மார்க்சியமும் மொழியியலும்

 மார்க்சியமும் மொழியியலும்

++++++++++++++++++++++++
இன்று வாசித்த நூல்
நமது மூத்த தோழர்களே மார்க்சியத்தை குழப்பும் வேலையில் ஈடுபட்டுள்ள போது நமக்கான சரியான புரிதலை நமது ஆசான்களிடமிருந்தே கற்க வேண்டிய தேவை உள்ளது. அதில் ஒன்று மொழி...
இதனை பற்றி விரிவாக பேச வேண்டும் தற்பொழுது சுருக்கமாக இந்தப்பதிவு.

மொழியின் அடிப்படையில் நாம் தமிழகத்தில் தினம் தினம் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளை புரிந்து கொள்வதற்கு முதலில் மொழியை பற்றி மார்க்சிய- லெனினிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் தெரிந்துக் கொள்ள முயற்சிப்போம்.

மொழி என்பது மூளையிலிருந்து பிறக்கின்றது அது மக்களின் தொடர்பிற்கான கருவியாக பணியாற்றுகிறது. மொழி சிந்தனையின் வெளிப்பாடு ஆகும்.
சிந்தனை என்பது இயற்கை பொருள்கள் மீதான புலன் உணர்வுகளின் பிரதிபலிப்பு. எனவே மொழியையும் சிந்தனையும் பிரிப்பது கருத்து முதல் வாதமாகும். கருத்து முதல்வாதிகளின் சிந்தனைகளும் கூட மூளை எனும் பொருளிலிருந்து தான் உதிக்கின்றன.

"சிந்தனையின் நடைமுறை வடிவமே மொழி" என்கிறார் மார்க்ஸ்.
மொழி என்பது எல்லா சமூகத்திலும் அந்த குறிப்பிட்ட சமூகத்தின் பொதுவானது மொழி சமூகம் உருவாகும்போது உருவாகிறது. சமூகம் அழியும் போது மொழியும் அழிகிறது. இதன் மூலம் மொழியானது அனைத்து வர்க்கங்களுக்கும் பொதுவானது என்பதை அறியலாம்.

அடிக்க கட்டுமானத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மொழியின் அடிப்படைகளை மாற்றி விடுவதில்லை மாறாக மொழியின் சில சொற் தொகுதிகள் இலக்கண அமைப்புகள் மட்டுமே சில மாற்றங்கள் ஏற்படுகின்றன.

மொழியானது வர்க்க சார்பற்றது எல்லா வர்க்கங்களுக்கும் பொதுவானது .

சுரண்டும் வர்க்கம் சுரண்டப்படும் வர்க்கம் இரண்டிற்கும் மொழி பொதுவானது. இரண்டு வர்க்கங்களுக்கு இடையில் மொழி பயன்பாடு மாறுமே ஒழிய மொழி அன்று.
சுரண்டும் வர்க்கம் எதிர் புரட்சிகர கருத்துகளை பேசினால் சுரண்டப்படும் வர்க்கம் புரட்சிகர கருத்துக்களை பேசும் அவ்வளவுதான்.

தோழர் ஸ்டாலின் புதிய சோசலிச அமைப்பின் எழுச்சியால் அரசு, கலாச்சாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தொடர்புடைய சில சொற்கள் மாற்றம் நிகழ்ந்ததே தவிர மொழியின் அடிப்படையில் ஏதும் மாற்றம் ஏற்படுவதில்லை என்று சுட்டிக் காட்டுகிறார்.
புரட்சிக்கு முன்னும் பின்னும் நீர் நிலம் வானம் பறவை போன்ற பல சொற்கள் மாறாமல் உள்ளது போலவே இந்த சொற்கள் எல்லா வர்க்கத்திற்கும் பொதுவானது தான்.
மொழியை உற்பத்திக் கருவியோடு ஒப்பிடுகிறார் ஸ்டாலின் மொழி மேற்கட்டுமானத்திலிருந்து அடிப்படையில் மாறுபட்டாலும் உற்பத்தி கருவியிலிருந்து மாறுபடுவதில்லை . உற்பத்தி கருவி எங்கனம் எல்லா வர்க்கங்களையும் சமமாக பாவிக்கின்றதோ அங்கனமே மொழியும் எல்லா வர்க்கங்களையும் சமமாக பாவித்து பணியாற்றுகிறது. ஆனால் இதைத் தாண்டி உற்பத்திக் கருவிக்கும் மொழிக்கும் எவ்வித ஒற்றுமையும் இல்லை என்கிறரார் ஸ்டாலின்.
ஏனென்றால் மொழியானது சொற்தொகுதிகளையும் இலக்கண அமைப்புகளும் தவிர வேறு எதையும் உற்பத்தி செய்வதில்லை. ஆக மொழி சமூகம் முழுமைக்குமானது இந்தப் பண்பில் இருந்து மொழி விலகுமானால் அல்லது விலக்கிவைக்கப்படுமானால் மொழி அழியத் தொடங்குகிறது என்பது தெளிவு.
மேற்கட்டுமானம் உற்பத்தியோடு நேரடியாக தொடர்புடையது அன்று; அது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை பொறுத்து மாற்றத்திற்கு உள்ளாகிறது ஆனால் மொழி உற்பத்தியோடு நேரடியாக தொடர்புடையது.
அதாவது மொழி அடிக்கட்டுமானத்தில் ஏற்படும் மாற்றங்களுக்காக காத்திருப்பதில்லை மாறாக உற்பத்தியால் ஏற்படும் மாறுதலுக்கேற்ப தன்னை பிரதிபலிக்கின்றது.
விவசாயம், வர்த்தகம், தொழில்துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப மொழியானது நேரடியாக தன்னை புதுப்பித்துக் கொள்கிறது. புதுப்பித்துக் கொள்ளாமல் தவறுமேயானால் மொழியில் சீர்குலைவு ஏற்படும்.
பூர்ஷ்வா கலாச்சாரம் பாட்டாளி வர்க்க கலாச்சாரம் என கலாச்சாரத்திற்கு வர்க்க பண்பு உண்டு என்ற லெனின் மேற்கோளை, மொழிக்கும் பொருத்தி அதற்க்கும் வர்க்க தன்மை உண்டு என்று வாதிடுவர்களை ஸ்டாலின் கண்டிக்கிறார்.
இந்தியாவில் வர்க்க தன்மை கொண்ட கலாச்சாரத்தை வர்க்க தன்மையற்ற மொழிக்கு பொருத்தி அன்றைய காலனி ஆதிக்கவாதிகளின் ஒடுக்குமுறையை இன்றைய சமஸ்கிரத மயமாக்கள் தேசிய மொழிகளை ஒதுக்கும் வேலை செய்கிறது.
காலனிய ஒடுக்குமுறை மற்றும் தேசிய இன ஒடுக்குமுறை நிலவுகின்ற அரசமைப்பில் மொழி கலப்பு மற்றும் மொழி ஆதிக்கம் நிகழ்கிறது ஆனால் அவை புதிய மொழியை உருவாக்குவதில்லை வெற்றி பெரும் மொழி வாழும் தோல்வியடையும் மொழி வீழும். இதையையே, "மொழிக்கலப்பால் மூன்றாவது மொழி உருவாகாது" என்கிறார் ஸ்டாலின்.
தொடரும்...

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்