தோழர்களே எங்களின் விடா முயற்சி மார்க்சிய லெனினியத்தை சரியான முறையில் கொண்டு செல்ல தொடர் விவாததிற்கான களமாக நடைபெறும் விவாதங்கள் மார்க்சியத்தை மறுக்கும் குழப்பவாதிகளையும் மார்க்சிய விரோதிகளை அம்பலப்படுத்துவதும் சரியான மார்க்சியலெனினியத்தை உயர்த்தி பிடிப்பதும் நோக்கமாக கொண்டு எழுதிக் கொண்டிருக்கிறோம். வாருங்கள் வாசியுங்கள் விவாதியுங்கள் சரியான வழிவகை அறிந்து செயல்பட சுரண்டல் அற்ற பொதுவுடமை சமூகத்தை நோக்கிய பயணதிற்க்கு அயத்தமாகுவோம் தோழர்களே.
இலக்கு 33 இணைய இதழ் இங்கே அழுத்தி PDF வடிவில் பெற்றுக் கொள்ளவும் தோழர்களே
இதழில் பேசப்பட்டுள்ள கட்டுரைகள்
சீர்திருத்தவாத இயக்கமும் புரட்சிகர இயக்கமும்
முரண்பாடு பற்றி - மாவோ.பகுதி – 3
ஜாதியம் தொடர்-7ஜாதியின் தொடக்கம், தீண்டாமையும்& ஜாதி ஒழிப்பு
மார்க்சியம் சில போக்குகள் அதில் "தமிழக மார்க்சியம்" குறித்த சில
மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள் வி. லெனின்
மாபெரும் சோசலிச அக்டோபர் புரட்சிக்கு பல காலம் முன்னதாகவே பாட்டாளி வர்க்கத்திற்கு அறிவு புகட்டவும் அரசியல் ரீதியாக போதனை பெறவும் லெனின் தலைமையில் தொடர்ந்து போராடியது. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் கலாச்சாரத்தை கல்வியையும் சாதாரண பொதுமக்களும் எளிதில் பெறக்கூடிய அமைப்பு கொண்ட சோசலிச சமுதாயமாக முதலாளித்துவச் சமுதாயத்தை மாற்றுவதற்கும் பாட்டாளிகளை ஆயத்தம் செய்ய வேண்டுவது ஓர் இன்றியமையாத நிலை என்பது இதில் கண்டது.மக்களின் கல்விக்கு லெனின் எல்லாவற்றிற்கும் மேலான முக்கியத்துவம் கொடுத்தார் சமுதாய வளர்ச்சியில் இந்த அல்லது அந்த கட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தின் பொதுப்படையான அரசியல் கடமைகள் சம்பந்தப்பட்ட போதனைகள் அவர்களது கல்வி பயிற்றுவிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஆகியவற்றில் லெனின் கவனம் செலுத்தினார் இத்தகைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஜார் ஆட்சி நிலைமைகளில் பாட்டாளிகளிடம் முன்னேற்றமான வர்க்க விழிப்புணர்வை வளர்க்கும் பணிகளுடன் லெனின் இணைத்தார் .