மார்க்சிய (இயக்கவியல் பொருள்முதல்வாத) தத்துவம் பயிலுவோம். பகுதி-2- தேன்மொழி

 இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் மூலப் பிரச்சனை

1.இயக்கவியல் பொருள்முதல்வாத தத்துவத் தை எப்படி கற்கத் தொடங்குவது?

இயக்கவியல் பொருள்முதல்வாத தத்துவம் தான் மார்க்சிய தத்துவத்திற்கு அடிப்படை என்பதைநாம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த தத்துவத்தைப் பயிலுவதுதான் நமது நோக்கமாகும். ஆனால் அதனை பயிலுவ தென்றால் நாம் பல கட்டங்களைப் படிப்படியாக கடந்து செல்ல வேண்டும். இயக்கவியல்பொருள்முதல்வாதம் என்று சொல்கிறோம் அல்லவா? அதில் இயக்கவியல் என்றொரு சொல்லும், பொருள்முதல்வாதம் என்ற மற்றொரு சொல்லும் இருக்கின்றன. இதற்கு அர்த்தம்

பொருள்முதல்வாதமானது இயக்கவியல் என்ற வடிவத்தில்தான் இருக்க முடியும், அப்படித்தான்இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மார்க்சுக்கும், எங்கெல்சுக்கும் முன்பே பொருள்முதல் வாதத் தத்துவம் இருந்துள்ளது என்பதை நாம் அறிவோம். ஆனால் அதேசமயத்தில் 19-ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் துணைகொண்டு மார்க்சும்எங்கெல்சும் அந்தப் பொருள்முதல் வாதத் தத்துவத்தை உள்ளும் புறமும் வளர்த்து புதுமைபெறச்செய்தார்கள். அவர்கள்தான் இயக்கவியல் பொருள்முதல் வாதம் என்ற புரட்சிகரமான தத்துவத்தை படைத்தார்கள்.

"இயக்கவியல்"என்ற சொல் பொருள்முதல் வாதத் தத்துவத்தின் நவீன கால வடிவத்தைக்குறிக்கும் சொல்லாகும். மார்க்சுக்கும், எங்கெல்சுக்கும் முன்பே பொருள்முதல்வாதத்தத்துவவாதிகள் பலர் இருந்துள்ளனர். உதாரணமாக 18-ஆம் நூற்றாண்டில் தீதரோ இருந்திருக்கிறார். மேலும் அனைத்துவகையான பொருள்முதல் வாதத் தத்துவவாதிகளுக்கு இடையே பொதுவான அம்சங்கள் இருக்கின்றன, மேலும் வேறுபாடுகளும் உள்ளன.

இவற்றைப் புரிந்துகொள்ள இயக்கவியல் பொருள்முதல்வாதத்தைக் கற்பதற்கு முன்னால் பொருள்முதல்வாதத்தத்துவத்தின் வரலாற்றை நாம் படித்தறிய வேண்டும். மேலும் பொருள்முதல் வாதத்திற்கு எதிராக கொண்டுவரப்படும் கண்ணோட்டங்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

2. பிரபஞ்சத்தை விளக்குவதில் இரண்டு வகைகள்அனைத்து விசயங்களிலும் பொதிந்திருக்கின்ற "மிகவும் பொதுவான பிரச்சனைகளை"அதாவது இயற்கை, பிரபஞ்சம், சமூகம், சிந்தனை போன்ற பல பிரச்சனைகளில் பொதிந்துள்ள பொதுவான உண்மைகளை அலசி ஆராய்ந்து விளக்குவதுதான் தத்துவத்தின் பணியாகும்.

முதலாளித்துவ தத்துவங்களைத் திரட்டித் தரும் ஒரு தொகுப்பு நூலை புரட்டிப் பாருங்கள். அதில் பலவகையான தத்துவங்கள் ஒரே குவியலாகக் குவிந்திருப்பதைப் பார்த்து மலைத்துப் போய்விடுவீர்கள். அந்த வாதம், இந்த வாதம் என்றபடி வாதம் என்ற சொல்லில் முடியும் பல

சிக்கலான தொடர் மொழிகளால் அந்த தத்துங்கள் பெயரிடப்பட்டிருக்கும். விமர்சனவாதம், பரிணாமவாதம், அறிவுவாதம், என்றபடியெல்லாம் பல தொடர் மொழிகள் காணப்படும்.

இத்தனை தத்துவங்களும் சேர்ந்து வாசகனை அப்படியே குழப்பிவிடுகின்றன. இந்தநிலைமையை விளக்குவதற்கு முதலாளி வர்க்கத்தினரும் முதலாளித்துவ தத்துவவாதிகளும் ஏதாவது செய்கிறார் களா? கிடையாது. குழப்பத்தை அதிகமாக்கு வதற்குத்தான் வேலை செய்கிறார்கள். நிலைமை இப்படி இருந்தாலும் இந்த பல்வேறு தத்துவங்களை நாம் இனம் பிரித்துப் பார்க்க வேண்டும். ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு மாபெரும் போக்குகள், இரண்டு கண்ணோட்டங்கள், அவற்றுக்கு இடையே நிலவுவதை இனம்கண்டு கொள்ள வேண்டும். அவை என்ன?

(1) பிரபஞ்சத்தைப் பற்றி விஞ்ஞான ரீதியான கண்ணோட்டம்,

(2) விஞ்ஞானரீதியில்லாத கண்ணோட்டம்.

பல்வேறுவிதமான தத்துவங்களை முன் வைத்து மக்களை குழப்புவது முதலாளிகளின் நோக்கமாக உள்ளது. இந்த முதலாளிகளின் நோக்கங்களை நிறைவு செய்வதற்காகமுதலாளிகளிடம் காசுக்கு விலைபோன தத்துவவாதிகள் பல்வேறு வகையான தத்துவங்களை எழுதி மக்களின் முன்னால் வைக்கிறார்கள். இவர்கள் எவ்வளவுதான் எழுதி வைத்தாலும் இந்த தத்துவங்கள் அனைத்தும் விஞ்ஞானத்தை மறுக்கின்ற தத்துவங்களாகவே இருப்பதை நாம் காணலாம். விஞ்ஞான உண்மைகளை மூடிமறைத்து மக்களின் சிந்தனைகளையும்

உணர்வுகளையும் மழுங்கடிப்பதுதான் இவர்களது நோக்கமாக இருக்கிறது. இதற்கு நேர்மாறாக விஞ்ஞான உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் தத்துவமானது உழைக்கும் மக்களுக்கு தெளிவான உண்மைகளை விளக்கி மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்கிறது. ஆகவே உலகில் பல தத்துவங்கள் இருந்தபோதும் அவற்றை இரண்டு வகையாக நாம் பிரிக்க வேண்டும். ஒன்று விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு உண்மையைப் பேசி மக்களை விழிப்படையச் செய்யும் தத்துவம். மற்றொன்று விஞ்ஞானத்தை மறுத்துவிட்டு

பல பொய்களைச் சொல்லி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் தத்துவம். இவ்விரண்டு வகையானதத்துவத்தை இனம்பிரித்துப் பார்க்கும் திறனை உழைக்கும் மக்கள் பெறவேண்டும்.

3.பொருளும் ஆன்மாவும்.

இந்தப் பிரபஞ்சத்தையும், இயற்கையையும், மனிதனையும் அதாவது, நம்மைச் சூழ்ந்திருக்கும் சகல பொருட்களையும் தத்துவவாதிகள் விளக்க முயற்சிக்கின்ற பொழுது பொருட்களை வகைவகையாகப் பிரித்துப் பார்க்க வேண்டியிருப்பதை உடனே உணர்கிறார்கள். நாம் கண்ணால் பார்க்கின்ற, கையாலால் தொடுகின்ற மாதிரி பல வஸ்துகள், புலனுக்கு எட்டுகிற

பொருள்கள் இருப்பதைக் காண்கின்றோம். அடுத்தபடியாக, கண்ணால் பார்க்கவோ, கையால் தொடவோ, அளக்கவோ முடியாதபடியுள்ள விசயங்களும்-உதாரண மாக, நமது கருத்துக்கள் இருக்கக் காண்கிறோம். எனவே அவற்றை இரண்டு வகையாகப் பிரிக்கிறோம். ஒரு பக்கத்தில்,

ஐம்புலன்களுக்கும் எட்டக்கூடிய பொருட்கள்; இன்னொரு பக்கத்தில் அறிவுக்கு எட்டக்கூடிய விசயங்கள். சிந்தனை, கருத்துத் துறைகளைச் சேர்ந்த விசயங்கள்.

இப்படித்தான் பொருளும் ஆன்மாவும் (கருத்து) தங்களுக்கு எதிரேகாட்சியளிப்பதை தத்துவவாதிகள் கண்டார் கள். உலகில் நமது சிந்தனைக்கு வெளியே பலவிதமான இயற்கைப் பொருட்கள் உள்ளது. அதனை தனது புலன் உணர்வுகளால் மனித மூளையின் மூலம் சிந்தித்து உருவாக்குகின்ற கருத்தும் ஆகிய இரண்டுவகையான விசயங்கள் உலகில் உள்ளது.

4. எது பொருள்? எது ஆன்மா?

ஆக, பொருள் என்றும் ஆன்மா என்றும் விசயங்களை இரண்டு வகையாகஇனம் பிரித்துப் பார்க்க வேண்டிய நிலைக்கு மனிதர்கள் வந்து சேர்ந்ததை மேலே பொதுவானரீதியில் பார்த்தோம் என்றால் கூட இப்படி வகைப்படுத்திப் பார்ப்பதை எல்லோரும் ஒரே மாதிரியாகச் செய்வதில்லை. வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு சொற்களில் அதை இனம்பிரித்துக்குறிக்கிறார்கள் என்பதை நாம் குறிப்பிட வேண்டும்.

அதனால்தான் ஒன்றையே நாம் பரிசுத்த ஆவி என்றும், ஆன்மா என்றும், சிந்தனை என்றும், கருத்து என்றும், உணர்வு என்றும் குறிப்பிட்டுப் பேசுகிறோம். (இவை அனைத்தும் ஒரே பொருளைக் குறிப்பவைதான்) அதே மாதிரி இயற்கை என்றும், பிரபஞ்சம் என்றும், பூமி என்றும், வாழ்நிலை என்றும் சொல்லப்படுபவை ஒவ்வொன்றும் பொருளைத்தான் குறிக்கின்றன. லுத்விக்பேயர்பாக் என்ற நூலில் வாழ்நிலையைப் பற்றியும், சிந்தனையைப் பற்றியும் ஏங்கெல்ஸ் பேசுகிறார். வாழ்நிலை என்பது பொருள், சிந்தனை என்பது ஆன்மா.

(ஆன்மீகவாதிகள் குறிப்பிடும் ஆன்மா என்பதும், இறைவன் என்பதும் தத்துவத் துறையில் சிந்தனை மற்றும் கருத்தையே குறிக்கின்றன) சிந்தனை அல்லது ஆன்மாவை எப்படி வரையறுத்து சொல்வது வாழ்நிலை அல்லது பொருளை எப்படி வரையறுத்து சொல்வது என்று கேட்டால் அதற்குப் பின்வருமாறு நாம் விடை அளிப்போம்

விசயங்களைப் பற்றி, பொருட்களைப் பற்றி, நமக்கு நாமே உருவாக்கிக்கொள்கிற கருத்தைத்தான் நாம் சிந்தனை என்கிறோம். சாதாரணமாகச் சில கருத்துக்கள் நமது புலன் உணர்ச்சிகளின் வழியாக நமக்குக்க் கிடைக்கின்றன. அவை நம்மைச் சூழ்ந்துள்ள புலனறிவுக்கு எட்டும் பொருட்களுக்குப் பொருத்தமாக இருக்கின்றன. வேறு சில கருத்துக்கள் அப்படிப்பொருத்தமாக இல்லை.உதாரணமாக கடவுளைப் பற்றிய கருத்துக்கள், தத்துவஞானத்தைப் பற்றிய கருத்துக்கள்,ஆதியந்தமற்றபரம்பொருளைப் பற்றிய கருத்துக்கள் ஏன், சிந்தனையைப் பற்றிய கருத்துக்கள் கூடத்தான் புலனறிவுக்கு எட்டுகிற பொருட்களுக்கு பொருத்தமாகஇல்லை.

ஆகவே விசயங்களைப் பற்றியும் புறநிலையிலுள்ள பொருட்களைப் பற்றியும் நமது சிந்தனையானது புறநிலை எதார்த்தத்திற்குப் பொருத்தமாகவும் அதாவது உண்மையாகவும் இருக்கலாம், புறநிலைக்குப் பொருத்தமில்லாமல் அதாவது பொய்யாகவும் இருக்கலாம். ஆகவே நமது சிந்தனையானது உண்மை யைத் தான் சிந்திக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமானால் அதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் உண்மையா அல்லது பொய்யா என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். ஆகவேதான் நடைமுறையே உண்மையை அறிவதற்கான வழியாகும் என்று இயக்கவியல் பொருள் முதல்வாதம் சொல்கிறது.

நாம் கண்ணால் பார்க்கிறோம் ஐம்புலன் களின் உணர்ச்சிகளின் வசமாகிறோம் என்ற ஒரே காரணத்தால் தான் நமக்கு கருத்துக்களும் சிந்தனைகளும் மன உணர்ச்சிகளும் பிறக்கின்றன.

இந்தப் பிரதானமான விஷயத்தை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

நமது புலன் உணர்ச்சிகளும் அவற்றின் மூலம் பெறும் புலன் அறிவும் நமக்கு பிரதிபலிக்கிறதைத்தான் பொருள் அல்லது வாழ்நிலை என்கிறோம். அதாவது பொதுப்படையாக சொல்வதென்றால், நம்மைச் சூழ்ந்திருக்கும் எல்லாவற்றையும் நம்மைச்சூழ்ந்துள்ள புற உலகத்தை எல்லாம் நாம் பொருள் என்று குறிக்கின்றோம். உதாரணமாக என் கையில் இருக்கிற காகிதம் வெள்ளை நிறமுடையது அது வெள்ளை நிறமாக இருக்கிறது என்று

நான் அறிந்திருப்பது ஒரு கருத்து, அந்தக் கருத்தை எனக்குத் தந்தது என்னுடைய புலன்களே அந்தக் காகிதம் தான் பொருள்.

எனவே வாழ்நிலைக்கும் சிந்தனைக்கு இடையே நிலவும் உறவுகளைப் பற்றியோ,

ஆன்மாவுக்கும் பொருளுக்கும் இடையே உள்ள உறவுகளைப் பற்றியோ மெய்ஞானிகள்அல்லது தத்துவவாதிகள் பேசும் போது, ஒரே ஒரு கேள்விதான் அவற்றில் எல்லாம்சம்பந்தப்பட்டிருக்கிறது.அது என்ன பொருளா அல்லது ஆன்மாவா வாழ்நிலையா அல்லது சிந்தனையா எது பிரதானத்திலும் பிரதானமானது, எது மேலோங்கி நிற்பது, எது முதலில் வந்தது என்கிற கேள்விதான் அது. அதுதான் மெய்ஞானத்தின் அல்லது தத்துவத்தின் மூலப் பிரச்சனை என்று சொல்கிறார்கள்.

5. தத்துவ ஞானத்தின் மூலப் பிரச்சனை

இறந்த பிறகு நாம் என்ன ஆகிறோம் இந்தப் பிரபஞ்சம் எங்கிருந்து வந்தது பூமி எப்படிஉண்டாயிற்று என்றெல்லாம் நாம் எல்லோருமே எண்ணி வியந்ந்ததுண்டு. ஏதோ ஒன்றுஎப்பொழுதுமே இருந்து வந்திருக்கிறது என்று ஒப்புக்கொள்ள நமக்கு என்னவோ கஷ்டமாகஇருக்கிறது. ஏதோ ஒரு அனாதி காலத்தில் சர்வமும் சூனியமாய் இருந்தது என்று சிந்திக்கும் ஒருபோக்கு நம்மிடையே இருந்து வருகிறது. எங்கும் ஒரே இருள் இருள் இருள் பரிசுத்த ஆவிஅதனை வியாபித்து மேலோங்கி நின்றது. பிறகுதான் உலகம் அதாவது பொருள் வந்தது என்றுமதங்கள் சொல்வதை சுலபமாக நம்பி விடுவதற்கு காரணம் அதுதான். அதே மாதிரி நமது சிந்தனைகள் எங்கிருந்து உதிக்கின்றன என்றபடி நாம் எல்லோரும் எண்ணி வியக்கிறோம் அதிலிருந்து ஒரு கேள்வி முளைக்கிறது. ஆன்மாவுக்கும் பொருளுக் கும் இடையே உள்ளஉறவுகள், மூளைக்கும் சிந்தனைக்கும் இடையே உள்ள உறவுகள் என்னென்ன என்று ஒருகேள்வி பிறக்கிறது, அது மட்டுமல்ல அதே கேள்வியை வேறு விதமாகவும் கேட்கலாம்உதாரணமாக சித்தத்துக்கும் சக்திக்கும் இடையே உள்ள உறவுகள் என்ன என்ற படியும்கேட்கலாம் இங்கே சித்தம் என்பது சிந்தனையை, ஆன்மாவை குறிக்கிறது எது குறிக்கிறதோ,

எது சாதனைக்குரியதோ அதை அதாவது பொருளை சக்தி என்று குறிப்பிடுகிறோம் மேலும்சமுதாய உணர்வுக்கும் "சமுதாய வாழ்நிலைக்கும்"உள்ள உறவுகள் என்ன என்றகேள்வியையும் நாம் அடிக்கடி கேட்டு வருகிறோம் .

எனவே தத்துவ ஞானத்தின் மூலப் பிரச்சனை பல வகைகளில் கேட்கப்பட்டு பல்வேறுஅம்சங்களிலே தோற்றமளிப்பதை நாம் பார்க்கிறோம். பொருளுக்கும் ஆன்மாவுக்கும் இடையேஉள்ள உறவுகளைப் பற்றி எந்த வடிவத்தில் எந்த ரீதியில் கேள்வி போடுகிறார்கள் என்பதைகண்டு கொள்வது எவ்வளவு முக்கியம் என்பது இப்போது தெரிகிறது. ஏனென்றால் இந்த மூலப் பிரச்சனைக்கு இரண்டே இரண்டு விடைகள் அது என்ன பொருளா அல்லது ஆன்மாவா வாழ்நிலையா அல்லது சிந்தனையா எது பிரதானத்திலும் பிரதானமானது, எது மேலோங்கி நிற்பது, எது முதலில் வந்தது என்கிற கேள்விதான் அது. அதுதான் மெய்ஞானத்தின் அல்லது தத்துவத்தின் மூலப் பிரச்சனை என்று சொல்கிறார்கள்.

5. தத்துவ ஞானத்தின் மூலப் பிரச்சனை

இறந்த பிறகு நாம் என்ன ஆகிறோம் இந்தப் பிரபஞ்சம் எங்கிருந்து வந்தது பூமி எப்படிஉண்டாயிற்று என்றெல்லாம் நாம் எல்லோருமே எண்ணி வியந்ந்ததுண்டு. ஏதோ ஒன்றுஎப்பொழுதுமே இருந்து வந்திருக்கிறது என்று ஒப்புக்கொள்ள நமக்கு என்னவோ கஷ்டமாகஇருக்கிறது. ஏதோ ஒரு அனாதி காலத்தில் சர்வமும் சூனியமாய் இருந்தது என்று சிந்திக்கும் ஒருபோக்கு நம்மிடையே இருந்து வருகிறது. எங்கும் ஒரே இருள் இருள் இருள் பரிசுத்த ஆவிஅதனை வியாபித்து மேலோங்கி நின்றது. பிறகுதான் உலகம் அதாவது பொருள் வந்தது என்றுமதங்கள் சொல்வதை சுலபமாக நம்பி விடுவதற்கு காரணம் அதுதான். அதே மாதிரி நமது சிந்தனைகள் எங்கிருந்து உதிக்கின்றன என்றபடி நாம் எல்லோரும் எண்ணி வியக்கிறோம் அதிலிருந்து ஒரு கேள்வி முளைக்கிறது. ஆன்மாவுக்கும் பொருளுக் கும் இடையே உள்ளஉறவுகள், மூளைக்கும் சிந்தனைக்கும் இடையே உள்ள உறவுகள் என்னென்ன என்று ஒருகேள்வி பிறக்கிறது, அது மட்டுமல்ல அதே கேள்வியை வேறு விதமாகவும் கேட்கலாம்உதாரணமாக சித்தத்துக்கும் சக்திக்கும் இடையே உள்ள உறவுகள் என்ன என்ற படியும்கேட்கலாம் இங்கே சித்தம் என்பது சிந்தனையை, ஆன்மாவை குறிக்கிறது எது குறிக்கிறதோ,

எது சாதனைக்குரியதோ அதை அதாவது பொருளை சக்தி என்று குறிப்பிடுகிறோம் மேலும்சமுதாய உணர்வுக்கும் "சமுதாய வாழ்நிலைக்கும்"உள்ள உறவுகள் என்ன என்றகேள்வியையும் நாம் அடிக்கடி கேட்டு வருகிறோம் .

எனவே தத்துவ ஞானத்தின் மூலப் பிரச்சனை பல வகைகளில் கேட்கப்பட்டு பல்வேறுஅம்சங்களிலே தோற்றமளிப்பதை நாம் பார்க்கிறோம். பொருளுக்கும் ஆன்மாவுக்கும் இடையேஉள்ள உறவுகளைப் பற்றி எந்த வடிவத்தில் எந்த ரீதியில் கேள்வி போடுகிறார்கள் என்பதைகண்டு கொள்வது எவ்வளவு முக்கியம் என்பது இப்போது தெரிகிறது. ஏனென்றால் இந்த மூலப் பிரச்சனைக்கு இரண்டே இரண்டு விடைகள் தான் கொடுக்க முடியும் ஒன்று விஞ்ஞான ரீதியான விடை மற்றொன்று விஞ்ஞானத் துக்கு புறம்பான விடை. மக்களிடத்தில் உள்ள அறியாமையின் காரணமாகவே மக்கள் இந்த உலகத்தைப் பற்றியும் இந்த சமூகத்தைப் பற்றியும் புரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. அதன் காரணமாகவே இந்த உலகம் எப்படி தோன்றியது போன்ற விஷயங்களைப் பற்றி மதம் என்ன சொல்கிறதோ அதனையே நம்புகின்றார்கள். மனிதர்களிடத்தில் சிந்தனை எப்படி உருவாகிறது என்பது பற்றிய புரிதல்களும் மக்களிடத்தில் இல்லை. இந்த சூழலில் தான் தத்துவவாதிகள் முன் ஆன்மாவுக்கும் பொருளுக்கும் இடையே உள்ள உறவுகள் என்ன, மூளைக்கும் சிந்தனைக்கும் இடையே உள்ள உறவுகள் என்ன என்ன என்று ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இந்தப் பிரச்சனைதான் தத்துவவாதிகளில் முன்னால் உள்ள முக்கியமான பிரச்சனையாகும்.

அதாவது பொருள் முதன்மையானதா? அல்லது கருத்து முதன்மையானதா? வாழ்நிலை முதன்மையானதா? ஆன்மா முதன்மையானதா? என்ற கேள்விக்கு தத்துவவாதிகள் விடை தேடமுயன்றார்கள்

6. ஆன்மீக வாதமா பொருள் முதல் வாதமா?

இப்படித்தான் இந்த முக்கியமான பிரச்சனையில் தத்துவவாதிகள் இரண்டில் ஒன்றைவிடையாக கொள்ள வேண்டிய நிலைமைக்கு வந்தார்கள்.

ஆதிகால மனிதர்கள் அஞ்ஞானத்தில் ஆழ்ந்திருந்தனர் அவர்களுக்கு தங்களைப் பற்றியும்ஒன்றும் சரிவர தெரியாது உலகத்தைப் பற்றியும் தெரியாது. ஆகவே தங்களுக்கு ஆச்சரியமாக தோன்றிய வற்றையெல்லாம் மனிதனுக்கும் இயற்கைக் கும் அப்பாற்பட்ட சக்திகளால்உண்டாக்கப் பட்டவை என்று அவர்கள் சொன்னார்கள், நம்பினார்கள். அவர்கள் கனவு காணும்போது அந்தக் கனவுகளில் தாங்களும் தங்களுடைய நண்பர்களும் உயிர்பெற்று வாழ்வதை கண்டார்கள். இந்தக் கனவுகள் அவர்களுடைய கற்பனையை தூண்டி விட்டன. அந்தக்கற்பனையை கொண்டு ஒவ்வொருவருக்கும் இரட்டை வாழ்க்கை உண்டு என்று முடிவு கட்டினார்கள். ஒவ்வொருவனுக்கும் ஒரு வாழ்க்கை அல்ல இரட்டை வாழ்க்கை உண்டு என்றகருத்து அவர்களைக் கலங்கச் செய்தது. எனவே தாங்கள் சிந்திக்கும் சிந்தனைகளும் அனுபவிக்கும் புலன் உணர்ச்சிகளும்தங்களுடைய உடம்பின் நடவடிக்கை அல்ல,

அவையெல்லாம் ஒரு சுயம்புவான ஆன்மா வால் நடைபெறுகின்றன, அந்த ஆன்மா உடம்புக்குள்ளே குடி கொண்டிருக்கிறது, மனிதன் சாகும்போது அந்த ஆன்மா உடலை விட்டு பிரிந்து போய்விடுகிறது என்றெல்லாம் அவர்கள் கற்பனை செய்து கொண்டார்கள்.(எங்கெல்ஸ் எழுதிய லுத்விக்பேயர்பாக் என்ற நூலையைப் பார்க்க) அதிலிருந்து ஆன்மா அழிவற்றது என்ற கருத்து பிறந்தது பொருளுக்கு அதாவது உடம்புக்கு வெளியே அப்பால் நின்று ஆன்மா வாழ முடியும் என்ற கருத்து பிறந்தது. பிரச்சனையை இந்த மாதிரி விளக்கி விவரிக்க மனிதனுக்குப் பற்பல நூற்றாண்டுகள் பிடித்தன.

உண்மையாகப் பார்த்தால் கிரேக்க தத்துவஞானம் வந்தபிறகுதான், அதாவது 2500 ஆண்டுகளுக்கு முன் பிளாட்டோ வந்த பிறகுதான், பொருளுக்கு எதிராக ஆன்மாவைத்திட்டமாக நிறுத்தினார்கள்.

இறந்த பிறகும் "ஆன்மா"என்ற வடிவத்தில் மனிதன் தொடர்ந்து வாழ்கிறான் என்று அவர்கள் நீண்டகாலமாகக் கற்பனை செய்துகொண்டு இருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை.(இப்போதும் அவ்வாறு கற்பனை செய்துகொண்டும் அதனை நம்பிக்கொண்டு இருப்பவர்களும் இருக்கிறார்கள்) ஆனால் இந்த "ஆன்மாவை" எப்படிக் கற்பனையில் சித்தரித்துக் கொண்டார்கள் தெரியுமா? ஆன்மா என்பது மென்மையான ஒருவிதமான பொருள் என்றும் கண்ணாடி போல் ஒளி புகும் தன்மை பெற்ற பொருள் என்றும்தான் அவர்கள் கற்பித்துக் கொண்டார்கள். சுத்த சுயம் பிரகாசமான சிந்தனை என்று கற்பித்துக் கொள்ளவில்லை.

ஆக அவர்கள் கடவுளை நம்பினார்கள். மனிதனைவிட பலம் வாய்ந்த (தெய்வ, பைசாச)கணங்களையும் நம்பினார்கள். அந்தக் கடவுளையும், கணங்களையும் மனித வடிவத்திலோ,மிருக வடிவத்திலோதான் அவர்கள் கற்பனையில் சித்தரித்துக் கொண்டார்கள். அதாவது, மனிதர்களின் புலனறிவுக்கு எட்டுகின்ற பொருட்களின் உருவத்தைத்தான் கடவுளும் பெற்றிருப் பதாக அவர்கள் கற்பனை செய்து கற்பித்தார்கள். நீண்டகாலத்திற்குப் பிறகுதான் ஆன்மாக்கள் என்றும் பரமாத்மாக்கள் மற்றும் தெய்வங்கள் என்றும் (இதன் பிறகு ஐரோப்பாவில் பல தெய்வங்களுக்குப் பதிலாக ஒன்றேதெய்வம் என்றும்) கற்பனை

செய்துகொள்ளத் தொடங்கினர் (இவ்வாறு மனிதர்கள் மாறியதற்கு சமூக பொருளாதாரக்காரணங்கள் உண்டு) பொருளோடு கொஞ்சம்கூட தொடர்பில்லாத பரிசுத்தமானஆன்மாக்களாக அவற்றை கற்பனை செய்துகொள்ளத் தொடங்கினார்கள்.

அதன்பிறகு அவர்களுக்கு இன்னொரு யோசனையும் பிறந்தது. ஆன்மாக்கள் என்பவை உண்டு,

அவற்றிற்கென்று ஒரு குறிப்பிட்ட வாழ்வு உண்டு, உடம்பில் வாழ்வைச் சார்ந்திராமல் அந்த ஆன்மாவின் வாழ்வு தனித்திருந்து சுயேச்சையாக இயங்குகிறது. அவற்றின் வாழ்வுக்கு உடம்பு என்று ஒன்றிருக்க வேண்டிய அவசியமில்லை என்ற கருத்து பிறந்தது.

மதம் சம்பந்தப்பட்ட வரையில் இந்தப் பிரச்சனையை இன்னும் வெகு கணக்காகச் சொல்லி வைத்தார்கள். எப்படி? "பிரபஞ்சத்தைக் கடவுள் சிருஷ்டித்தாரா? அதாவது உருவாக்கினாரா? அல்லது அது என்றென்றைக்கும் இருந்து வந்துள்ளதா? அதாவது சூரியன், நட்சத்திரங்கள் போன்ற கோளங்களை உள்ளடக்கிய இந்தப் பிரபஞ்சம் என்றென்றைக்கும் இருந்து வந்துள்ளதா? இந்தக் கேள்விக்குத் தந்த விடைகளைக் கொண்டு தத்துவஞானிகள் இரண்டு மாபெரும் முகாம்களாகப் பிளவுண்டு போயினர்" (எங்கெல்ஸ் எழுதிய லுத்விக்பேயர்பாக் என்ற நூலைப் பார்க்க) விஞ்ஞானத்துக்குப் புறம்பான விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கடவுள்தான் இந்த

பிரபஞ்சத்தை உருவாக்கினார் என்று யார் யார் எல்லாம் ஒப்புக்கொண்டார்களோ - அதாவது ஆன்மாதான் பொருளை உருவாக்கியது என்று அடித்துப் பேசினார்களோ அவர்கள் எல்லோரும் ஆன்மீகவாத முகாமைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

உலகைப்பற்றி விஞ்ஞான ரீதியான விளக்கத்தைதர மற்றவர்கள் அனைவரும் முயற்சி செய்தார்கள். இயற்கைதான், பொருள்தான் மூலம் அம்சம் என்று கருதினார்கள். இப்படி நினைத்தவர்கள் எல்லோரும் பொருள்முதல்வாதம் என்ற தத்துவ மெய்ஞானத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

ஆன்மீகவாதம், பொருள்முதல்வாதம் என்ற சொற்களை ஆரம்பத்தில் இப்படித்தான் அர்த்தப்படுத்தினார்கள். அதற்குமேல் போகவில்லை.ஆகவே நாம் தெரிந்துகொள்வது என்ன?

தத்துவமெய்ஞானத்தின் மூலப் பிரச்சனைக்குக் கிடைத்த விடைகளே ஆன்மீகவாதமும், பொருள்முதல்வாதமும் ஆகும். இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை. ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. பிரபஞ்சத்தைப் பற்றி ஆன்மீகவாதம் ஒரு விஞ்ஞானத்துக்குப் புறம்பான பார்வையைத் தருகின்றது. பொருள்முதல்வாதம் ஒரு விஞ்ஞானப் பூர்வமான பார்வையைத்தருகிறது.

இந்தக் கூற்றுக்கு ஆதாரங்கள் மேலே போகப்போகக் அதாவது இப்பொருள் பற்றி நாம்சிந்திக்க சிந்திக்கவும் நடைமுறையின் மூலமாகவும் நமக்கு கிடைக்கும். ஆனாலும் இப்பொழுதே நாம் ஒன்றைச் சொல்லிவிட முடியும். அதாவது உங்கள் அனுபவத்தையே பாருங்கள், சிந்தனை அறவே இல்லாத பொருட்களை நீங்கள் பார்க்கிறீர்கள். உதாரணமாகக் கற்கள், உலோகங்கள், பூமி முதலியன. ஆனால் பொருளை உடம்பாகக் கொள்ளாமல் சிந்தனை இயங்குவதை நீங்கள்பார்ப்பதில்லை. என்றைக்கும் பார்க்கவும் முடியாது. உலகில் சிந்தித்து கருத்துக்களைஉருவாக்கும் ஆற்றல் படைத்த மனிதன் உருவான பின்புதான் உலகில் சிந்தனை மற்றும் கருத்துக்கள் உருவானது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

கடைசியாக, ஐயம் திரிபுக்கு அறவே இடமில்லாத மாதிரி ஒரு முடிவைக் கூறிடுவோம்."மனிதன் எப்படிச் சிந்திக்கிறான்" என்றொரு கேள்வி. இதற்கு இரண்டு விடைகள்தான் இருக்க முடியும்.

அதாவது; ஆன்மா இருப்பதால்தான் மனிதன் சிந்திக்கிறான் என்பது ஒரு விடை. மூளை என்ற உறுப்பு இருப்பதால்தான் மனிதன் சிந்திக்கிறான் என்பது இரண்டாவது விடை. இந்த விடைகள் இரண்டும் ஒன்றுக்கொன்று முழுக்க முழுக்க வேறானவை, முழுக்க முழுக்கஎதிரானவை ஆகும்.

அந்தக் கேள்விக்கு நாம் என்ன விடை கொடுக்கிறோமோ, அதன்படியேதான் அந்தக் கேள்வியிலிருந்து பிறக்கும் பிரச்சனைகளுக்கு வெவ்வேறான பரிகாரங்கள் அல்லது தீர்வுகளை நாம் கொடுக்க முடியும்.

நாம் ஆன்மீகவாதியா? அல்லது பொருள்முதல்வாதியா? என்பது நாம் தரும் விடையைப் பொறுத்திருக்கிறது.

தொகுத்துப் பார்த்தால் உலகிலுள்ளவிசயங்களில் இரண்டுவிதமான விசயங்களை நாம் காணலாம். ஒன்று இயற்கையிலுள்ள பொருள்கள் மற்றொன்று அந்தப் பொருள்களைப் பற்றி நாம் சிந்தித்து உருவாக்கும் கருத்துகள் என்ற இரண்டு வகையான விசயங்கள் உலகில் உள்ளது.

இந்த இரண்டுவகையான விசயங்களில் அதாவது பொருள்கள் மற்றும் கருத்துக்கள் ஆகியஇரண்டில் எது முதன்மையானது அல்லது எது மூலம் என்ற கேள்விக்கு விடை காணுவதில் இரண்டு எதிர் எதிரான விடைகளை நாம் காணலாம். ஒன்று கருத்துதான் மூலம் என்பது மற்றொன்று பொருள்தான் மூலம் என்பதாகும். இந்த விடைகளில் கருத்துதான் மூலம் என்பவர்கள் ஆன்மீகவாத அல்லது கருத்துமுதல்வாத மெய்ஞானிகளாகவும், பொருள்தான் மூலம் என்பவர்கள் பொருள்முதல்வாத மெய்ஞானிகளாகவும் பிளவுபட்டு இருக்கின்றனர்.

இத்தகைய தத்துவ மெய்ஞானிகளில் யார் உண்மையைப் பேசுகிறார்கள் மேலும் யாரால் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான கருத்துக்களை அல்லது கொள்கைகளை வகுத்துக்கொடுக்கிறார்கள் என்பது நம்முன் உள்ள கேள்வியாகும்.

இதில் பொருள்முதல்வாதிகள் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் தத்துவத்தை படைத்தார்கள். ஆனால் ஆன்மீகவாத மெய்ஞானிகள் அல்லது கருத்துமுதல்வாத மெய்ஞானிகள் விஞ்ஞான உண்மைகளைப் பற்றி கவலைப்படாமல், அதனை முழுவதுமாகப்

புறக்கணித்துவிட்டு அவர்களின் தத்துவத் தைப் படைத்தார்கள்.

ஆகவே விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட பொருள்முதல்வாதத் தத்துவ மெய்ஞானிகள் உண்மைகளையே பேசுகின்றனர் மேலும் பிரச்சனைகளை விஞ்ஞான அடிப்படையிலேயே தீர்வு கண்டு மக்களை வழிநடத்துகின்றனர். இத்தகைய தத்துவ மெய்ஞானிகளான கம்யூனிஸ்டு களை பின்பற்றும் மக்கள் அறியாமை யிலிருந்து விழிப்படைந்து தங்களுக்கான உயர்ந்த வாழ்க்கையை தங்களது சொந்த முயற்சியின் மூலம் அமைத்துக் கொள்கிறார்கள்.

இதற்கு மாறாக ஆன்மீக மற்றும் கருத்துமுதல்வாத தத்துவ மெய்ஞானிகள் பொய்களையே கட்டவிழ்த்துவிடுகிறார்கள். விஞ்ஞான உணைமைகளுக்கு மாறாக கற்பனையாகவே பேசுகிறார்கள். மக்கள் சந்திக்கும் எந்தப் பிரச்சனைகளுக்குமானதீர்வை இந்த சமூகத்திலிருந்து காணாமல் இந்த சமூகத்திற்கு அப்பால் கடவுள் மற்றும் விதி என்று சொல்லி மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தவறுகிறார் கள். அதுமட்டுமல்லாமல் மக்களை திசைதிருப்பி தொடர்ந்து மக்களை அறியாமையில் ஆழ்த்துகிறார்கள். இந்த ஆன்மீகவாத மெய்ஞானிகளை பின்பற்றும் மக்கள் தொடர்ந்து அறியாமையிலும், வறுமையிலும் அடிமைகளாகவே வாழ்ந்துவீணாக மடிகிறார்கள்.

இந்த உலகம், மற்றும் இந்த பிரபஞ்சத்தை யாரும் உருவாக்கினார்களா? அல்லது இந்த

பிரபஞ்சமானது என்னென்றைக்கும் இருந்துவந்ததா? அதாவது இந்த பிரபஞ்சத்தை யாரும் உருவாக்கவில்லை என்ற இரண்டு கருத்துக்களில் ஒன்றான கடவுள்தான் இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கினார் என்ற கருத்தை ஆதரித்தவர்கள் ஆன்மீகவாதிகள், அல்லது கருத்துமுதல்வாதத் தத்துவ மெய்ஞானிகள் ஆவார்கள். இதற்கு மாறாக இயற்கை யானது எப்போதும்இருந்துவருகிறது அதனை யாரும் உருவாக்கவில்லை என்ற கருத்துக் கொண்டவர்கள் பொருள்முதல் வாத தத்துவ மெய்ஞானிகள் ஆவார்கள்.

இந்தியாவில் ஆன்மீக தத்துவ மெய்ஞானி கள்தான் இருந்தார்கள் என்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். அது உண்மையல்ல, இந்த ஆன்மீகவாதிகளுக்கு நேர்எதிரான பொருள்முதல்வாதத் தத்துவஞானிகளும் இந்தியாவில் இருந்துள்ளனர். அவர்கள் இந்த ஆன்மீக வாதிகளுக்கு எதிராக தத்துவப் போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.

இந்தியாவில் ஆன்மீகவாத தத்துவ ஞானிகள் அனைவரும் இந்தியாவிலுள்ள உழைக்கும் மக்களைச் சுரண்டிக் கொழுத்த செல்வம் படைத்தவர்களுக்கு ஆதரவாகவே, உழைக்கும் மக்களுக்கு எதிராகவே ஆன்மீக கருத்துக்களை உருவாக்கி மக்களை ஏமாற்றி மக்களை அறியாமையில் மூழ்கடித்து மக்களை எப்போதும் அடிமைகளாகவே வாழவகை செய்தார்கள்.

இப்போதும் இந்த ஆன்மீகவாதிகளை உயர்த்திப்பிடித்து ஆளும் பா.ஜ.க. கும்பல் இந்தியாவை ஒரு ஆன்மீக நாடாக அல்லது தேசமாக மாற்ற முயற்சிப்பதன் மூலம் இந்தியாவிலுள்ள உழைக்கும் மக்களை ஏமாற்றி உழைக்கும் மக்கள் என்னென்றும் அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்பதற்கான திட்டம் வகுத்துச் செயல்படுவதை நாம் காணலாம்.இதற்கு எதிராக இந்தியப் பொருள்முதல் வாதத் தத்துவ ஞானிகள் இந்த ஆன்மீகவாதிகளின் மக்களுக்கு எதிரான கருத்துக்களை மக்களிடம் அம்பலப்படுத்தி போராடினார்கள். இத்தகைய இந்திய பொருள்முதல்வாத தத்துவ ஞானிகளை இந்திய ஆளும் வர்க்கங்களும் பா.ஜ.க. போன்ற பிற்போக்கு பாசிச கட்சிகளும் இந்திய உழைக்கும் மக்களிடம் மூடிமறைக்கிறார்கள்.

ஆகவே இந்தியப் பொருள்முதல்வாதத் தத்துவ ஞானிகள் மட்டுமல்லாது உலகம் முழுவதிலுமுள்ள பொருள்முதல்வாதத் தத்துவ ஞானிகளின் வரலாற்றை நாம் பார்வையிட்டால் அவர்கள் ஆன்மீகவாத, கருத்துமுதல்வாத தத்துவாத மெய்ஞானத் தை எதிர்த்தும் மக்களை சித்தாந்தத் துறையில் ஏமாற்றியவர்களை எதிர்த்தும் எப்படியெல்லாம் போராடினார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

இந்த அடிப்படையில் சங்கிகளின் ஆன்மீகப் பிரச்சாரத்தின் நோக்கம் மக்கள் நலன் இல்லை என்பதையும், இந்தியாவில் சாதித் தீண்டாமை கொடுமை மற்றும் உழைக்கும் மக்களை கார்ப்பரேட் முதலாளிகள் சுரண்டுவதை ஆதரிப்பதற்கான கொள்கைதான் இவர்களது நோக்கம் என்பதை இயக்கவியல் பொருள்முதல் வாதிகளான கம்யூனிஸ்டுகள் உழைக்கும் மக்களிடம் அம்பலப்படுத்தி விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட இயக்கவியல் பொருள்முதல்வாதத் தத்துவ மெய்ஞானத்தை மக்களிடம் பரப்பும் கடமையை செய்ய வேண்டும். - தேன்மொழி

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்