இலக்கு 6 இணைய இதழை இங்கே அழுத்தி தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம்
மார்க்சியத்தை சிலர் குழப்பிக் கொண்டுள்ளனர் அவர்கள் புரிதலுக்காக...
புவிஈர்ப்புவிசை பற்றிய அறிவியல்விதி இன்றைய அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏன் பயன்படுகிறது? புவிஈர்ப்புவிசையை அறிவியலாளர்கள் உருவாக்கவில்லை. மாறாக அந்த விசை இயற்கையில் இயற்கையாக நிலவுகிறது. அது இயற்கையின் இயற்கை. அதை அறிவியலாளர்கள் கண்டறிந்தார்கள். அவ்வளவுதான். உருவாக்கவில்லை.. அறிவியலாளர்கள் கண்டறிந்த இந்த விதி இயற்கையில் செயல்படுமா என்று இங்கு கேட்பதற்கே இடமில்லையல்லவா? .... அதுபோன்றதுதான் காரல்மார்க்சின் அரசியல்பொருளாதாரம்பற்றிய சமூகவியல் விதிகள். இவற்றை மார்க்ஸ் உருவாக்கவில்லை. மனித சமுதாயம் தோன்றியதிலிருந்து, தொடர்ந்து வரலாற்று ஊடே அது எவ்வாறு, மாறியும், வளர்ந்தும் வருகிறது என்பதைக் கண்டறிந்தார். அந்தச் சமுதாய வளர்ச்சி விதிகளை அவர் உருவாக்கவில்லை. அவர் முன்வைக்கிற அரசியல்பொருளாதார விதிகள் சமூகத்தின் இயற்கை... இயற்கைவிதிகள்... அவை அவரது கற்பனையில் உருவாகியதில்லை. எனவே இன்று மட்டுமல்ல, என்றுமே அவை உலகில் செயல்படுத்தக்கூடிய கோட்பாடுகள்தான். இதில் எங்கல்ல்ஸ் அவர்களின் பங்கும் உண்டு. அரசியல்பொருளாதார மாற்றத்தில் ... வளர்ச்சியில் மேலும் பல தெளிவுகள் கிடைக்கும்போது, அதை உள்ளடக்கி, இந்த மார்க்ஸின் கோட்பாடுகளும் மாறும். வளர்த்தெடுக்கப்படும். அவ்வாறுதான் லெனின் ஏகாதிபத்தியத்தின் இயக்கத்தைக் கண்டறிந்தார். தொடர்ந்து ஸ்டாலின், மாசேதுங் ஆகியோரும் பல நுட்பங்களைக் கண்டறிந்து கூறினார்கள். மார்கிசயக் கோட்பாடுகள் தனிமனிதர்களின் கற்பனையில் .. அவர்களது விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டு, உருவாக்கப்பட்டவை இல்லை. மாறாக , சமூகத்தின் இயக்கம்பற்றிய புறவயமான அறிவியல்.