வரலாற்றில் மூன்றாவது அகிலத்தின் இடத்தை லெனின் பின்வருமாறு வரையறுத்தார்.

 

கடந்த ஒரு நூற்றாண்டில் கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தியாவில் பல ஆயிரங்கள், இலட்சம் போராட்டங்கள் நடத்தியும், பங்கு கொண்டு இருக்கிறது. மக்கள் திரள்களின், சமூக இயக்கங்கள், அரசியல் இயக்கங்களுடன் கம்யுனிஸ்டுகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் – குழுக்கள் இணைந்து இவைகள் நடைபெற்றன. இன்றும் நடைபெற்று வருகின்றன.

இருந்தும் இந்திய கம்யூனிச இயக்கம் இடதுசாரி கட்சிகள் என்பது அதற்கான பணியிலிருந்து வெகுதூரத்தில் உள்ளது அதனை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இரண்டாம் அகிலத்தில் காவுத்ஸகி போன்ற துரோகிகள் செய்த அந்தப் பெரும் துரோகத்தை இரண்டாம் அகிலத்தில் தவறுகளை களைந்து மூன்றாம் அகிலத்தை லெனின் எப்படி கட்டியமைத்தார் என்பதிலிருந்து புரிந்து கொள்ளலாம் என்ற அவாவில் இந்த தொடரை எழுத நினைத்தேன்.

முந்தைய பகுதியின் தொடர்ச்சி இனி....

9).கம்யூனிஸ்ட்ஆங்கிலத்தில் சேர விரும்பும் எந்தஒரு கட்சியும் தொழிற்சங்கங்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஏனைய வெகுஜனதொழிலாளர் அமைப்புகளில் திட்டவட்டமான உணர்ச்சி குன்றாததுமான கம்யூனிஸ்ட் பணிபுரிந்துடுவது கடமையாகும். தொழிற்சங்கங்களில் கம்யூனிச குழுக்களை உருவாக்க வேண்டும் மேலும் இவர்களின் தொடர்ச்சியானதுஉணர்ச்சி குன்றாததுமான பணியின் மூலமாக கம்யூனிசத்திற்குதொழிற்சங்கங்களை கவர்ந்து இழுத்து விட முடியும் . இவை தங்களது அன்றாட நடவடிக்கையில்ஒவ்வொரு பிரிவிலும் சமூக நாட்டுப்பற்று வெறியர்களதுதுரோகத்தையும் மய்யவாதிகளின் ஊசலாட்டத்தை அம்பலப்படுத்த வேண்டும் .இக்குழுக்கள் கட்சி முழுவதுன் கீழ்பூரண கீழ்ப்படிந்து உள்ளவர்களாக திகழ வேண்டும்.

10).கம்யூனிஸ்ட்அகிலத்தை சேர்ந்த எந்த ஒருகட்சியும் மஞ்சள் தொழிற் சாலைகளைக்கொண்ட ஆம்ஸ்டர்டாம் அகிலத்திற்கு எதிராக உறுதியான ஒருபோராட்டத்தை நடத்துவது கடமையாகும். மஞ்சள் ஆம்ஸ்டர்டாம் அகிலத்தைவிட்டு விலகுவது மிகவும் அத்தியாவசியம் என்பதை அமைப்புக் உட்பட்ட தொழிலாளர்களுக்கு இதன் சோர்வு இல்லாத பிரசாரம் காட்டிட வேண்டும்.

வளர்ச்சிபெற்றுவரும் சிவப்பு தொழிற்சங்கங்களின் சர்வதேசகூட்டமைப்பிற்கு இது எல்லா ஆதரவையும்நல்கிட வேண்டும் இந்த தொழிற்சங்கங்கள் எல்லாம்கம்யூனிஸ்ட் அகிலத்துடன் தொடர்பு கொண்டவையாகும்.

11).மூன்றாவதுஅகலத்தில் சேர விரும்பும் கட்சிகள்தங்களது பாராளுமன்ற தொகுதிகளில் உள் அமைப்பை மறுபரிசீலனைசெய்து நம்ப முடியாதவர்களை நீக்கி, கட்சியின் மத்திய குழுக் இந்ததொகுதிகளை கீழ்படிந்திட வேண்டுயது கடமையாகும். ஒவ்வொரு கம்யூனிச பாட்டாளியும்தனது நடவடிக்கைகள் அனைத்தையும் உண்மையிலேயே புரட்சிகர பிரச்சாரத்துக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு கீழ்ப்படிய வேண்டும் என்று அவர்கள் கோரிடவேண்டும்.

12).வாராந்திரஅல்லது மாதாந்திரப் பத்ததிரிக்கைகளும் நாளேடுகளும் மற்றும் அனைத்து வெளியீட்டுநிறுவனங்களும் இது போன்று கட்சியின்மத்திய குழுவிற்கு முழுவதற்கும் கட்டப்பட்டதாக இருக்க வேண்டும். கட்சிசட்ட விரோதமாக இயங்கிறதோ அல்லவோ இது நடைபெற்றாகவேண்டும். தங்களுக்கு அளிக்கப்படும் தன்னாட்சி உரிமையை வெளியீட்டு நிறுவனங்கள்துஷ்பிரயோகம் செய்ய அனுமதிக்கலாகாது . கொள்கைகளுக்கு முழுவதும் ஒத்துப்போகாத வழியில் நடந்து கொள்ளஅனுமதிக்கக்கூடாது .

13).கம்யூனிஸ்ட் அகிலத்தோடு சார்ந்துள்ள கட்சிகள் ஜனநாயக மத்திய படுத்துதல் என்ற கொள்கையின்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கூரான உள்நாட்டுப் போர்நடக்கும் இக்காலத்தில் கட்சிகள் மிகவும் மையப்படுத்தப்பட்ட முறையில்அமைக்கப்பட்டு இருந்தால் மட்டுமே தங்களது கடமைகளை செவ்வனே  செய்திட முடியும். இவைஎஃகு போன்ற கட்டுப்பாடு உடையவர் களாக திகழ வேண்டும் . கிட்டத்தட்ட இது ராணுவக் கட்டுப்பாடு போன்று இருக்க வேண்டும். இவைகளுக்கு வலிமை படைத்த அதிகாரம்பெற்ற கட்சி மையங்கள் இருக்க வேண்டும் . உறுப்பினர்கள் அனைவரின் ஏகோபித்த நம்பிக்கை இவர் பெற்றிருக்க வேண்டும்.

14). கம்யூனிஸ்டுகள்தங்களது பணியினை சட்டரீதியாக செய்யக் கூடிய நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள்காலா காலங்களில் உறுப்பினர்களை சோதித்து சோதித்து நீக்கிவிடவேண்டும்.தவிர்க்க முடியாதபடி சிறு முதலாளிய கூறுகள் கட்சிக்குள் ஊடுருவி விடுவதே திட்டமாகநீக்கி விடவே இது செய்யப்படுகிறது.

15). கம்யூனிஸ்ட் அகிலத்தில் சேர விரும்பும் எந்தஒரு கட்சியும் எந்த ஒரு சோவியத் குடியரசிற்கும் எதிராக எழும்பும் எதிர்ப்புரட்சிசக்திகளை எதிர்த்துப் போரிட  தன்னலமின்றி உதவிடவேண்டும் . கம்யூனிஸ்ட் கட்சிகள் சோவியத் குடியரசுகளது விரோதிகளுக்கு அனுப்பப்படும் யுத்த தளவாடங்களை ஏற்றிச் செல்ல தொழிலாளர்கள் மறுத்திட வேண்டும் என்று அவர்கள் மத்தியில் வலுவான பிரசாரம் நடத்திட வேண்டும். அவர்கள் சட்டரீதியானதும், சட்ட விரோதமானதும் ஆன பிரசாரத்தை தொழிலாளர்குடியரசுகளை நசுக்கிட அனுப்பப்படும் ராணுவ வீரர்களுக்கு மத்தியிலும்செய்திட வேண்டும்.

16). இன்னும் சமூக ஜனநாயக நிகழ்ச்சித் திட்டத்தைவைத்துள்ள கட்சிகள் விரைவாக அவற்றைப் திருத்திக்கொள்வது கடமையாகும் . இதற்குப் பதிலாக புதிய கம்யூனிஸவேலை திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும் . இத்திட்டங்கள் அந்தந்த நாடுகளின் தனிப்பட்டசூழ்நிலைக்கு ஏற்ப வரையப்பட வேண்டும். மற்றும் அவை கம்யூனிஸ்ட் அகிலத்தின்முடிவுகளில் தன்மைக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் . கம்யூனிஸ்ட்அகிலத்தை சேர்ந்த எல்லா கட்சிகளும் வேலைத்திட்டங்களும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் முறையான தொரு காங்கிரசாலோ அல்லது அதன் நிர்வாகக்குழுவினரும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது விதியாகும். நிர்வாகக்குழுஅங்கீகாரம் அளித்திட மறுத்திடு மானால், கட்சி கம்யூனிஸ்ட் அகிலத்தின்காங்கிரசிற்கு மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு.

17). கம்யூனிஸ்ட் அகிலத்தின் காங்கிரஸ்கள் மற்றும் அதன் உள்நாட்டுப் போர் நிலவும் சூழலில் இயங்கிடும் கம்யூனிஸ்ட் அகிலமானது இரண்டாவது அகிலத்தை விட இன்னும் அதிகமாக மையப்படுத்தப்பட்ட தாக இருக்க வேண்டும். இருந்தபோதிலும் கம்யூனிஸ்ட் அகிலம் அதன் நிர்வாகக் குழுவும் அந்தந்த கட்சிகள் இயங்கிடவும் போரிடவும் வேண்டிய வேறுபட்ட சூழ்நிலைகளில் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆகவே இப்படிப்பட்ட முடிவுகள் எங்கெல்லாம் சாத்தியமோஅப்படிப்பட்டவிஷயங்களில் மட்டுமே அனைத்து கட்சிகளும்ஒருங்கிணைந்து செயல்பட முடிவுகள் எடுக்கவேண்டும்.

18). மேலேகூறப்பட்டதிலிருந்து கம்யூனிஸ்ட் அகிலத்தில் சேர விரும்பும் கட்சிகள் தங்களது பெயர்களை மாற்றிட வேண்டும் .இணைந்திடவிரும்பும் எந்த ஒரு கட்சியும்தன்னை அந்த நாட்டின் கம்யூனிஸ்ட்கட்சி என்று அழைத்துக் கொள்ள வேண்டும் . கட்சியின் பெயரானது வெறும் வடிவம் மட்டும்அல்லாமல் மிகுந்த அரசியல் முக்கியத்துவம்உடையது. கம்யூனிஸ்ட் அகிலம் முதலாளிய உலகின் மீது அனைத்து மஞ்சள் சமூகஜனநாயகக் கட்சிகள் மீதும் உறுதியானது ஒருபோர் ஒன்றினை தொடுத்துள்ளது. கம்யூனிஸ்ட்கட்சிகளும் உழைக்கும் வர்க்கத்தின் பாதையைக் காட்டிக் கொடுத்துவிட்ட அதிகாரப்பூர்வ சமூக ஜனநாயக அல்லது சோசலிச கட்சிகளுக்கும் இடையே உள்ள வேற்றுமையை ஒவ்வொரு தொழிலாளியும் தெளிவாக வேண்டும்.

19). கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது உலக காங்கிரசின் முடிவுக்கு பிறகு கம்யூனிஸ்ட் அகிலத்துடன் சேர விரும்பும் எந்தஒரு கட்சியும் வெகுவிரைவில், கட்சி முழுவதின் சார்பில்மேலே கூறப்பட்டுள்ள கடமைகளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ள செய்ய அசாதாரண மாநாடுஒன்றினை கூட்டிடவேண்டும் . கம்யூனிஸ்ட் அகிலத்தில் சேரும் தகுதிகள் பற்றியவரையறை 20 ம் விளக்கி விவாதிக்க வேண்டும்.

20).மூன்றாவது அகிலத்தில் இப்போது சேர விரும்பும்கட்சிகள் தங்களது பழைய நுண்ணிய முறைகளை அடியோடு இன்னும் மாற்றிக்கொள்ளாது இருக்குமானால் , அகிலத்தில் சேருவதற்கு முன்பு மாற்றிக் கொள்ள வேண்டுவது அவசியம் . அந்தந்தமத்திய குழுக்களில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்குப் பேரும், மற்றெல்லா மத்திய கட்சி ஸ்தாபனங்களில்மூன்றில் இரண்டு பங்கு பேராவதுகம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது காங்கிரசுக்கு முன்பு மூன்றாவது அகிலத்தில் சேருவதற்கு தங்களது ஒப்புதலை பகிரங்கமாகவும் தெரிவிக்க வேண்டும்.

ஆதாரம் :- (Lenin collected works vol. 31)

நமது படிப்பினைக்காக தொகுக்கப் பட்டவை. அகிலம் சம்பந்தமான கட்டுரைகளில் இதன் தொடர்ச்சியை காணலாம். முற்றும்.... சிபி.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்