(முந்தைய பகுதியின் தொடர்ச்சி) இடதுசாரி அமைப்பின் முன்னணியில் உள்ள
ஒரு
சிலரே
கலை,
இலக்கியம் பற்றிய மார்க்சிய பார்வை இன்மையும், அடிப்படையில் வர்க்க முரண் அறியாமல் மயக்கத்தில் உள்ளதை அறிந்தே இந்த தொடர் எழுத நினைத்தேன். மார்க்சியத்தின் அடிப்படையில் கலை,
இலக்கியம் புரிந்துக் கொள்ளும் முயற்ச்சியே இத் தொடர்.
கலை, இலக்கியம் மேல்மட்ட அமைப்பைச் சார்ந்தவை. ஆகவே அவை அடிப்படை அமைப்பாகிய பொருளாதார மாற்றத்தையொட்டி மாறிக் கொண்டேயிருக்கும்.
சமுதாயம் ஒரு குட்டையல்ல. அது ஆறு போன்றது; ஒடி
மாறிக்
கொண்டேயிருக்கும் சமுதாய மாற்றங்களை ஒட்டி கலை,
இலக்கியமும்
மாறிக்
கொண்டேயிருப்பது
வியப்பல்ல.
கலை,
இலக்கியம்
பொதுவானது (வர்க்க வேறுபாடு அற்றது) என்று கூறுவோர் சமுதாய வளச்சியை விதியை மறுப்போரே, அவர்கள் ஆளும் வர்க்கத்தின் கருத்துமுதல்வாதிகளே (நிலவும் அமைப்பு முறையின்
தரகராவர்).
சமுதாயம் ஏன் மாறுகிறது?
சமுதாயம் பல உள் முரண்பாடுகளைக் கொண்டது. இம் முரண்பாடுகள் சமுதாயத்தை மாற்றத்தை நோக்கி இயக்கிக் கொண்டேயிருக்கும். இச் சித்தாந்தத்தைத் தாங்கி நிற்பதுவே இயக்கவியல் பொருள்முதல்வாதமாகும்: சமுதாயம் இயக்கமற்றது, நிலையானது என்று கருதுவது கற்பனைவாதமாகும் இவை கருத்துமுதல்வாதிகளின் வேலையே.
சரி இதனை புரிந்துக் கொள்ள இன்றைய இந்திய மக்கள் அல்லது அரசின் நிலையோடு சற்று பயணிப்போம். இன்றும் இராமாயணம், மகாபாரதம், புராண, இதிகாச கதைகள், கலை, இலக்கியங்களில் ஆதிக்கம் செலுத்துவதைக் காணலாம். ராமர் கோயில் தொடங்கி வைத்த விதம் இன்று ஆட்சியை பிடிக்க மக்களின் மனதில் குடியிருக்கும் பக்தியை வைத்து செயல்படும் யுத்திகளை கணக்கில் கொண்டால் விளங்கும்.
1. பண்டைய கலை. இலக்கியங்கள், கலை உருவங்களின் ஆதிக்கம் சமுதாய வளர்ச்சியின் தேக்கத்தையே காட்டி நிற்கின்றன.
2. மனிதாபிமான உணர்வு எவ்வகைச் சமுதாயத்திலும் நிரந்தரமானது என்று இவர்கள் கருதுவது வர்க்க உணர்வை வேண்டுமென்றே மறைக்க முயல்வதாகும்.
“‘வாழ்நிலையிலிருந்து உணர்வு தோன்றுகிறதேயன்றி உணர்வுநிலையிலிருந்து வாழ்நிலை தோன்றுவதில்லை” என்பது மார்க்ஸ் கூறிய அடிப்படைச் சித்தாந்தமாகும். ஆகவே,
வாழ்நிலை
மாறிக்கொண்டே
செல்லும்போது
உணர்வுநிலைகளும் மாறவே செய்யும். வாழ்நிலை, உணர்வு நிலைகளின் மாறுதல்களை விவரிப்பதே கலை, இலக்கியமாகும். ஆகவே, சமுதாய மாற்றத்தை விவரிக்கும் கலை. இலக்கியம் மாறிக் கொண்டேயிருக்கும். கலை, இலக்கியங்களே நிரந்தரமானது என்று கட்டி அழுவோர் சமுதாய மாற்றத்தை மறுப்பவராவர் .
நிலவுடைமை சமுக மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசக் கதைகள், இன்று
மறைந்து வரும் கூத்து, கிராமிய இசை
நாடக
மரபில்
நடித்துக்
காட்டப்பட்டன.
இன்றோ அதனை ஆளும் வர்க்கம் அன்றைய சமூக கதைகளை (ஏன் நிகழ்வுகளாகட்டும்)
தனிமனிதர்
படிக்கத்தக்க
நூல்களாக
சினிமாகளாக சின்னதிரை தொடர்களாக எல்லோரும் படிக்க பார்க்க தகுந்த முறையில் பரப்பும் நோக்கம் யாவரும் இராமன் என்ற தெய்வாம்சம் பொருந்திய மன்னனும் பாண்டவர்கள் என்ற கண்ணன் ஆதரவுபெற்ற அரசகுடும்பத்தவர்களும் அரக்கர்களையும் கொடியவர்களையும் எவ்வாறு எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றனர் என்ற கருத்தை நிலைநாட்டுகின்றன. இவற்றைப் படிப்போரும் பார்ப்போரும் மன்னர்களுக்காக இரக்கப் பட்டு மெய்மறந்து அவர்களது ஆட்சியை வாழ்த்துகின்றனர். இதிகாசக்களை வைத்துக் கொண்டு அன்றும் இன்றும் மனித உணர்வுகள் மாறாநிலை என்று பொது சமப்படுத்துவதன் மூலம் வர்க்க உணர்வு என்ற வரலாற்றுப் பொருள்முதல்வாத ஆய்வு முறையை மழுங்கச் செய்து விடுகின்றனர். அன்று ஒடுக்கிய மன்னனின் புகழ்பாடி இன்றைய ஒடுக்குவோர் ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்க சிறந்த கருவியாக இதனை பயன்படுத தவறுவதில்லை இதிலிருந்து வர்க்க அடிப்படையில் புரியவைக்க வேண்டிய கடமையில் உள்ளோர் அவசியம் செய்யவேண்டிய பணி இவை அன்றோ?
இதனை புரிந்துக் கொள்ளாமல் மக்களை வென்றெடுக்க மதவாதத்திற்க்கு பின் ஓடிச் சொல்வது மார்க்சிய புரிதல் அற்றவை என்பேன் வேறோரு இடத்தில் இதனைப் பற்றி விரிவாக பேசுவேன்..
இதனை சரியாக புரிந்துக்
கொள்ள ஐரோப்பாவி ற்க்கு செல்வோம். ஐரோப்பாவில் பட்டறை உற்பத்தி வளர்ச்சியடைய அவ்வுற் பத்தியிலும் வாணிபத்திலும் ஈடுபட்டிருந்த புதிய முதலாளித்துவ வர்க்கம் 15-16ம் நூற்றாண்டுகளில் தலையெடுக்கத் தொடங்கியது. இப்புதிய வர்க்கத்தின் தேவையை ஒட்டி அரசியல், மதம், கலை, இலக்கியம் ஆகிய மேல்மட்ட அமைப்புகள் யாவும் மாறத் தொடங்கின. மன்னராட்சிகள் வீழ்ந்து முதலாளித்துவ ஜனநாயகம் வளரத் தொடங்கியது. ரோமன் கத்தோலிக்க மதம் உடைந்து மார்ட்டின் லூதரின் புரட்டஸ்டன் மதமும் , ” புதிய ஏற்பாடும் தோன்றியது. கலை, இலக்கியத்தில் மறுமலர்ச்சிக் காலம்” எனபட்டது.
புதிதாகத் தோன்றிய முதலாளித்துவ வர்க்கத்தை நீதிப்படுத்தும் கலை, இலக்கியங்கள் வளரத் தொடங்கின. ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் உயர்ந்த நாடகாசிரியராக புதிய வர்க்கத்தால் மதிக்கப்பட்டார். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் யாவிலும் அரச பரம்பரையில் வாழ்பவரிடையே நிகழும் ஊழல், போட்டி, போறாமை, ஆதிக்கவெறி, அவர்களின் வீழ்ச்சி யாவற்றையும் தெளிவாகக் காணலாம். ஜூலியஸ் சீசர், ஹம்லட், மக்பெத், ஒதெல்லோ. மூன்றாம் ரிச்சர்ட் முதலான நாடகங்களிலெல்லாம் நில பிரபுத்துவ ஆட்சியின் தில்லு முல்லு வீழ்ச்சியை காணலாம், ரோமியோ ஜூலியெட்: காதல் நாடகத்திலும் நிலப்பிரபுத்துவத்தின் கொடூரமே கூறப்படுகிறது. வேனிஸ் வர்த்தகனில் வரும் ஷைலக் மூலம் நிலப் பிரபுத்துவ வட்டிமுறை சாடப்படுகிறது. சமுதாய வளர்ச்சியோடு ஒட்டி நின்றதலேயே ஷேக்ஸ்பியர் உயர்ந்த நாடகாசிரியராக கணிக்கப்பட்டார். நிலப்பிரபுக்களைப் பற்றி கலை,
இலக்கியம்
படைக்கும்
நிலைமாறி
குட்டி
முதலாளிய
கதாநாயகர்கள் பற்றி கலைப் படைப்புகள் தோன்றத் தொடங்கின. இயந்திர உற்பத்தியோடு முதலாளித்துவம் தன் முதலாளித்துவ புரட்சியை நிலை நாட்டியது. முதலாளித்துவத்தின் தனிச்சிறப்பு பொருள் உற்பத்தியை கூட்டி பெருக்கியமையாகும். மனித உழைப்பால் அடிப்படைத் தேவையை மட்டும் முழுமைப்படுத்த முனைந்த, நிலபிரபுத்துவ உற்பத்தியை இயந்திர மயமாக்கி, பொருள் உற்பத்தியை முன் என்றுமில்லாதவாறு பெருக்கத் தொடங்கியது முதலாளித்துவமேயாகும்.
பொருள் உற்பத்தி பெருக எல்லாம் அதன்
சட்டங்கள்,
ஆதிக்கத்தில்
வந்தன.
கலை
கூட
அவற்றின்
நியதிகளுக்கு
தப்பிவிடவில்லை.
கலைப்படைப்பும்
ஒரு
விற்பனைப்
பொருளானது.
அதனால்
கலை
அதன்
உறுதியான,
அத்தியாவசியமான
படைப்பாற்றல்
தன்மையை
இழந்தது
கலை
வெறும்
குணும்சமான
(Abstract) பொய்மையான
வடிவெடுத்தது.
கலைக்கும்
சமுதாயத்திற்கு
மிடையில்
முரண்பாடு
கூர்மை
யடைந்தது.
உயர்ந்த
கலைஞர்கள்
சமூகத்திலிருந்து ஒதுங்கினர்; ஒதுக்கப் பட்டனர். முதலாளித்துவ சமூகம் அவர்களுக்கு வறுமையையும், சாவையையுமே தந்தது. “மருத்துவர், வக்கீல், மதகுரு, கவிஞன், விஞ்ஞானி ஆகிய
அனைவரையும்
முதலாளித்துவ கூலித் தொழிலாளி ஆகிவிடுகிறானர்” என்று மார்க்ஸ் கூறினர்.
முதலாளித்துவத்தில் கலை, இலக்கியம் படைப்போர் யாவரும் சுதந்திரமற்ற கூலியடிமைகளாகி விடுகின்றனர். கலை, இலக்கியப் படைப்புகள் விற்னைப் பொருட்களாகின்றன. விற்பனைக்காக, லாப நோக்கத்திற்காகவே கலை, இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. முதலாளித்துவம் தனது அகத் தேவைகளுக்காக அல்லாது புறத் தேவைகளுக்காகவே உற்பத்தி செய்கிறது. முதலாளித்துவ பலியிட உற்பத்தி விதிகளுக்கிணங்கவே கலையும் படைக்கப்படுகிறது: அவ் விதிகளில் சில வருமாறு:
(i) முதலாளித்துவத்தில் உற்பக்தி மனிதனுக்கு சேவை செய்வதல்ல. மனிதன் உற்பத்தியின் சேவகனாகிறான்.
(i) மனிதனின் உபரி உற்பத்திக்காகவே உழைப்பு பயன்படுத்தப்படுகிறது.
(iii) மனித உறவு நேரடியாக இல்லாது, பண்டங்களூடாக ஏற்படுத்தப் படுகிறது.
(iv) தொழிலாளி தான் உற்பத்தி செய்த பொருளுக்கே அந் நியப் படுத்தப்படுகிறன். (அவனது வாழ்க்கையை கலைப் படைப்பில் காண முடியாது).
(v) உற்பத்தி மக்களின் தேவையை ஒட்டி நடைபெறுவதில்லை சந்தைக்காக , நடைபெறுகிறது. உற்பத்தியில் திட்டம், ஒழுங்கு கட்டுப்பாடு கிடையாது.
(vi) வாங்கும் சக்தி உள்ளவர்களை நோக்கியே உற்பத்தி நடைபெறுகிறது. (பால் இல்லாது குழந்தைகள் செத்துக் கொண்டிருக்கலாம். முகப் பவுடரை தட்டுப் பாடின்றி உற் பத்தி செய்வர். மக்கள் பசியால் மடியும் போதும் காதல், பாலுறவு பற்றி கலை, இலக்கியம் படைத்துக் கொண்டிருப்பர்.)
(vii) மனித உழைப்பு அதன் அடிப்படை குணம்சமான சுதந்திரம், படைப்பாற்றலை இழந்து விடுகிறது. (கூலியடிமையான கலைஞன் ஆளும் வர்க்கத்தின் கட்டுப்பாட்டின் படியே கலை, இலக்கியம் படைக்க நிர்ப்பந்திக்கப் படுகிறன்.)
(viii). முதலாளித்துவம் பொருள் உற்பத்தியை பெருக்குவதிலேயே ஆர்வமாக உள்ளது. அதாவது மனிதனது புறத் தேவைகளை நோக்கிய உற்பத்தியாகும். இதற்காக பெளதிக விஞ்ஞான வளர்ச்சியிலேயே முதலாளித்துவம் அதிக கவனம் செலுத்துகிறது. அதற்காகவே விஞ்ஞானிகள், தொழில் நுட்ப வல்லுனர்களை அதிக கவனம் செலுத்த வைக்கிறது..
(ix) அக உணர்வுகளை வளர்க்கும் சமூக விஞ்ஞானம், கலை இலக்கியம் ஆகியவற்றைப் படைக்கும் சமூக விஞ்ஞானிகள், கலைஞர்களுக்கு அத்தனை மதிப்பு அளிப்பதில்லை. தமது விற்பனை தேவையை ஒட்டியே மதிப்பு தருகிறது. பொருட்களை விற்க முதலாளித்துவம் பயன் படுத்துவது போலவே சினிமாநடிகர் முதல் பிரபலங்களை
முன்னிலைப் படுத்துவது போலவே ஒரு சில எழுத்தாளர்களையும் சந்தையில் பிரபல்யப் படுத்துகிறது.
(x) பொருள் விற்பனையை முன் வைத்தே கலை, இலக்கியமும் ஆக்கப்பட்டு மலினப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பத்திரிக்கைகள், ரேடியோ, டெலிவிசன், சினிமாவில் விளம்பரங்கள் இடம் பெறுவதைக் காணலாம். சினிமாவில் வரும் காட்சிகளிலும் உயர்ந்தரக உடைகள் தளவாடங்கள் டெலிபோன், பிற நுகர் பொருட்களையும்காணலாம்.
(xi) அழகுணர்வின் கோட்பாடுகள் யாவும் பொருள் விற்ப்னையை நோக்கியே வளர்க்கப்படுகின்றன. வாணிபக் கலைக்கே (Commercial Arts) முதலிடம் தரப்படுகிறது. கலைக் கல்லூரிகளிலிருந்து வெளியேறியதும் கூலியடிமை வேலைக்கே கலைஞர் தேடி அலைகின்றனர்.கலை
உழைப்பின் உயர்ந்த
வடிவம். அதன் மூலம் கலைஞன்
மனித உலகை
படைக்கிறான்,முதலாளித்துவத்தில்
கலைஞன் கூலியடிமையாகி
பரந்த சந்ததியை
நோக்கி கலைப்படைப்பை
படைக்கும் படி
நிர்ப்பந்திக்கப் படுகிறான்.
இதனல் அவன்
கலை உணர்வை
மிகவும் மலினப்படுத்த
முனைகிறான், பாலுறவு, வன் செயல்
(Sex & violence) ஆகியவற்றிற்கு அதிக
முக்கியத்துவம் தர
முயல்கிறன்; கற்பனையை நாடுகிறான். சமூகம் இவற்றை எதிர்க்கும்
போது தன்னைப்
பிரதிபலிக்க முயல்கிறான்.
காலப்போக்கில் தவிர்க்க
முடியாதபடி சமூகத்தை
ஒட்டி அதன்
இயல்பான நிலையில்
அவன் வாழ
கற்றுக் கொள்கிறான்.
(நான் இவையாவும் SPB இறப்பை ஒட்டி பல
தோழர்கள் கலைநயம் என்ற பெயரில் அவர்கள் எழுதிய எழுத்துகளுக்கு பதிலாக எழுதிய
அன்றைய என் முகநூல் பதிவுகளே)
மேலும் தினம் நாட்டில் நடைப்பெருவதை
ஊடகம் தங்களின்
வர்க்க நிலையில்
இருந்து எழுதுகிறது
என்று சொல்லத்
தேவையில்லை.இந்தப்
பகுதியில் என் எழுத்துகள் தோழர் செ.கனேசலிங்கம் அவருடை நூல்களின் அடிப்படையில்..
தொடரும்……