இலக்கு 73 இணைய இதழ்

இந்த இதழில் பேசப்பட்டுள்ளவை

 1). தலையங்கம்

2). இந்தியாவின் தேசிய இனச்சிக்கலும் ஆளும் வர்க்கங்களும். - சுனிதிகுமார் கோஷ் பாகம்- 4.

3). இந்திய கம்யூனிஸ்டுகளிடையேயான பணி

4). குடும்பம் தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்.-எங்கெல்ஸ்- பாகம்-1

5). இலக்கு இணைய இதழ் தொடங்கி நான்காம் ஆண்டை தொடுகிறோம். நாங்கள் கொணர்ந்த பல்வேறு படைப்புகளும் அதன் மூலமும் ஒரு பார்வைக்கு.

ரஷ்யாவில் 1883ம் ஆண்டில், முதல் மார்க்சிய குழு தோற்றுவிக்கப்பட்டது. 1895ல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 20 மார்க்சிய குழுக்கள் செயல்பட்டன. அரசியல் ரீதியாக வளர்ச்சியடைந்திருந்த தொழிலாளர்களுக்கு லெனின் இங்கு மார்க்சியத்தை போதித்தார். 1895ல் 20 மார்க்சிய குழுக்களையும் ஒன்றுபடுத்தி "தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான போராட்ட சங்கம்"என்பதனைத் தோற்றுவித்தார் லெனின். இந்தியாவில் 1920 தோன்றிய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றுபட்ட கட்சியாக இல்லை அதேபோல் தனக்கான சமூக பணியை ஆற்றவேயில்லை இதுவரை பிளவுண்டு கிடப்பதை விட கம்யூனிஸ்டுகளுக்கான பணியை இந்திய கம்யூனிஸ்டுகள் செய்யவில்லை என்பதுதான் வரலாற்றில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனை பற்றி சற்றி தேடலாம் நம் வரலாற்று பக்கங்களில்....

வர்க்கங்களும், வர்க்க முரண்பாடுகளும் சோசலிசப் புரட்சி நடைபெற்றவுடன் மறைந்து விடுவதில்லையென்று தோழர் மாவோ குறிப்பிட்டுள்ளார். முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கான மாற்றத்தின் வரலாற்றுக் கால கட்டம் ஒரு கணிசமான நீண்டகாலமாகும். இந்த முழுக் கால கட்டத்தில் வர்க்கங்களும், வர்க்க முரண்பாடுகளும் இருக்கும். ஆகவே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இருப்பது மட்டுமல்லாமல் பலப்படுத்தப்படவும் வேண்டும். சோசலிச அரசாங்கம் உள்நாட்டு, வெளிநாட்டு எதிரிகளுக்கெதிராகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தேவைப்படும் இக்காலகட்டத்தில் வர்க்கப் போராட்டங்கள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரச் சூழலில் இடம்பெறும்.

நாம் வாழும் இச்சமூகமானது ஏகாதிபத்திய நுகத்தடியும் இன்நாட்டின் பெரும்முதலாளிகளின் சுரண்டலும் முந்தைய சமூக அமுக்கு பேய்களாய் நிலஉடைமை கலாச்சார சாதி மத பிற்போக்கு தனங்களும் ஒன்றோடுஒன்றாய் பின்ணிபிணைந்துள்ளது. இதனை கட்டிக்காக்கும் அமைப்புமுறையை ஒழித்துக் கட்டாமல் தனித்தனியான தீர்வு காண நினைப்போர் எதிரிக்கு எதிரான போரில் நட்பு சக்திகளை காவு கொடுப்பதே!!!... அய்கியம் போராட்டம் எதிரிக்கு எதிரான போராட்டத்தில் நாம் ஒன்றிணைய வேண்டாமா????



இலக்கு 73 இணைய இதழ் PDF வடிவில் இந்த இணைப்பில் உள்ளது இந்த இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே


சமூக மாற்றத்திற்கான இயக்கம் என்பது வர்க்கப் போராட்டமே. மானுட வரலாற்றை இயக்கும் சக்தியாகவும் இதே உள்ளது. வர்க்கம் எப்பொழுது தோன்றியதோ அப்பொழுதே வர்க்க போராட்டமும் துவங்கி விட்டது. இன்று பொருளாதாரப் போராட்டத்திற்காக போராடிக் கொண்டிருப்பது தொழிற்சங்ககளின் பணியின் ஒரு பகுதி தான் அதனூடாக அரசியல் போராட்டத்தை நடத்த தேவை உள்ளது. அரசியல் போராட்டத்தை சரியான முறையில் கொண்டு செல்வதற்கு தத்துவ போராட்டமும் தேவைப்படுகிறது. இங்குள்ள சுரண்டல் முறை அடக்குமுறை ஒடுக்கு முறைக்கு தீர்வு என்பது பலாத்காரமான சமூகப் புரட்சி ஒன்றின் மூலம் தான் சாத்தியம். இதனைப் புரிந்து கொள்ள கவிஞர் பட்டுக்கோட்டையின் பாடலைப் பாருங்கள் "தனி உடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா " இதிலிருந்து விடுபடாமல் நாம் தத்துவ போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தை இன்னும் நமது விடுதலைகான போராட்ட வடிவங்களை புரிந்து கொள்ளாமல் புரட்சியோ சமுக மாற்றமோ சாத்தியம் அல்ல.
May be an image of map and text

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்