இலக்கு மூன்றாம் இதழ் ஜீலை 1 ம் தேதி வெளிவரவுள்ளது

 

தோழர்களுக்கு வணக்கம்.

நமது இலக்கு மூன்றாம் இதழ் வர உள்ளது. 

இலக்கு இதழின் நோக்கமான மார்க்சிய அடிப்படை புரிதலோடு மார்க்சியத்தை தெளிவாக கற்றுத் தேறுவதற்கான ஒரு தளமாக களமாக இதழை நடத்த இணைத்துள்ளோம் . இதழில் பல தோழர்கள் கட்டுரை எழுதிக் கொண்டுள்ளனர் அக்கட்டுரையின் கருத்துக்கள் மீது உங்கள் விமர்சனம் இருப்பின்மார்க்சிய  அடிப்படையில்  எழுதப்படுவதாக இருந்தாலும்  மார்க்சிய அடிப்படையில்  உங்கள் விமர்சனம் வரவேற்கப்படுகின்றன.  அவற்றை இதே தளத்தில் நீங்கள் எழுதினால் நாங்கள் பதிலளிக்க பயனுள்ளதாக இருக்கும்சிலர் தங்களது  முகநூல் பகுதிகளில் எழுதும் கருத்துக்களை அங்குசென்றுஅந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்க முடிவதில்லை.   ஆக தோழர்களே தங்களின் மேலான கருத்துக்களை விமர்சனங்களை   இலக்கு தளத்தில் வைத்து விவாதிக்கும் படி கேட்டுக்கொள்கின்றோம்.

இலக்கு இதழ்  பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு தொடங்கப்பட்டதுஇலக்கு  இதழ்  நோக்கமே சரியான மார்க்சிய லெனினிய புரிதலை உண்டாக்குவதும் ஒரு அறிவுஜீவி தளத்தை மேம்படுத்துவது தான்ஆக பல்வேறு விதமான மார்க்சிய போக்குகளை அலசி ஆராய்ந்து சரியான மார்க்சிய பார்வையில் ஒரு சமூகத்தை எப்படி அணுகுவது என்பதை இங்கே பேசுவதற்கான தளமாக இலக்கு இதழை கொண்டு வந்துள்ளோம்சரியான மார்க்சிய புரிதலில் ஏற்படும் குழப்பங்களும் சில      தவறுகளும் நேரிட வாய்ப்புள்ளது ஆகவே தங்களின் மேலான கருத்துக்களை மார்க்சிய அடிப்படையில் விளக்கி புரிய வைக்க உங்களை அழைக்கின்றோம்.

மார்க்சியம் என்பது கடல் போன்றது அதில் எல்லோரும் நீந்தி சரியான பாதையில் பயணித்து நமது இலக்கான பொதுவுடமை சமூகம் படைப்பதாக இருக்க  வேண்டும் என்பதே நமது நோக்கம்.

நாம் வாழும் இன்றைய வர்க்க சமூகத்தின் அடித்தளம் மற்றும் மேல் கட்டுமானம் ஆகிய இரண்டைப் பற்றிய புரிதலோடு அதனை விளக்கி சரியான மார்க்சிய புரிதலில் அதனை எதிர்கொள்ளும் சக்திகளுக்கு புரிய வைப்பதே நமது முதன்மையான நோக்கம் .

இன்று இந்தியா முழுவதும் செயல்படும் 700க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளும் குழுக்களும் நூற்றுக்கணக்கான பத்திரிகைகளை நடத்தி வருகின்றனஅதில் தமிழகத்தில் பல முற்போக்கு மற்றும்  புரட்சிகர சக்திகளின் பங்களிப்பால் தனி நபர்களாகவும் இயக்கமாகவும்  பலபத்திரிக்கை   தமிழில் வலம் வந்துக்கொண்டிருகின்றதுஅவை எல்லாம் சரியான மார்க்சிய பாதையில் சென்றடைய வேண்டும் என்பதே நமது அவா.

இலக்கானது அரசு  மதம் கலாச்சாரம் தத்துவம்இவற்றை மட்டும் பேசுவதோடு அல்லாமல் மேல்கட்டுமானமானது அடிதளத்தோடு கொண்டுள்ள உறவையும் அதாவதுஅடித்தளத்தின்  வர்க்கதனமையோடு  பின்னிப் பிணைந்துள்ள அதன் நோக்கத்தையும் அவற்றின் செயல்பாடுகளையும் தெள்ளத் தெளிவாக விளக்குவது இதழின் நோக்கமாகும்.

பலர் வெறும் மேல்தளத்தை மட்டும் பேசிவிட்டு அதனுடைய அடித்தளத்தை பேசாமல்அடித்தளம் தான் மேல் கட்டுமானத்தை கட்டிக் ஆகிறது என்பதை புரிந்து கொள்ளாமல் உள்ளதுதான் அவர்களின் எழுத்தின் தவறு என்று குறிப்பிடும் அதே நேரத்தில் அதுபோன்ற தவறுகளை களைந்து ஒரு சரியான மார்க்சியலெனினிய புரிதலை உண்டாக்குவது  இலக்கு இதழின் நோக்கமாகும்.

இன்றுஇடதுசாரிஇயக்கங்கள்வலுவான கோட்பாட்டு அடித்தளம் கொண்ட அமைப்புகளாக கம்யூனிஸ்டு கட்சியாக  இல்லை என்பது யதார்த்தம்.

மேலும்இந்தக் கட்சிகள் அனைத்தும் தமக்கிடையே ஐக்கியமும் ஒற்றுமையும் இன்றி தனித்தனி தீவுகளாக செயல்படுகின்றனஇதனால் பாட்டாளி வர்க்கத்திற்க்கு ஒடுக்கப் பட்ட வர்க்கதிற்க்கு எந்த பயனும் இல்லைஇவை இடதுசாரீஇயக்கத்திற்க்கு பலவீனத்தை தவிர வேறென்ன தர இயலும்.

ஆக நமக்கான மார்க்சிய தத்துவார்த்த அரசியல் பொருளாதாரத்தை சிறப்பாக கற்று தேற விவாத தளமாக இலக்கு இருக்க முயற்ச்சிப்போம் தோழர்களே.

இப்படிக்கு

ஆசிரியர் குழு

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்