106 ஆண்டுகளுக்கு முன் நடந்தேறிய ரசிய புரட்சியை நினைவில் ஏற்றுவோம். சுரண்டலை மட்டுமே வாழ்வியலாக கொண்டுள்ள முதலாளித்துவ சுரண்டல்சமூகத்திற்க்கு மாற்றாக உழைக்கும் ஏழை எளிய மக்களும் மகிழ்ச்சியுடன் வாழமுடியும் என்று நிலை நிறுத்தியதே ரசிய புரட்சியின் உண்மையான உள்ளடக்கம்.இன்று நமது நாட்டில் உள்ள எல்லா ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் ஒரே வழி அன்று ரசிய புரட்சி நமக்கு வழி காட்டியுள்ளது என்பதனை நினைவில் கொண்டு செயலாற்றுவோம். ஒன்றுபட்ட பாட்டாளி வர்க்க கட்சியின் ஊடாக .
1848 ஆம் ஆண்டு மார்க்ஸ் எங்கெல்ஸ் அவர்களால் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப்பட்டது. உலகத் தொழிலாளர் களே ஒன்றுபடுங்கள் என்று போர்க் குணமிக்க முழக்கம் பிரகடனப் படுத்தப்பட்டது. விஞ்ஞான ரீதியான கம்யூனிசத்துக்கு முறையான ஆழமான விளக்கத்தை அளித்து அதன் மூலம் சர்வதேச பாட்டாளி வர்க்கம் ஒற்றுமைக்கான இந்த அடிப்படைகளை மார்க்ஸ் எங்கெல்ஸ் நிறுவினர். இன்றளவும் அது சர்வதேச தொழிலாளர் ஒற்றுமைகான பொதுவாக அனைவராலும் ஏற்கப்பட்டுள்ளது.
வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் பாட்டாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தை தூக்கி எறிந்து அதிகாரத்தைக் கைப்பற்றி சோசலிச உற்பத்தி முறையை கட்டி அமைக்கும் பணிக்கு வழி நடத்த முதல் அகிலமும் இரண்டாம் அகிலம் உருவாக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டு தொழிலாளர்களின் உழைப்பின் மூலம் பாரிஸ் கம்யூன் தோற்றுவிக்கப்பட்டது. சில மாதங்கள் வரை நீடித்த பாரிஸ் கம்யூன் பல நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒன்றுபட்ட சக்தியால் அது வீழ்த்தப்பட்டது ஆனாலும் அது வரலாற்றில் முதலாளி வர்க்கத்தை வீழ்த்துவதற்கான ஒத்தி கையாக இருந்துள்ளது. சோசலிச புரட்சி முதலாளி நாடுகளில் முதலில் நடைபெறும் நிகழ்வாக அப்போது பார்க்கப்பட்டது.
முதலாளித்துவம் ஏகபோகமுதலாளித்துவமாக ஏகாதிபத்தியமாக மாறி உலக சந்தையை மறுபங்கீடு செய்து கொள்ளையடிப்பதற்காக ஏகாதிபத்திய போரை முதல் உலகப் போரை நடத்தின. அச்சமயம் சர்வதேச கம்யூனிச இயக்கம் ஏகாதிபத்திய போரை உள்நாட்டு யுத்தமாக மாற்றி முதலாளி வர்க்கத்தை தூக்கி எறிய வேண்டும் என்று வழிகாட்டலை அளித்தது. இதற்கு ஏற்ப லெனின் தலைமையில் ரஷ்யாவின் போல்ஷ்விக் கட்சி முதலாளி வர்க்கத்தை தூக்கி எறிந்து சோசலிசப்புரட்சியை நடத்தி வெற்றி அடைந்தது. இது ஒரு உலக வரலாற்றில் மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது .
உலகில் ஏகாதிபத்திய முதலாளித்துவ பிற்போக்கு சக்திகளை எதிர்த்துப் போராடும் சக்திகளுக்கு உத்வேகம் அளித்தது. காலனிய எதிர்ப்பு தேசிய விடுதலைப் போரிலும் சோசலிசக் கட்சிகளும் இணைந்து உலகப் புரட்சி என்ற முழுமையான அம்சங்களை என உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று கூடுங்கள் என்ற புதிய முழக்கம் முன்னுக்கு வந்தது. இரண்டாம் அகிலம் சந்தர்ப்பவாத நோயால் பீடிக்கப்பட்டு முதலாளிகளுக்கு ஆதரவாக மாறியதால் உலகத்துக்கு வழிகாட்ட தகுதியற்றதாக மாறியது. ரஷ்யப் புரட்சிக்குப் பின் லெனின் தலைமையில் மூன்றாம் அகிலம் உருவாக்கப்பட்டது.
மூன்றாம் அகிலமானது சோசலிச நாடுகள் முதலாளிய நாடுகள் மற்றும் குடியேற்ற நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிலாளர் அமைப்புகளுக்கு வழிகாட்டுதல் உள்ளடக்கியதாக இருந்தது.
வரலாற்றில் மூன்றாவது அகிலத்தின் இடத்தை லெனின் பின்வருமாறு வரையறுத்தார், "முதலாவது அகிலம் சோஷலிசத்திற்கான பாட்டாளி வர்க்க சர்வதேச போராட்டத்திற்கு அடிக்கல் நாட்டியது, இரண்டாம் அகிலம் அனேக நாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை விரிவான விஸ்தரிப்புக்கு முன்னேற் பாடுகள் நடத்தியது. மூன்றாம் அகிலம் இரண்டாம் அகிலம் செய்த வேலைகளில் பயன்களை ஏற்றுக் கொண்டு அதன் சந்தர்ப்பவாத சமூக தேசிய முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ தவறுகளை துணிந்து எதிர்த்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை செயல்படுத்த தொடங்கியது ". என்றார்.
மூன்றாவது அகிலம் எல்லா நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைப்பதற்கு வழிகாட்டியது. அகிலத்தின் இரண்டாம் மாநாட்டில் லெனின் வரையறுத்த "ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி" பாதை குடியேற்ற நாடுகளுக்கான அரசியல் திசை வழியாக அமைந்தது. குடியேற்ற நாட்டில் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்துதல் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் இணைவதன் மூலம் குடியேற்ற நாடுகளும் உலக புரட்சிக்கு பங்காற்ற இயலும், குடியேற்ற நாடுகளில் நடைபெறும் போராட்டம் சோசலிச போராட்டமாக இருக்காமல் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை கொண்ட ஜனநாயக போராட்டமாக இருக்கும்.
நாம் நம்முடைய தவறுகளை பார்ப்பதிலும் நம்முடை இழப்புகளை கணிப்பதிலும் மட்டுமே நம்மை ஈடுபடுத்திக் கொண்டு அதே சமயத்தில் சாதனைகளை பார்க்கவும் அவற்றின் மூலமாக விளைந்த ஜனநாயகப் புரட்சியின் முன்னேற்றத்தை பாராட்டவும் நாம் தவறினால் நம்முடைய முந்தைய அனுபவங்களிலிருந்து தவறான படிப்பினைகளை பெற்றுக் கொண்டு எதிர்கால புரட்சி ஒரு கடுமையான மோசமான செயலை செய்து கொண்டிருப்போம்.
இந்திய கம்யூனிஸ்டு இயக்கம் இன்றுதான் சிக்குண்டு இருக்கும் நெருக்கடியிலிருந்து மீள வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. நூறு ஆண்டுகால கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் 52 ஆண்டுகால மார்க்சிய- லெனினிய வரலாறு உட்பட ஒரு அகில இந்திய கட்சியை கட்டுவதும் உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டத்திற்கு புரட்சிகரமான தலைமை அளிப்பதும் அரசியல் அதிகாரம் வென்றெடுப்பதற்கும் இன்றளவும் இயலாத நிலையில் உள்ளது .
இ.க.க தியாகமும் போராட்டமும் மறைக்கவோ மறுக்கவோ முடியாதது. அன்று இந்தியாவில் நடந்த பல போராட்டங்கள் சாதி, மதம், இனம் கடந்து போராட்டங்களை ஒன்றினைத்த பெருமை இடதுசாரிகளையே சாரும். இருந்தும் மூன்றாம் அகிலத்தின் வழிகாட்டுதல்களை இவர்கள் ஏற்று செயல்பட்டதாக வரலாற்று பக்கங்கள் இல்லை என்பதுதான் உண்மை.
தலைவர் மாவோவின் கீழ்க்கண்ட சொற்களையும் நாம் நினைவு கூறுவோம்," கஷ்டமான காலங்களில் நாம் நம்முடைய சாதனைகளை கண்டுகொள்ளாமல் இருக்க கூடாது ஒளிமயமான எதிர்காலத்தை பார்க்கவேண்டும் தைரியத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும்".
1946ல் ஆங்கிலேய ஏகாத்தியபத்தியதின் எதிர்பில் கடற்படை, விமானபடை மற்றும் காலாட்படை பிரிவுகள் மக்களுடன் இணைந்து போராடுகின்றனர் ஆங்கிலேயர்களோ விழிபிதுங்கி நிற்க்கின்றனர், இங்கோ காந்தியும், நேருவும், பாட்டேலும் ஆங்கிலேயர் களுக்கு சாதகமாக அறிக்கை விடுகின்றனர், போராட்டகாரர்களை கண்டிக்கின்றனர் பலிவாங்கிய ஆங்கில அரசை கண்டிக்க வில்லை.
நேருவின் அரசாங்கம் தெலுங்கானா போராட்டத்தை நசுக்க 60 ஆயிரம் துருப்புக்களைக் குவித்தது.கொடூரமான அடக்கு- முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. கடுமையான அடக்குமுறைகளைக் கையாள்வதால் மட்டுமே சாதிக்க முடியும் என எண்ணிக் கொண்டிருந்த பலருக்கு, முதன்முதலாக நிலமற்ற விவசாயி களுக்கு நிலத்தை வினியோகம் செய்திருந்த கம்யூனிஸ்ட்களின் மக்கள் செல்வாக்கை இந்திய இராணுவத்தின் அனைத்துத் துருப்புக்களாலும், எறிகணை வாகனங்களாலும் துடைத் தெறிய முடியவில்லை. நேருவின் துருப்புகளாலும், எறிகணை வாகனங் களாலும் சாதிக்க இயலாதவற்றை சி.பி.ஐ-யின் தலைமை நிறைவேற்றியது.
தெலுங்கானா போராட்டத்தை விலக்கிக்கொள்வது என ஜுன் - 1951 தொடக்கத்தில் சி.பி.ஐ.யின் மையக்குழு தீர்மானித்தது.
காங்கிரஸ் எதிர்ப்பைக் காட்டி தெலுங்கானா போராட்டம் கைவிடப்பட்டது. அந்த அறிக்கையை நிறைவுசெய்வதற்கு முன்பாக கோபாலன் கூறியதாவது:
“கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் மீண்டும் கூறியதுபோல தெலுங்கானா பிரச்சினை என்பது உண்மையில் நிலம் குறித்த பிரச்சினையாகும். அரசுஅதிகாரம் குறித்த பிரச்சினை அல்ல”.
சி.பி.ஐ. கட்சியானது 1951 மத்தியில் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை நேருவிடம் பேசுவதற்கு அனுப்பி வைத்தது. அக்குழுவின் நோக்கம் “கட்சியானது புரட்சிகர வழியை கைவிட்டு விட்டது என்றும், நேருவின் அயலுறவுக் கொள்கையில் உள்ள முற்போக்கான கூறுகளை ஆதரிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை மேற்கொள்வது என்றும் அமைதிவழி பாராளுமன்றத்தின் மூலம் மாற்றம், அமைதி வழிப் புரட்சி என்ற திருத்தல்வாத நிலையை எடுத்துள்ளது என்பதை அறிவிப்பதுதான்.
அத்ற்க்கு பின் புரட்சிகர கட்சியாக உதித்த நக்சல்பாரி இயக்கம், பல்லாயிரக் கணக்கில் தன் இயக்கத்தினரின் இன்னுயிரை புரட்சியின் வேள்வியில் நாட்டின் விடுதலைக்காக ஆம் உழைக்கும் பல்வேறு வகையில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக புரட்சி தீயில் அர்பணித்த நக்சல்பாரி இயக்கம். புரட்சியை முன்னெடுக்க அர்ப்பணிப்புடன் இயங்கிய இயக்கம் இன்று சிதைவும் சீர்குலைவும் காரணத்தால் மக்கள் மத்தியில் செயலற்று பேரியக்கமா இல்லாமல் போய்விட்டது ஏன்?
ஒவ்வொரு குழுவும் தாம்தான் கட்சி தாம்தான் புரட்சிகரமானவர், தாம்தான் புரட்சிக்கு வித்திட்டவர் என்று பறைசாற்றி கொள்வதில் பெருமிதம் கொள்கிறது.
அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி உற்பத்தி உறவுகளை மாற்ற வேண்டும், உற்பத்தி சக்திகளை விடிவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்தான் என்ன?
நக்சல்பாரி எழுச்சிக்கு பின் தமிழகத்தில் தோன்றி மூன்று பிரிவு இன்று முப்பதிற்க்கும் மேலான குழுக்கலானவை ஏன்?
எஸ்.ஒ.சி- டி.என்.ஒ.சி நடந்த மோதல்கள் நட்ப்பு முரணாக இன்றி பகை முரணாக அல்லவா கடந்த காலம் பதிவு செய்துள்ளது. இன்று மக்கள் அதிகாரம் மற்றும் ம.ஜ.இ.க இன்று அடைந்துள்ள பிளவுக்கு காரணம் தத்துவ பிரச்சினையா? மேலும் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பல குழுக்கள் தங்களை மா-லெ கட்சி என்று சொல்லிக் கொண்டு ஒற்றை இலக்க எண்ணிகை கொண்டோரே கட்சி என்றால்? நமது புரட்சி பற்றிய கோட்பாடு எவ்வளவு பலவீனமானதாக உள்ளது.
"தங்களது இயகத்தில் உள்ள குறைபாடுகளை பூசி மறைக்காமல் இருக்க வேண்டுவது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். ஆனால் அவைகளை விரைவில் மற்றும் அடிப்படையில் சரி செய்வதற்காக பகிரங்கமாக அவைகளை விமர்சனம செய்ய வேண்டும்”. (லெனின்- மூன்றாம் அகிலத்தின் இரண்டாம் காங்கிரசின் அடிப்படைப் பணிகள்).
மொத்தத்தில், இன்றைக்கு சர்வதேச அளவிலும் சரி இந்திய அளவிலும் சரி பிற்போக்கும் எதிர்ப்புரட்சியும் கோலோச்சுகின்றன, அவற்றை எதிர்த்த இடதுசாரி கட்சிகளின் அரசியல் முதலாளித்துவத்தின் எல்லைக்குள் செயல்படும் வகையில் பலவீனமாக உள்ளது என்றால் மிகையாகாது.
-------------
ரசிய புரட்சியை நாம் மீண்டும் பேசுவது அங்கே நடந்தேறிய சமூக மாற்றமானது அங்கிருந்த ஒடுக்குமுறை ஏற்றதாழ்வு இன்றுள்ள பல பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. ஆம் உழைக்கும் மக்கள் தங்களின் உண்மையான வாழ்க்கை வாழ்ந்தனர்.
குழந்தைகளிலிருந்து படிக்கும் வரை இலவச கல்வி படித்து முடித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு படிப்புக்கான வேலை உத்திரவாதம். முதியோருக்கு ஏற்ப்ப ஓய்வூதியத்துடன் கூடிய வாழ்க்கை. அடுப்பறையில் முடங்கி கிடந்த பெண்களுக்கு ஆணுக்கு நிகரான உழைப்பில் ஈடுபடுத்தியமை. எல்லோரும் உணவருந்தும் சமூக சமையல் கூடங்கள். குழந்தைகளை பராமறிக்கும் குழந்தை காப்பங்கள் மருத்துவ வசதியுடன்.
நாம் இன்றும் கனவு கண்டுக் கொண்டுள்ள பலவற்றை அன்றைய சோவியத் புரட்சி இம்மண்ணில் படைத்துக் காட்டிற்று.
நாமும் அதன் அடிதொற்றி இம்மண்ணில் அதற்கான சரியான வழியில் பயணித்து மக்களை புரட்சிக்கு அணி வகுக்க செய்ய வேண்டியது புரட்சிகர கட்சியின் கடமை என்பதனை உறக்க சொல்லும் அதே நேரத்தில் அணியாக வேண்டாமோ?