1925ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். ஆல் அன்றைய இந்திய தரகு முதலாளித்துவ வர்க்கத்திற்கும் பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்திற்கும் சேவை செய்வதற்கான ”அகண்ட இந்து பேரரசை அமைப்போம்” என்ற பாசிச அரசியல் செயல்திட்டத்தை உருவாக்கி செயல்பட்டு 2014ல் இந்திய துணைக்கண்டத்தில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தபிறகு இன்றைய ஏகாதிபத்திய புதிய காலனிய சகாப்தத்தில் அந்நிய மற்றும் உள்நாட்டு கார்பரேட்டுகளின் நலனுக்காக” அத்திட்டத்தை ( ஒரே கட்சி,ஒரே ஆட்சி,ஒரே சட்டம், ஒரே தலைவன் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு இவற்றை கொண்ட அப்பட்டமான சர்வாதிகார ஆட்சியை) மிக விரைவாக நிறைவேற்ற கடந்த ஏழு ஆண்டுகளாக மிகத்தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
பி.ஜே.பி.யின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்சும் மற்றும் அதன் மதவெறிப்பயங்கரவாத கூட்டாளி அமைப்புகளும் தற்போது மத்தியிலுள்ள ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி கார்பரேட்டுகளுக்கு சாதகமான மற்றும் மக்களுக்கு எதிரான தனியார்மய , தாரளமய மற்றும் உலகமய கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்துகிற அதே நேரத்தில் அக்கொள்கைகளின் விளைவுகளை எதிர்த்து உழைக்கும் மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளின் உரிமைகளுக்கான போராட்டங்களை ஒடுக்குவதற்கான புதுப்புது பாசிசசட்டங்களை இயற்றியும் மற்றும் இவற்றுக்கு எதிராக போராடும் அனைத்து மதத்தைச் சார்ந்த உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட வர்க்கப்போராட்டத்தை தடுக்கவும் ஒடுக்கவும் திசைதிருப்பவும் சிறுபான்மை மதத்தினரின் குறிப்பாக .இஸ்லாமியர்களின் வாழ்வியல் உரிமை மற்றும் மதஉரிமைகளை படிப்படியாக பறித்து வருகின்றனர். அவர்களை பெரும்பான்மை “இந்து” மக்களுக்கு எதிரியாக செயற்கையாக சித்தரிக்கின்றனர். மேலும் பா.ஜ.க. அரசானது சட்டமன்றம், , பாராளுமன்றம், மற்றும் நீதிமன்றம் போன்ற போலி ஜனநாயக நிறுவனங்களை பயன்படுத்தி அவைகளின் ஒத்துழைப்புடன் இந்துமதவெறி அமைப்புகள் மூலம் மக்கள் மத்தியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்துமதவெறி பிரச்சாரத்தையும் மிகமூர்க்கமான பாசிச ஒடுக்குமுறைகளையும் கையாண்டு தங்களது மதவெறி அமைப்புகளை பலப்படுத்தியும் விரிவாக்கியும் இந்துத்துவ அரசு அமைப்பதை நோக்கி முன்னேறுகின்றனர் . நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் நாடுமுழுக்க மதக்கலவரங்களையும் மதப்படுகொலைகளையும் அன்றாட பதட்டமான நிகழ்வுகளாக்கும் வகையிலும் அதை நோக்கிய திட்டமிடுதலுடன் மிகநுணுக்கமாக செயல்பட்டு வருகின்றனர். ஆகையால் மக்களை மதவெறியிலிருந்து மதமோதலிருந்து பாதுகாக்கவும் அனைத்து மதங்களைச் சார்ந்த உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு இந்த கார்பரேட்டு காவி பாசிச அரசை எதிர்த்து போராட வைக்கவும் பொதுவாக மதத்தை பற்றிய மார்க்ஸியதத்துவத்தின் அறிவியல் விளக்கத்தையும், (அதன் தோற்றம் , அதன் மாற்றம் மற்றும் அதன் அழிவு) மார்க்ஸியவாதிகள் மதத்தின் மீது மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறையையும் தெரிந்துகொள்வதும் மக்களுக்கு புரியபை்பதும் தற்போதைய காலக்கட்டத்தில் மிக அவசியமானது ஆகும். அதன் அடிப்படையில் மதம் குறித்து மார்க்சியம் ஒரு அறிமுகம் என்ற இந்த கட்டுரையை முன்னணிகளின் புரிதலுக்காகவும், விவாதத்திற்காகவும் இலக்கு கொண்டுவருகிறது.
இயற்கையான பழங்குடி மதம் அல்லது மக்களின் மதங்களின் தோற்றம்.
அடுத்து அவன் தனது உடலின் உள் இயக்கத்தைப் (மனித உடல் உள் உறுப்புகளை) பற்றிய புரிதல் இல்லாதவனாக இருந்தான். கனவுகளுக்கான காரணம் தெரியாமல் இருந்தான். இறந்தவர்கள் கனவில் வந்தால் அவர்கள் இறவாத ஆவி வடிவத்தில் உயிருடன் இருப்பதாக அல்லது ஆன்மா என்ற நம்பினான். அறியாமையின் காரணமாக இறந்த முன்னோர்களை வழிபட ஆரம்பித்தான். இயற்கை மற்றும் அதன் இயக்கத்தை பற்றிய சரியான புரிதல் இன்மையின் காரணமாக தன்னால் கட்டுப் படுத்த முடியாத இயற்கை பொருள்களையும் சக்திகளையும் மிருகங்களையும் வழிபட ஆரம்பித்தான். இந்த ஆதி கால கடவுளர்கள் பற்றிய கருத்துக்கள், இக்கடவுளர்களை வழிபடும் முறைகள் அனைத்தும் ஆதிகால கருநிலையிலான சமய சித்தாந்தமாக இருந்தது.
புதிய ரோமசாம்ராஜ்யத்தின் அதிகாரத்திற்கு வந்த சக்கரவர்த்திகள் நிலபிரபுத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட (வர்க்க படிநிலையை) சுரண்டலை நிலைநாட்டிய பிறகு தங்களது அகண்ட ரோம சாம்ராஜ்யத்தின் மதமாக புதிதாக செயற்கையாக உருவாகிவந்த கிறித்தவ மதத்தை அரசுமதமாக ஆக்கினர். அம்மதத்திற்கு தலைவராக போப் உருவானார் ஐரோப்பா முழுக்க நிலபிரபுத்துவ உற்பத்தி முறையில் நிலபிரபுக்களும் மதவாதிகளும் தங்களது உல்லாசமான சொகுசான வாழ்க்கைக்காக. பண்ணையடிமைகளை கொடூரமாகச் சுரண்டினர். மதநூல்கள் மற்றும் மதவாதிகள் கூறும் கருத்திற்கு எதிராக யாரும் எதையும் பேசமுடியாத நிலையே இருந்தது. இயற்கை மற்றும் சமூக நிகழ்வுகளைப் பற்றிய எந்தவிசயமானாலும் கிறித்துவுக்கு 300ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த கிரேக்க தத்துவாதியான அரிஸ்டாட்டில் என்ன கூறியிருக்கிறாரோ அந்த கருத்துக்களிலிருந்தே விளக்கம் கொடுக்கப்பட்டன. அவர் ஒரு தத்துவாதியின் தரத்திற்கு எந்தவிதத்திலும் குறையாத அளவுக்கு இயற்கை, சமூகம் மற்றம் சிந்தனைப் பற்றி அவர் எழுதியிருந்தார். இருப்பினும் அவர் ஒரு கருத்துமுதல்வாதத்தி்கும் பொருள்முதல்வாதத்திற்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்த தத்துவஞானி. அவர் சமூகத்தையும் இயற்கையையும் பற்றி கொடுத்த விளக்கம் எல்லாமே பைபிளில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுக்கு நெருக்கமாக இருந்ததால் கத்தோலிக்க மதத்தலைமையே அரிஸ்டாட்டிலை மட்டும்“ ஒரு தத்துவவாதியாக அங்கீகரித்து இருந்தது. மேலும் கிறித்ததவ மதத்தலைமையானது கிறித்து பிறப்பதற்கு முன்னூறு வருடங்களுக்கு முன்பிறந்த பிளாட்டோவையும் அரிஸ்டாட்டிலையும் புனிதர்களாக்கியது.எனவே மத்தியகாலம் முழுவதும் அரிஸ்டாட்டிலின் கருத்தே செல்வாக்கு செலுத்தியது. ஆய்வாளர் என்று குறிப்பிடப் படும் எவரும் அரிஸ்டாட்டிலையும் பைபிளையும் கடந்து செல்ல முடியாது.இயற்கை மற்றும் சமூகத்தை பற்றிய அறிவின் தேக்க நிலையே மறுமலர்ச்சி காலம் துவங்கும் வரை நீடித்தது.
மதத்தின் ஏகதலைவராக போப்பே இருந்தார். போப்பிற்கு கட்டுப்பட்டே ஐரோப்பாவின் மன்னர்கள் ஆட்சி செய்தனர். ஐரோப்பாவின் நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு நிலத்திற்கு போப்பே அதிபதியாக இருந்தார். ஐரோப்பாவின் முதன்மை நிலபிரபுவாகவும் அவர்தான் இருந்தார். நிலபிரபுக்களை எதிர்த்தும் மடாதிபதிகளை எதிர்த்தும் நூற்றக்கணக்கான விவசாயிகளதுபோராட்டம் நடந்தன. அவைகள் எல்லாம் கத்தோலிக்க திருச்சபையால் கொடூரமாக ஒடுக்கபட்டன. போராட்டத்திற்கு தலைமைதாங்கியவர்கள் எல்லாம் கிறித்தவ மதத்திற்கு எதிராக செயல்பட்டார் எனக்கூறி எரிகம்பத்தில் கட்டிவைத்து உயுருடன் கொடூரமாக எரிக்கபபட்டனர். இவ்வாறு எரிக்கப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள்.
ஐரோப்பாவானது 14 ம்நூற்றாண்டு முழுக்க கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தது. துவக்கத்தில் 1315லிருந்து 1322வரை ஐரோப்பாவில் தொடர்ச்சியான கடும் மழையின் காரணமாக கொடூரமான பஞ்சம் ஏற்பட்டது. ஐரோப்பாவின் மக்கள் தொகையில் 50%பேர் மாண்டுபோயினர் கால்நடைகளுக்கு உணவிட முடியாமல் பெரும்பாலான கால்நடைகளும் மடிந்து போயினர். மன்னர்களோ மதவாதிகளோ தங்களது சுகபோகமான வாழ்க்கையிலே மயங்கி கிடந்தனர். விவசாயிகள் மீதான வரிவிதிப்பக்கு குறைவில்லை. அரசை எதிர்த்த மக்களது போராட்டங்களை ஒடுக்குவதிலே நிலபிரபுக்கள் கவனமாயிருந்தனர். மதவாதிகள் பஞ்சத்தை கடவுளது சாபம் என போராடுகிற ஜனங்களுக்கு ஆறுதல் கூறி நிலபிரபுக்களை பாதுகாத்தனர். அத்துயரத்துடன் கூடவே அதே நூற்றாண்டில்கி.பி. 1346லிருந்து கி்பி. 1354வரை “பிளாக் டெத்” (கருப்புச்சாவு) என்ற கொடுமையான ஆட்கொள்ளி தொற்றுநோயும் வடஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் பரவி சுமார் 20 கோடி மக்களை பலிகொண்டது. பதினான்காம் நூற்றாண்டிலிருந்தே ஐரோப்பாவின் அனைத்து நாடுகளிலும் நிலபிரபுத்துவச்சுரண்டலை ஒடுக்குமுறையை எதிர்த்து விவசாயிகளின் தொடர் போராட்டம் தொடர் நிகழ்வாக நடந்தது. இதற்கு அன்றைக்கு உருவாகி வந்த முதலாளித்துவ வர்க்கம் தலைமை தாங்கியது. உதாரணத்திற்கு 15 ஆம் நூற்றாண்டின் இத்தகைய நெருக்கடியான காலக்கட்டத்தில் இருபதுகளில் பிரான்சில் கத்தோலிக்க மன்னர், மதவாதிகள் மற்றும் நிலபிரபுக்களுக்கு எதிராக விவசாயிகளை திரட்டி போராடிய ஜோன் ஆப் ஆர்க் என்ற வீரமங்கை மதங்களுக்கு எதிராக செயல்பட்டார் எனக் கூறி போப்பின் முன்னாலேயே கட்டிவைத்து.
சரி மதச்சட்டங்களை மதக் கொள்கைகளை மீறி விட்டார் அல்லது எதிர்த்து செயல்பட்டார் அல்லது தெய்வக் குற்றம் புரிந்துவிட்டார். எனக் கூறி முண்ணனியில் இருந்து போராடுபவர்களை போப்பின் முன்னால் நிறுத்தி எரிக்கம்பத்தில் கட்டிவைத்து எரிப்பதே அன்றைய ஆளும்வர்க்கதின் நடைமுறையாக இருந்தது. ஐரோப்பாவில் மத்தியகாலம் முழுவதும் அரசு மற்றும் ஆளும் வர்க்கத்தின் மீதான எதிர்ப்பானது மதத்தின் மீதான எதிர்ப்பாகத்தான். பார்க்கப்பட்டது. அந்தளவுக்கு மதவாதிகளின் நலன்களும் நிலபிரபுத்துவ வர்க்கத்தின் நலனும் நிலபிரபுத்துவம் நிலவிய சமூகங்களில் பின்னி பிணைந்திருந்தன. மக்களும் இயற்கையை பற்றியும் சமூகத்தை பற்றியும் அறியாமை மற்றும் கடவுள் பற்று இருந்தபோதிலும் தங்கள் மீது ஒடுக்கமுறையை செலுத்திய மதவாதிகளையும், மடாதிபதிகளையும் நிலபிரபுக்களையும்
எதிர்த்து துணிந்து போரடினர்.
1000 ஆண்டுகாலம் நீடித்த நிலபிரபுத்துவ சமூகம் 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டுகளில் தொடர் நெருக்கடிகளுக்குள்ளானதன் காரணமாக தொடர் போராட்டங்களினாலும் அதன் அடித்தளமே கேள்விக்குள்ளானது. அதுவரை முடிந்த முடிவாக கருதப்பட்ட மதக் ககருத்துக்களும் பார்வைகளும் தீவிரமான கேள்விக்கு உள்ளாக்கப்பட்டன.
இங்கிலாந்தில் 1689க்கு பிறகு நிலமுடைய பிரபுக்குலத்தோருக்கும் பெரும் முதலாளிகளுக்கும்இடையிலான சமரசத்தின்அடிப்படையில் அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு உடபட்ட முடியரசு நிறுவப்பட்டது. இரண்டாவது முதலாளித்துவ எழுச்சியானது கத்தோலிக்க மத ஆதிக்கத்தை எதிர்த்து கால்வின் என்ற பிரெஞ்சு பாதிரியாரின் மதச்சீர்திருத்தக் கொள்கையை முன்வைத்து விவசாயிகளை திரட்டி முதலாளித்துவ வர்க்கம் போராடியதன் காரணமாக சுவிட்சர்லாந்த் , ஹாலந்து ஜெ்ரமனியின் ஒருபகுதி, ஸ்காண்டினேவிய நாடுகளில் மற்றும் ஸ்காட்லாந்தில் கத்தோலிக்க சபைகள் ஒழிக்கப்பட்டு புரோட்டஸ்டான்ட் திருச்சபைகள் அமைக்கப்பட்டன. ஹாலந்திலும் சுவிட்டசர்“லாந்திலும் முதலாளித்துவ குடியரசுகளை உருவாயின. பிரிட்டனில் பிரான்சிஸ்பேக்கன், ஹாப்ஸ் மற்றும் லோக் (நாத்திகத்தை வெளிப்படையாகவே அறிவித்தார்) போன்ற நவீன பொருள்முதல்வாத தத்துவஞானிகள் தோன்றி கருத்துமுதல்வாதத்தையும் மதத்தையும் பற்றிய விமர்சனத்தை துவங்கி வைத்தனர். இங்கிலாந்தில் விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தொழிற்புரட்சிக்கும் இங்கிலாந்தில் தோன்றிய பொருள்முதல்வாதமும் அங்கிருந்து முதலாளித்துவ முறையிலான நிலபிரபுத்துவ ஆட்சியும் அடித்தளம் போட்டன.
பிரட்டிஷ் பொருள்முதல்வாதமானது தனது அடுத்த கட்ட வளர்ச்சியை 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டில் பிரான்சில் கண்டது. ரெனேதெகார்த்தே, துவக்கிவைத்தார். பொருள்முதல்வாத நிலையிலிருந்து கத்தோலிக்கமதத்தை சாதூரியமாக தாக்கினார். இவரின் தத்துவ செல்வாக்கின் காரணமாக ஸ்பினாசோ (டச்சு) தோன்றி அனைத்து மதங்களையும் கடுமையாக தாக்கினார். அவர் கூறினார்: அன்பு, மகிழ்ச்சி, அமைதி, கட்டுப்பாடு உண்மை ஆகியவற்றை கூறுவதாக கருதப்படும் கிறித்தவமதத்தைச் சார்ந்தவர்கள் தினசரி வாழ்க்கையில் ஒருவர் மீது ஒருவர் வெறுப்புக் கொண்டவர்களாகவும் சண்டையிட்டுக் கொள்பவர்களாகவும் உள்ளனர். கிறித்தவரும், முஸ்லிமும், யூதரும் உடையாலும் வழிபடும் இடங்களாலும் வேறுபடுகிறார்களே தவிர மற்ற அம்சங்களில்ஒன்றாகவே விளங்குகின்றன. மதஆலயங்கள் பெருமைக்குரிய இடங்களாகவும், பணவரவு உள்ள இடங்களாகவும்,மாறிவிட்டன. ஒவ்வொருவரும் அவர் எவ்வளவு தகுதியற்றவராயினும் மதக்குருமராக வர விரும்புகின்றார். மதத்தை பரப்புவது என்பது ஒரு பிழைப்புவாதமாக மாறிவிட்டது.” என்றார்.
லாமெட்ரி (பிரான்சு) என்ற பொருள்முதல்வாத தத்துவஞானி கடவுள் என்ற கருத்தாக்கத்தை கடுமையாக எதிர்த்தார். உலகத்தீமைகளுக்கு முக்கிய காரணம் மதம் என்றார். மதமற்ற உலகமே மகிழ்ச்சியான உலகமாக இருக்க முடியும் என்றார்.அப்போதுதான் மதயுத்தத்திலிருந்து உலகம் விடுபட முடியும் என்றார். 18ஆம்நூற்றாண்டில் பிரான்சானது 14ஆம் லூயி மன்னனின் கொடூரமான எதேச்சாதிகாரத்தில் இருந்தது. போராடியவர்கள் 1000 கணக்கில் கில்லட்டின் என்ற கருவியைக் கொண்டு தலை துண்டாடப்பட்டனர். இருப்பினும் டேனிஸ் தீதரோ, மாண்டஸ்கியூ,வால்டர், ஹெல்விசியஸ் ஹோல்பாக் (கலைகளஞ்சியத்தார்) போன்ற போர்குணமிக்க முதலாளித்துவ பொருள்முதல்வாதிகள் முரணற்ற வகையில் நிலபிரபுத்துவ ஒழிப்பை மற்றும் மத எதிர்ப்பையும் நாத்திகத்தையும் அடிப்படையாகக்கொண்ட முதலாளித்துவ சித்தாந்த்ததை அதாவது சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம் என்ற முழக்கங்களை முன்வைத்து பிரெஞ்சு மக்களை திரட்டி 1789ல் பாஸ்டில் சிறைச்சாலையை தகர்த்து பிரெஞ்சு புரட்சியை துவக்கி விரைவில் நிறைவேற்றினர். 1000க்கணக்கான பாதிரியார்களும் மடாதிபதிகளும், மன்னரும் நிலபிரபுக்களும் அவர்கள் உருவாக்கிய கில்லட்டினாலேயே தலைதுண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். மடாலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மடங்களுக்கு நிலபிரபுக்களுக்கு சொந்தமான நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. . மதம் தனிநபரின் சொந்த விவசாரமாக பிரகடனம் செய்யப்பட்டது. புரட்சிக்கு தலைமைதாங்கிய ரோபெஸ்பியர் கத்தோலிக்க மதத்திற்கு மாற்றாக ”உன்னத புருஷன்” என்ற மதத்தை உருவாக்க முயற்சி எடுத்து தோற்றார். பின்னர் 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் நெப்போலியனால் முதலாளித்துவ வர்க்க நலனையொட்டி கத்தோலிக்க மதத்தை மீண்டும் கொண்டு வந்தது மட்டுமல்லாமல் வரலாறே வெறுக்கும் படியாக பிரெஞ்சு குடியரசுக்கு மன்னராக முடிசூடிக்கொண்டார். புரட்சிகரமான பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கமே பிற்போக்காக மாறி பிரிட்டனை முன்மாதிரியாகக் கொண்டு போராடும் மக்களை ஒடுக்க அவர்களை மதஉணர்வில் வைத்திருக்க முதலாளித்து அரசியல் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு மன்னராட்சி முறையை கொண்டு வந்தது. இது 1870 வரை நீடித்தது.
கம்யூனிசத்தின் எதிராளிகள் கம்யூனிசத்திற்கு எதிராக குற்றச்சாட்டை முன் வைக்கும்போது “ வரலாற்று வளர்ச்சியின் போது சமயம், ஒழுக்க நெறி, தத்துவவியல், சட்ட நெறி, இவை சம்பந்தமான கருத்துக்கள் உருத்திரிந்தது மெய்தான். ஆனால் சமயமும் ஒழுக்க நெறியும் தத்துவவியலும், அரசியல் விஞ்ஞானமு் சட்டமும் இந்த மாற்றங்களால் அழிந்துபடாது எப்போதுமே சமாளித்து வந்திருக்கின்றன” என்றும் “சுதந்திரம் நீதி என்பன போன்ற சாசுவத உண்மைகள் இருக்கின்றன. இவை சமுதாயத்தின் எல்லா கட்டங்களுக்கும் பொதுவானவை. கம்யூனிசமானது சாசுவத உண்மைகளை இல்லாதொழியச் செய்கிறது. மதம், ஒழுக்க நெறி ஆகிய அனைத்தையம் புதிய அடிப்படையில் அமைப்பதற்கு பதிலாக இவற்றை ஒழித்து கட்டிவிடுகிறது. ஆகவே கம்யூனிசம் கடந்த கால வரலாற்று அனுபவம் அனைத்திற்கும் முரணாய் செயல்படுகிறது.” என்றனர் . முதலாளித்துவ வாதிகள் முன்வைக்கும் இந்த குற்றச்சாட்டிற்கு பதில் அளித்து கூறுகையில் மார்க்சும் எங்கெல்சும் ”தற்போதுள்ள உங்களுடைய பொருளுற்பத்தி முறையிலிருந்தும் சொத்துடைமை வடிவிலிருந்தும் உதித்தெழும் சமூக வடிவங்களை பொருளுற்பத்தியின் முன்னேற்றத்தின்போது தோன்றி மறைந்து போகும் உறவுகளாகிய இவற்றை என்றும் சாசுவத இயற்கை விதிகளாகவும் பகுத்தறிவு விதிகளாகவும் மாற்றும்படி உங்களது தவறான தன்னல கருத்தோட்டம் உங்களை தூண்டுகிறது இந்த தவறான கருத்தோட்டம் உங்களுக்கு முன்பிருந்த ஆளும் வரக்கங்கள் யாவற்றுக்குமே இருந்ததுதான். பண்டைக்காலத்து சொத்துடைமையை பொறுத்தவரை நீங்கள் தெட்டத் தெளிவாக காண்பதை, பிரபுத்துவ சொத்துடமை சம்பந்தமாய் நீங்கள் ஒத்துக் கொள்வதை உங்களுடைய முதலாளித்துவ சொத்துடமை குறித்து உங்களால் ஒத்துக் கொள்ள முடிவதே இல்லை. நீங்கள் தடுக்கப் பட்டுவிடுகிறீர்கள். என்றும் . புராதான பொதுவுடமை சமூகம் தவிர கடந்தகால சமுதாயம் அனைத்தின் வரலாறும் வர்க்க பகைமைகளின் இயக்கமாய் இருந்திருக்கிறது. இந்த பகைமைகள் வெவ்வேறு சகாப்தங்களில் வெவ்வேறு வடிவங்களை ஏற்று வந்திருக்கிறது. ஆனால் இந்த வர்க்கப் பகைமைகள் ஏற்றவடிவம் எதுவானாலும் சமுதாயத்தின் ஒருபகுதி மற்றொரு பகுதியால் சுரண்டப்பட்டு வந்தது என்பதும் கடந்த சகாப்தங்கள் யாவற்றுக்கும் உண்மை. எனவே கடந்த சகாப்தங்களது சமூக உணர்வு எவ்வளவுதான் பல்வேறுபட்டதாகவும் பலவிதமானதாக இருந்திருப்பினும் வர்க்க பகைமைகள் அறவே அழிந்தாலொழிய முற்றிலும் கரைந்துவிட முடியாத குறிப்பிட்ட சில பொதுவடிவங்கள் அல்லது பொதுவான கருத்துக்களின் குறிப்பிட்ட சில பொதுவடிவங்கள் அல்லது பொதுவான கருத்துக்களின் வட்டத்தினுள்ளேதான் அந்த சமூக உணர்வு இயங்கி வந்திருக்கிறது. இதில் வியப்பு ஏதும் இல்லை. உதாரணமாக மதத்ததை பொறுத்தவரை, பண்டைய உலகு (அடிமைச்சமூகம்)அதன் அந்திமக் காலத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது பண்டைய சமயங்களை கிறித்தவ சமயம் வெற்றிக் கொண்டது. பிறகு 18ஆம் நூற்றாண்டில் கிறித்தவ சமயக் கருத்துக்கள் அறிவொளி இயக்க கருத்துக்களுக்கு அடிபணிந்து அரங்கை விட்டகன்ற போது அக்காலத்திய புரட்சி வர்க்கமான முதலாளித்துவ வர்க்கத்துடன் பிரபுத்துவ சமுதாயம் தனது மரண போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது.எனவும் சமயத்துறை சுதந்திரம் மனசாட்சி சுதந்திரம் ஆகிய கருத்துக்கள் கட்டற்ற (முதலாளித்துவ )சுதந்திர போட்டியின் ஆதிக்கத்தினது அறிவுலக வெளிப்பாடுகளே என்றும் அதாவது முதலாளித்துவ அரசியல் சுதந்திரம் பெற்ற அமைப்பில் மதப்பிரச்சினை என்பது தனிநபர்சார்ந்தது அதாவது அரசு சாராதது, அது மனிதனது மனசாட்சி பிரச்சினை என்றும் அதே சமயத்தில் தனிச்சொத்தை பாதுகாக்கும் பாரம்பரிய கருத்தமைப்புகளிலிருந்து (மதம் உட்பட) மக்களே துண்டித்து கொள்ளும் நிலை ஏற்படும் அவைகள் படிப்படியாக அழிந்து போகும் என்பதை கீழ்க்கண்டவாறும் குறிப்பிடுகிறார். ” கம்யூனிச புரட்சி பாரம்பரிய சொத்துடமை (தனிச்சொத்து) உறவுகளிலிருந்து மிகவும் தீவிரமாய துண்டித்து கொண்டு விடும் புரட்சியாகும் . ஆகவே இந்த புரட்சியின் வளர்ச்சியின் போது (பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் போது) பாரம்பரிய கருத்துக்களிடமிருந்து (தனிச்சொத்தை பாதுகாக்கும்) மக்கள் மிகவும் தீவிரமாய் துண்டித்து கொள்ளும் படி நேர்வதில் வியப்பிற்கு இடமில்லை.”
தொடரும்.......