சோசலிசப் பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கும் இடையிலான வேறுபாட்டை மறுக்கும் மார்க்சியலெனினியத்திற்கு எதிரான கருத்திற்கு எதிராகப் போராடுவோம்!.-தேன்மொழி

(முந்தைய இதழின் தொடர்ச்சி)

ரஷ்யா போன்ற சோசலிச நாட்டில் நடைமுறையில் மக்களுக்கு நலன் கொடுக்கும் சோசலிசப் பொருளாதாரம் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் போது ரஷ்யகம்யூனிஸ்டு கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் செல்வாக்கு பெற்ற குட்டிமுதலாளித்துவ பிரிவினரால் சோசலிசப் பொருளாதாரத் தோடு முதலாளித்துவப் பொருளாதாரத்தை மெல்லமெல்ல கலந்ததன் காரணமாக அங்கு சோசலிசப் பொருளாதாரத்தோடு முதலாளித்துவப் பொருளாதாரம் கலக்கப்பட்டு அங்கே சாரம்சமாக முதலாளித்துவப் பொருளாதாரம் மீட்க்கப்பட்டது.

ஏகாதிபத்தியநாடுகளிலும் அதன் செல்வாக்கு உட்பட்ட நாடுகளிலும் நடைமுறையிலிருந்த முதலாளித்துவப் பொருளாதாரத் தோடு சோசலிசப் பொருளாதாரத்தின் சில அம்சங்களை சேர்த்து கலப்பு பொருளாதாரம் உருவாக்கப்பட்டது. விஷத்தோடு எவ்வளவுதான் உணவுப்பொருளை கலந்தாலும் அது விஷம் என்ற நிலையிலிருந்து மாறாது என்பதைப் போல முதலாளித்துவப் பொருளாதாரத் தோடு எவ்வளவுதான் சோசலிசத்திற்கான அம்சங்களை சேர்த்தாலும் அது சோசலிசப் பொருளாதாரமாக ஆகிவிட முடியாது. ஆனாலும் இந்த ஏகாதிபத்தியவாதிகள் ரஷ்யாவில் சோசலிச அரசு செயல்படுத்திய கொள்கையான மக்களுக்குகல்வி, மருத்துவம், மற்றும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது போன்ற கொள்கைகளை ஏற்றுக் கொண்டு செயல்களில் ஈடுபட்டாலும் முதலாளித்துவ சுரண்டலை ரஷ்ய சோவியத்து அரசு செய்தது போல ஒழிக்கவில்லை, சோவியத்து ரஷ்யாவில் செய்தது போல பெருமுதலாளிகளின் மூலதன உடமைகளை பறிமுதல் செய்து அதனை உழைக்கும்மக்களின் உடமையாகமாற்றவில்லை. மாறாக, தனியுடமையையும் சுரண்டலையும் தக்கவைத்துக் கொண்டே இந்த சீர்திருத்தங்களை செயல்படுத்தினார்கள். அதன் காரணமாக இவர்கள் மார்க்சியத்தை ஏற்று கலப்பு பொருளாதாரத்தை செயல்படுத்துகிறோம் என்று நாடகமாடினாலும் மக்கள் வாங்கும் சக்தி இழந்து பொருளாதார நெருக்கடி ஏற்படுவதை இவர்களால் தடுக்க முடியவில்லை. இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மக்கள் இந்த நெருக்கடிகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று போராடக்கூடாது என்பதற்காகவே மக்கள் அமைதியாக இருக்கவேண்டும் என்றும் இந்த நெருக்கடிகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்றும் இந்த புதிய ஏகாதிபத்தியவாதிகள் கலப்புப்பொருளாதாரத்தை செயல்படுத்துவதன் மூலம் தீர்ப்பார்கள் என்றும் நம்மை நம்பவைப்பதற்காகவே புதிய ஏகாதிபத்தியம் என்ற கொள்கையை முன்வைத்து நம்மைஏமாற்றபார்க்கிறார்கள். ஆகவே இது பற்றி நாம் ஆழமாக சிந்தித்து சரியான முடிவை எடுக்கவேண்டும் என்று "இலக்கு" கருதுகிறது

இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு பழைய ஏகாதிபத்தியவாதிகள் மார்க்சியப் பொருளாதாரத்தின் அவசியத்தை ஏற்றுக் கொண்டு உளவாங்கிட வேண்டிய கட்டாயம் பழைய ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஏற்பட்டதாகவும் ஆகவே அவர்கள் மார்க்சியப் பொருளாதாரத்தை உள்வாங்கி முதலாளிகளின் தன்மைக்கு ஏற்பமாற்றியமைத்து புதிய வகை கலப்பு பொருளாதாரத்திற்கு மாறிவிட்டனர் என்றும் அந்த வகையில் இவர்கள் புதிய ஏகாதிபத்தியவாதிகளாக மாறி விட்டனர் என்றும்கருதுகிறார்கள். இதுஉண்மையா? சமூகத்தில் பொருளுற்பத்தியில் மாற்றங்கள் ஏற்படும்போது, அதாவது உற்பத்தி சக்திகள் வளரும் போது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு நிலவுகின்ற உற்பத்தி உறவுதடையாகமாறிவிட்டபின்பு. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு தடையாக வுள்ள உற்பத்தி உறவை மாற்றி யமைக்க வேண்டும் என்ற நிலை உருவாகிறது. ஆகவே புதிய உற்பத்தி உறவு எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்துக்கள் மக்களிடம் தோன்றுகிறது. இந்த கருத்துக்களில் சுரண்டும் வர்க்கங்களின் நலன் அடிப்படையிலான கருத்துக்களும் உழைக்கும் மக்களின் நலன் அடிப்படையிலான கருத்துக்களும் உருவாகிறது. அதாவது சுரண்டும் வர்க்கங்களுக்கு சாதகமான புதிய உற்பத்தி உறவை ஏற்படுத்துவதற்கான கருத்தை உருவாக்கி மக்களின் முன் வைத்து அதன் செல்வாக்கை நிலைநிறுத்தமுதலாளித்துவ அறிவாளிகள் முயற்சிசெய்கிறார்கள். அதே வேளையில் உழைக்கும் வர்க்கங்களுக்கு சாதகமான உற்பத்தி உறவு பற்றிய கருத்தை உழைக்கும் வர்க்கங்களுக்காக பாடுபடுபவர்கள் முன் வைக்கிறார்கள். இந்த கருத்துகளுக்கு இடையில் சித்தாந்தப் போராட்டங்கள் நடக்கும் என்றும் இந்தப் போராட்டமானது புதிய உற்பத்தி உறவுகள் உருவாகிதிடப்படும் வரை தொடரும் என்று மார்க்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

முதல் உலகப்போருக்கு முன்பு ஏகாதிபத்தியவாதிகள் கடைபிடித்த பொருளாதாரக் கொள்கை என்ன? முதலாளித்துவ தாராளமயக் கொள்கையாகும். இந்தக் கொள்கையை செயல்படுத்தியதால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு முதல் உலகப் போர்மூண்டது. இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சோசலிசப் பொருளாதாரம் ஒன்றே ஒரே வழி என்ற கொள்கையை முன் வைத்து மக்களை திரட்டி போராடி முதலாளித்துவ உற்பத்திமுறை ஒழிக்கப்பட்டு சோசலிச உற்பத்தி முறை ரஷ்யாவில் உருவாக்கப்பட்டது. ஆகவே இந்த புதிய வகையான உலக உற்பத்தி சூழலில் சோசலிச உற்பத்திஉறவுமுறைக்கான போராட்டங்கள் வலுவடைந்து ஏகாதிபத்தியவாதிகளின் நாட்டிலும் சோசலிச உற்பத்தி உறவுமுறை வந்துவிடும் என்று அஞ்சி ஏகாதிபத்தியவாதிகளால் கலப்புப்பொருளாதாரம் கீன்சியப் பொருளாதாரம் என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டு அதனை மக்களால் ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டது. அதாவது புதிய உற்பத்திஉறவிற்கான ஏகாதிபத்தியவாதிகளின் நலனுக்கான கருத்தாக்கத்தை மக்கள் ஏற்றுக் கொள்ள செய்யப்பட்டது. இதற்கு எதிராக உழைக்கும் மக்களுக்கு நன்மையை கொடுக்கும் உற்பத்திஉறவுக்கான கருத்தாக்கத்தை உருவாக்கி மக்களிடம் கொண்டு சென்று மக்களிடம் செல்வாக்கு பெறும் முயற்சி எடுக்கப்படவில்லை. மாறாக ஏகாதிபத்தியவாதிகளால் கொண்டுவரப்பட்ட சீர்திருத்த கொள்கைகளையே மார்க்சியவாதிகள் என்று சொல்பவர்களும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டனர். ஆகவே ஏகாதிபத்தியவாதிகள் மார்க்சியப்பொருளாதாரத்தை உள்வாங்கி கலப்பு பொருளாதாரம் என்று சொல்கிற கீன்சியப் பொருளாதாரத்தை படைக்கவில்லை. மாறாக அன்றைய சூழலில் மக்களை ஏமாற்றுவதற்காகவே ஏகாதிபத்தியவாதிகளின் நலனிலிருந்தே கீன்சியக்கொள்கை உருவாக்கப்பட்டது. அந்த கொள்கையானது உழைக்கும் மக்களில் ஒருபிரிவினருக்கு நல்ல பலன் கொடுத்தது என்பது உண்மையே எனினும் அந்த பலன் தற்காலிகமானதே என்பதை வரலாறு நிருபித்துவிட்டது. அந்த கொள்கையை கொண்டு வந்த ஏகாதிபத்தியவாதிகளே தற்போது அதனை கைவிட்டுவிட்டு தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற அவர்களின் புதிய தாராள கொள்கையை செயல்படுத்துவதை நாம் காணலாம்.  

புதிய ஏகாதிபத்தியவாதிகளாக மாறிவிட்டவர்கள் குறிப்பாக அமெரிக்காவில் இந்த கலப்பு பொருளாதாரத்தை செயல்படுத்தி வளர்ந்து விட்டார்கள் என்ற ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது.  இவர்கள் சொல்லும் வளர்ச்சி என்பது என்ன? அதனை பரிசீலிப்போம். தொழில் நுட்பத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது, அதாவது நவீன தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. தொலை தொடர்புத் துறையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது, கம்யூட்டர் தொழில் நுட்பம் வளர்ந்திருக்கிறது. மருத்துவத்துறையில் மாபெரும் தொழில்நுட்ப மற்றும் மருத்துவ விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது. போக்குவரத்துதுறையில் நவீன விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது. நவீனதொழிற்சாலைகள் உருவாகியிருக்கிறது. விவசாயத்துறையில் நவீனகருவிகள் பயன்படுத்தப்படுகிறது. இவையெல்லாம் உற்பத்திசக்திகளின் வளர்ச்சியையே குறிக்கிறது. இதன் மூலம் உற்பத்தியானது அதிக சுமையில்லாமல் ஏராளமான பொருள்களை உற்பத்திசெய்வதை சாத்தியமாக்கியிருக்கிறது. ஆனால் உற்பத்திசக்திகளான தொழிற்சாலை, தொழில்நுட்பம், போக்குவரத்துசாதனம், உற்பத்திக்கருவிகள் போன்றவற்றோடு முதன்மையான அம்சமான உழைக்கும் மனிதன், அதாவது உற்பத்திசக்திகளிலேயே முதன்மையான அம்சமான உழைக்கும் மனிதன் வளர்ந்திருக்கின்றானா?  இல்லை என்பதே எதார்த்தமாகும். இந்த நவீன உற்பத்திச்சூழலில் உழைக்கும் மனிதர்களில் பலருக்கு வேலை பறியோயுள்ளது,  பலருக்கு வேலைகிடைக்கவில்லை, வேலையில்லாத் திண்டாடம் பெருகியுள்ளது. மேலும் இந்த நவீன உற்பத்தி மற்றும் இந்த ஏகாதிபத்தியவாதிகளால் செயல்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கையின் காரணமாக ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகள் மிகமிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளார்கள். அவர்களது மூலதனமும் சொத்துக்களும் பலமடங்கு பெருகியுள்ளது. ஆகவே இந்த கார்ப்பரேட் முதலாளிகளைப் பொறுத்தளவில் வளர்ச்சி என்பது உண்மையே ஆனால் உழைக்கும் மக்களைப் பொறுத் தளவில் வளர்ச்சி இல்லை, மாறாக வீழ்ச்சியே என்பதை புள்ளி விவரங்கள் காட்டுகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் நிலமைகள் இன்னும் மாறவில்லை. வேலையற்றோரின் நிலையிலும் மாற்றம் இல்லை, மாறாக வேதனைகள்தான் கூடியிருக்கிறது. இந்த சூழலில் இவர்கள் வளர்ச்சி என்று பேசுகிறார்களே. யாருக்கான வளர்ச்சியை இவர்கள் பொதுவாக வளர்ச்சி என்று கூறி நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சமூகத்தில் ஒரு சிலரின் வளர்ச்சியை வைத்து சமூகத்தின் வளர்ச்சியை எடை போடக் கூடாது, மாறாக பெரும்பாண்மையான உழைக்கும்மக்களின் வளர்ச்சியை வைத்துத்தான் சமூகத்தின் வளர்ச்சியை எடை போட வேண்டும் என்றார் காரல்மார்க்ஸ். ஆனால் இவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சியை வைத்து எடைபோட்டு சமூகத்தின் வளர்ச்சியை எடைபோடுகிறார்கள். இவர்கள் மார்க்சியவாதிகளா? ஆரம்ப காலங்களில் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு சில சலுகைகளும் பலனும் கிடைத்தது உண்மை. ஆனாலும் அந்தப்பலன் அனைவருக்கும் கிடைக்கவில்லையே ஏன்? என்று இவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள். தற்போது உழைப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளையும் சர்வாதிகாரமுறையில் பறிக்கிறார்களே ஏன்? என்பதையும் சிந்திக்க இவர்கள் மறுக்கிறார்கள். இந்தப் பிரச்சனைகள் பற்றி நாம் கீழ்கண்ட முடிவுகளுக்கு வரலாம் என்று கருதுகிறோம்.

சோசலிசப் பொருளாதாரமானது திட்டமிட்ட பொருளாதாரம் என்ற கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு இவர்கள் புதிய ஏகாதிபத்தியவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் சோசலிசப் பொருளாதாரத்தை முதலாளித்துவத்தோடு கலப்பு செய்யும் கலப்பு பொருளாதாரம் என்று பேசுகிறார்கள். ஆனால் சோசலிசப் பொருளாதாரம் என்பது தனியுடமை ஒழிக்கப்பட்டு, அதாவது பெருமுதலாளிகளின் மூலதன உடமைகள் பறிக்கப்பட்டு அது உழைக்கும் மக்களின் சொத்துக்களாக பொதுவுடமையாக ஆக்கப்பட்டு கொண்டுவரப்படும் பொருளாதாரம் என்பதை பார்க்கத் தவறுகிறார்கள். இதன் மூலம் இவர்களின் நோக்கம் தனியுடமையை ஒழிப்பது அல்ல, மாறாக தனியுடமையையும் சுரண்டலையும் பாதுகாப்பதே இவர்களின் நோக்கமாகும். இவ்வாறு தனியுடமையை பாதுகாக்கும் கருத்தைக் கொண்டுள்ள புதிய ஏகாதிபத்தியம் என்ற கருத்தை முன்வைக்கும் இவர்களது கருத்து மார்க்சியம் இல்லை, மார்க்சியத்துக்கு எதிரான முதலாளித்துவ கருத்தையே மார்க்சியம் என்று சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்கள் என்றே "இலக்கு" கருதுகிறது.

1) சோசலிசப் பொருளாதாரம் என்பது வேறு, முதலாளித்துவப் பொருளாதாரம் என்பது வேறு.

2) சோசலிசப் பொருளாதாரம் என்பது பெரும்பாண்மையான உழைக்கும் மக்களின் நலனுக்கானது. சிற்பாண்மையான முதலாளிகளுக்கு எதிரானது.

3) முதலாளித்துவப் பொருளாதாரம் என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய சிறுபான்மை முதலாளிகளின் நலனுக்கானது. பெரும்பாண்மையான உழைக்கும் மக்களுக்கு எதிரானது.

4) சோசலிசப் பொருளாதாரமும், முதலாளித்துவப் பொருளாதாரமும் ஒன்றுக்கொன்று நேர் எதிரான பகைத் தன்மை கொண்டது.

5) சோசலிசப் பொருளாதாரமும் முதலாளித்துவப் பொருளாதாரம் ஒன்றிணைவதற்கு வாய்ப்பே இல்லை.

6) சோசலிசப் பொருளாதாரமும் முதலாளித்துவப் பொருளாதாரமும் கலந்த கலப்புப் பொருளாதாரம் என்பது உண்மையில் மக்களை ஏமாற்றுவதற்காக முதலாளிகளால் கொண்டுவரப்படும் முதலாளித்துவப் பொருளாதாரமே ஆகும்.

7) முதலாளிகள் எந்த சூழலிலும், எப்போதும் அவர்களது சுரண்டல் கொள்கையை கைவிட மாட்டார்கள்.

8) உழைக்கும் வர்க்கமானது முதலாளிகளின் சுரண்டலை ஒழிக்கும்வரை போராடிக்கொண்டே இருப்பார்கள்.

9) முதலாளித்துவப் பொருளாதாரம் ஒருபோதும் உழைக்கும் மக்களுக்கு வாழ்வை கொடுக்காது.

10) கலப்பு பொருளாதாரம் என்று சொல்லப்படும் கீன்சியப் பொருளாதாரமும் மக்களுக்கு வாழ்வை கொடுக்காது. அதன் மூலம் மக்களுக்கு கிடைக்கும் வாழ்வானது தற்காலிகமே.

11) கீன்சியப் பொருளாதாரம் மற்றும் சீர்திருத்தவாதக் கொள்கைகள் அனைத்தும் ஏகாதிபத்தியவாதிகள் மக்களை ஏமாற்றுவதற்காக கொண்டுவரப்படும் கொள்கைகளே.

12) சீர்திருத்தங்களின் மூலம் மக்களின் பிரச்சனைகளை தற்காலிகமாக தீர்க்கலாம். அந்த வகையில் சீர்திருத்தத்தை வரவேற்க வேண்டும். ஆனால் சீர்திருத்தத்தின் மூலமே மக்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் நிரந்தரமாக தீர்த்துவிட முடியும் தீர்த்துவிடுவதற்காக நாம் பாடுபட வேண்டும் என்ற சீர்திருத்தவாதக் கொள்கையானது மக்களை ஏமாற்றுவதற்கான தீய முதலாளித்துவ கொள்கையாகும். (முற்றும்). – தேன்மொழி.

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்