திருமா தூய்மை பணியாளர்பற்றி பேசியதை எதிர்த்து

பல்வேறு தோழர்களின் முகநூலில் பதியப்பட்டவையே கீழே 

பணி நிரந்தரம் என்பதை திருமாவளவன் அவருடைய கணோட்டத்திலிருந்து விளக்கம் கொடுத்துவிட்டு, பணி நிரந்தரம் என்பதை ஒரு குறிப்பிட்ட பணியில் நிரந்தரமாக ஒருவர் ஈடுபட வேண்டும் என்று பார்க்கிறார். ஆகவே குப்பை அள்ளும் தொழிலையே ஒருவர் நிரந்தராகச் செய்ய வேண்டும் என்று பார்க்கிறார். குப்பை அள்ளும் தொழிலில் ஈடுபடும் ஒரு தொழிலாளிக்கு வேறு ஒரு தொழில் தெரிந்திருக்குமானால் அவருக்கு தெரிந்த அந்தத் தொழிலுக்கு பதவி உயர்வு கொடுக்க வேண்டும் என்பதை அவரால் முன்வைக்க முடியவில்லையே ஏன்? பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து அதற்கான தீர்வு கொடுக்கும் கண்ணோ்டம் அவரிடம் இல்லை, அதனால் இந்தப் பிரச்சனைக்கு ஒரு சரியான விஞ்ஞானப்பூர்வமான தீர்வை அவரால் கொடுக்க முடியவில்லை. சமூகத்தில் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு முதலாளித்துவ வர்க்கங்கள் என்ன தீர்வை முன்வைக்கிறார்களோ அதே தீர்வைத்தான் ஆட்சியிலுள்ளவர்களும் அடுத்து ஆட்சிக்கு வருவதற்கு முயற்சிசெய்யும் அரசியல் கட்சிகளும் திருமாவளவன் போன்ற அரசியல்வாதிகளும் முன்வைக்கிறார்கள். ஆனால் ஒரு சிறந்த மார்க்சியவாதியால் மட்டுமே விஞ்ஞானப்பூர்வமான தீர்வை கொடுக்க முடியும். ஒவ்வொரு தொழிலையும் விஞ்ஞானப்பூர்வமாக மாற்றுவதும் தொழில்களுக்கு இடையிலான இழிவு தன்மையை அகற்றுவதும் உடனடியாகச் செய்யவேண்டியது அவசியமாக உள்ளது. எனினும் இது நிரந்தரமானதல்ல. மேலும் விஞ்ஞானப்பூர்வமாக வளர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு சூழ்நிலையின் போதும் புதிய புதிய வழிமுறைகள் நாம் பின்பற்ற வேண்டும். இதனை ஓர் அரசு மூலம்தான் செய்ய முடியும். இதனை சாதித்த பெருமை ரஷ்ய சோவியத்து சோசலிச அரசுக்கு உண்டு. இத்தகைய சூழலில் துப்புறவுத் தொழிலாளர்களுக்கு அரசு வேலை கொடுத்ததை ஒழித்துவிட்டு கார்ப்பரேட்டுகள்தான் வேலைகொடுக்கும் என்ற அயோக்கியத்தனமான கொள்கையை எதிர்க்காமல் பணி நிரந்தரம் என்று பேசி பிரச்சனையின் அடிப்படையை மூடிமறைத்துவிட்டு திருமாவளவன் திசைதிருப்புகிறார். நாட்டிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் வேலை ஏற்படுத்திக்கொடுப்பது அரசின் கடமையாகும். அதனை செயல்படுத்தாத எந்த அரசும் மக்களுக்கான அரசு அல்ல. மக்களுக்கான கடமை செய்யாத அரசு அது எதுவாக இருந்தாலும் மக்கள் அதனை தூக்கியெறிய வேண்டும். மக்களுக்கான கடமையை மக்களின் விருப்பதிலிருந்து செய்யக்கூடிய அரசுதான் இதுபோன்ற பிரச்சனைகளை விஞ்ஞானப்பூர்வமாகத் தீர்க்கும் அத்தகைய அரசு எப்படி இருக்கும் சிந்தியுங்கள், விவாதிங்கள் முடிவுக்கு வாருங்கள் தோழர்களே.(தோழர் ரவீந்திரன் பதிவே)

+++++++++++++++++++++++++

கடுகளவு மூளை இருப்பவன் கூட இவ்வளவு மட்டமான ஒரு கருத்தை முன்னிறுத்த மாட்டான். இந்த கேவலமான கருத்திற்கு திருமாவளவன் அம்பேத்காரை எல்லாம் துணைக்கு அழைப்பது தான் உச்சபட்ச நகைப்புக்குரியது.

இங்கு எந்த தூய்மை பணியாளரும் தனது வாரிசுகள், இனிவரும் தலைமுறைகளுக்கு எல்லாம் சேர்த்து இதே பணியை உறுதி செய்யும் வகையில் பணிநிரந்தம் கேட்டு போராடவில்லை. மாறாக நாங்கள் பத்து, இருபது வருடங்களுக்கு மேலாக இந்த பணியையே நம்பி வாழ்ந்துவிட்டோம், திடீரென எங்களையும், எங்கள் உரிமைகளையும் முதலாளிகளுக்கு தாரைவார்த்துக் கொடுப்பது எந்த வகையில் நியாயம் என்று கேட்டு தான் போராடி தங்களுக்கான பணி நிரந்தரத்தை கோரினார்கள்.
தற்போது தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்கள் ஓரளவு பணி பாதுகாப்போடு நல்ல நிலையில் இருந்தால் அல்லவா அவர்கள் குடும்பம், பிள்ளைகள் எல்லாம் முறையான கல்வி பெற்று அடுத்தகட்டம் நோக்கி வளர்ந்து செல்வார்கள் என்பது திருமாவளவனுக்கு தெரியாதா ?
தற்போது பணியில் உள்ள தூய்மை பணியாளர்களின் பிள்ளைகள், குடும்பங்கள் எல்லாம் அவர்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றி அடுத்தகட்ட நிலையை அடைவதற்கு இந்த அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்று கேட்பதற்கு திருமாவளவனுக்கு முதுகெலும்பு உள்ளதா ?
தூய்மை பணியில் ஈடுபடுபவர்களில் பலரின் இறப்பு அவர்கள் பணி காலத்திலேயே ஏற்படுகிறதே, இதற்கான காரணம் என்ன, இதனை தடுப்பதற்கு அரசிடம் ஏதாவது ஆய்வுகள், நடவடிக்கைகள் ஏதாவது உள்ளதா என்று திருமாவளவன் அரசை நோக்கி கேள்வி எழுப்புவாரா ? அல்லது தூய்மை பணியாளர்களின் பணியின் விளைவாக ஏற்படும் முன்கூட்டிய இறப்பு குறித்தாவது திருமாவளவனுக்கு குறைந்தபட்சம் தெரியுமா ?
தினம் தோறும் சாதியின் பெயரால் கொன்று குவிக்கப்படும் சாதிய கொலைகளுக்கு எதிராக சிறப்பு சட்டம் ஏற்றவாவது திருமாவளவனால் இந்த அரசிற்கு அழுத்தம் கொடுக்க முடியுமா ?
இதில் எதுவும் திருமாவளவனால் முடியாது. ஏனெனில் இவர்கள் கூட்டணி கொள்கை சார்ந்தது அல்ல, மாறாக எந்தவித நிபந்தனையும் இன்றி பதவி கிடைத்தால் மட்டுமே போதும் என்கிற அடிமை மனப்பான்மையில் அமைத்துக்கொண்ட கூட்டணி.(Bright Singh Johnrose முகநூலில்)

சென்னை தூய்மைப் பணியாளர் போராட்டம் அடுத்து மதுரைக்கு பரவுகிறது. மட்டுமல்லாது ஒப்பந்த தொழிலாளர் முறை என்பதை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இது சாதி தாண்டிய பாட்டாளிவர்க்க ஒற்றுமையை வளர்த்தெடுப்பதாகும்.
இந்த ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலேயே திருமா பேசுகிறார். அவருக்கு பாட்டாளிவர்க்க ஒற்றுமை அவசியமில்லை என்பதுதான் அரசியல்.

திருப்பூர் குணா (முகநூலில்)



தோழர் மாதவ் (முகநூலில்)

சென்னை மாநகராட்சி தொழிலாளர்நிரந்தரம் பற்றி
திரு. திருமாவளவன் கருத்து
உலகமயமாக்கல்
தாராளமயமாக்கல்
சேவகர்களின் கருத்து...
திமுக தலைமைக்கு
எசப்பாட்டு...
இது
அப்பட்டமான
அறிவுசார் அடியாள் வேலை...



ஆக ஆளும் வர்க்கதிற்கு அணி சேர்பதுதான் இவரின் பணியாக உள்ளது உழைக்கும் வர்க்கதின் தேவைக்கானவர் அல்ல

















இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்