சென்ற இதழ் தொடர்ச்சி............ஏகாதிபத்திய பொருளாதார அடித்தளத்தின் பிரதிபலிப்பாகவேமேல் கட்டுமானத்தில் பாசிசக் கொள்கை உருவாகிறது.
எனவே பாசிசம் என்ற ஏகாதிபத்தியவாதிகளின் அரசியல் கொள்கையை அவர்களது பொருளியல்உறவுகளின் பிரதிபலிப்பாக பார்க்க வேண்டும். வெறும் கருத்தியலாக பார்க்கக்கூடாது.ஏகாதிபத்தியமானது அந்திமகால முதலாளித்துவம் மற்றும் அழுகிப்போன முதலாளித்துவம்.
அதாவது பிற்போக்கு முதலாளித்துவம். மனிதகுல வரலாற்றில் குறிப்பிட்ட சகாப்தத்தில்முற்போக்கு பாத்திரம் வகித்த அவ்வர்க்கம் 19- ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏகாதிபத்தியம்என்ற முதலாளித்துவத்தின் உச்சகட்ட பொருளாதார வளர்ச்சியை அடையும் போது ஒட்டுமொத்தமனித குலத்திற்கே எதிராகப் போய்விட்டது. இதன் வெளிப்பாடே நிரந்தர பொருளாதாரநெருக்கடி மற்றும் நிரந்தர யுத்தம். அதனால்தான் ஏகாதிபத்தியம் என்றாலே யுத்தம் என்றார்
லெனின். ஏகாதிபத்திய சகாப்தத்தில் பொருளாதார நெருக்கடி நிரந்தரம் என்பதால் அந்நெருக்கடியினால் பாதிக்கப்படுகிற உழைக்கும் மற்றும் ஏனைய பிற வர்க்கங்களுடையபோராட்டங்களும் தொடர்ச்சியானவை மற்றும் தீவிரமானவை என்பதை உணர்ந்து கொண்டஏகாதிபத்தியவாதிகள் அப்போராட்டங்களை திசைதிருப்பவும், ஒடுக்கவும் மற்றும் ஏனையதேசங்களை கைப்பற்றவும் தேசப்பற்று வேண்டும் என்று கூறி நடைமுறையில் பெரும்பாலான உழைக்கும் திரளினருக்கு தேசிய வெறியை மற்றும் தேசிய மோதல்களை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தேசியவெறிக் கொள்கையே பாசிசம் ஆகும். ஏகாதிபத்தியவாதிகள் தங்களதுவர்க்க உறவுகள் மற்றும் தங்களுடைய லாபங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டிய தேவையைவைத்துப் பார்க்கும் பொழுது தொழிலாளர்களின் மீது மிகுந்த நிர்பந்தம் செலுத்துவதற்கான வடிவங்களை முதலாளித்துவ வர்க்கங்கள் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது மேலும், ஏகபோகங்கள்அதாவது முதலாளித்துவ வர்க்கத்தின் தலையாய சக்திகள் மூலதனக் குவிப்பின் மிக உயர்ந்தகட்டத்தை அடைகின்ற பொழுது அப்போது ஆட்சியின் பழைய வடிவங்கள் அவற்றின் விரிவாக்கத்திற்கு தடைக்கற்களாக மாறிவிடுகின்றன. இதனால் முதலாளித்துவ வர்க்கம் தான் உருவாக்கியதற்கு எதிராகவே (ஜனநாயகத்திற்கு எதிராக) திரும்பவேண்டியுள்ளது. ஏனென்றால்ஒரு சமயம் அதனுடைய வளர்ச்சிக்கான அம்சமாக இருந்தது, இன்று முதலாளித்துவ சமுதாயத்தை பாதுகாப்பதற்கு ஒரு இடையூறாகவே இருக்கிறது. இதன் காரணமாகத்தான் ஏகாதிபத்தியவாதிகள் முதலாளித்துவ வர்க்கத்தின் பிற்போக்காளர்களாக மாறி பாசிசத்தை(ஜனநாயக மறுப்பை) கடைபிடிக்கும் நிலைக்குச் சென்றனர். அவர்கள் சொந்த நாட்டில்மட்டுமல்ல தங்களது காலனிய நாட்டிலும் தங்களது அதிகாரத்திற்கு எதிராக போராட்டம்தொடங்கியபோது அந்நாடுகளிலும் பாசிச ஆட்சிமுறையை கட்டியமைப்பதற்கான முயற்சியில்ஈடுபட்டனர்.
அதே சமயத்தில் டிமிட்ரோவ் கூறுகிறார்: பாசிசம் எத்தகைய ஒரு முகமூடியை (இனம், மதம்,தேசம், மொழி......) அணிந்திருந்தாலும் எந்த வடிவத்தில் தன்னை அது காட்டிக்கொண்டாலும்எந்த வழிகளில் அது அதிகாரத்திற்கு வந்தாலும்:
1) பாசிசம் என்பது முதலாளித்துவமானது (நிதிமூலதனம்) உழைக்கும் மக்கள் (தொழிலாளர்கள்,விவசாயிகள்) மீது மிகவும் கொடூரமாக, கோரமாக நடத்தும் தாக்குதல் ஆகும்.
2) பாசிசம் என்பது கடிவாளமில்லாத இனவெறியும், ஆதிக்கவெறியும் பிடித்த யுத்தமாகும்.
3) பாசிசம் என்பது வெறிபிடித்த பிற்போக்குதனமும் எதிர்ப்புரட்சியுமாகும்.
4) பாசிசம் என்பது தொழிலாளி வர்க்கத்தின் சகல உழைக்கும் மக்களின் கொடிய விரோதி ஆகும்.
5) பாசிசம் - ஒரு கொடிய ஆனால் ஒரு நிலையற்ற ஆட்சி அதிகாரம் ஆகும்.
6) முதலாளித்துவ வர்க்கத்தின் பாசிச சர்வாதிகாரம் ஒரு கொடிய ஆட்சி அதிகாரம் ஆகும்.
டிமிட்ரோ மேலும் கூறுவதாவது;பாசிசத்தைப் பற்றி பொதுவாக குணாம்சப்படுத்திக் கூறினால் போதாது, அது எவ்வளவு சரியாகஇருந்தாலும் போதாது. பாசிசத்தின் வளர்ச்சி பற்றிய அம்சங்களை தனிப்பட்ட பல நாடுகளில்
அதன் பல்வேறு கட்டங்களில் பாசிச சர்வாதிகாரம் எடுக்கும் பல்வேறு வடிவங்களை கணக்கில்எடுத்துக்கொண்டு அவற்றை விவரமாக படித்தறிய வேண்டியது அவசியமாகும். ஒவ்வொருநாட்டிலும் உள்ள தேசிய தனித்தன்மைகளை, பாசிசத்தின் குறிப்பிட்ட தேசிய அம்சங்களைஆராய்ந்து படித்தறிந்து உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். அதற்குத் தக்கபடி பாசிசத்திற்குஎதிரான சரியான போராட்ட வடிவங்களையும், முறைகளையும் வகுத்துக்கொள்ள வேண்டும்”;காலனி, அரைக்காலனி நாடுகளிலும் கூட விவாதத்தில் குறிப்பிட்டது போல் சில பாசிஸ்டுகுழுக்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவை எந்த வகையிலும் ஜெர்மனி, இத்தாலி மற்றும் இதர முதலாளித்துவ நாடுகளில் நாம் வழக்கமாக பார்த்திருக்கிற பாசிச வகையைச்சார்ந்தது அல்ல. இங்கு மிகவும் தனித்தன்மையாக உள்ள பொருளாதார அரசியல், வரலாறுநிலைமைகளை படித்தறிய வேண்டும், கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தநிலைமைகளுக்கு தக்கவாறு பாசிசம் தனக்கென ஒரு வடிவத்தை எப்படிஎடுத்துக்கொண்டிருக்கிறது, இனி எதிர்காலத்தில் எவ்வாறு எடுக்கும் என்பதையும் படித்தறியவேண்டும்.;நமது கட்சியின் பாசிஸ்டு எதிர்ப்புப் போராட்டத்தில் ஆகப் பலவீனமான அம்சங்களில் ஒன்று,பாசிசத்தின் வாய்ச்சவடால் பிரச்சாரத்திற்கு போதுமான அளவில் நாம் உடனுக்குடன்பதிலளிப்பதில்லை. நாம் மெதுவாகவே பிரதிபலிக்கிறோம். இன்றுவரையிலும் நாம் பாசிஸ்டுசித்தாந்தத்திற்கு எதிரான போராட்டத்தைப் பற்றிய பிரச்சனைகளை தொடர்ச்சியாகபுறக்கணித்தே வந்திருக்கிறோம். பாசிஸ்டு சித்தாந்தம் பூர்ஷ்வா சித்தாந்தத்திலேயே ஆகப்பிற்போக்கான வகையைச் சேர்ந்தது. அது தனது மதிகெட்ட செயல்களினால் அடிக்கடி வெறிபிடித்த பைத்திய நிலையை எட்டிவிடுகிறது. இத்தகைய படுமோசமான ஒரு சித்தாந்தம்மக்களிடையே செல்வாக்குப் பெற முடியுமா என்று பல தோழர்கள் அதை நம்பக்கூடமறுக்கிறார்கள். இது ஒரு மிகப்பெரிய தவறாகும். முதலாளித்துவ சீரழிவின் முடைநாற்றம் அதன்சித்தாந்தம், கலாச்சார அடிஆழம் ஆகியவற்றின் மையத்திற்கே ஊடுருவிச் சென்றுஅழுகிவிடுகிறது. இந்த அழுகலிருந்து கிளம்பும் விஷக்கிருமிகள், விரக்தி அடைந்து தொல்லைகளில் தவழும் மக்களின் பல பகுதியினரிடத்தில் பரவி தொற்றிக்கொள்கிறது.
எந்தச் சூழ்நிலையிலும் பாசிசத்தின் சித்தாந்தத் தொற்று நோய் சக்தியை குறைத்துக் கணக்கிட்டு விடக்கூடாது. அதற்கு நேர்மாறாக நாம் நமது பக்கத்திலிருந்து தெளிவான,மக்களுக்கான வகையில் எளிமையாக எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய வாதங்களின்அடிப்படையில், மக்களின் தேசிய மன இயல்புகள் தனித்தன்மைக்குத் தக்கவாறு ஒரு சரியான,நன்கு சிந்தித்து உருவாக்கப்பட்ட அணுகுமுறைகளின் அடிப்படையில் ஒரு மிக விரிவான சித்தாந்தப் போராட்டத்தை நடத்த வேண்டும்.பாசிஸ்டுகள் ஒவ்வொரு தேசத்தின் வரலாறு முழுவதையும் துருவித்துருவி ஆராய்ந்து தேடி அதில்சில வீரம்மிக்க, சிறப்பாகப் பெயர் பெற்ற பண்டைய சம்பவங்களையும், மரபுகளையும் சுட்டிக்காட்டி, தாங்கள் அதன் நேரடியான வாரிசுகள் என்றும் அந்த மரபின் வழிவந்தவர்கள்என்றும் காட்டிக்கொள்வார்கள். அதே சமயத்தில் மக்களுடைய தேசிய உணர்வுகளுக்குஇழுக்காகவும், பாதிப்பாகவும் உள்ள எந்த ஒரு சிறு விஷயத்தையும்கூட பயன்படுத்திக்கொண்டுபாசிசத்தின் எதிரிகளுக்கு எதிராக தங்கள் சிறப்பாயுதமாகப் பயன்படுத்துவார்கள். ஜெர்மனியில்ஒரே ஒரு நோக்கத்தோடு நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதுஜெர்மன் மக்களின் வரலாற்றைத் திரித்துக்கூறி பொய்யும் புளுகும் சேர்த்து அதற்கு ஒரு பாசிஸ்டுமுகத்தோற்றத்தைக் கொடுக்கிறார்கள்.
புதிதாகப் பொறித்தெடுக்கப்பட்ட தேசிய சோசலிஸ்டு வரலாற்றியலாளர்கள்:” ஜெர்மனியின் வரலாறு கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, சில சிறப்பு மிக்க வரலாற்று விதிகளின் குண விசேசத்தினால் ஒரு குறிப்பிட்ட வகைப்பட்ட வளர்ச்சிக்கோடு ஏற்பட்டு, பட்டுச் சரிகை இழையோடி, வரலாற்று அரங்கில் தேசிய; என்றும் ஜெர்மன் மக்களின் மீட்பாளர் என்றும் ஆஸ்திரியாவிலிருந்து பெயர்ந்து வந்த அதிகாரத்தன்மை படைத்தவர்களாகவும்அமைந்துள்ளார்கள் என்று ஜெர்மன் வரலாற்றைச் சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். இந்தப்புத்தகங்களில் ஜெர்மன் மக்களின் கடந்த காலத்திய சிறந்த மனிதர்கள் எல்லாம் பாசிஸ்டுகளாகஇருந்தார்கள் என்றும் மகத்தான விவசாயிகளின் பேரியக்கங்கள் எல்லாம் பாசிஸ்டு இயக்கத்தின்முன்னோடிகள் என்றும் வர்ணிக்கப்பட்டிருக்கின்றன.இத்தாலியில் முசோலினி மாவீரன் கரிபால்டியின் பெயரை வைத்து, தான் அவர் வாரிசு என்றுகூறி முதலெடுக்க பெருமுயற்சி எடுக்கிறான். பிரெஞ்சு பாசிஸ்டுகள் வீராங்கனை ஜோன்ஆப்ஆர்க்கை முன்வைக்கிறார்கள், அமெரிக்க பாசிஸ்டுகள் அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தின்பாரம்பரியங்களையும், வாஷிங்டன், லிங்கன் ஆகியோர்களின் மரபுகளையும் முன்வைத்துவேண்டுகோள் விடுக்கிறார்கள். பல்கேரிய பாசிஸ்டுகள் பதினேழாம் நூற்றாண்டின் தேசவிடுதலை இயக்கத்தைப் பயன்படுத்தி மக்களின் பெரும் மரியாதைக்குரிய வாச்சில் லேவ்ஸ்கி, ஸ்டீபன் காரட்ஜா மற்றும் இதர மாவீரர்களையும் அவர்களுடைய பெயர்களையும் உபயோகித்துக்கொள்கிறார்கள்.
கம்யூனிஸ்டுகள், மேற்கூறியவைகளுக்கும் தொழிலாளி வர்க்கத்தின் லட்சியங்களுக்கும் எந்தவிதசம்பந்தமும் இல்லையென்று கருதினால், மக்களுடைய கடந்த காலத்தைப் பற்றிய வரலாற்றுப்பூர்வமாக மிகச் சரியாக, மார்க்சிய - லெனினிய வழியில் தெளிவுபடுத்தி மக்களை ஒளிபெறச் செய்ய வில்லையானால், இன்றைய போராட்டங்களை மக்களுடைய கடந்தகால புரட்சிகரமான பாரம்பரியங்களுடன் இணைப்பதற்கு ஏதும் செய்யாமலிருந்தால் நாமே பாசிஸ்டுபொய்யர்களிடம் தேசத்தின் கடந்தகால வரலாற்றுச் சிறப்புகள் அனைத்தையும் எடுத்துக்கொடுத்து அவர்கள் மக்களை ஏமாற்றுவதற்கு வழி செய்து கொடுத்தவர்கள் ஆவோம்.
ஆக தோழர் டிமிட்ரோவ் பாசிசத்தின் பொதுப்பண்புகளையும் அதன் பொதுவர்க்க இயல்புகளையும், ஒவ்வொரு நாட்டின் அதன் குறித்த பண்புகளையும் அதன் குறித்த வர்க்க ஆய்வுசெய்து புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தையும் மற்றும் பாசிச இயக்கமானது தனதுவாய்ச்சவடால் மூலமும், பொய் பித்தலாட்டம் மூலமும், வரலாற்றை இட்டுக்கட்டியும் திரித்தும்புரட்டியும் தனது வர்க்க நலனை மறைத்து உழைக்கும் மக்களை எவ்வாறு ஏமாற்றுகிறது என்பதைஅம்பலப்படுத்தி மக்களுக்கு புரிய வைக்கிற ஒரு தொடர்ச்சியான சித்தாந்த போராட்டத்தைநடத்தாமல் பாசிசத்தை வெற்றி கொள்ள முடியாது என்கிறார்.புதிய காலனிய இந்தியாவில் உள்ள இந்துத்துவா பாசிசத்தை அறிந்து கொள்ள, புரிந்துகொள்ளஅதை வரலாற்றுப் பூர்வமாக ஆய்வு செய்வதுதான் சரியானதாக இருக்க முடியும். அதே சமயத்தில்இந்தியா ஒரு நாடாக, ஒரு இந்திய தேசமாக கட்டியமைக்கப்பட்ட வரலாற்றோடு, இந்து,இந்துமதம், இந்து தேசியம் மற்றும் இந்திய தேசியம் என்று பலதரப்பட்ட கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தி வரலாறோடும், இணக்கமாக ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக வாழ்ந்த இந்து முஸ்லீம்மக்களை பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகள் பிளவுபடுத்தி இருதரப்பையும் மோதவைத்துலட்சக்கணக்கில் கொலை செய்த வரலாற்றோடும் இங்குள்ள தேசியஇன மக்களின் (தமிழர்,தெலுங்கர், கன்னடர் மற்றும் மலையாளி......இன்னபிற) தேசியஇன மொழிவாரிஅடிப்படையிலான தேசியத்தை புறக்கணித்துவிட்டு பாசிசம் உருவாவதற்கு அடிப்படையான செயற்கையான, ஆரிய இனம்-திராவிட இனம் என்ற பிரிட்டீஷ் காலனிய ஆதிக்கவாதிகளின் காலனிய இனவியல் மற்றும் மதரீதியான பிளவுவாத கோட்பாடுகள் உருவாக்கப்பட்ட வரலாறோடும் தொடர்புபடுத்தியும் பார்க்க வேண்டும்.
இங்கு 200 ஆண்டுகாலம் ஆட்சி செய்த முகலாயர்கள் மற்றும் 200 ஆண்டுகாலம் ஆட்சி செய்தஆங்கிலேயர்கள் இந்த நாட்டிற்குள் நுழையும்போது இந்தியா ஒரு திட்டவட்டமானஒருங்கிணைந்த நாடாகவோ ஒருங்கிணைந்த தேசமாகவோ ஒருங்கிணைந்த சட்டத்தைக்கொண்டுஆளப்பட்டு இருந்ததில்லை என்பது ஒரு வரலாற்றுப் பூர்வமான உண்மை. அப்படிஉருவாவதற்கான எந்த அடிப்படைத் தேவையும் இங்கு ஏற்பட்டு இருக்கவில்லை.முகலாயர்கள் உட்பட பலதரப்பட்ட அந்நிய பேரரசுகள் மற்றும் பிரிட்டீஷ் உட்பட டச்சு,போர்த்துகீசியர் மற்றும் பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்தியங்கள் வாணிபம் செய்யவந்து பின்னர் சூழ்ச்சியாக இங்கு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அவைகளின் நோக்கமானது ஐரோப்பா கண்டத்து அளவிலான இந்த பரந்து விரிந்து கிடந்த பிரதேசத்தை கொள்கையடிப்பதற்கே ஆகும்.
ஆனால் அதில் ஒரு வித்தியாசம் மொகலாயர்கள் படையெடுத்து அதிகாரத்தை கைப்பற்றிஇங்கேயே வாழ்ந்து வந்தனர். அவர்களது சொத்துக்கள் இங்கேயே இருந்தது. இங்கேயேசெலவழித்தனர். இங்கேயுள்ள கலாச்சாரத்தோடு இயைந்து வாழ்ந்து வந்தனர்.
ஆனால் இங்கு கொள்ளையடித்துவந்த பிற காலனிய போட்டியாளர்களை வென்று இறுதியில்ஆட்சியில் அமர்ந்த பிரிட்டீஷாரோ தொடர்ந்து கொள்ளையடித்து இந்த நாட்டின் செல்வங்கள்அனைத்தையும் தனது சொந்த நாட்டுக்கு எடுத்துச் சென்றனர். அவர்கள் நம்மோடு கலந்துவாழவில்லை. நம்மை தீண்டத்தகாதவர்களாகவும், அடிமைகளாகவும் நடத்தினர். பிரிட்டீஷார்அதற்காக மட்டுமே சட்டதிட்டங்களை வகுத்து இங்குள்ள மக்களைக் கொண்டே ஒருபடையைக்கட்டி ஒரு கொடூர சர்வாதிகார ஆட்சியை நடத்தினர். இந்த பரந்த நாட்டில் அவர்களதுகொள்ளைகளையும் சர்வாதிகாரத்தையும் எதிர்த்து மக்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரைபோராட்டம் நடத்தினர். அவர்கள் ஆட்சியை எதிர்த்து ஒன்றுபட்டு போராடிய அனைத்துதரப்பினரையும் சதித்தனமாக பிளவுபடுத்தி மேலும் சாதி மற்றும் மதக்கலவரத்தின் மூலமும்கொடூர ஒடுக்குமுறையின் மூலமும் லட்சக்கணக்கில் கொன்று குவித்தனர். ......தொடரும்......