வரலாற்றில் மூன்றாவது அகிலத்தின் இடத்தை லெனின் பின்வருமாறு வரையறுத்தார் -சிபி


 நேற்று ஒரு விவாதத்தின் பொழுது தோழர் ஒருவரின் வார்த்தை,"எல்லோரும் ரசிய சீன நிகழ்வுகளையும், தத்துவ அரசியலையும் பேசுகின்றீர்கள், ஆனால் இங்குள்ள பிரச்சினையை பேசுவதே இல்லை" என்றார்.

அவர் போன்றோர் புரிந்துக் கொள்ளதான் இந்த இலக்கு இதழ் தொடங்கினோம், ஆம் தனக்கு தெரிந்தவைதான் மார்க்சியம் என்று பேசுவோர் உண்மையில் அடிபடையில் மார்க்சியத்தின் அடியாழத்தை புரிந்துக் கொண்டு செயல்படுகிறார்களா என்பதோடு ஒரு சரியான மார்க்சிய பார்வையும் அடிப்படையை புரிய வைப்பதோடு இங்குள்ள நிலைமைகளையும் அலசி ஆராய்வோம் அதற்க்கு மார்க்சியவாதிகளான எல்லோரின் முயற்ச்சியும் தேவை அதற் மிகப் பெரிய விவாதமும் சரியானவற்றை கண்டடையும் மார்க்சிய பார்வை வேண்டும் என்பேன்.
அதற்க்காக அவசர கதியில் எழுதப் பட்ட கடைசி நேரக் கட்டுரை இது தோழர்களே. கருத்து கோர்வை இல்லாமைக்கு வருந்துகிறேன் தொடரில் சரி படுத்திக் கொள்வேன் என்ற உறுதியுடன் கட்டுரையை தொடர்கிறேன் 

இன்று திரிபுவாதம், இடதுசாரி குறுங்குழுவாதம், வறட்டு வாதம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டே இந்திய கம்யூனிஸ்டு இயக்கம் உள்ளது.
இந்திய கம்யூனிஸ்டு இயக்கமானது, இன்றுவரை அதற்கான பணியான மக்கள் ஜனநாயக புரட்சியையோ அல்லது சோசலிசத்தை அமைக்கும் பணியையோ நிறைவேற்றாமையால் அவை கனவாகவே உள்ள நிலையில் , உலகின் சில நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட்டு வெற்றிகரமாக புரட்சியை முடித்து சோசலிசத்தை கொணர்ந்தது, உலகில் உயர்ந்த நிலையில் அச் சமுகத்தை நிலை நிறுத்தி இருந்தது, ஆனால் அங்கும் இன்று நவீன திரிபுவாதம் சோசலிசத்தை பின்னடையச் செய்து முதலாளித்துவ நிலைக்கு சென்றுவிட்டது.(முதலாளித்துவமும் திருத்தல்வாதமும், நவீன திருத்தல்வாதமும் தொடரில் விரிவாக விவாதிப்போம் தோழர்களே).

1848 ஆம் ஆண்டு மார்க்ஸ் எங்கெல்ஸ் அவர்களால் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப்பட்டது. உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று போர்க்குணமிக்க முழக்கம் பிரகடனப்படுத்தப்பட்டது. விஞ்ஞான ரீதியான கம்யூனிசத்துக்கு முறையான ஆழமான விளக்கத்தை அளித்து அதன் மூலம் சர்வதேச பாட்டாளி வர்க்கம் ஒற்றுமைக்கான இந்த அடிப்படைகளை மார்க்ஸ் எங்கெல்ஸ் நிறுவினர். இன்றளவும் அது சர்வதேச தொழிலாளர் ஒற்றுமைகான பொதுவாக அனைவராலும் ஏற்கப்பட்டுள்ளது.

வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் பாட்டாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தை தூக்கி எறிந்து அதிகாரத்தைக் கைப்பற்றி சோசலிச உற்பத்தி முறையை கட்டி அமைக்கும் பணிக்கு வழி நடத்த முதல் அகிலமும் இரண்டாம் அகிலம் உருவாக்கப்பட்டது பிரான்ஸ் நாட்டு தொழிலாளர்களின் உழைப்பின் மூலம் பாரிஸ் கம்யூன் தோற்றுவிக்கப்பட்டது சில மாதங்கள் வரைநீடித்த பாரிஸ் கம்யூன் பலநாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒன்றுபட்ட சக்தியால் அது வீழ்த்தப்பட்டது. ஆனாலும் அது வரலாற்றில் முதலாளி வர்க்கத்தை வீழ்த்து வதற்கான ஒத்திகையாக இருந்துள்ளது.. சோசலிச புரட்சி முதலாளி நாடுகளில் முதலில் நடைபெறும் நிகழ்வாக அப்போது பார்க்கப்பட்டது.

முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்துவமாக ஏகாதிபத்தியமாக மாறி உலக சந்தையை மறு பங்கீடு செய்து கொள்ளையடிப்பதற்காக ஏகாதிபத்திய போரான முதலாம் உலகப் போரை நடத்தின. அச்சமயம் சர்வதேச கம்யூனிச இயக்கம் ஏகாதிபத்திய போரை உள்நாட்டு போராக மாற்றி முதலாளி வர்க்கத்தை தூக்கி எறிய வேண்டும் என்று வழிகாட்டலை அளித்தது.

இதற்கு ஏற்ப லெனின் தலைமையில் ரஷ்யாவின் போல்ஷ்விக் கட்சி முதலாளி வர்க்கத்தை தூக்கி எறிந்து சோசலிசப் புரட்சியை நடத்தி வெற்றி அடைந்தது. இது ஒரு உலக வரலாற்றில் மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது. உலகில் ஏகாதிபத்திய முதலாளித்துவ பிற்போக்கு சக்திகளை எதிர்த்துப் போராடும் சக்திகளுக்கு உத்வேகம்காலனிய எதிர்ப்பு தேசிய விடுதலைப் போரிலும் சோசலிசக் கட்சிகளும் இணைந்து உலகப் புரட்சி என்ற முழுமையான அம்சங்களை என உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று கூடுங்கள் என்ற புதிய முழக்கம் முன்னுக்கு வந்தது. இரண்டாம் அகிலம் சந்தர்ப்ப வாத நோயால் பீடிக்கப்பட்டு முதலாளிகளுக்கு ஆதரவாக மாறியதால் உலகத்துக்கு வழிகாட்ட தகுதியற்றதாக மாறியது. ரஷ்யப் புரட்சிக்குப் பின் லெனின் தலைமையில் மூன்றாம் அகிலம் உருவாக்கப்பட்டது.

மூன்றாம் அகிலமானது சோசலிச நாடுகள் முதலாளிய நாடுகள் மற்றும் குடியேற்ற நாடுகளின் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் அமைப்புகளைஉள்ளடக்கியதாக இருந்தது.

வரலாற்றில் மூன்றாவது அகிலத்தின் இடத்தை லெனின் பின்வருமாறுவரையறுத்தார்," முதலாவது அகிலம் சோஷலிசத்திற்கான பாட்டாளிவர்க்க சர்வதேச போராட்டத்திற்கு அடிக்கல் நாட்டியது, இரண்டாம் அகிலம் அனேக நாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை விரிவான விஸ்தரிப்புக்கு முன்னேற்பாடுகள் நடத்தியது மூன்றாம் அகிலம் இரண்டாம் அகிலம் செய்த வேலைகளில் பயன்களை ஏற்றுக்கொண்டு அதன் சந்தர்ப்பவாத சமூக தேசியவெறிக் கொள்கையையும், குட்டிமுதலாளித்துவ தவறுகளையும் எதிர்த்துப் போராடி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை துணிந்து செயல்படுத்த தொடங்கியது.

.மூன்றாவது அகிலம் எல்லா நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைப்பதற்கு வழிகாட்டியது அகிலத்தின் இரண்டாம் மாநாட்டில் லெனின் வரையறுத்த" ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி" பாதை குடியேற்ற நாடுகளுக்கான அரசியல் திசை வழியாக அமைந்தது. குடியேற்ற நாட்டில் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்துதல் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் இணைவதன் மூலம் குடியேற்ற நாடுகளும் உலக புரட்சிக்கு பங்காற்ற இயலும் , குடியேற்ற நாடுகளில் நடைபெறும் போராட்டம் சோசலிச போராட்டமாக இருக்காமல் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை கொண்ட ஜனநாயக போராட்டமாக இருக்கும்.

மூன்றாம்அகிலம் முன்வைத்த கோட்பாடுகள்

இன்று இந்தியாவில் இடதுசாரி கட்சிகள் என்பது கம்யூனிசத்தின் பெயரால் முதலாளித்துவ கும்பலின் ஒரு பிரிவினராக ஆட்சியதிகாரத்தில் தங்களின் பங்கில் வாழ்ந்து கொண்டுள்ளனர் . புரட்சி பேசும் புரட்சியாளர்களும் அதிகார வர்க்கத்திற்கு எதிராக, ஏகபோக மூலதனத்திற்கு எதிராக நிலவுடமை கும்பல்களுக்கு எதிராக பெருமுதலாளிகளுக்கு எதிராக விஞ்ஞானப் பூர்வமான வர்க்கப் போராட்டத்தை ஒழுங்கமைத்து நடத்துவதில் திறமை அற்றவர்களாக இருக்கின்றனர்.

கம்யூனிசத்திற்கு ஆளுக்கு ஒரு வகையாக விளக்கம் கொடுத்து மக்களை குழப்புகின்றனர் ஆக மக்கள் கம்யூனிசத்திற்கு பக்கம் வரத் தயங்குகின்றனர்.

இதனை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டு மென்றால் இரண்டாம் அகிலத்தில் காவுத்ஸகி போன்ற துரோகிகள் செய்த அந்தப் பெரும் துரோகத்தை இரண்டாம் அகிலத்தில் தவறுகளை களைந்து மூன்றாம் அகிலத்தை லெனின் எப்படி கட்டியமைத்தார் என்பதிலிருந்து இதனை சரியாக புரிந்து கொள்ள முடியும்.

1).அன்றாட பிரசாரம் மற்றும் ஆர்ப்பாட்டம் எல்லாம் உள்ளபடியே கம்யூனிசதன்மை கொண்டதாக விளங்க வேண்டும் .கட்சிகளுக்கு சொந்தமான அனைத்து ஏடுகளும் பாட்டாளி வர்க்க புரட்சி லட்சியத்தில் தங்களது ஈடுபாட்டை நிரூபித்துக் கொண்டுள்ள நம்பிக்கை உள்ள கம்யூனிஸ்டுகளால் வெளியிடவேண்டும் . பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது மனப்பாடம் செய்யப்பட்ட கிளிப்பிள்ளை பாடமாக விவாதிக்கப் படக்கூடாது நம்முடைய பத்திரிகைகளில் நாள்தோறும் திட்டவட்டமாக வெளியிடப்படும் நடைமுறை உண்மைகளின் மூலம் அணிகளில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு படைவீரன் மற்றும் ஒவ்வொரு உழவனும் அது இன்றியமையாத ஒன்று என்பதை உணர்ந்து கொள்ளும் வகையில் அதை பிரபலமாக்கிவிட வேண்டும் மூன்றாவது அகிலத்தின் ஆதரவாளர்கள் தங்களுக்கு சாத்தியமான அனைத்து செய்தி சாதனங்கள் மூலமாக பத்திரிக்கைகள் பொதுக் கூட்டங்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் முதலாளி வர்க்கம் மட்டுமல்லாமல் அதன் சீர்திருத்தவாதிகளையும் அம்பலப்படுத்த வேண்டும். கம்யூனிஸ்டுகளை உறுதிப்படுத்த வேண்டும்.

2).உழைக்கும்வர்க்க இயக்கத்தில் எவ்விதப் பொறுப்பும் உடைய பதவிகளிலிருந்து. இடையறாது, திட்டவட்டமாக சீர்திருத்தவாதிகளையும் மைய்யவாதிகளையும் பதவி நீக்கம் செய்வது , கம்யூனிஸ்ட் அகிலத்தில் சேர விரும்பும் எந்தஒரு அமைக்கும் அவசியமானதாகும்.(கட்சி அமைப்புகள் ஆசிரியர்குழுக்கள் தொழிற்சங்கங்கள் பாராளுமன்றத் தொகுதிகள் இத்தியாதி) .இவர்களை பதவி நீக்கம்செய்துவிட்டு அவ்விடங்களில் பொறுப்பான சில சமயங்களில் அனுபவம் வாய்ந்த தலைவர்களை நீக்கிவிட்டு சாதாரண அணியில் உள்ள தொழிலாளர்களை முதலில் நியமித்திட வேண்டி உண்மைகள் தடைகளாக இருக்க வேண்டியதில்லை .

3).முற்றுகைக்கு உள்ளாகி இருக்கும் நாடுகளிலும் கம்யூனிஸ்டுகள் தங்களது நடவடிக்கைகளை அவசரகாலநிலை சட்டம் இருக்கும் நாடுகளிலும்சட்ட ரீதியாக செய்ய முடியாது போனால், சட்டவிரோத நடவடிக்கைகள், சட்டரீதியான நடவடிக்கைகள் உடன் இணைந்து விடுவது மிக அவசர அவசியமாகும். ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவில் உள்ள நாடுகள் அனைத்திலும் வர்க்கப் போராட்டம் உள்நாட்டுப் போராக மாறிவிடும் தருவாயில் உள்ளது. இந்த சூழலில் கம்யூனிஸ்ட்கள் முதலாளிய சட்ட தன்மையில் நம்பிக்கைவைக்க முடியாது. எங்கணும் இணையான சட்டவிரோத அமைப்புகளை அவர்கள் கட்ட வேண்டும் . இவை அறுதியானதொரு நேரத்தில்புரட்சி இடத்துக்கு கட்சிக்குள்ள கடமையை ஆற்றிட உதவிசெய்ய வழிவகுக்கும்.4).இராணுவபோர் வீரர்கள் மத்தியில் இடைவிடாத திட்டவட்டமான பிரசாரமும் ஆர்ப்பாட்டமும் நடத்த வேண்டும். ஒவ்வொருபடைப்பிரிவிலும் கம்யூனிஸ்ட் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். பெரும்பாலும் இந்த பணியை கம்யூனிஸ்டுகள்சட்டவிரோதமாக தான் செய்ய வேண்டியிருக்கும். இவ்வாறு செய்யத் தவறி விடுவதுதங்களது புரட்சிகர கடமையை காட்டிக் கொடுப்பதற்குசமம் ஆகும் .மேலும் அதுமூன்றாவது அகில உறுப்பினராக இருப்பதற்குதகுதியற்றதாக ஆகிவிடும் .

5).கிராமப்புறங்களில்தொடர்ச்சியான திட்டவட்ட ஆர்ப்பாட்டம் அத்தியாவசியமானது பண்ணை தொழிலாளிகளிலும் ஏழைஉழவர்களிலும் ஒரு முக்கியமான பிரிவிடம் இருந்து ஆதரவு இல்லாமல் உழைக்கும் வர்க்கம் தனது வெற்றியை ஒருங்கிணைத்திட முடியாது. மேலும் அவர்களது கொள்கையின் மூலம் எஞ்சியுள்ள கிராமத்தில் கம்யூனிச நடவடிக்கை பிரதான முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கிராமப்புறங்களில் தொடர்புடைய புரட்சிகர கம்யூனிஸ்ட் தொழிலாளர்கள் மூலமாக இது பிரதானமாக நடத்தப்படவேண்டும். இந்த பணியை தள்ளி வைப்பதோ நம்பற்கரிய அரைகுறை சீர்திருத்தவாதிகளிடம் அதை ஒப்படைப்பதோ பாட்டாளி புரட்சியை மறுப்பதற்கு சமமாகும்.

6).சமூக-நாட்டுப் பற்று வாதத்தை மட்டுமல்லாமல் சமூக போரொழிப்பு வாதத்தின் மாய்மாலம் மற்றும் பொய்மையும் அம்பலப்படுத்துவது மூன்றாவது அகலத்தில் சேர விரும்பும் எந்த ஒரு கட்சியின் கடமையாகும். முதலாளித்துவத்தை புரட்சிகரமாக தூக்கி எறிந்து விடாமல் சர்வதேச நீதி மன்றங்கள் சர்வதேச சங்கத்தை ஜனநாயக முறையில் புனரமைப்புபப்போர்களில் இருந்து மனித இனத்தைகாப்பாற்றது என்றஉண்மையை தொழிலாளர்களுக்கு விளக்கி காட்டிட வேண்டும்.

7).கம்யூனிஸ்ட்அகிலத்தின் சேர விரும்பும் கட்சிகள்சீர்த்திருத்த வாதம் மற்றும் மையக்கொள்கைகளை முழுவதும் விட்டு விலகிட வேண்டும்அவசியத்தை உணர்ந்து கொள்வது கடமையாகும் அந்தவிலக்கிற்காக கட்சி உறுப்பினர்களிடையே பிரசாரம் செய்திட வேண்டும் என்பது கடமையாகும். இது செய்யாமல் தொடர்ச்சியான ஒரு கம்யூனிஸ்ட் கொள்கை சாத்தியப்படாது .கம்யூனிஸ்ட் அகிலம் இந்த விளக்கத்தை மிக விரைவில் செய்திட வேண்டும் எனஅறுதியாகவும் சமரசம் ஏதுமின்றியும் கோருகிறது . பகிரங்கமாக சீர்திருத்தவாதிகள் ஆக கருதப்படும் தலைவர்கள்இன்னும் இவர் போன்றவர்கள் தங்களைமூன்றாவது அகிலத்தின் உறுப்பினர்களாக கருதிக் கொள்ள அனுமதித்திடுவதைபொறுத்துக்கொள்ள முடியாது. இப்படிப்பட்ட ஒரு நிலைமை இருக்குமானால்அது மூன்றாவது அகிலத்தை செல்லரித்துப் போன இரண்டாம் அகிலம்போன்று காட்சி அளித்திட செய்யும்.

8).காலனிகள்மற்றும் ஒடுக்கப்பட்ட தேசங்கள் சம்பந்தப்பட்ட மட்டில் உயர்ந்தபட்ச தெளிவுஉடைய மற்றும் திட்டவட்டமான ஒருகொள்கையை பின்பற்ற வேண்டும். மூன்றாம் அகிலத்தில் சேர விரும்பும் கட்சிதனது சொந்த நாட்டின் ஏகாதிபத்தியவாதிகளின்காலனிய தந்திரங்களை ஈவு இரக்கம் ஏதுமின்றிஅம்பலப்படுத்துகிறவர்களாக இருக்க வேண்டும் . வெறும்வார்த்தையளவில் இல்லாமல் செயலிலும் ஒவ்வொரு காலனிய விடுதலைஇயக்கத்தையும் ஆதரிப்பதாக இருக்க வேண்டும். தங்களதுநாடுகளின் ஏகாதிபத்தியவாதிகளை காலனிகளில் இருந்து வெளியேறுவதை கோரிடவேண்டும் . காலனிகளிலும் மற்றும் ஒடுக்கப்பட்ட தேசங்களிலும்உள்ள உழைக்கும் மக்களோடு உண்மையானது ஒரு சகோதரத்துவ மனப்போக்கைதனது நாட்டில் உள்ள தொழிலாளர்களின்இதயத்தில் வளர்த்திட வேண்டும். காலனி மக்களுக்கு எதிரான அனைத்து ஒடுக்குமுறையையும்எதிர்த்து ராணுவ வீரர்களுக்கு மத்தியிலும்திட்டவட்டமான ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டும்.

( ஆதாரம் Lenin collected works vol. 31) எழுத்து வடிவம்- சிபி.

தொடரும் ....... 

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்