ஆசான் ஸ்டாலின் நினைவுநாள் இன்று

 ஸ்டாலின்: சோவியத் சோசலிச சாதனைகளும் அவர் மீதான அவதூறுகள் ஏன்?

இந்த கட்டுரையை முழுமையாக ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும் தோழர்களே

இந்தக் கட்டுரை சோவியத் யூனியனின் சாதனைகளையும் ஸ்டாலின் மீதான விமர்சனங்களுக்கான விளக்கங்களையும் முன்வைக்கிறது. தனிநபர் ஆதிக்கத்தை விட பாட்டாளி வர்க்கத்தின் கூட்டு முடிவுகளே சோசலிசத்தின் அடிப்படை என்பதை இது வலியுறுத்துகிறது. ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி என்ற பிம்பத்தை மறுக்கும் இப்பாடம், அவர் மக்களாட்சி முறையிலேயே முடிவுகளை எடுத்தார் என்பதற்கான சான்றுகளைத் தருகிறது. சோவியத் ஆட்சியில் நிலவிய இலவசக் கல்வி, பெண்களுக்கான சம உரிமை மற்றும் வீட்டு வசதி போன்ற சமூக நலத்திட்டங்களை இது விரிவாகப் பட்டியலிடுகிறது. முதலாளித்துவ நாடுகள் பரப்பிய அவதூறுகளைச் சுட்டிக்காட்டி, உழைக்கும் மக்களின் நல்வாழ்விற்காக சோசலிசப் பாதையைப் பின்பற்றுவதே சிறந்தது என இத்தொகுப்பு முடிக்கிறது.

சோவியத் ஒன்றியத்தில் பெண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு எவ்வாறு உறுதி செய்யப்பட்டது?

ஸ்டாலின் மீதான விமர்சனங்களுக்கு இந்த ஆதாரங்கள் அளிக்கும் விளக்கங்கள் என்ன?

சோவியத் கல்வி முறை மற்றும் குழந்தைகளின் வளர்ச்சித் திட்டங்கள் பற்றி விளக்குக.

எமது ஆசான் ஸ்டாலின் நினைவு நாள் இன்று.
எவரும் பிறக்கும்போதே கம்யூனிஸ்டாக பிறக்க முடியாது.
இந்த வர்க்க தனி உடைமை சமூகத்தின் அழுக்குகளை தன்னுள் தாங்கி ஒவ்வொரு வளர்கின்றனர். அவர்கள் புரட்சிகர போராட்ட திசையில் ஒருவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சமூக மாற்றத்தில் உந்தி தள்ளும்போது தன்னையும் புரட்சிகரமாக மாற்றிக் கொள்கிறனர்.
சரியான திசை பயணத்தில்தான் தனிமனிதர்களும் போராட்ட அமைப்புகளும் தம்மை மென்மேலும் பண்படுத்திக் கொள்கிறது.
ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் மதிப்பிடும்போது அவர் சார்ந்த இயக்க வழி மற்றும் சமூக சூழலின் பின்புலத்தில் அவரது செயல்பாட்டின் நிறைகுறைகளை தனிநபர் பங்களிப்பையம் ஆய்வு செய்ய வேண்டும்.
ஆசான் தோழர் ஸ்டாலின் அவர்களின் வாழ்வும் உழைக்கும் மக்களின் உன்னத வாழ்விற்கான போராளியாய் வாழ்நாளெல்லாம் ஈடுபட்ட அவரின் வாழ்க்கையை நினைவு கூறுவதென்பது, அவர் வாழ்ந்து காட்டிய விடுதலைக்கான பாதையை அறிந்து நம் நாட்டின் இன்றைய சூழலை புரிந்துக் செயலாற்றவே. அவரை புகழ்பாடுவதல்ல அவர் காட்டிய வழியில் பயணிப்பதே அவரின் வழி பின்பற்றுவோர்களின் நோக்கமாக இருக்க வேண்டும் என்கிறேன்.
உலக வரலாற்றில் பாசிசதிற்கும் சாவு மணி அடிதவர், சோவியத் சோசலிச நிர்மானதில் அவரின் பங்கு உலகு உள்ளவரை வழிகாட்டியாக படிப்பினையாக விளங்கும்
உலகை மாற்றியவர்அவருடைய செயல் இச்சமூகம் உள்ளவரை மறக்க முடியாது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.அசானின் நினைவை போற்றுவதென்பது அவரை பின்பற்றுவதே.

சர்வாதிகாரம் பற்றி ஆசான் லெனின் தெளிவாக குறிப்பிட்டிருப்பார். அதில் இன்றுள்ள நம் சமூகமான முதலாளித்துவ சமூகமானது சிறுபான்மையிலான மூலதன உரிமையாளர்களின் சர்வாதிகாரமே முதலாளித்துவ சனநாயகம் என்பது! அதாவது முதலாளித்துவ சர்வாதிகாரமே. ஆனால் பாட்டாளி வர்க்க ஆட்சியில் பெரும்பான்மையிலான உழைக்கும் மக்களின் சனநாயகம் அல்லது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஆகும்.

சோவியத் ஆட்சியில் பாட்டாளி வர்க்க ஆட்சி பொருப்பில் இருந்த ஸ்டாலின் மீது அவதூறு என்பது சோவியத் சோசலிசத்தை மறுப்பதும் தனிநபராக கூட்டு முடிவை கொச்சை படுத்துவதுமே ஆகும். ஸ்டாலினை சர்வாதிகாரி தன்னிச்சையாக தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுக்கிறார் என்பதை போல கட்டமைத்தனர். ஆனால் உண்மையில் அவர் அப்படியான முறையில் முடிவுகள் எதையும் எடுத்ததில்லை. கட்சியின் தலைவர் என்ற முறையில் அரசு தலைவர் என்ற முறையில் அனைத்து பிரிவினரின் கருத்துக்களை கேட்டறிந்து அந்த முடிவுகளையே அமல்படுத்தினார். இதற்கு மாறாக தன்னிச்சையான முடிவுகள் குறித்த கருத்துக்கள் அனைத்தையும் அவர் மறுத்தார்.

1930 - 1936 ஆம் ஆண்டுகளில் சோவியத் யூனியனில் மற்றும் அதன் ஒரு அங்கமாக திகழ்ந்த உக்ரைனில் கடும் பஞ்சம், பசி, பட்டினி ஆகியவை நிலவியதாகவும் இதன் காரணமாக பல மில்லியன் மக்கள் பஞ்சத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள் எனவும் ஏகாதிபத்திய நாடுகள் கதையை அவிழ்த்து விட்டன. இதன் பின்னணியில் ஸ்டாலின் என்ற கொடுங்கோலன், சர்வாதிகாரி இருந்தார்; அவரின் கூட்டுப்பண்ணை திட்டமே அனைத்துக்கும் காரணம் என கதைகளை உருவாக்கினர்.

ஆனால் அவற்றை அக்காலத்தில் சோவியத்தில் வாழ்ந்த, சோவியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரிட்டிஸ் சோஷலிஸ்டுகள் பீட் ரைஸ் வெப் சிட்னி ஆகியோரின் கருத்துக்களும் அன்னா லூயிஸ் ஸ்டிராங் கருத்துக்களும் மறுத்து அம்பலப்படுத்துகின்றன. இவர்கள் அனைவரும் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொண்டார்கள் அல்ல. இவை அனைத்தையும் விட அமெரிக்கன் எண்டர்பிரைசஸ் இன்ஸ்டிடியூட் என்று அமெரிக்க அரசு நிறுவனமே இப்படி ஒன்று நிகழவில்லை என்று கூறிவிட்டது.(ஏதிரி முகாமே இந்த அவதூறுகளை ஏற்கவில்லை என்பதனை புரிந்துக் கொள்ள).

1936 - 1938 ஆம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளேயே சோவியத் ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட, சோவியத் ஆட்சியை கவிழ்க்க முயன்ற "பழைய போல்ஷ்விக்குகள்" மீதான சதி வழக்குகளில் ஸ்டாலின் பின் நின்றார் என்ற அவதூறு தொடர்ந்து பரப்பப்படுகிறது. அவர்களில் பெரும்பான்மையோரை இந்த வழக்குகளில் பொய்யாக சிக்க வைத்து பழி வாங்கினார் ஸ்டாலின் என எதிர்ப்பாளர்களால் பரப்பப்படுகிறது. ஆனால் அந்த வழக்கு வெளிப்படையாக எவ்வாறு நடந்தது என்பது குறித்து கூறும் அமெரிக்க தூதர் ஜோசப் டேவிஸ் பிரிட்டிஷ் வழக்கறிஞர் டின் என் பிரிட் ஆகியோரின் கருத்துக்களை முன்வைத்து ஸ்டாலின் மீதான பொய்களை பல நூல்களில் காணமுடியும்..

1938 - 1941 ஆம் ஆண்டுகளில் உலகப்போரின் போதும் அதன் பிந்தைய ஆண்டுகளிலும் உலகப்போரை காரணமாக வைத்து தோழர் ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டார்கள், சிறையில் அடைக்கப்பட்டார்கள், சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்ற பிரச்சாரம் நடக்கிறது. இவற்றில் எப்படி புனைவுகள் உருவாக்கப்படுகின்றன என்பதை ஸ்டாலின் காலத்தில் வாழ்ந்த ரஷ்ய எழுத்தாளர் சோல்ஜெனிட்சின் வாழ்க்கையை முன்வைத்து விளக்க முடியும். தனது எழுத்துக்களில் பாசிச சக்திகளை அதன் ஆதரவாளர்களை சோல்ஜெனிட்சின் எவ்வாறு ஆதரித்தார் இதன் அடிப்படை நோக்கம் என்ன என்பதனை அவர்களின் வர்க்க வரலாற்றை புரிந்துக் கொள்ள வேண்டும்.

1941 - 1953 ஆம் ஆண்டுகளில் உலகப் போர் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து நாட்டை சீரமைக்கும் பணி தோழர் ஸ்டாலின் முன் நின்றது. ஆனால் இதை மறைத்து ஸ்டாலினையே ஏகாதிபத்தியவாதி போல் சித்தரிக்கும் மோசடியும் நடைபெற்றது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான செல்வாக்கு மண்டலங்களை பிடித்துக்கொள்ளும் நாடுகளை பங்கிட்டுக் கொள்ளும் ஏகாதிபத்தியவாதியாக ஸ்டாலின் திகழ்ந்தார் என்று அவதூறு செய்தனர். இந்த அவதூறுகளை வாலண்டைன் பெரஷ்கோவ் நினைவுக்குறிப்புகள் சர்ச்சில் ரூஸ்வெல்ட் கடிதங்கள் மற்றும் அமெரிக்க தூதர் ஹாரிமன் நினைவுக் குறிப்புகள் ஆகியவை பொய்யாக்கி விடுகின்றன.

ஆனால் தோழர் ஸ்டாலினோ இந்தக் காலங்களில் நாட்டை நிர்மாணிக்கும் பணிகளில் தனது முழுக்கவனத்தையும் செலுத்துகிறார். அறிவியல், கலை இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சியை கட்டவிழ்த்து விட்டார் இதற்காக தொழிலாளர்கள் உழவர்களின் முன்முயற்சி மற்றும் திறன்களை ஊக்குவித்தார். அவர் பின்பு கட்சி மற்றும் நாட்டு மக்கள் நின்றனர். இதன் வளர்ச்சிப் போக்கில் பாட்டாளிவர்க்க கலை இலக்கியம் மற்றும் அறிவியல் ஆகியவை உன்னதமான வளர்ச்சியை அடைந்தன.

இவ்வளவு அவதூறுகள், போர்ச்சூழல் கொடுமைகள், இடையூறுகளுக்கு நடுவிலேயே சோசலிச கனவு உலகத்தை படைத்தனர் தோழர் ஸ்டாலினும் அவர் தம் நாட்டு மக்களும். அதுதான் ஏகாதிபத்திய முதலாளித்துவவாதிகளுக்கு அவர்களின் கூட்டாளிகளுக்கு இன்றும் கூட கொடுங்கனவாக விளங்குகிறது.

எனவே சோசலிசத்தின் சாதனைகளை மறைக்க சோசலிசத்தை வீழ்த்த தோழர் ஸ்டாலின் மீது அவதூறுகள் பொழியப்படுகின்றன. முதலாளித்துவ வாதிகளின் நோக்கம் அவர்களின் அரசியல் என்பது ஸ்டாலின் என்ற தனி மனிதர் அல்ல மாறாக சோசலிசத்தின் மீதான தீராத பகை உணர்வு ஆகும்.

சோசலிசமும் முதலாளித்துவமும் எதிர் எதிர் துருவங்கள் அதனால்தான் இதனை புரிந்துக் கொள்ள ரசிய புரட்சிக்கு பின்னரான நாட்களை கணக்கில் கொள்வோம்.

1917ல் புரட்சி நடந்த சில நாட்களுக்கு பிறகு இரசிய மக்களை நோக்கி தோழர் லெனின் கூறினார்.

உழைக்கும் மக்களே இப்பொழுது நீங்கள் தான் ஆட்சி பீடத்தில் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அனைத்து அரசியல் விவகாரங்களையும் நீங்கள் உங்களுடைய கைகளில் எடுத்துக் கொள்ளாவிடில் உங்களுக்கு யாரும் துணை புரியப்போவதில்லை. இப்பொழுது முதல் உங்களுடைய சோவியத்துகள் தான் அரசு அதிகார உறுப்புகள், முழு அதிகாரம் படைத்த சட்ட மன்றங்கள். உங்களுடைய சோவியத்துகளின் மூலம் ஒன்று திரளுங்கள், அவற்றை பலப்படுத்துங்கள், நீங்களே நேரில் பணிகளில் இறங்குங்கள்  (லெனின் நூல் திரட்டு, ஆங்கிலம், தொகுதி26 ப்பக்கம் 297)

சோவியத்தில் ஒன்றியத்தில் யார் வேண்டுமானாலும் உள்ளாட்சி துறை, மற்றும் சுப்ரீம் சோவியத் தேர்தலில் போட்டியிடலாம். தகுதியானவர்களை மக்களே தேர்ந்தெடுப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களே மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு சென்றனர். இவர்கள் ஒரு தொழிற்சாலையின் தொழிலாளியாகவோ அல்லது மாட்டுப் பண்ணையில் பால் கறப்பவர்களாகவோ கூட இருந்தார்கள்.

மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் இந்திய ஓட்டுப்பொறுக்கிகளை போல ஏதேனும் சிறு தவறு செய்தால் கூட உடனடியாக அவர்களை திருப்பியழைக்கும் உரிமையும் உடனடியாக வேறு பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் உரிமையும் அந்த மக்களுக்கு இருந்தது. இது வெறுமனே ஏட்டில் எழுதி வைத்துக்கொள்வதற்காக அல்ல. அவ்வாறு தவறிழைத்தவர்கள் திருப்பியழைக்கப்பட்டிருக்கிறார்கள். சோவியத் வரலாற்றில் அவ்வாறு சில ஆயிரம் உள்நாட்டு பிரதிநிதிகளையும் சில நூறு சுப்ரீம் சோவியத் பிரதிநிதிகளையும் மக்கள் திருப்பியழைத்திருக்கின்றனர்.

எல்.சூசயெவா என்பவர் கூட்டுப்பண்ணையில் பால்காரப் பெண்ணாக வேலை செய்பவர். மக்கள் அவரை சுப்ரீம் சோவியத்துக்கு பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து அனுப்பினர். அங்கே அவர் உரையாற்றுகையில் ஒரு சுவையான அனுபவத்தை கூறினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் சோவியத் இளந்தலைமுறையினர் தூதுக்குழுவில் ஓர் உறுப்பினராக அமெரிக்காவிற்கு சென்றிருந்தேன். அங்கே எனக்கு  ஏற்பட்ட அனுபவத்தை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

அமெரிக்கர்கள் எவ்வளவு சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்பதை எங்களுக்கு காட்ட வேண்டுமென்று அமெரிக்க செனட்டர்களை நாங்கள் நேரில் சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்தார்கள். ஜன்நாயகத்தைப் பற்றி இந்த செனட்டர்கள் நிறையவே பேசினார்கள். அமெரிக்க ஜனநாயகத்தின் சிறப்புகளை சொல்லி தமது சமூக அமைப்பை வானளாவ புகழ்ந்து கொண்டார்கள்.

ஆனால் இங்கேதான் அவர்கள் தோல்வியடைய நேர்ந்தது. நான் யார் என்று என்னிடம் கேட்டார்கள். இரசிய சமஷ்டிக் குடியரசின் சுப்ரீம் சோவியத்தில் ஓர் உறுப்பினர், பசு பராமரிக்கும் பால்காரியாக கூட்டுப்பண்ணையில் பணி புரிகிறேன் என்று சொன்னேன். அமெரிக்க செனட்டர்கள் வியப்புற்றுவிட்டனர், அவர்களுடைய செனட்டில் பால்காரிகள் யாரும் இல்லை. அவர்களுடைய ஜனநாயகம் அதற்கு இடம் தரவில்லை.

நான் சொல்வது உண்மைதானா என்று சோதித்து பார்ப்பது என்று அவர்கள் முடிவு செய்து கொண்டார்கள், சைராக்கியூசில் திரு லீ என்னுடைய கைகளை காட்டுமாறு கேட்டார். என் கைகளை திறந்து அவரிடம் காட்டி இதோ பாருங்கள் உழைக்கும் பெண்ணின் கைகள் என்றேன்.

ஆனால் அவர்கள் திருப்தியடையவில்லை. திரு லெஷர் என்ற அமெரிக்க விவசாயியின் பால் பண்ணைக்கு நாங்கள் சென்றிருந்த போது, பால் கறந்து காட்டும்படி சொன்னார்கள். நான் கறந்து காட்டினேன். சோவியத் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பால் கறக்கவும் தெரிகிறது என்று புரிந்து கொண்டார்கள். (சோவியத் நாட்டில் மனித உரிமைகளும் சுதந்திரங்களும். ரா.கிருஷ்ணையா,பக்கம் 33)

அதே போல சோவியத் நாட்டில் ஜனநாயகம் எவ்வளவு பரந்து விரிந்ததாக இருந்தது என்பதை புரிந்து கொள்ள இன்னொரு விசயத்தையும் கூறலாம். சோவியத்தின் புதிய அரசியலமைப்புச்சட்டம் எழுதப்பட்டு அதன் நகல் விவாதத்திற்காக மக்களிடையே சுற்றுக்கு விடப்பட்டது. கிட்ட்த்தட்ட நான்கு மாதங்களாக இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன. பதினான்கு கோடிக்கு மேற்பட்ட சோவியத் மக்கள் இந்த விவாத்த்தில் பங்கெடுத்துக்கொண்டனர். மாஸ்கோவில் மட்டும் ஐம்பத்தைந்து லட்சம் பேர் விவாதித்தார்கள். அரசியல் சட்ட ஆணைக்குழுவுக்கு நான்கு லட்சம் ஆலோசனைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

விவாதம் நடைபெற்ற் மாதங்களில் இது குறித்து பிராவ்தா செய்தியேட்டுக்கு 30,510 கடிதங்கள் வந்தன. இவ்வாறு ஒரு நாட்டின் சட்டம் குறித்து நாட்டு மக்களிடம் கருத்து கேட்டு, நான்கு மாதம் விவாதம் நடத்தி அதன் பிறகு அதை அமுல் படுத்திய சோவியத் யூனியன் ஜனநாயக நாடா ? அல்லது இந்த நாட்டு மக்களுக்கே தெரியாமல் பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புமிக்க கனிம வளங்களை உள்ளடக்கிய மாபெரும் மலைகளை யாருடைய அனுமதியும் பெறாமல் பன்னாட்டு கம்பெனிகளுக்கு எழுதிக்கொடுப்பது ஜனநாயகமா ? எப்ஸ்டின் பைல் மற்றும் அதானி சொத்தை காக்க நாட்டை காட்டிக் கொடுக்கும் ஆட்சிமுறையை என்ன சொல்ல?

அடுத்த ஒரு நிகழ்வை பார்ப்போம்

கூட்டுப்பண்ணைகள் முதல் தொழிலகம் வரை பெண்களுக்கு முழு உரிமை

காலம் காலமாக ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்பட்டு வந்த பெண்களுக்கு சமூகத்தின் அனைத்து துறைகளிலும் சம உரிமையை வழங்கியதோடு அதை சட்டமாக்கி நடைமுறைப்படுத்திய ஒரே நாடு  சோவியத் இரசியா மட்டும்தான். ஆண்களைப் போலவே அனைத்து துறைகளிலும் பெண்கள் வேலை செய்தார்கள். உடல் உழைப்பு மூளை உழைப்பு இரண்டிலும் ஈடுபட்டார்கள். வேலைகளில் ஆண்களுக்கு நிகரான ஊதியமும் பெண்களுக்கு கொடுக்கப்பட்டது.

பெண்களை இழிவு படுத்தும் பத்திரிக்கைகளோ, சினிமாவோ, நாடகங்களோ எதுவும் சோவியத்தில் கிடையாது. அவ்வாறு பெண்களை இழிவுபடுத்தியோ அல்லது ஆபாசமாகவோ சித்தரித்தால் அதற்கு சட்டப்படி கடும் தண்டனை உண்டு. நமது வீட்டுப் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் படங்களையும், நாடகங்களையும் நாம் அனுமதிக்க முடியுமா ? முடியாதல்லவா ? அதே போலத் தான் சோவியத் அரசாங்கம் தனது நாட்டு பெண்கள் எந்த விதத்திலும் ஆபாசப் பொருளாகவோ, போகப் பொருளாகவோ சித்தரிக்கப்படுவதை அனுமதிப்பதில்லை. அங்கே பெண்களை இழிவுபடுத்தும் அனைத்தும் தடை செய்யப்பட்டிருந்தன. வறுமையையும், தற்குறித்தனத்தையும் ஒழித்துக்கட்டியதைப் போலவே விபச்சாரத்தையும் ஒழித்துக்கட்டிய ஒரே நாடு சோசலிச இரசியா மட்டும் தான்.

பெண்களுக்கு அவர்கள் கருவுற்றிருக்கும் காலங்களில், குழந்தை பிறப்பதற்கு முன்னால் 52 நாட்களுக்கும், குழந்தை பிறந்த பிறகு 52 நாட்களுக்கும் முழுமையான ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகைகளும் பல்வேறு சலுகைகளும் அளிக்கப்பட்டன. கர்ப்பகாலத்தில் வீடு தேடி வந்து மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவர்களுக்கான சத்துணவு மிகக் குறைந்த விலைகளில் விற்கப்பட்டன. அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு சம உரிமை என்பதால் பெண்கள் நாட்டின் அனைத்துத் துறையிலும் தலைசிறந்து விளங்கினர். சமூகத்தில் சோவியத் பெண்கள் ஈடுபடாத துறையே இல்லை

 மாஸ்கோவில் ஒரு குழந்தைகள் காப்பகம்

அப்படியானால் குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வது? என்கிற கேள்விக்கு விடை தான் யாஸ்லிகள் . இந்த யாஸ்லிகள் என்பது குழந்தைகளை வளர்க்கும் நம்ம ஊர் பாலவாடிகள் போன்றது (ஆனால், நம்ம ஊர் பாலவாடிகளை போன்று கேவலமாக இருக்காது) இவை அரசாங்கத்தால் நடத்தப்படுபவை. பெற்றோர்கள் வேலைக்கு செல்கையில் இந்த யாஸ்லிகளில் தமது குழந்தைகளை விட்டுச் செல்கின்றனர். யாஸ்லிகளில் குழந்தைகள் மகிழ்ச்சியோடு இருப்பதற்கான சூழலில் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு தாய் தன்னுடைய குழந்தையை கவனித்துக் கொள்வதை போலவே அக்கரையோடு வளர்க்க பல தாதியர்கள் யாஸ்லிகளில் இருக்கின்றனர். அவர்கள் குழந்தைகளைத் தாலாட்டி தூங்க வைப்பதிலிருந்து குளிப்பாட்டி, உணவூட்டி, விளையாட்டுப் பொருள்களை கொடுத்து அவர்களோடு விளையாடுவது வரை இன்முகத்துடன் செய்கின்றனர்.

அங்கு தவறாது குழந்தைகளுக்கும் சரிவிகித உணவு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு யாஸ்லிகளிலும் பல மருத்துவர்கள் இருப்பார்கள். அங்கு இருக்கும் குழந்தைகளுக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து அவர்களில் ஏதேனும் நோயுற்ற குழந்தை இருந்தால் அக்குழந்தையை மட்டும் தனியே வைத்து மருத்துவம் செய்கிறார்கள். அந்த குழந்தையின் உடல் நிலை முழுமையாக சரியான பிறகு தான் மற்ற குழந்தைகளுடன் இணைந்து விளையாட அனுமதிப்பர்.

எல்லாம் சரி தான். தாயைப் போல் அன்பு செலுத்தலாம். அக்கறை காட்டலாம், ஆனால் தாய்ப்பால் ? அதையும் திட்டமிட்டுத்தான் இந்த யாஸ்லிகள் அனைத்தும் தொழிற்சாலைகளுக்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருந்தன. தொழிற்சாலைகளில் அக்குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை குழந்தைகளுக்கு பால் கொடுக்க சென்று வர அனுமதிக்கப்படுகிறது. ஒரு வேளைக்கு அரை மணி நேரம் எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு போய் வரும் 1 மணி நேரமும் அவர்களுடைய வேலை நேரத்தில் சேர்த்தே கணக்கிடப்படுகிறது.

முதல் மூன்றாண்டுகள் இந்தக் குழந்தைகள் யாஸ்லிகளில் வளர்க்கப்படுகிறார்கள். இந்தப் பொழுதில் குழந்தைகளுக்கு தெளிவாக பேசுதல், எந்த வேலையையும் சீராகச் செய்தல் போன்ற பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த யாஸ்லி முறை குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கூட்டுணர்வை ஏற்படுத்தி அவர்களுடைய மனதில் கூட்டுறவு சிந்தனை முறையையும், கூட்டுறவு வேலை பாணியையும் கற்றுத்தருகிறது.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு குழந்தையின் ஏழாம் வயது வரை இக்குழந்தைகள் தோட்டப்பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். தோட்டப் பள்ளிகளில் குழந்தைகளை யாரும் படி.. படி.. என்று கொடுமைப்படுத்தி மொக்கைகளைப் போல புத்தகப் புழுக்களாக வளர்ப்பதில்லை! குழந்தைகளுக்கு விருப்பமான கலைகளில் அவர்கள் சிறந்து வளர உதவப்படுகிறது. மாதமொரு முறை காடு, மலை, அருவி போன்ற பகுதிகளுக்கு தக்க பாதுகாப்புடன் அழைத்துச் சென்று அவர்களுக்கு நேரடியாக இயற்கையை பற்றிய அறிவு ஊட்டப்படுகிறது. இங்கு கூட்டாக சுத்தம் செய்தல், தாம் சாப்பிட்ட பாத்திரங்களைத் தாமே கழுவுதல் போன்ற வேலைகளைக் குழந்தைகளையே செய்யச் சொல்லி சுய ஒழுங்கு கற்றுத்தறப்படுகிறது. எந்தத் தொழிலும் இழிந்தது அல்ல என்ற உணர்வு குழந்தை பருவத்திலேயே ஊட்டப்படுகிறது.

தோட்டப் பள்ளிப் படிப்பு முடிந்ததும் இவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு அவர்களது தாய்மொழி, ரஸ்ய மொழி, மற்றுமொரு கட்டாய அயல்நாட்டு மொழி சொல்லித்தரப் படுகிறது. இது தவிர அறிவியல், கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்கள் நேரடியான பல சோதனைகள் மூலம் நிரூபித்துக் காட்டப்பட்டு பயிற்றுவிக்கப் படுகிறது.

இவர்களுக்கு ஆசிரியர்களாக இருப்பவர்கள் சாதாரண ஆட்களாக இருக்க முடியாது. குழந்தைகளுக்கு மட்டுமல்ல அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பரீட்சை உண்டு. அவர்கள் அங்கு தேர்ச்சியடைந்தால் தான் குழந்தைகளுக்கு ஆசிரியராக நீடிக்க முடியும். மாணவர்கள் படிக்கும் போதே பகுதி நேரமாக தொழிற்கூடங்களில் நேரடிப் பயிற்சி பெறும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுகிறது. அதன் மூலம் அவர்கள் படிக்கையில் அந்த அந்தப் பாடத்தில் உள்ளவற்றை நடைமுறையோடு பொருத்தி தெளிவாக புரிந்து கொள்கிறார்கள்.

பத்தாம் வகுப்பு வரையிலான கல்வி கட்டாயமாக்கப்பட்ட ஒன்று. இங்கு கல்வி அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இலவசமாக சொல்லித் தரப்படுகிறது. இதன் காரணமாக சோசலிச இரசியாவில் இரு பத்தாண்டுக்குள்ளாகவே படிக்காதவர்கள் இல்லை என்னும் நிலை உருவானது. முதியவர்களும் கூட இரவு நேர கல்விக் கூடங்களில் கற்றனர்.

இத்தகைய அறிவியல் பூர்வமான கல்வியைப் கற்று வளர்ந்த மாணவர்கள் தான் அறிவியல் விஞ்ஞானத் துறையில் சோவியத் நாடு தலை சிறந்து விளங்க காரணமானவர்கள்.

சோவியத்தில் அனைவருக்கம் வீடு

சோவியத் நாட்டில் அனைவருக்கும் அரசாங்கம் வீட்டு வசதி செய்து தந்தது. வீட்டிற்கு வாடகை எவ்வளவு தெரியுமா ? அந்த வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களில் யார் அதிக சம்பளம் வாங்குகிறார்களோ அவர்களுடைய சம்பளத்தில் வெறும் 4சதவீதம் மட்டுமே வாடகை. அதாவது, 4000 ரூபாய் வாங்கினால் 160 ரூபாய் வீட்டு வாடகை. சோவியத்தில் சொந்த வீடு கட்டிக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்று கூறி பலர் பூச்சாண்டி காட்டுகிறார்கள். ஆனால் அங்கு கூட்டு மாடி வீடுகளை (apartments) கட்டிக் கொள்ள அரசாங்கமே 60சதவீத தொகையை கடனாகக் கொடுக்கிறது. அந்த கடனை 10 முதல் 15 வருடங்களில் திருப்பி செலுத்தினால் போதுமானது. ஆனால், ஒருவருக்கு ஒரு வீடு மட்டுமே உரிமையாக இருக்க முடியும்.

இந்த வீடு பிரச்சினை குறித்தும் அகிலன் எழுதியுள்ளார். அவர் கூறுவதாவது,

உறைவிடத்தைப் பொறுத்த வரையில் நான் அங்கு கண்டது இதுவே, வீடில்லாமல் எந்த குடிமகனும் எந்த நகரத்திலும் கிராமத்திலும் நடுத்தெருவில் திரிந்து அலையவில்லை. வசதியான வீடு இன்னும் சிலருக்கு கிடைக்காமல் இருக்கலாம், ஆனால் எல்லோருக்குமே அங்கு உணவும், உடையும் கிடைத்துள்ளதை போல உறைவிடமும் கிடைத்துள்ளது என்பது தான் முக்கியமானது. (அதே நூல், பக்கம் 61)

மேலும் சில விசயங்கள்..

இரசிய மக்கள் என்றுமே தங்கள் தாய்நாட்டை எதற்காகவும் விட்டுத்தராதவர்களாய் இருந்தனர். ஏனெனில் அவர்களுக்கு நாடு என்றால் மனிதர்களும் சேர்ந்ததே ஒழிய அவர்கள் வரைபட தேசபக்தர்கள் அல்ல. இங்கோ எரியும் இந்தியக் கொடியை அணைப்பவனே மிகப் பெரிய தேசபக்தன். அங்கு ஒவ்வொருவனும் தேசப் பற்றாளன் தான். சோசலிச சமுதாயத்தை அவர்கள் தங்கள் உயிரினும் மேலாக மதித்தார்கள். உதாரணத்திற்கு பல நிகழ்வுகளைக் கூறலாம்.

ஒருமுறை என்.எஸ்.கிருஸ்ணனும் அவருடைய நண்பரும் சோவியத்தின் பிரபல எழுத்தாளர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தனர். இதனை ஒரு மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த்துக் கூறிக் கொண்டிருந்தார். என்.எஸ்.கேயின் நண்பர் எங்கள் நாட்டின் காந்தியமும் உங்கள் நாட்டின் சோசலிசமும் ஒன்று தான் என்று கூறினார். மொழிபெயர்ப்பாளர் இதனை மொழிபெயர்க்க மறுத்து விட்டார். பொய் சொல்கிறார்கள் என்று கூறி மொழிபெயர்க்க முடியாது என்றும் கூறிவிட்டார். இதிலிருந்து தெரியவில்லையா அவர்கள் சோசலிசத்தை எவ்வளவு நேசித்தார்கள் என்று.

அங்கு இரயில்களில் செக்கிங் கிடையாது. சோவியத் இரசியாவில் பூட்டு தயாரிக்கப்படுவதில்லை! ஏனெனில், வீடுகளில் பூட்டை மாட்ட கொண்டியே இருக்காது. ஏனெனில் அது திருட்டே இல்லாத நாடு! மக்கள் யாரும் யாரையும் ஏமாற்றுபவர்களாக இல்லை. பஸ்ஸில் ஏறும் போதும் டிக்கெட்டை நாமாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு முறை இங்கிருந்து சென்ற காங்கிரஸ் தலைவர் காமராஜர் டிக்கெட்டை எடுக்காமல் பேருந்தில் ஏறி உட்கார்ந்து கொண்டார். அருகில் இருந்த சோவியத்தை சேர்ந்த தோழர் இவரையே கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார். ஒன்றிரண்டு நிறுத்தங்கள் வரைப் பார்த்தவர் மூன்றாவது நிறுத்தம் தாண்டிய பிறகும் காமராஜர் பயணச்சீட்டு வாங்காததால் நேராக அவரே எழுந்துச் சென்று தனது பணத்தை போட்டு பேருந்து செல்லும் கடைசி நிறுத்தம் வரைக்கும் டிக்கெட்டை எடுத்து வந்து அதை அவருடைய கையில் கொடுத்து விட்டு அமர்ந்தார். அங்கே யாராவது தவறு செய்ய நினைத்தாலும் அதை மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். அந்த மக்களின் தேசப் பற்று என்பது இதுதான்.

கவிஞர் கண்ணதாசன், அங்கு சென்று தனது கோணல் புத்திக்கு ஏற்றவாறு, ஒரு ஹோட்டல் பணிப் பெண்ணிடம் கேட்டாராம் உங்கள் நாட்டில் விலைமாதுக்கள் உண்டா?” என்று. அந்தப் பெண் இல்லை என்று பதிலளித்திருக்கிறார். நான் உன்னை இங்கு பலவந்தப்படுத்தினால் என்ன செய்வாய்?” என்றாராம். பதிலுக்கு எனது துப்பாக்கிக்கு வேலை வரும். அவ்வளவு தான் என்று கூறிச் சென்றாளாம் அந்தப் பெண்.

சோவியத்தின் விஞ்ஞான வளர்ச்சி பற்றி யாரும் தனியே சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வான்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவுக்கு முன்னதாக சாதித்துக் காட்டியது இரசியா தான். மருத்துவத் துறையில் மிகச்சிறப்பான பல சாதனைகளை செய்ததும் இரசியா தான். விளையாட்டில் அது அள்ளிச் சென்ற பதக்கங்கள் தான் எத்தனை ? எத்தனை ? இவ்வாறு அறிவியல்துறையிலும், மருத்துவத் துறையிலும், விளையாட்டுத் துறையிலும் பல சாதனைகளை எவ்வாறு ரசியாவால் சாதிக்க முடிந்தது ?

அங்கே கல்வி தனியாரிடம் இல்லை. கல்வி காசுக்காக நடைபெறும் வியாபாரமாக இல்லை. அங்கு அனைவருக்கும் விளையாட்டுப் பயிற்சி நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்றவை இலவசமாக கிடைக்கப்பெற்றன. அனைவரும் தனது நாட்டிற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று ஆர்வம் கொண்டிருந்தனர். அவர்களுக்கு பணியாற்றபயிற்சி எடுக்க சிறந்த சோதனைச் சாலைகளும் விளையாட்டரங்குகளும் இருந்தன. இவையெல்லாம் எப்படி வந்தன ? இன்றைய நமது நாட்டில் கல்வியை வியாபாரமாக்கி கடை நடத்தும் ஓட்டுப்பொறுக்கிகளை புரிந்துக் கொள்ள உழைக்கும் மக்களின் ஆட்சி என்னவென்பதனை புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில், கம்யூனிசம் ஆட்சிக்கு வந்தால் ஓட்டைக் குடிசையிலும், குப்பைத் தொட்டிகளிலும் வாழ்ந்து வரும் பல கோடி மக்கள் முதலாளிகள் மீது அதிகாரம் செலுத்துவார்கள். அப்போது அதானியும் ஏன் அம்பானி என்கிற இரத்தக்காட்டேரி 5000 கோடி ரூபாய்க்கு மாளிகை கட்ட முடியாதல்லவா? உழைக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுக்க முடியாதல்லவா? எனவே தான் கம்யூனிசம் குறித்த பொய்களையும், புளுகுகளையும் பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். அவை அனைத்தையும் மேற்கண்ட உண்மைகள் அம்பலமாக்கியிருக்கின்றன.

கம்யூனிசம் தோற்றுப்போய் விட்டதென்றால் சின்னஞ்சிறிய நாடான நேபாளத்தைக் கண்டு அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் அஞ்சுவது ஏன்? வல்லரசாகப்போகிற இந்தியா அஞ்சுவது ஏன்? ஏனெனில், கம்யூனிசம் தோற்கவில்லை என்பது அதனை செயல்படுத்தியவர்களின் தவறான செயலால் தற்காலிகமாக தோல்வி கண்டுள்ளது தங்களின் தவறை மூடி மறைக்க ஆசான்களை குறை கூறி தங்களை காத்துக் கொள்ள நினைகின்றனர். கம்யூனிசத்தின் வெற்றியால் இன்றுள்ள அமைப்புமுறை புதைகுழிகளுக்குள் தள்ளப்படப்போகிறதை இவர்களுக்கு நன்றாக தெரியும். அதனால்தான் இந்த பொய்யும் புரட்டும்.

முதலாளித்துவம் யாரைக்கண்டு அஞ்சி நடுங்குகிறதோ அந்த பூதம், கம்யூனிசம் என்கிற அந்த கோடிக்கால் பூதம் வந்தே தீரும், அது இவர்களுடைய அனைத்து அநீதிகளுக்கும் தீர்ப்புகளை வழங்கியே தீரும்!

கோடிக்கணக்கான மக்களுக்கான சொர்க்கத்தையும், சுரண்டல் கூட்டத்தின் மீதான சர்வாதிகாரத்தையும் நிலைநாட்டி சோவியத் வடிவிலான அமைப்புமுறையில் மட்டுமேதான் தோழர்களே

தொடரும்....

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்