அரசியலின் பொதுவான கண்ணோட்டம் -வர்க்கம் சாரா

 கிரேக்க அரசியல்‌ மோதை அரிஸ்டாட்டில்‌ கருதுவது போலவே மனிதன்‌ ஒரு சமூகப்‌ பிராணியாவான்‌. அவன்‌ குடும்பத்தில்‌ பிறந்து சமூகத்தில்‌ .வாழ்கிறான்‌. அவனுக்குத்‌ தனித்து வாழும்‌ சக்தி கிடையாது. எனவேதான்‌ அவன்‌ மற்ற வர்களுடன்‌ தொடர்பு கொண்டு வாழ்கிறான்‌. அவனுடைய தேவைகள்‌ ஏராளம்‌. மற்றவர்களுடைய உதவியின்றி ஏதேச்சை யாக அவனால்‌ எந்தத்‌ தேவையையும்‌ பூர்த்தி செய்து கொள்ள முடிவதில்லை. ஆகவேதான்‌ மனிதன்‌ சமூகத்தில்‌ கூடி வாழ வேண்டியதாயிற்று. இவ்விதம்‌ மனிதன்‌ சமூகத்தில்‌ வாழுங்கால்‌ தன்னுடைய விருப்பு வெறுப்புகளைத்‌ தன்னுடன்‌ வாழும்‌ ஏனைய மனிதர்களின்‌ செளகரியங்களுக்கு ஏற்ப சரி செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. சமூகத்தில்‌ கூடிவாழ்கின்றவர்‌ களிடையே ஏற்படுகின்ற பலவிதமான தொடர்புகளை ஒழுங்கு படுத்தச்‌ சட்டதிட்டங்கள்‌ தேவைப்படுகின்றன. மனிதனின்‌ நடத்தையை ஒழுங்குபடுத்தத்‌ தேவைப்படும்‌ இந்தச்‌ சட்ட திட்டங்களை ஏற்படுத்தவும்‌ அவைகளை அமலாக்கவும்‌ ஓர்‌ அமைப்பு தேவை. இந்த அமைப்பை அரசாங்கம்‌ என்போமானால்‌ அரசாங்கத்தைப்‌ பெற்ற ஒரு சமூகத்தை அரசு எனலாம்‌. ஒவ்வோர்‌ அரசிலும்‌ அரசாங்கம்‌ முக்கிய இடத்தைப்‌ பெற்று உள்ளது. ஒவ்வோர்‌ அரசாங்கமும்‌ சட்டத்தை இயற்ற ஒரு சட்ட மான்றத்தையும்‌, சட்டங்களை அமலாக்க ஓர்‌ ஆட்சித்‌ துறையை யும்‌, சட்டங்களை மீறுபவர்களைத்‌ தண்டிக்க ஒரு நீதித்துறையை யும்‌ பெற்று விளங்கும்‌. மனிதன்‌ அரசோடும்‌ அது ஏற்படுத்திய அரசாங்கத்துடனும்‌ கொண்டிருக்கும்‌ தொடர்புகளை ஆராயும்‌ நூல்‌ *அரசியல்‌”? என்று அழைக்கப்படுகிறது. இலக்கணமாகக்‌ கூறினால்‌, “அரசியல்‌ என்பது நாகரீகம்‌ அடைந்த ஒரு சமூகத்தின்‌ அரசாங்கம்‌, அடிப்படைச்‌ சட்டம்‌, மக்கள்‌ ஒருவ ரோடு ஒருவர்‌ கொண்டுள்ள தொடர்புகள்‌, அவற்றை வகுத்துக்‌ காக்கும்‌ நியதிகள்‌, சமூக நிலைகள்‌, அவற்றின்‌ குறிக்கோள்கள்‌ என்பனவற்றைப்பற்றிக்‌ கூறும்‌ அறிவுத்‌ துறையாகும்‌”.

அரசியல்‌ ஆராய்ச்சியாளர்கள்‌ அரசியல்‌ பாட விளக்கத்தை விரிவுபடுத்தி அரசியல்‌ கோட்பாடுகள்‌, அரசியல்‌ நிறுவனங்கள்‌, அரசியல்‌ கட்சிகள்‌, சர்வதேசத்‌ தொடர்புகள்‌ என்ற முக்கியப்‌ பிரிவுகளை வரையறுத்துள்ளனர்‌. “அரசியல்‌ கோட்பாடுகள்‌? என்னும்‌ பிரிவு அரசியல்‌ கோட்பாடுகளின்‌ வரலாறு, அரசியல்‌ கருத்துகள்‌ ஆகியவைகளை ஆராய்கின்றது. *அரசியல்‌ நிறுவனங்கள்‌?” என்னும்‌ பிரிவு, அரசியல்‌ அமைப்பு கள்‌, தேசீய அரசாங்கம்‌, மாநில அரசாங்கம்‌, தல ௬ய ஆட்சி நிறுவனங்கள்‌, பொது நிருவாகம்‌, அரசாங்கத்தின்‌ பொருளாதார சமூகக்‌ கடமைகள்‌, அரசியல்‌ நிறுவனங்களின்‌ ஒப்புமை வேற்றுமை ஆகியவைகளை ஆராய்கின்றது. “அரசியல்‌ கட்சிகள்‌?

என்னும்‌ பிரிவு, அரசியல்‌ கட்சிகள்‌, சங்கங்கள்‌, நெருக்கக்‌ குழுக்கள்‌, நிருவாகமும்‌ குடிமக்களின்‌ பங்கும்‌, பொதுக்‌ கருத்து ஆகியவை பற்றி ஆராய்கிறது. சர்வதேசத்‌ தொடர்புகள்‌? என்னும்‌ பிரிவு நாட்டிடை அரசியல்‌ சர்வதேச அமைப்புகள்‌, அவைகளின்‌ நிருவாகம்‌, குறிக்கோள்கள்‌, சர்வதேசச்‌ சட்டம்‌, உலக மக்கள்‌ கருத்து ஆகியவைகளை ஆராய்கிறது.  

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்