரண்டி இரத்தத்தை உறிஞ்சிக் கொள்ளையடிக்கின்ற தன்மை நேரடியான கொள்ளையில் பல வடிவங்களை வைத்துக் கொண்டிருந்தாலும் சில புதிய கூறுகளையும் அடைந்தது. வர்த்தக கொள்ளை நாட்டின் ஏழ்மைக்கும் அழிவுக்கும் வழிவகுத்தது. சரக்குகளின் ஏற்றுமதி இந்தியாவின் பொருளாதார அமைப்பின் அடிப்படைகளை அழித்து ஒழித்தது, மூலதனத்தின் ஏற்றுமதி அதன் கடுஞ்சுரண்டல் தன்மை ஒரு புறம் இருந்தாலும் நாட்டின் உள்நாட்டு செல்வங்களை ஏதாவது ஒரு வகையில் சுரண்டுவதையே குறிப்பிட்டாக வேண்டும். பிரிட்டிஷ் மூலதன ஏற்றுமதி ஏகாதிபத்திய தலைமை நாட்டின் தேவைகளுக்கு ஏற்றபடி தன்னுடைய பொருளாதாரத்தை தகவமைத்து கொள்கிற பாதையை இந்தியாவில் உந்தித் தள்ளியது. தொடரும்..........