அமெரிக்க ஏகாதிபத்திய போரை எப்படி பார்ப்பது?

 ஈரான் மீதான அமெரிக்க போரை நாம் எப்படி பார்ப்பது என்பதற்கு நமக்கு மார்க்சிய கோட்பாடு தெளிவாக தெரிய வேண்டும் அதன் அடிப்படையில் ஆசான் லெனின் நூலின் அடிப்படையில் நமக்கான தேடுதலை தொடர்வோம்.

 

மேலும் நமது ஆசான் லெனின் சோசலிசமும் போரும் நூலிலிருந்து சில பகுதிகள் கீழே:-

ஏகாதிபத்தியம் உள்ளவரை போரைத் தடுக்க முடியாது. சமூகம் வர்க்கமாக பிளவுண்டு கிடக்கும் வரை சமூகத்தில் போர் தவிர்க்க முடியாது.

தேசியங்களுக்குள், அவற்றுக்கிடையில்  நடைபெறும் போர்களை காட்டுமிராண்டித்தனமானவை, அதை முரட்டுத்தனமான கொடூரமானவை என்று கூறி சோசியலிஸ்ட்கள் எப்போதுமே அவற்றை கண்டனம் செய்து வந்துள்ளனர். எனினும் போரை பற்றி நாம் கொண்டுள்ள போக்கு பூர்ஷ்வா சமாதானவாதிகளிடையே (சமாதானத்தின் ஆதரவாளர்கள் அது வேண்டும் என்று சரியானது என்று எடுத்துரைக்க அதற்கான வாதி போர் ஆகியோருடைய) போக்கினின்று அடிப்படையில் மாறுபட்டது .அராஜவாதிகளுடைய போக்கின்றும் அடிப்படையில் மாறுப்பட்டது. நாட்டிற்குள் நடக்கும் வர்க்க போராட்டத்திற்கும் போர்களுக்கும் உள்ள தவிர்க்க முடியாத தொடர்பினை நாம் அறிந்து புரிந்து கொண்டுள்ளோம் என்ற விஷயத்தில் நாம் முன்னர் குறிப்பிட்டவர்களிடமிருந்து பூஷ்வா  சமாதானவாதிகளிடமிருந்து மாறுபட்டவர்கள். வர்க்கங்கள் ஒழிக்கப்பட்டு சோசலிசம்  படைக்கப்பட்டால் இன்றி போர்கள் ஒழிக்க முடியாது என்பதை நாம் அறிந்து கொண்டுள்ளோம். மேலும் உள்நாட்டுப் போர்களை அதாவது ஒடுக்கப்பட்ட வர்க்கம் ஒடுக்கும் வர்க்கத்தினை எதிர்த்து நடத்தும் போர்கள், அடிமைகள் அடிமை உடைமையாளர்கள் எதிர்த்து நடத்தும் போர் ..... ஆகிய போர்கள் முற்றிலும் முறையானவை முற்போக்கானவை தேவையானவை என்று நாம் கருதுகிறோம். ஒவ்வொரு போரினையும் அதன் வரலாற்றியல் அம்சத்திலே (மார்க்ஸ் அவர்களுடைய முரண்பாட்டியல் பொருள் முதல் வாதத்தின் நோக்கு நிலையில் இருந்து) தனித்தனியாக ஆராய்ந்து அறிய வேண்டும் என்று நாங்கள் கருதுவதில்லை. அனைத்து போர்களும் தவிர்க்க முடியாத வகையில் வரும் குரூங்கள் கொடுமைகளும் வேதனைகளும் துயர்களும் கோரங்களும் இருந்தபோதிலும் முற்போக்காக இருந்து அதாவது மிகவும் தீங்கிழைத்து வந்த பிற்போக்கு ஸ்தாபனங்களை உதாரணமாக ஒரு தனி மனித தன்னிச்சையாக ஆட்சி அதிகாரத்தை ஒழிப்பதற்கு உதவி செய்த மனித வர்க்கத்தின் வளர்ச்சி நன்மையை பயத்த போர்கள் கொடுங்கோன்மை ஆட்சியை ஒழிப்பதற்கு உதவியே மனித வர்க்கத்தின் வளர்ச்சிக்கு நடந்த கடந்த கால போர்கள் எடுத்து பரிசீலனை செய்ய வேண்டும் ஆராய வேண்டும்.

இன்றைய போர் ஓர் ஏகாதிபத்திய போர். இந்த போர் இன்று நடைபெற்று வரும் போர் ஒரு ஏகாதிபத்திய போர் என்பது அநேக அனைத்து இடங்களிலும் ஒப்புக்கொள்ளப்படுகின்றது. எனினும் பெரும்பாலான இடங்களில் இந்த சொல்லின் பொருள் திரிக்கப்படுகிறது. அல்லது ஒரு சாராருக்கு மட்டுமே கொடுக்கப்படுகின்றது.

ஏகாதிபத்திய காலகட்டத்தில்  முதலாளித்துவமானது தேசியங்களை ஒடுக்கும் ஒடுக்கலின் மிகப்பெரிய ஒடுக்கல்காரனாக மாறிவிட்டது முன்னாள் முற்போக்கு  இயல்புகளில் இருந்த முதலாளித்துவம் இப்போது பிற்போக்கு இயல்பு பெற்றுவிட்டது. நிலமானிய முறையை எதிர்த்து போராடிய போராட்டத்தில் தேசங்களை விடுவிக்கும் விடுதலையாளனாக இருந்த முதலாளித்துவம் இங்கே பிற்போக்கு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.

போர் என்பது அரசியலின் தொடர்ந்த தொடரே தான் வேறு (வன்முறை)  வழியில் தொடர்ந்து செல்லும் தொடர்ச்சி தான்.

 காலணிகளை கொள்ளையடிப்பது பிரதேசங்களை ஒடுக்குவது தொழிலாளி வர்க்க இயக்கத்தை நசுக்குவது இவைதான் நாம் காணும் படிப்பினைகள் இந்த போக்கு இப்பொழுதும் தொடரதான் செய்கிறது.

அவை அமெரிக்காவின் ஈரான் மீதான அடக்குமுறையிலிருந்து புரிந்துக் கொள்ளலாம்.

 அமெரிக்கா உலக பேட்டை ரவுடி . . . மனிதகுல விரோதி !

தான் எந்தவொரு நியாயத்திற்கும் கட்டுப்படமாட்டேன் என்று கூறிக்கொண்டு அலையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதி ரவுடி டிரம்ப் . . . மனிதகுலத்தை நாசமாக்க ''அவதாரம்'' எடுத்துள்ள ஒரு சமூக விரோதி! ஐநா சபை போன்ற எதையும் பொருட்படுத்தாத ஒரு ஜனநாயகவிரோதி!(இவை அவர்களின் கைபாவைதான் என்பது பல சந்தர்பங்களில் புரிந்துக் கொள்ளாம்).

தனக்குப் பிடிக்காத உலக அரசியல் தலைவர்களைக் குறிப்பிட்டு - தன் நாட்டு எல்லை தாண்டி - கொலைசெய்யும் கொலைகாரன்! மனித சமுதாயத்தில் வாழத் தகுதியற்ற நபர்*!

இன்று ஈரான் மக்கள்மீது மிகக் கொடூரமான கொலைவெறித் தாக்குதலைத் தொடுத்துள்ளார்! தன்னைத் தட்டிக்கேட்க யாரும் கிடையாது என்ற மமதை பிடித்து அலையும் ஒரு காட்டுமிராண்டி! இதற்குமேல் இவரது கொடுமையை விளக்குவதற்குச் சொற்கள் இல்லை!

*டிரம்ப் அமெரிக்க ஆளும்வர்க்கத்தின் பிரதிநிதி! தனிநபர் இல்லை! டிரம்பை நாம் கண்டிப்பது என்பது ஒரு தனிமனிதர் பிரச்சினை இல்லை! அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் உலக முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளுக்கும் இடையிலான ஒரு பிரச்சினை!

உலகம்முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் ஒருமித்த குரலில் அமெரிக்காவின் மக்கள் விரோத - ஜனநாயக விரோத - நியாயமற்ற ஈரான்மீதான தாக்குதலுக்கு எதிராகக் குரல்கொடுக்கவேண்டும்!

இங்குள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் கண்டனக் குரல் எழுப்பவேண்டும்! நமக்கென்ன என்று இருக்கக்கூடாது! நாளைக்கு நம்மீதும் இதுபோன்ற தாக்குதலைத் தொடுக்க அமெரிக்கா தயங்காது!

தற்போதைய அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போரினால் ஈரானைச் சுற்றியுள்ள எட்டு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன . . .

ஈரானைத் தாக்குவதற்காக அந்த நாட்டைச் சுற்றி - மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வளைகுடா நாடுகளான பஹ்ரைன், கத்தார், குவைத், லெபனான், ஈராக், ஜோர்டான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் எட்டு நாடுகளில் அமெரிக்கா தனது ராணுவத் தளங்களை அமைத்துள்ளது. இதுபோன்று பல நாடுகளை அமெரிக்கா தனது ராணுவத் தளங்களாகப் பயன்படுத்துகிறது என்பது தெரிந்ததே!

எனவேதான் ஈரான் தற்போது தன்னைக் காத்துக்கொள்ள மேற்கூறிய நாடுகளிலுள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைத் தாக்கிவருகிறது. இந்த நாடுகள் எல்லாம் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் தன்னலத்திற்காகப் பாதிக்கப்பட்டுவருகின்றன.

அமெரிக்கா தன்னலத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மேற்கூறிய எட்டு நாடுகளைப் பலிகொடுத்துவருகிறது என்பதே உண்மை.

இந்த நாடுகள் எல்லாம் அமெரிக்காவிற்காக பலியாடப்படுகிற பலியாடுகளே! தன் நாட்டுக்கு எந்தவிப் பாதிப்பும் இல்லாமல், பிற நாடுகளின் மக்களுக்குப் பாதிப்பைக் கொடுக்கிறது அமெரிக்கா !

ஈரான் ஆட்சியாளர்களை நியாயப்படுத்துவது என் நோக்கம் இல்லை! அது ஈரான் அரசுக்கும் ஈரான் மக்களுக்கும் இடையிலான பிரச்சினை. இந்த முரண்பாட்டையும் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ள அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் முயல்கிறார்.

உலகின் பல பகுதியிலுள்ள இயற்கை வளங்களைச் சுரண்டுவதும், தான் உற்பத்தி செய்கிற ராணுவத் தளவாடங்களைப் பிற நாடுகளுக்கு விற்பதும் தனது பன்னாட்டு நிறுவனங்களின் உலக அளவிலான கொள்ளையைத் தக்கவைப்பதுமேஅமெரிக்காவின் முதன்மையான நோக்கம்! மிகவும் பிற்போக்கான, ஆனால் அழுகி நாற்றமடித்துக்கொண்டிருக்கும் ஒரு ஏகாதிபத்தியமே அமெரிக்க ஏகாதிபத்தியம் என்பதை வரலாறு காட்டிவருகிறது!

மேலும் இசுலாமிய நாடுகளைத் தன் நலத்திற்காகப் பிரித்தாளும் சூழ்ச்சியையும் அமெரிக்கா மேற்கொண்டுவருகிறது.

உலக அளவில் மனிதகுலத்திற்கு எதிரான மிகப் பெரிய பயங்கரவாதியே அமெரிக்கா என்பது வெளிப்பட்டுவருகிறது! (இந்தப்பகுதி முகநூலில் தெய்வ சுந்தரம் நாயினார் பகுதியிலிருந்தே)

 ஆகவே அமெரிக்காவின் அதன் அடிவருடியான இஸ்ரேலின் கொள்ளைகார போர் ஒரு நாட்டின் இறையான்மைக்கு எதிராக இருக்கும் பொழுது அவை அநீதி போரே...  அதேநேரத்தில் ஈரான் தன் இறையான்மைக்காக போராடிக் கொண்டுள்ளது அதாவது அவர்கள் தங்கள் நாட்டின் உரிமைக்கான போரில் ஈடுபட்டுள்ளனர் இவை ஈரானின் நீதிக்கான போரே...

ஏகாதிபத்திய போரை வரையறுத்துள்ள ஆசான் லெனின் மிகத்தெளிவாக எல்லைக் கோட்டை வரைந்துள்ளார். அதனை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.  

ஏகாதிபத்தியம் என்பது கையளவிலான பெரு வல்லரசுகள் உலகில் உள்ள தேசியங்களை இடையறாது அதிகமான அளவில் ஒடுக்கும் சகாப்தம் ஆகும் ஆதலால் தேசியங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்காவிட்டால் சோசியலிஸ்ட்கள் சர்வதேச புரட்சிக்கு போராடுவது என்பது அசாத்தியம். எந்த ஒரு தேசியமும் பிரதேசங்களை உடைக்கின்றாள் அது சுதந்திரமாக இருக்க முடியாது (மார்க்ஸ் -எங்கெல்ஸ்). பிற தேசியங்களை சிறிதளவிலேனும் வன்முறையில் வலுக்கட்டாயமாக தம்முடைய சொந்த தேசியங்களை இம்சிப்பதை சகித்துக் கொண்டிருக்கும் ஒரு பாட்டாளி வர்க்கம் சோசலிஸ்ட் பாட்டாளி வர்க்கமாக இருக்க முடியாது.(மேல்காணும் நூல் பக்41).

தோழர் லெனின் 'சோசலிசமும் போரும்' என்ற நூலில்,"இன்றைய போர் ஓர் ஏகாதிபத்திய போர். இந்த போர் இன்று நடைபெற்று வரும் போர் ஒரு ஏகாதிபத்தியபோர் என்பது அநேக அனைத்து இடங்களிலும் ஒப்புக்கொள்ளப்படுகின்றது . எனினும் பெரும்பாலான இடங்களில் இந்த சொல்லின் பொருள் திரிக்கப்படுகிறது. அல்லது ஒரு சாராருக்கு மட்டுமே கொடுக்கப்படுகின்றது  என்கிறார்.

மேலும் "அதே நூலில் ஏகாதிபத்தியம் உள்ளவரை போரைத் தடுக்க முடியாது. சமூகம் வர்க்கமாக பிளவுண்டு கிடக்கும் வரை சமூகத்தில் போர் தவிர்க்க முடியாது".

"தேசியங்களுக்குள், அவற்றுக்கிடையில்  நடைபெறும் போர்களை காட்டுமிராண்டித்தனமானவை, அதை முரட்டுத்தனமான கொடூரமானவை என்று கூறி சோசலிஸ்டுகள் எப்போதுமே அவற்றை கண்டனம் செய்து வந்துள்ளனர். எனினும் போரை பற்றி நாம் கொண்டுள்ள போக்கு பூர்ஷ்வா சமாதானவாதிகளிடையே (சமாதானத்தின் ஆதரவாளர்கள் அது வேண்டும் என்று சரியானது என்று எடுத்துரைக்க அதற்கான வாதி போர் ஆகியோருடைய) போக்கினின்று அடிப்படையில் மாறுபட்டது .அராஜவாதிகளுடைய போக்கின்றும் அடிப்படையில் மாறப்பட்டது. நாட்டிற்குள் நடக்கும் வர்க்க போராட்டத்திற்கும் போர்களுக்கும் உள்ள தவிர்க்க முடியாத தொடர்பினை நாம் அறிந்து புரிந்து கொண்டுள்ளோம் என்ற விஷயத்தில் நாம் முன்னர் குறிப்பிட்டவர்களிடமிருந்து பூஷ்வா  சமாதானவாதிகளிடமிருந்து மாறுபட்டவர்கள். வர்க்கங்கள் ஒழிக்கப்பட்டு சோசலிசம்  படைக்கப்பட்டால் இன்றி போர்கள் ஒழிக்க முடியாது என்பதை நாம் அறிந்து கொண்டுள்ளோம். மேலும் உள்நாட்டுப் போர்களை அதாவது ஒடுக்கப்பட்ட வர்க்கம் ஒடுக்கும் வர்க்கத்தினை எதிர்த்து நடத்தும் போர்கள் , அடிமைகள் அடிமை உடைமையாளர்கள் எதிர்த்து நடத்தும் போர் ..... ஆகிய போர்கள் முற்றிலும் முறையானவை முற்போக்கானவை தேவையானவை என்று நாம் கருதுகிறோம். ஒவ்வொரு போரினையும் அதன் வரலாற்றியல் அம்சத்திலே (மார்க்ஸ் அவர்களுடைய முரண்பாட்டியல் பொருள் முதல் வாதத்தின் நோக்கு நிலையில் இருந்து) தனித்தனியாக ஆராய்ந்து அறிய வேண்டும் என்று நாங்கள் கருதுவதில்லை. அனைத்து போர்களும் தவிர்க்க முடியாத வகையில் வரும் குரூங்கள் கொடுமைகளும் வேதனைகளும் துயர்களும் கோரங்களும் இருந்தபோதிலும் முற்போக்காக இருந்து அதாவது மிகவும் தீங்கிழைத்து வந்த பிற்போகன ஸ்தாபனங்களை உதாரணமாக ஒரு தனி மனித தன்னிச்சையாக ஆட்சி அதிகாரத்தை ஒழிப்பதற்கு உதவி செய்த மனித வர்க்கத்தின் வளர்ச்சி நன்மையை பயத்த போர்கள் கொடுங்கோன்மை ஆட்சியை ஒழிப்பதற்கு உதவிய மனித வர்க்கத்தின் வளர்ச்சிக்கு நடந்த கடந்த கால போர்கள் எடுத்து பரிசீலனை செய்ய வேண்டும் ஆராய வேண்டும்" என்கிறார்.

ஏகாதிபத்திய காலகட்டத்தில்  முதலாளித்துவமானது தேசியங்களை ஒடுக்கும் ஒடுக்கலின் மிகப்பெரிய ஒடுக்கல்காரனாக மாறிவிட்டது முன்னாள் முற்போக்கு  இயல்புகளில் இருந்த முதலாளித்துவம் இப்போது பிற்போக்கு இயல்பு பெற்றுவிட்டது. நிலமானிய முறையை எதிர்த்து போராடிய போராட்டத்தில் தேசங்களை விடுவிக்கும் விடுதலையாளனாக இருந்த முதலாளித்துவம் இங்கே பிற்போக்கு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது என்கிறார் லெனின்.

தேசியங்களை ஒடுக்கி வரும் அனைத்துவித ஒடுக்கல்களையும் எதிர்த்து போரிடாமல் சோசலிஸ்ட்கள் தம்முடைய மாபெரும் லட்சியத்தை சாதிக்க முடியாது. ஆகவே ஒடுக்கும் நாடுகளில் உள்ள சமூக ஜனநாயக கட்சிகள் ஒடுக்கப்பட்ட தேசியத்தின் சுயநிர்ணய உரிமைக்காக அதன் அரசியல் பொருளியல்  விசேஷமாக அதாவது அரசியல் வகை பிரிந்து போகும் உரிமை என்பதை ஏற்று அதற்கு ஆதரவாக முன் இருக்க வேண்டும் என்பது எவ்வித ஐயத்திற்கு இடம் இன்றி கோர வேண்டும். இந்த உரிமைக்காக நிற்காதவர் போர் வெறியன் ஆவான். (அதே நூல் பக்கம் 40).

 உலகத்தை விளக்குவதற்கு மட்டுமல்லாமல்அதை மாத்றி அமைப்பதற்கான கடமையை முதன்மைப்படுத்தும்ஒரு சமூக விஞ்ஞானம்மார்க்சியம்

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்